எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, April 17, 2009

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு - 100% நல்ல வேட்பாளர்

தென்சென்னை வேட்பாளர் சரத்பாபு நன்கு படித்த இளைஞர், முற்போக்கான சிந்தனைவாதி இவரைப் போன்ற ஒரு வேட்பாளரை நாம் தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்துக்கு அனுப்புவது நமது கடமை.

மறக்காமல் வெந்த சோத்தையே வேகவைக்காமல் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த இது போன்ற இளைஞருக்கு வாப்பளிக்க வேண்டும்.

அவர் என்ன செய்தார் என்ன செய்யவில்லை என்று பிறகு நாம் கேள்விகளைக் கேட்கலாம்.

அவர் செய்வார் என்று நம்புவோமாக.

இவரை மற்ற அரசியல்வாதிகளைப் போல் இருப்பார் என்று நினைக்க வேண்டாம். இவரிடம் ஒரு வித்தியாசத்தை பார்க்க முடியும்.

நான் தென்சென்னை வாக்காளனாக இருந்தால் என்னுடைய வாக்கு அவருக்குத்தான்.

தேர்தலில் வெற்றிபெற எனது வாழ்த்துக்கள்.

6 comments:

Anonymous said...

இவரை போன்ற படித்த இளைஞர்களெல்லாம் சேர்ந்து போன சட்டமன்றத் தேர்தலில் ஒரு கட்சி ஆரம்பித்து, தேர்தல் முடிந்தபின் காணாமல் போனது. கோஷ்டி சண்டையும் வந்தது.

Anonymous said...

அம்மாவின் இட்லிகடை வருமானத்தில் நல்ல படித்தவனுக்கு அரசியல் எதுக்கு?

Anonymous said...

இருக்கிறவன் போதாதுன்னு இவன் வேறயா?

Anonymous said...

ஐயோ கடவுளே! படிச்ச பையனுக்கு புத்தி ஏன் பேதலிக்குது. நீதாம்ப்பா காப்பாத்தணும்.

Anonymous said...

இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும்.

பாராட்டுக்கள். நன்றாக இருந்தது.

ஒரு சில வேட்பாளர்களுக்காக மட்டும் வாக்கு கேட்பது ஏன்?

உங்களுடைய கோணத்தில் இரண்டு வேட்பாளரும் சரியான வேட்பாளர் தான்.

நன்கு அலசி ஆராய்ந்து பதிவை இடுவதற்கு வாழ்த்துக்கள் பிரதிபலிப்பான்.

Anonymous said...

pls boycott this election for eelam issue