எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, April 10, 2009

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன் வாழ்க்கை

இங்கிலாந்து வெள்ளைக்கார அப்பா தன் குழந்தைக்கிட்ட நிறைய சாகச கதைகள் சொல்லுவார். அந்த குழந்தையும் சலிக்காம கேட்கும், அப்படியே சொல்லிக்கிட்டு இருக்கும் போது உலகம் என்றால் என்ன அப்பா? என்று கேட்டாள். அந்த அப்பாவோ உலகம் அப்படி இருக்கும் இப்படி இருக்கும் என்று சொன்னார். அது அந்தக் குழந்தைக்கு புரியவில்லை.

இந்தியா என்கிற நாடு ஒன்று இருக்கிறது. அங்க இருக்கிற மக்கள் எல்லோரும் எல்லா வசதி வாய்ப்புகளோடும் இருக்காங்க என்று சொன்னார்.

வசதிவாய்ப்புகள் இன்னா என்னப்பா?

வசதிவாய்ப்புகள் என்றால் பஞ்சு மெத்தையும், பாலும் தேனும் கலந்த சோறும்,பட்டுத் துணிகளும், தங்கம், வைரம், வைடூரியமும், மாணிக்கமும், ரத்தனமும் மற்றும் முத்துக்கள், எல்லாம் அங்கே சாதாரணமாம்.

அப்படியா அப்பா!

அந்த இந்தியா எங்க இருக்குப்பா?

அதுவா அது கடல் தாண்டி எங்கோ இருக்கிறது. அதை யாரும் பார்த்து கிடையாது கேள்விப்பட்டதோடு சரி.

இவர் போல் தான் எல்லாத் தந்தைகளும் தன் பிள்ளைகளுக்கு சொல்லிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி கேள்விக் கேட்டக் குழந்தை கொலம்பஸ் பிறகு இந்தியாவை கண்டுபிடிக்கிறேன் என்று கிளம்பி போகும் போது புயல் வீசியதில் கப்பல் ஒரு கரையை ஒதுங்கியது. அவர் கேள்வி
பட்டதை போல் அங்கே இருந்த நிலபரப்புகள் அமைப்புகள் மிகவும் அழகாகவும் மிகவும் செழுமையாகவும் இருந்தன.

அவரோ மிக்க மகிழ்ச்சியில் திளைத்து ஆகா நான் இந்தியாவை கண்டு பிடித்துவிட்டேன் என்று ஆனந்த களியாட்டம் போட்டார். அங்கிருந்த மக்கள் எல்லோரும் சிவப்பு நிறமாக இருந்ததனால் அவர்களை செவ்விந்தியர்கள் என்று அழைத்தார்.

பின்னாளிலே தெரிய வந்தது அவர் கண்டுபிடித்து இந்தியாவை அல்ல அமெரிக்காவை என்று.இப்படியே பிரெஞ்சுக் காரரும் அமெரிக்காவை கண்டுபிடித்திருந்தனர் அதனால் பிரெஞ்சுக்காரர்களும் தனக்கு அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினர்.
போர்ச்சுகீசியர்களும் அமெரிக்காவை சொந்தங்கொண்டாடினார்கள்.

அமெரிக்காவின் பூர்வீக குடிமக்களான செவ்விந்தியர்கள் அவர்களின் நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்து கொண்டிருந்தனர்.

இங்கிலாந்தும், பிரெஞ்சுகாரர்களும் மற்றும் போர்ச்சுகீசியர்களும் தங்களது நாட்டில் இருந்து வந்து குடியேற்றத்தை ஆரம்பித்தார்கள்.

இதிலிருந்து தான் பிரச்னையே ஆரம்பிக்கிறது. ஒவ்வொருவரும் அமெரிக்காவை பங்குபோட நினைத்து போராட்டத்தை ஆரம்பித்தார்கள் அல்லது மற்ற நாட்டவர்களைத் தாக்க முற்பட்டார்கள்.

இங்கிலாந்தியர்களின் குடியேற்ற நிலபரப்பை ஆக்கிரமித்து கொண்டே சென்றனர் பிரெஞ்சுக்காரர்களும், போர்சுகீசியர்களும். இவர்களுக்கிடையில் சண்டை
முற்றிக்கொண்டே சென்றது.

அதனால் அதை தடுத்து நிருத்த ஆங்காங்கே பல ராணுவதுருப்புகளை ஏவிட்டது இங்கிலாந்து அரசு.

அதில் குறிப்பிடத்த படையை ஜார்ஜ் வாஷிங்டன் தலைமைப் பொறுப்பை ஏற்று வழிநடத்தினார்.

நிறைய தோல்விகளும் ஒரு சில வெற்றிகளும் அவருக்கு கிடைத்தது.

இப்படி இங்கிலாந்தில் இருந்து ஆணை வரும் அதை அமெரிக்காவில் குடிபெயர்ந்த இங்கிலாந்தியர்கள் செய்ய வேண்டும். குடியேற்றம் பெற்ற இங்கிலாந்தியருக்கென்று தனி
சுதந்தரமும்,உரிமையும் கிடையாது. எது வேண்டுமானாலும் இங்கிலாந்து அரசிடம் தான் கேட்டுப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருந்தனர்.இவர்களுக்கு வேண்டிய சீர்திருத்தங்களை பரிசீலித்து இங்கிலாந்திற்கு அனுப்பினாலும் இங்கிலாந்து நாடாளுமன்றத்தால் நிராகரிக்கப்பட்டே வந்தன.ஆனாலும் இங்கிலாந்து நாடாளுமன்றம் எந்த சட்ட திட்டத்தை இயற்றுதோ அந்த சட்டத்திட்டத்தை அவர்கள் ஏற்று மதித்து நடந்து வந்தார்கள். இருந்தாலும் இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், உரிமைகளைக் கூட இங்கிலாந்து அரசாங்கம் மறுத்தும், நிராகரித்தும் வந்தது.

நாள்பட நாள்பட அவர்களின் நிலைமை மிகவும் மோசமாக சென்று கொண்டிருந்தது. பதிமூன்று மாகாணங்களிலிருந்தும் பிரதிநிதிகள் கூடி ஒரு முக்கியமானத் தீர்மானத்தை நிறைவேற்றினார்கள். இனிமேல் இங்கிலாந்து அரசாங்கம் இயற்றும் சட்டதிட்டத்தை மதிப்பதில்லை என்றும், தங்களுக்கென்று பலமான ராணுவத்தை அமைப்பதென்றும்.

தயாரானது அமெரிக்க ராணுவம் அதற்கு தலைமை ஏற்று நடத்த ஜார்ஜ் வாஷிங்டனை நியமித்தார்கள். இங்கிலாந்தில் இருந்து படைகள் வந்திறங்கின. சங்கொலி முழங்க போர் ஆரம்பம் ஆனது குடியேற்ற அமெரிக்கர்களுக்கும் இங்கிலாந்துக்கும்.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகள் நடந்த அமெரிக்கப் போர், 1783-ம் ஆண்டு வெர்செயில்ஸ் என்ற ஒப்பந்தத்தின் மூலம் ஒரு முடிவுக்கு வந்தது. இங்கிலாந்து அமெரிக்க சுதந்தரத்தை அங்கீகரித்தது. கனடாவுக்கும் அமெரிக்காவுக்குமான எல்லை வரையறுக்கப்பட்டது.

அமெரிக்க சுதந்தரப் போர் முடிவுக்கு வந்ததும் வாஷிங்டன் மிகத்தெளிவாக ஒரு விஷயத்தைச் சொல்லியிருந்தார். நமக்கு முன்னால் ஒரு பெரிய கடமை காத்திருக்கிறது. நமக்காக ஒரு நாடு கிடைத்துவிட்டது. போரில் அமெரிக்கக் கூட்டுப் படைகள் ஒற்றுமையாகப் பெற்ற வெற்றி, மாபெரும் வெற்றி என்பதில் சந்தேகமில்லை. அந்த நம்பிக்கை எல்லா மக்களுக்கும் இருக்கிறது. அதே நம்பிக்கையை மக்களிடமிருந்தது பெறவேண்டும் என்றால் எல்லா மாகாணங்களும் ஒன்றுபட்டு ஒரே அரசாக, அதே சமயம் மக்கள் அரசாக மாறவேண்டும் என்றார்.

1789-ல் அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அந்த சட்டத்தின்படி நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஜனாதிபதி தேர்தல் நடக்கும். அமைச்சர்களின் உதவியோடு ஜனாதிபதி ஆட்சி செய்வார்.

சட்டங்களை இரண்டு குழுக்கள் உருவாக்கும். ஒன்று குடியேற்ற நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்ட குழு. இந்தக் குழுவைத் தான் “செனட்” என்று அழைப்பார்கள். இன்னொரு குழு, மக்களால் ஓட்டுப் போட்டு, தேர்ந்தெடுக்கப்பட்ட குழு, நம்ம ஊர் சட்ட மன்றம் மாதிரி. செனட் சபையில் இருப்பவர்களைத் தேர்ந்தெடுத்து செனட் சபைக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த இரண்டு சபைகளுக்கும் சட்டம் இயற்றும் அதிகாரமும், நிதி நிலைமையைக் கட்டுப்படுத்தும் அதிகாரமும் இருந்தன.

இப்படி அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி, நவீன அமெரிக்கா உருவாகக் காரணமாக இருந்தவர் ஜார்ஜ் வாஷிங்டன். புதிய அரசியலமைப்புச் சட்டங்களைக் கொண்ட அமெரிக்காவின் முதல் ஜனாதிபதியாக வாஷிங்டன்தான் பொறுப்பேற்க வேண்டும் என்று எல்லோரும் விரும்பினார்கள்.

“வாஷிங்டன் தான் ஜனாதிபதியாக வேண்டும்” என்று குரல் நாடு முழுக்க வலுத்துக்கொண்டே போனது. வாஷிங்டனுடன் போரில் பங்கெடுத்திருந்த கர்னல் லீ விரிவாக வாஷிங்டனுக்கு ஒரு கடிதம் எழுதினார். “எந்த காரணத்தைச் சொல்லியும் நீங்கள் ஜனாதிபதியாகிற வாயப்பை மறுத்துவிடாதீர்கள். குறிப்பாக, உங்களுடைய தனிப்பட்ட பண்ணை வாழ்க்கைக்காக, நாடு உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கிறது.

1789, ஏப்ரல் 14. அமெரிக்க காங்கிரஸ், வாஷிங்டன்தான் அமெரிக்காவின் ஜனாதிபதி என்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அதற்கான ஆணையை அவருக்கு அனுப்பியது. அந்த அழைப்பை வாஷிங்டன் ஏற்றுக்கொண்டார். ஏனென்றால், அது அமெரிக்க காங்கிரஸின் அழைப்பல்ல, அமெரிக்க மக்களின் அழைப்பு.

1789 ஏப்ரல் 30-ம் தேதி வாஷிங்டன் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்

பலத்துறைகளில் தன்னுடைய முழுபலத்தையும் கொடுத்து அமெரிக்காவை கட்டமைத்தார்.

இப்படி பல விஷயங்களை கொடுத்து மிக அழகான நடையில் எழுதி இருக்கிறார் ஆசிரியர் பாலுசத்யா.புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: