எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, March 3, 2010

நித்தியானந்தா நல்லவரே சாதாரண மனிதர்

நேற்று இன்று தொடங்கியதில்லை இந்த காம லீலைகள் காலம் காலமாக ஆன்மிகம் என்று சொல்லும் எல்லாருமே அப்படித்தான் செக்ஸ் மீது அளவுகடந்த வெறிக்கு உள்ளாகிறார்கள்.

பெரியார் காசிக்கு சென்றது போது எல்லாசாமியார்களும் பெண்களுடன் உல்லாசமாக இருப்பதுவும் போதைக்கு அடிமையாக இருப்பதையும் பார்த்து சாமி என்பதே போலி என்று அதை ஆதரிப்பவர்களையும் வெறுத்துதான் அதை எதிர்த்தார் தன் வாழ்நாள் முழுவதும். ஆனாலும் அவர் இல்லாவிட்டாலும் அவர் சித்தாந்தம் என்றும் அழிவதில்லை.

புட்டபருத்தி சாய் பாபாவைப் போல், பிரேமானாந்தாவைப் போல், சதுர்வேதி யைப் போல், ஜெயேந்திரர் விஜேயேந்திரைப், கல்கியை போல் ஈசாவைப் போல் டில்லி சாமியார் ஷிவ் முராத் திவிவேதியைப் போல் நித்தியானந்தா அவ்வளவே.



Sai Baba Exposed - Part 1 of 4 - Funny home videos are a click away


இப்பொழுது நித்தியானந்தா







எல்லாரும் சராசரி மனிதர்கள் தான் எல்லாருக்கும் காம உணர்ச்சி இருக்கும்.

சாதி மதம் கடவுள் எல்லாம் மறைவதற்கும் மறப்பதற்கும் இன்னும் குறைந்தது 10 ஆயிரம் வருடங்களாவது ஆகும். அதுவரை எல்லாம் இப்படித்தான்.

3 ஆயிரம் 4 ஆயிரம் வருடங்களாக ஒரு சமூகம் மற்ற சமூகத்தை அடிமை படுத்திக் கொண்டிருந்தது. அது இப்பொழுதான் பெரியாரின் விழிப்புணர்வு பிரசாரம் மூலமாகவும் முன்னாள் பிரதமர் வி.பி. சிங் மண்டல் கமிஷன் அமுல் படுத்தியதின் மூலமாகவும் முறியடிக்கப்பட்டு உடைக்கப்பட்டு சுக்கு நூறாக சிதரடிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.இது அப்படியே தொடர்ந்தால் இன்னும் 5 ஆயிரம் வருடங்களுக்குள் சாதி மதத்திலிருந்து தப்பிக்கலாம்.

இல்லை எல்லாரும் காதலித்து கல்யாணம் செய்தால் இன்னும் வெகுவிரைவில் தப்பிக்கலாம்.

அது வரை எல்லாம் இப்படித்தான் அந்த சாமியார் இவக் கூட படுத்தான் இந்த சாமியார் அவக் கூடப்படுத்தான் என்கிற செய்தி வந்து கொண்டுதான் இருக்கும்.

ஐயா, சாமின்னு சொல்லுவதெல்லாம் ஒன்றும் இல்லை உலகத்தில.

சும்ம நீங்களும் முருகனை போய் கும்பிடுங்க அவன் அண்ணன் விநாயகனை போய் கும்பிடுங்கன்னு சொல்லாதீங்க.

சாமியே இல்லை.

பூமி, சூரிய மண்டலத்தில இருக்கு. அதை சுற்றி கோடிக்கணக்கான நட்சித்திரங்கள் இருக்கு.

இரண்டு நாட்களுக்கு முன்னால் கூட ஒரு சூரியனை கண்டு பிடித்திருக்கிறார்கள் நமது விஞ்ஞானிகள்.

அதனால் நம்மால ஆயிரக்கனக்கான வருஷமாக நம்முன்னோர்கள் சாமி சாமி என்கிற சித்தாந்தத்தை கூறி வந்தார்கள். அது கடந்த 19 மற்றும் 20 ஆம் நூற்றாண்டில அறிவியலின் வளர்ச்சி அபிரிமிதமாக இருந்த காரணத்தால் எல்லா விஷயத்தையும் கண்டுபிடித்து கொண்டிருக்கிறார்கள்.பூமி எப்படி தோன்றியது அதைச் சுற்றி என்ன என்ன கோள்கள் எல்லாம் இருக்கிறது. மனிதன் எப்படி தோன்றினான் அவன் எப்படி பரிணாம வளர்ச்சி பெற்றான் என்பதை பற்றி எல்லாம் அதைத்தான் நம்மால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை.

டார்வின் பரிணாம கொள்கையையே நிறைய வருடங்களாக யாருமே ஏற்றுக் கொள்ளப் படவில்லையே. அப்படி இருக்கையில் பல ஆயிர வருஷமா நம் முன்னோர்கள் சொல்லி கொண்டிருந்த அந்த சாமி என்கிற விஷயத்தை எப்படி மறப்பார்கள் போலி என்று நினைப்பார்கள்.

சாமி என்கிற விஷயம் இன்னும் இரண்டு மற்றும் மூன்றாயிரம் வருஷங்கள் ஆகும் பெரும்பாலானோர் மறுப்பதற்கும் அது மறப்பதற்கும்.

பத்தாயிரம் வருடங்கள் கழித்து நம்முடைய சந்ததிகள் வரலாற்றை புரட்டி படிக்கும் போது நம் முன்னோர்கள் இப்படியெல்லாம் கடவுள் நம்ம்பிக்கைக் கொண்டு மத வேறுபாடு கொண்டு ஒருத்தனை அடிமை படுத்திக் கொண்டும் ஒரு சமூகம் மற்ற சமூகத்தை ஆட்டி படைத்து கொண்டும் இருந்திருக்கின்றன என்பதையெல்லாம் படித்து சிரிப்பார்கள்.

அதனால் நீங்கள் உங்களுடைய குழந்தைகளுக்காவது உண்மையான போலித்தனமில்லாத ஆன்மிகம் என்ற போர்வையில் வளர்க்காமல் நல்ல சிந்தனையுள்ள குழந்தைகளாக வளர்க்க மற்றும் வளர என் வாழ்த்துக்கள்.