எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, April 12, 2009

நடிகர் ரித்தீஷ் - நல்ல வேட்பாளர் 100% ஓட்டளிக்கவும்நடிகர் ரித்தீஷ் மாதிரி வேட்பாளரை தேர்வு செய்து ஓட்டளிக்கவும் நான் சொல்வது சிரிப்பதற்காக அல்ல சிந்திப்பதற்காக.

இவர் என்னுடைய பார்வையில் நல்ல வேட்பாளர் தான். இவரால் தொகுதிக்கு பல நல்ல திட்டங்கள் வரும்.

இவர் சாதாரண நடிகராக இருக்கும் போதே நிறைய காரியங்களை மக்களுக்காக தனது சொந்தப் பணத்தில் இருந்து செய்துள்ளார்.

நீங்க கேட்கலாம் இதெல்லாம் அவருடைய சுய நலத்திற்காக என்று ஒரு சுய விளம்பரத்திற்காக என்று?

இருக்கட்டுமே அப்படியே இருக்கட்டுமே ஏன் விளம்பரம் தேடக்கூடாதா, மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்று துடிப்போடு இருக்கிற இளைஞர் அவர், ஒரு வேகத்தில் தன்னுடைய பேர் எல்லோருக்கும் தெரியவேண்டும் என்கிற நோக்கம் தான்.

தன்னைப் போல் எல்லா இளைஞருக்கும் மக்களுக்கு நல்லது செய்யவேண்டும் என்கிற எண்ணம் வரவேண்டும் என்று இருக்கலாமே.

இவரை போன்ற நல்ல துடிப்பான இளைஞருக்கு வாய்ப்பு தந்து பாருங்கள் பல உருப்புடியான நல்ல விஷயங்கள் நடக்கும்.

நான் ராமநாதபுரத்தில் இருந்தால் நடிகர் ரித்தீஷ்க்குத் தான் என்னுடைய வாக்கு.

நடிகர் ரித்தீஷ் தேர்தலில் வெற்றி பெற எனது வாழ்த்துக்களை கூறுகிறேன்.

9 comments:

முத்தன் said...

எழும்பூரில் இவர் தங்கும் ஹோட்டலுக்கு அருகிலுள்ள ஆட்டோ டிரைவர்கள் ரித்தீஷின் பெருமைகளை வானளாவ புகழ்கிறார்கள். சென்னை சாலிகிராமம் மழை வெள்ளத்தில் தத்தளிக்கும்போதும் கட்டுமரத்தில் சென்று மக்களுக்கு உதவி செய்தார். கண்டிப்பாக ஏதாவது செய்வார் என நம்பலாம். வாழ்க ரித்தீஷ்!

Anonymous said...

உண்மையிலேயே ரித்தீஷ் ‘நாயகன்’ தான்.

ananda said...

அவர் என்ன நல்லது செய்திக்கிறார் என்று ொல்ல முடியுமா?

நம்மூரான் said...

உருவம் பெருசு, மனசும் பெருசு

தமிழ்நெஞ்சம் said...

அவருக்கு எனது வாழ்த்துகள்

அவர் நிச்சயமாக வெற்றி வேட்பாளரே

qmar said...

oru otukku enna mony tharuvar

ஆனந்த். said...

நல்ல சிந்தனை, உங்கள் தொலை நோக்கு பார்வைக்கு வாழ்த்துக்கள் , நீங்கள் சொன்ன கோணம் உண்மையில் நல்ல விஷயம் தான், அவர் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.

saamakodanki said...

ரித்திஷா..கொக்கா? அஞ்சா நெஞசருக்கே பாடம் சொல்லிக் கொடுத்து அசத்துன சுப்பையாவுல.திருமங்கலம் தேர்தல்ல டைரக்டஷன், புரொடக்ஷன் எல்லாம் ரித்திஷ் தானப்பு.
ஆனா..பாருங்கப்பு....இதுல ஒரு கொடுமப்பு ஆடு,மாடு, காக்கா, கோழி, குருவி லாம் இப்ப ரித்திஷ் பட்டாளத்த கண்டா ஓடி ஒளிஞ்சிடுது மதுரையில..( திருமங்கலம் தொகுதியில இந்த அப்பாவி உசுருகளோட அப்பா, அம்மா, தாத்தா, பாடடி,தம்பி, தங்கச்சி, ஒன்னுவிட்ட மாமா,மச்சினிச்சி ய எல்லாம் ரித்திஷ் குரூப் அடிச்சு தொவச்சு பிரியாணியா மாத்துன பயம் தான்) .பாவமப்பு...ராமநாதபுரம் 5 அறிவு ஜீவனுக...

தீப்பெட்டி said...

என்னப்பா இது ஒண்ணுமே புரியமாட்டேங்குது