எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, July 3, 2009

தி.மு.க. வின் ஜனநாயக விரோத போக்கு

திருச்சியில் கடந்த 21-ம் தேதி தி.மு.க., முப்பெரும் விழா நடந்தது.தங்கபாலு பேசும்போது
ஆட்சியில் பங்கு தருவதற்கு கட்சியின் தலைமை கேட்டுக் கொண்டால் பொதுக்குழு, செயற்குழு கூடிமுடிவு எடுக்கப்படும்
என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்ததற்கு நன்றி தெரிவித்தார்.

அவர் என்னவோ செய்யக்கூடாத தப்பு பண்ணின மாதிரியும் கேட்கக்கூடாததைக் கேட்ட மாதிரியும் கலைஞர் கருணநிதி
கூட்டணி உடன்பாட்டின் போது, 'ஆட்சியில் பங்கு கேட்பது குறித்து எந்த ஒப்பந்தமும் போடவில்லை என்றும்
அப்படியே பங்கு கொடுப்பதாக இருந்தாலும்கூடபாண்டிச்சேரியையும் சேர்த்துக்கொள்ளலாம்'என்கிறார்.

என்னவோ அவர் முழு மெஜாரிட்டியுடன் ஆட்சி அமைச்சிருக்கற மாதிரியும் ஏதோ காங்கிரஸ் ஒப்புக்கு ஒத்துப்போவதுபோலும் ஆகிவிட்டது.
இதுவரை நடந்த தேர்தல்களில், எல்லா நேரமும் எல்லாக்கட்சியும் முழு மெஜாரிட்டியுடன்தான் ஆட்சி அமைத்தது. இதுவரை தமிழ் நாட்டின்
வரலாற்றிலே கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லாமல் இருந்தது. அதனால் காங்கிரஸார் கூட்டணி உடன்பாட்டின்போது எந்த ஒரு
நிபந்தனையும் வைக்காமல் தேர்தலில் தொகுதி உடன்பாடு ஏற்பட்டு போட்டியிட்டது. இதனால் கூட்டணி உடன்பாடு செய்ய வேண்டிய
அவசியம் அப்போது ஏற்பட்டிருக்கவில்லை.ஆனால், மக்களின் தீர்ப்பு மகேசனின் தீர்ப்பாக இருக்கும்போது இனிமேல் அந்த உடன்படிக்கையை
போடவேண்டிய கட்டாயத்தில் உள்ளது தி.மு.க. மக்கள், தேர்தலின்போது அவ்வளவாக தி.மு.க. வை நம்பாமல்
அதன் முக்கியக் கூட்டணிக்கட்சிகளான காங்கிரஸ்,பா.ம.க. மற்றும் இடதுசாரிகளை நம்பித்தான் வாக்களித்தார்கள்.

அதனால் தி.மு.க. முழுமெஜாரிட்டியான மேஜிக் எண் 124 ஐ தொட்டிருந்தால், யாரும் ஆட்சியில் பங்கு கொள்ளவும் மற்ற திட்டங்களுக்கு
முட்டுக்கட்டை போடவும் மாட்டார்கள்.

ஆனால் நடந்தது என்ன? தி.மு.க 95 ம், காங்கிரஸ் 35 ம், பா.ம.க 18 ம் மற்றும் இடதுசாரிகள் -15 ம் பெற்று வெற்றி பெற்றன.

ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள பா.ம.க மற்றும் இடதுசாரிகளைத் தவிர்த்து காங்கிரஸ் ஆதரவு இருந்தாலே போதுமானது .
இதனால் பா.ம.க., எந்தவித நிபந்தனையுமின்றி ஆதரவு தெரிவித்தது, அதேபோல், இடதுசாரிகளும் . ஆனால் காங்கிரஸின் நிலைமை அப்படி
இல்லை. இவர்களின் தயவால் ஆட்சி அமைக்கும்போது, ஆட்சியில் பங்கு கேட்பது தவறில்லை. ஏனென்றால் மக்கள் காங்கிரஸை அதன் கொள்கையின்
அடிப்படையிலே தேர்ந்தெடுத்தார்கள் .அதனால் அவர்களுக்கு காங்கிரஸார் சார்பில் அவர்களின் கொள்கையின் அடிப்படையில் மக்களுக்குச் சில நல்ல
திட்டங்களைத் தீட்டி செயல்படுத்த நினைக்கிறார்கள் .அப்படி நினைப்பதில் எந்தத் தவறும் இல்லை என்று நான் நினைக்கிறேன்.

ஆனால் மக்களின் தீர்ப்புக்கு மாறாக நாங்கள் ஆட்சியில் பங்கு தரமாட்டோம் நாங்கள்தான் ஆட்சியிலும் அதிகாரத்திலும் இருப்போம் என்று
சொல்லுவது, ஜனநாயகத்திற்கு எதிரானது முரணானது விரோதமானது. எந்த அடிப்படையில் அவர்கள் அவ்வாறு சொல்கிறார்கள் ஆட்சி சுகத்திலா,
அதிகார சுகத்திலா என்று தெரியவில்லை.

நேற்று லயோலோ கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பின் அடிப்படையிலேகூட மக்களின் எண்ணங்கள் எதிரொலித்திருக்கிறது என்றால் இதை
தி.மு.க. மதித்து காங்கிரஸாருக்கு ஆட்சியில் உரிய பங்கினை தந்து எதிர்காலத்திற்கு முன்னோடியாகத் திகழ வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.
காங்கிரஸார் மக்களுக்குத்தான் தியாகத்தைச் செய்யவேண்டுமே ஒழிய தி.மு.க. வுக்கு எந்தத் தியாகத்தையும் செய்யத் தேவையில்லை.
அது அவர்களின் உரிமை கடமையும்கூட, இவ்வாறு நடந்தால் எப்படி காங்கிரஸாருக்கு மக்கள் எதிர்காலத்தில் ஓட்டளிப்பார்கள் என்று தெரியவில்லை.
மக்கள் காங்கிரஸை, காங்கிரஸாரை எப்படி நம்புவார்கள் என்பதும் புரியவில்லை.

தமிழ் நாட்டிலுள்ள காங்கிரஸார் தங்களின் நிலைமைகளை அகில இந்திய காங்கிரஸின் தலைமைக்கு விளக்கமாக எடுத்துக்கூறி, தங்களுக்குக் கிடைக்க
வேண்டிய நியாயமான ஆட்சியின் பங்கையும் மற்றும் மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க ஆற்ற வேண்டிய ஜனநாயகக் கடமைகளையும் செய்யவேண்டும்,
அப்படிச் செய்தால்தான தமிழ்நாட்டில் காங்கிரஸார் தங்களை தக்க வைத்துக்கொள்ள முடியும். இல்லாவிட்டால் தே.மு.தி.க போன்ற கட்சிகளுக்கும்
எதிர்காலத்தில் அடிபணிய வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படும் நிலைமை ஏற்பட்டுவிடும் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஏழைகள், நடுத்தர மக்களைக் கவர மம்தா பாணியில் பிரணாப் அசத்தல்* கிலோ ரூ.3 விலையில் மாதம் தோறும் ரேஷன் கார்டுகளுக்கு 25 கிலோ அரிசி

ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில், வரிச் சலுகைகளுடன் கூடிய பட்ஜெட்டை நிதிஅமைச்சர் பிரணாப் முகர்ஜி நேற்று சமர்ப்பித்தார். கிராமப்புற வளர்ச்சிக்கு முன்னுரிமை தரப்பட்டிருக்கிறது; தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது.மேலும், பட்ஜெட்டில் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் மீது விதிக்கப்பட்டு வந்த வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்பவர்களுக்கு கிலோ மூன்று ரூபாய் விலையில், மாதம் தோறும் 25 கிலோ அரிசி வழங்கப்படும். தங்கம், வெள்ளி நாணயங்கள், செட்-டாப் பாக்ஸ்கள் விலை உயர்கிறது; எல்.சி.டி., "டிவி', மொபைல் போன், உயிர் காக்கும் மருந்துகளின் விலைகள் குறைகின்றன. தேசிய அளவில் ஆன்-லைன் வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படுகிறது.


நடப்பு நிதியாண்டிற்கான பொது பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் பிரணாப், நேற்று பார்லிமென்டில் தாக்கல் செய்தார். அனைவரும் எதிர்பார்த்தது போலவே, பல சலுகைகள் இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டன. மம்தா ரயில்வே பட்ஜெட்டைப் போல, மக்களை பாதிக்காத புதிய வரிகள் இல்லாத பட்ஜெட்டை நிதியமைச்சர் தாக்கல் செய்தார்.தனிநபர் வருமான வரி விலக்கு வரம்பு 1.50 லட்சத்திலிருந்து 1.60 லட்சமாக 10 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டது. அதே நேரத்தில், மூத்த குடிமக்களுக்கு இது 15 ஆயிரம் ரூபாயாக இருக்கும். இதன் மூலம் ஆண்டுக்கு 1,000 ரூபாய் அளவுக்கு வருமான வரி குறையும்; மூத்த குடிமக்களுக்கு 1,500 ரூபாய் குறையும்.மேலும், ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வழங்கும் உதிரி சலுகைகள் (பிரிஞ்ச் பெனிபிட்) மீது விதிக்கப்பட்ட வரி ரத்து செய்யப்பட்டதால், நிறுவனங்களிடமிருந்து மேலும் சலுகைகள் தொழிலாளர்களுக்கு கிடைக்கும் நிலைமை உருவாகியுள்ளது.


சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் எந்த விதமான மாற்றமும் செய்யப்படவில்லை. அதே நேரத்தில், குறிப்பிட்ட சில வரிகளில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தங்கக் கட்டிகள், தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள் மீது தற்போது 10 கிராமிற்கு 100 ரூபாய் வரி விதிக்கப்படுகிறது; இனி 200 ரூபாய் வசூலிக்கப்படும். ஒரு கிலோ தங்கத்திற்கு 500 ரூபாய் என்ற அளவில் விதிக்கப்படும் சுங்க வரி இனி, 1,000 ரூபாயாக இருக்கும்.இதனால், தங்கம், வெள்ளி நாணயங்கள், தங்கக் கட்டிகள் விலை உயரும். செட்-டாப் பாக்ஸ்கள் மீது 5 சதவீத சுங்க வரி விதிக்கப்பட்டுள்ளதால், அவற்றின் விலையும் உயரும்; ஜவுளிப் பொருட்களின் விலையும் அதிகரிக்கிறது.


உயிர் காக்கும் மருந்துகள் மீதான சுங்க வரி 10 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. எல்.சி.டி., "டிவி',கள் மீதான சுங்க வரியும் 5 சதவீதம் குறைக்கப் பட்டுள்ளது. அதனால், எல்.சி.டி., "டிவி', மற்றும் மொபைல் போன்கள் விலை குறையும். மேலும், உயிர் காக்கும் மருந்துகள், வணிகச் சின்னம் பொறிக்கப்பட்ட நகைகள், விளையாட்டுப் பொருட்கள், தோல் பொருட்கள், காலணிகள், சாப்ட்வேர் பொருட்கள் போன்றவற்றின் விலை குறையும்.வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு, கிலோ மூன்று ரூபாய் விலையில் மாதந்தோறும் 25 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படும். தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதத் திட்டத்தின் கீழ் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இனி தினச்சம்பளம் 100 ரூபாய் வழங்கப்படும். மேலும், தேசிய அளவில், "ஆன்-லைன்' வேலைவாய்ப்பு மையமும் துவக்கப்படும். அத்துடன் சமூக பாதுகாப்புத் திட்டங்களுக்காக 71 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


தற்போது, 15 லட்சம் ரூபாய்க்கு மேல் சொத்து வைத்திருப்பவர்கள் ஆண்டிற்கு 1 சதவீதம் சொத்து வரி செலுத்த வேண்டும். இந்த அளவு 30 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், ஆண்டுக்கு 15 ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.மொத்தத்தில் ஏழைகள், நடுத்தர மக்களைக் கவரும் வகையில் கூடிய பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ள அமைச்சர் பிரணாப், கிராமப்புற பொருளாதாரம் ஊக்குவிக்கப்படுவதின் மூலம் தேவை அதிகரித்து, அதனால் பொரு ளாதாரம் வளரும் என்ற அடிப்படையை மையமாகக் கொண்ட பட்ஜெட்டாக இது கருதப்படுகிறது.மொத்த நிதிப் பற்றாக்குறை அளவு கடந்த போதும், வளர்ச்சி தேவை என்ற முறையில் முதல் தடவையாக 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அரசு செலவினம் கொண்ட பட்ஜெட்டை படைத்திருக்கிறார். ஆனால், பட்ஜெட் தாக்கல் செய்த சில மணி நேரத்தில் பங்குச் சந்தை, 869 புள்ளிகளை இழந்து நேற்றைய வர்த்தகம் 14,043 என்று முடிவடைந்தது. பிரதமர் மன்மோகன் திட்டவட்டமாக மொத்த வளர்ச்சியை அதிகரிக்கும் பட்ஜெட் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


மொத்த செலவு முதன் முறையாக 10 லட்சம் கோடி ரூபாய் : பட்ஜெட் சிறப்பு அம்சங்கள் :
* வருமான வரி விலக்கு வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாயும், மூத்த குடிமக்களுக்கு 15 ஆயிரம் ரூபாயும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
* தனி நபர் வருமான வரி மீதான 10 சதவீத கூடுதல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*உதிரிச் சலுகைகள் ( பிரிஞ்ச் பெனிபிட் ) மீதான வரி ரத்து செய்யப் பட்டுள்ளது.
*கம்பெனிகள் வரியில் மாற்றம் இல்லை.
*ராணுவத்திற்கான ஒதுக்கீடு 34 சதவீதம் அதிகரித்து ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாயாகியுள்ளது.
*பொருளாதார மந்தநிலை காரணமாக நிதி ஊக்குவிப்பிற்காக ஒரு லட்சத்து 86 ஆயிரம் கோடி ரூபாய் 2008 -09ம் ஆண்டில் செலவிடப்பட்டுள்ளது.
*நெடுஞ்சாலைகளுக்கான ஒதுக்கீடு 23 சதவீதம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
*வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழைகளுக்கான வசதிகளை ஏற்படுத்தித் தர, 3,973 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
*ஜவகர்லால் நேரு நகர்ப்புற புனரமைப்பு இயக்கத்திற்கான ஒதுக்கீடு 87 சதவீதம் அதிகரிக்கப்பட்டு 12 ஆயிரத்து 887 கோடி ரூபாயாகியுள்ளது.
*மழைநீர் வடிகால் திட்டங்களுக்கான நிதி உதவி, 300 கோடி ரூபாய் அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
*பண்ணை கடன்களுக்கான ஒதுக்கீடு இரண்டு லட்சத்து 87 ஆயிரம் கோடியில் இருந்து மூன்று லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.


விவசாயிகளுக்கு சலுகை : *குறிப்பிட்ட காலத்தில் கடனைத் திரும்பச் செலுத்தும் விவசாயிகளுக்கு வட்டிச் சலுகை அளிக்கப்படும்.
*நீர்ப்பாசனத் திட்டங்களுக்காக கூடுதலாக, 1,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*ஏற்றுமதி கடன் உத்தரவாத திட்டம் 2010 மார்ச் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
*பொருட்கள் பரிமாற்ற வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
*குறைந்தபட்ச பதிலீட்டு வரி, 10 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
*பெட்ரோலிய துறைக்கு அளிக்கப்பட்ட வரி விடுமுறைக் காலம் இயற்கை எரிவாயு துறைக்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.


கட்சி நன்கொடை : *அரசியல் ரீதியாக வழங்கப்படும் நன்கொடைகளுக்கு 100 சதவீத வரிச் சலுகை உண்டு.
*உரங்களுக்கான மானியம் சத்துக்களின் அடிப்படையில் இருக்குமே அன்றி, விலை அடிப்படையில் இருக்காது.
*வங்கிகள் மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களாகவே செயல்படும்.
*வங்கிகள் இல்லாத பகுதிகளில் வங்கிக் கிளைகளைத் திறப்பதற்காக ஒரே நேர மானியமாக 100 கோடி ரூபாய் வழங்கப்படும்.


சம்பளம் இனி ரூ.100 :*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தின் கீழ் பணிபுரிவோருக்கு, நாள் ஒன்றுக்கு வழங்கப்படும் சம்பளம் 100 ரூபாயாக உயர்த்தப்படும்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கான ஒதுக்கீடு, 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய்.
*தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம் மூலம் 2008-09ம் நிதியாண்டில் 4.74 கோடி பேர் பலன் அடைந்தனர்.
*தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்திற்கான பணிகள் துவங்கி விட்டன.
*பாரத் நிர்மாண் திட்டத்திற்கான ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்ந்துள்ளது.
*தேசிய வீட்டுவசதி திட்டத்தின் கீழ், ஊரக வீட்டு வசதி நிதியாக, 2,000 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*பெண்கள் எழுத்தறிவு இயக்கத்தில் சிறுபான்மையினர், எஸ்.சி., / எஸ்.டி.,யினருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும்.
*கிராமப்புற பெண்களில் 50 சதவீதம் பேர், மகளிர் சுய உதவிக்குழு திட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுவர்.
*தேர்ந்தெடுக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்கள் பெறும் கல்வி கடன்களுக்கு முழு வட்டி தள்ளுபடி சலுகை வழங்கப்படும். இதன்மூலம் ஐந்து லட்சம் மாணவர்கள் பலன் அடைவர்.
*தேசிய வேலைவாய்ப்பு அலுவலகங்கள் நவீனமயமாக்கப்படும்.
*அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு அளிப்பதற்கான நடவடிக்கைகள் துவக்கப்படும்.
*புதிய ஓய்வூதிய சலுகையின் கீழ் ஜவான்கள் மற்றும் கமிஷன் அதிகாரிகள் என, 12 லட்சம் பேர் ஜூலை மாதம் முதல் பலன் அடைவர்.
*துணை ராணுவப் படையினருக்காக ஒரு லட்சம் குடியிருப்புகள் கட்டப்படும்.
*நாட்டு மக்களுக்கு சிறப்பு அடையாள அட்டை வழங்கும் திட்டம் 12 முதல் 18 மாதங்களில் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கு 120 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
*தற்போதுள்ள ஐ.ஐ.டி.,க்கள் மற்றும் புதிய ஐ.ஐ.டி.,க்களுக்காக 2,113 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
*காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்காக, 3,472 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.


சுங்க வரி மாற்றம் இல்லை
*சுங்க வரி, கலால் வரி மற்றும் சேவை வரி வீதங்களில் மாற்றம் இல்லை.
*"இந்திரா அவாஸ் யோஜனா' திட்டத்திற்கான ஒதுக்கீடு 63 சதவீதம் கூடியுள்ளது.
*வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது எளிமையாக்கப்படும்.
*காலநிலை மாற்றம் தொடர்பான திட்டத்தின் கீழ், எட்டு இயக்கங்கள் துவக்கப்படும்.
*ஊரக சுகாதார இயக்கத்திற்கு இடைக்கால பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்டதை விட, 257 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கப்பட்டுள்ளது.
*இலங்கைத் தமிழர் மறுவாழ்வுக்காக 500 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மேற்கு வங்கத்தில் புயலால் பாதித்த பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்ய 1,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.
*மொத்தச் செலவு முதல் முறையாக 10 லட்சம் கோடி ரூபாயை தாண்டியுள்ளது.


நேற்று தாக்கல் செய்யப்பட்ட பொதுபட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது கடந்தாண்டு ஒதுக்கீட்டை விட 34 சதவீதம் அதிகம்.
மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி, 2009-10ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை பார்லிமென்டில் நேற்று தாக்கல் செய்தார். இதில், ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 41 ஆயிரத்து 703 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது, கடந்தாண்டை விட 34 சதவீதம் அதிகம். கடந்த பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒரு லட்சத்து 5,600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. கடந்தாண்டை விட இந்தாண்டு 36 ஆயிரத்து 103 கோடி ரூபாய் அதிகமாக ஒதுக்கப்பட்டுள்ளது.
மும்பையில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த பயங்கரவாத தாக்குதலை அடுத்து, மத்திய அரசின் பாதுகாப்பு தொடர்பான கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டது. அதிகரித்து வரும் பயங்கரவாத தாக்குதல்களை சமாளிக்க பாதுகாப்புப் படையை நவீனப்படுத்துவதோடு, பலப்படுத்துவதும் அவசியம் என்பதை உணர்ந்து, அதற்காக அதி நவீன ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை பெற முடிவு செய்யப்பட்டது.தேசிய பாதுகாப்புப் படை உள்ளிட்ட கமாண்டோ படைப் பிரிவை மேம்படுத்துவதற்காக அதி நவீன ஆயுதங்கள் வாங்குவதற்கான பட்டியல் ஏற்கனவே தயார் செய்யப்பட்டுள்ளது.


மேலும், கடலோர பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், கடலோர பாதுகாப்புப் படைக்கு அதி விரைவு படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்கும் ட்டமிடப்பட்டுள்ளது.இவற்றை வாங்குவதற்கு அதிகமான நிதி ஒதுக்கீடு தேவை என்பதை கருத்தில் கொண்டே, கடந்தாண்டை விட இந்தாண்டு 34 சதவீதம் அதிகமாக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
சீனாவை விட குறைவு: தற்போதைய பட்ஜெட்டில் ராணுவத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதி, நாட்டின் மொத்த வளர்ச்சியில் வெறும் 2 சதவீதம் மட்டுமே. பாகிஸ்தான் தனது ராணுவத்துக்காக மொத்த வளர்ச்சியில் 5 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள் ளது. சீனா, 7 சதவீதத்தை ஒதுக்கீடு செய்துள்ளது. கடந்தாண்டு ஒதுக்கப்பட்ட நிதியில் 7,000 கோடி ரூபாயை செலவிடாமல் ராணுவம் திருப்பிச் செலுத்தியுள்ளது.பட்ஜெட்டில் ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறுகையில், "அமைச்சரவை செயலர் சந்திரசேகர் தலைமையிலான குழுவின் பரிந்துரையின்படி, ஓய்வு பெற்ற ராணுவ வீரர்களுக்கான ஓய்வூதியம் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி, "ஒரு பதவிக்கு ஒரு ஓய்வூதியம்' என்ற அடிப்படையில் வழங்கப்படும். இத்திட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் அரசுக்கு 2,100 கோடி ரூபாய் கூடுதலாக செலவாகும்' என்றார்.



தமிழகத்தில் மிகப்பெரிய ஜவுளி பூங்கா :ஜவுளித் தொழிலில் சிறந்து விளங்கும் தமிழகத்திலும், மேற்கு வங்கத்திலும் ஹேண்ட்லூம் மெகா கிளஸ்டர் எனப்படும் �த்தறி பூங்காக்கள் அமைக்கப்படும். இதே போல, ராஜஸ்தானில் விசைத்தறி பூங்கா அமைக்கப்படும். இதன்மூலம் ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும். கார்பெட் தொழிலுக்கான பூங்காக்கள், ஸ்ரீநகரிலும் உ.பி.,யில் உள்ள மிர்சாபூரிலும் அமைக்கப்படும்.



புதுச்சேரி விமான நிலையம் மேம்படுத்தப்படும் : விமானப் போக்குவரத்து அமைச்சகத்துக்கு வழங்கப்படும் 190 கோடி ரூபாய் நிதியில், விமான நிலையங்கள் மேம்பாட்டுக்கு என, 99.15 கோடி வரை செலவிடப்படும். இந்த நிதி, இந்திய விமானநிலைய அதிகார ஆணையத்திற்கு அளிக்கப்படுகிறது. இதில் 20 கோடி ரூபாய் வரை வடகிழக்கு மாநில விமான நிலைய மேம்பாட்டுக்கு செலவிடப்படும். மீதமுள்ள 79.15 கோடி ரூபாயின் மூலம் ஜம்மு, ஸ்ரீநகர், அக்டி மற்றும் புதுச்சேரி விமான நிலையங்கள் மேம்படுத்தப்படும்
.
கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் மாற்றம் : வெற்றிகரமான திட்டமான கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தில் சற்று மாற்றம் கொண்டு வரப்பட்டு இத்திட்டத்தையும் விவசாயத்துறை, வனத்துறை, நீர்வளம், சாலை திட்டங்கள் உள்ளிட்ட
அரசின் பிற திட்டங்களுடன் இணைத்து செயலாற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 115 மாவட்டங்கள் மட்டும் இதற்கு எடுத்துக் கொள்ளப்படும். பிற திட்டங்களுடன் இணைந்து கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்தை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய வரையறைகளை மத்திய கிராமப்புற மேம்பாட்டு அமைச்சகம் முடிவு செய்யும்.இந்த நிதியாண்டில் கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாத திட்டத்திற்கு 39 ஆயிரத்து 100 கோடி ரூபாய் வரை ஒதுக்கீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் 144 சதவீதம் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.



பாரத் நிர்மாண் திட்ட சாலைகள் நீளம் அதிகரிப்பு : பாரத் நிர்மாண் திட்டத்தின்படி, இந்த ஆண்டுக்குள் ஒரு லட்சத்து 46 ஆயிரத்து 185 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலைகள் அமைக்க திட்டமிடப்பட்டிருந்தது. இது ஒரு லட்சத்து 94 ஆயிரத்து 132 கிலோ மீட்டர் தூரமாக அதிகரிக்கப்பட்டு இதற்கென, 48 ஆயிரம் கோடி ரூபாய் வரை நிதிஒதுக்கீடு செய்யப்படுகிறது.




வேலைவாய்ப்பு மையங்கள் நவீன மயம் : வேலைவாய்ப்பு மையங்கள் நவீனப்படுத்தப்படும். தனியார் ஒத்துழைப்புடன் இதற்கென புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும். அந்த திட்டத்தின் மூலம் ஒரே மாதிரியான சாப்ட்வேர் மூலம் தேசிய அளவில் இணையதளம் ஒன்று துவங்கப்படும்.
வேலை தேடுவோர் ஆன்-லைன் மூலமாக நாட்டின் எந்தப்பகுதியிலும் வேலைவாய்ப்புக்கு பதிவு செய்து கொள்ளலாம். நாட்டில் உள்ள வேலைவாய்ப்பு மையங்கள் அனைத்தையும் இதன்மூலம் தொடர்பு கொள்ளவும் முடியும்.எங்காவது ஒரு இடத்தில் வேலை தேடி பதிந்தாலும், அதற்கேற்ப நிறுவனம் அந்த நபரை அழைக்கும் வகையில், இளைஞர்கள் தங்கள் திறமைக்கேற்ப வேலைவாய்ப்பை பெற வசதியாக அமையும்.



சுகாதார திட்டத்துக்கு கூடுதல் நிதி : நாடு முழுவதிலும் வறுமைக் கோட்டிற்கும் கீழேயுள்ள அனைத்து குடும்பமும் பயன்பெறும் வகையில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திட்டத்திற்கு ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால பட்ஜெட்டில் 12 ஆயிரத்து 70 கோடி ரூபாய் வரை அளிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இந்த பட்ஜெட்டின் மூலம் 2,057 கோடி ரூபாய் வரை வழங்கப்படவுள்ளது.



வங்கி வசதிகள் ஏற்படுத்த திட்டம் :வங்கி வசதிகள் இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு அங்கெல்லாம் புதிய வங்கிக் கிளைகளை ஏற்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்கென வங்கிகளை உறுப்பினர்களாக கொண்ட குழு அமைக்கப்பட்டு அந்த புதிய இடங்கள் கண்டறியப்படும்.
அந்த இடங்களில் அடுத்த மூன்று ஆண்டுகளுக்குள் வங்கிக் கிளைகள் துவங்குவதற்கு வேண்டிய ஏற்பாடுகள் 100 கோடி ரூபாய் செலவில் திட்டமிடப்படும்.


மத்திய பட்ஜெட் வளர்ச்சியை அதிகரிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. இடையில் வளர்ச்சி குறைந்த நிலை மாறி மீண்டும் 8 சதவீத மொத்த வளர்ச்சி எட்டும் வகையில் அமைந்திருக்கிறது' என்று, பிரதமர் மன்மோகன் பாராட்டினார்.


மத்திய நிதியமைச்சர் பட்ஜெட் குறித்து பிரதமர் மன்மோகன் கூறியதாவது: பொருளாதார ஊக்குவிப்புக்கு தேவையான விஷயங்களைக் கண்டறிந்து, அதற்கான உத்திகளை வகுத்திருக்கிறார் நிதியமைச்சர். அவர் பணி பாராட்டிற்குரியது. உலகம் முழுவதும் பொருளாதார தேக்க நிலை இருந்த போதும், இங்கே வளர்ச்சி காண உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டிலேயே மொத்தவளர்ச்சி 7 சதவீதம் எட்டும் என்ற நம்பிக்கை இருக்கிறது. அதைத் தொடர்ந்து வளர்ச்சி 9 சதவீதமாக உயரும் என்றார்.



சிதம்பரம் கருத்து: ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் முந்தைய ஆட்சியில் நிதியமைச்சராகவும் தற்போது உள்துறை அமைச்சராகவும் உள்ள சிதம்பரம் கூறியதாவது:


இந்த 2009-2010 பட்ஜெட் மிகவும் திறமையுடன் தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே ஊக்குவிப்பு நிதிகள் அளித்த நிலையில் இந்த பட்ஜெட் திட்டங்களும் சேர்ந்து வளர்ச்சிக்கு வழிவகுக்கும். குறிப்பாக விவசாயிகள் பயன்படுத்தும் உர உப்புகளுக்கு அதன் நுண்ணுயிர்ச்சத்து அடிப்படையில் விலை, நேரடியாக விவசாயிக்கு மானியச் சலுகை சென்றடைய திட்டம் ஆகியவை பட்ஜெட்டில் புதுமைகள். அதே போல ஏழ்மை நிலையில் உள்ள மாணவர் வாங்கிய கல்விக்கடன் மீதான வட்டி தள்ளுபடி ஆகியவை வரவேற்கத்தக்கது என்றார்.


பங்குச் சந்தை சரிவு : நிதித்துறை செயலர் அசோக் சாவ்லா பட்ஜெட் குறித்து தெரிவித்த கருத்துக்கள் :
பங்குச் சந்தையில் ஏற்பட்ட சரிவு, அவசரப்பட்ட பதட்டமான செயலின் அறிகுறி. இது தற்காலிகமானதே, விரைவில் சீராகும். கிராமப்புற மக்கள் மேம்பாட்டை பட்ஜெட் மையமாகக் கொண்டிருக்கிறது என்ற தொலைநோக்கு இல்லாமல் குறுகிய பார்வையால் எழுந்த விளைவு. அதே போல பொதுத்துறை பங்குகள் விற்பனை குறித்து அரசு படிப்படியாகச் செயல்படும். அதன் மூலம் எவ்வளவு வருவாய் வரும் என்று பட்ஜெட்டில் சுட்டிக்காட்ட வேண்டியதில்லை. அரசு தெளிவாக இருக்கிறது. காலம் வரும் போது பொதுத்துறை பங்கு விற்கப்படும் என்றார்.