எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 26, 2014

தமிழ் மாநில காங்கிரஸ்





தமிழ் மாநில காங்கிரஸ் படங்கள்



















தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் கொடி அறிமுக விழா

காமராஜர், மூப்பனார் படத்துடன் ஜி.கே.வாசன் கட்சி கொடி அறிமுகம்
பதிவு செய்த நாள் : புதன்கிழமை, நவம்பர் 26, 3:14 PM
காமராஜர், மூப்பனார் படத்துடன் ஜி.கே.வாசன் கட்சி கொடி அறிமுகம்
சென்னை, நவ. 26–
காங்கிரஸ் கட்சியில் இருந்து தன் ஆதரவாளர்களுடன் விலகிய முன்னாள் மத்திய மந்திரி ஜி.கே.வாசன் புதிய கட்சி தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.
புதிய கட்சியின் தொடக்க விழா மாநாடு நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) திருச்சியில் நடைபெற உள்ளது. இதற்காக பிரமாண்ட மேடை அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
ஜி.கே.வாசன் தொடங்கும் புதிய கட்சியின் பெயர் திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்பட உள்ளது. அந்த கட்சிப் பெயரை டெல்லியில் உள்ள தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் கடந்த வாரம் வாசன் ஆதரவாளர்கள் கொடுத்தனர்.
தமிழ் மாநில காங்கிரஸ், தமிழ் மாநில மக்கள் காங்கிரஸ், தமிழ் மாநில மறுமலர்ச்சி காங்கிரஸ் என்று மூன்று பெயர்கள் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் ஒரு பெயரை இன்று தேர்தல் கமிஷன் அதிகாரிகள் தேர்வு செய்து கொடுக்க உள்ளனர். அந்த பெயரை வாசன் திருச்சி மாநாட்டில் வெளியிடுவார்.
புதிய கட்சியின் கொடியையும் மாநாட்டில் அறிமுகம் செய்ய வாசன் முடிவு செய்திருந்தார். ஆனால் மாநாட்டுக்கு வரும் தொண்டர்கள் புதிய கட்சி கொடியை ஏந்தி வர வேண்டும் என்று பலரும் வாசனிடம் தெரிவித்தனர். அதை ஏற்று புதிய கொடி சென்னையில் 26–ந்தேதி அறிமுகம் செய்யப்படும் என்று வாசன் அறிவித்தார்.
அதன்படி வாசன் கட்சியின் புதிய கொடி அறிமுக விழா இன்று (புதன்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை சாந்தோம் சர்ச் எதிரில் உள்ள கம்யூனிட்டி ஹாலில் நடந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் புடை சூழ புதிய கொடியை ஜி.கே.வாசன் அறிமுகம் செய்தார்.
புதிய கொடி ஆரஞ்சு, வெள்ளை, பச்சை ஆகிய மூவர்ணங்களைக் கொண்டுள்ளது. கட்சி மத்தியில் காமராஜர், மூப்பனார் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளது.
புதிய கொடியை உயர்த்திப் பிடித்து வாசன் காண்பித்தார். பிறகு அவர் விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கினார்.
கட்சியின் கொடி அறிமுக விழாவில் ஜி.கே.வாசன் பேசியதாவது:–
எங்களது புதிய இயக்கத்தின் கொடியை மிகவும் மகிழ்ச்சியோடு தமிழ்நாட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறோம். இந்த கொடி மூவர்ணக் கொடியாகும்.
மேலே ஆரஞ்சு நிறம், நடுவில் வெள்ளை, கீழே பச்சை ஆகிய 3 நிறங்களும் கொண்டதாக இந்த கொடி இருக்கும். இதில் பெருந்தலைவர் காமராஜர், மக்கள் தலைவர் மூப்பனார் ஆகியோரின் திரு உருவப் படங்கள் பொறிக்கப்பட்டுள்ளன.
இதுவே புதிய இயக்கத்தின் கொடி ஆகும். இது வலிமையான பாரதம், வளமான தமிழகம் என்பதை உணர்த்தும் வகையில் தேர்ந்து எடுத்துள்ளோம்.
இந்த கொடியில் இடம் பெற்றுள்ள ஆரஞ்சு நிறம் தியாகத்தை குறிக்கிறது. வெள்ளை நிறம் அமைதியையும் சமாதானத்தையும் குறிக்கிறது. பச்சை நிறம் பசுமை மற்றும் வளமையை குறிக்கிறது.
இந்த மூவர்ணக் கொடி தமிழ்நாடு முழுவதும் குக்கிராமங்கள் முதல் மாநகர்கள் வரை பட்டொளி வீசி பறக்கட்டும். வட்டார, நகரங்களில் வீடு, வீடாக வீதி, வீதியாக தொண்டர்கள் உற்சாகத்துடன் இந்த புதிய கொடியை ஏந்தி சென்று மக்களின் நம்பிக்கையைப் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் உள்ள இந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களும், நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும், திருச்சியில் நடைபெறும் திருப்புமுனை மாநாட்டுக்கு 28–ந் தேதி அலைகடலென வருகிறார்கள். நமது புதிய இயக்க கொடியை ஒவ்வொருவரும் அவரவர் வாகனத்தில் பொருத்தி வர வேண்டும்.
புதிய கொடியை தொண்டர்கள் கையில் ஏந்தி எழுச்சியுடன் மாநாட்டில் பங்கேற்க வேண்டும்.
நமது புதிய கட்சியின் பெயர் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் ஆணையத்தின் சட்டத்துக்குட்பட்டு, கோட்பாடுகளுக்கு உட்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த புதிய கட்சி பெயரை 28–ந்தேதி (வெள்ளிக்கிழமை) திருச்சி மாநாட்டில் அறிவிக்கப்படும்.
இப்போது இயக்கத்தின் மூத்த தலைவர்கள் புதிய கொடியை லட்சோப லட்ச மக்களுக்கு அறிமுகம் செய்துள்ளனர். நாளை மறுநாள் மாநாட்டுக்கான பிரமாண்ட ஏற்பாடுகளை அனைவரும் கவனித்து வருவதால், தொண்டர்களின் வேண்டுகோளுக்கு இணங்க கட்சிக் கொடியை இன்று அறிமுகம் செய்துள்ளோம்.
பின்னர் நிகழ்ச்சிக்கு வந்திருந்த முன்னணி நிர்வாகிகள் புதிய கொடி பற்றி வாழ்த்தி பேசினார்கள்.
நிகழ்ச்சியில் ஞானதேசிகன், ரெங்கசாமி மூப்பனார், எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியன், பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் எம்.பி. விசுவநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. மாறன் என்ற வேணுகோபால், முக்தா சீனிவாசன், சைதை ரவி கோவிந்தசாமி, ரவி பாரதி, ஜி.ஆர்.வெங்கடேஷ், ராணி கிருஷ்ணன்.
இ.சி.சேகர், முனைவர் பாட்சா, பிஜுசாக்கோ, கத்திப்பாரா ஜனார்த்தனன், விக்டரி மோகன், விக்டரி ஜெயக்குமார், ஜி.ஆர்.கதிரவன், அடையார் எம்.ராமச்சந்திரன், சுந்தரமூர்த்தி, ஆனந்தராஜ், பிரசாத், அசோக், விஜயன், ஆர்.எஸ்.முத்து, கஜநாதன், ஐ.டி.அரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






Wednesday, November 19, 2014

தமிழ் மாநில காங்கிரஸ்