எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, February 19, 2009

நேரடி சந்தை நிலவரம்

எல்லாரும் நேரடி சந்தை நிலவரத்தை பார்த்துக் கொள்ளலாம்.

Friday, February 13, 2009

காதலர் தின நல்வாழ்த்துக்கள்

காதல் என்பது மிக அழகான ஒரு விஷயம். காதலுக்கு விளக்கம் என்றால் அதை போல் சிக்கலான விஷயம் வேறெதுவும் இருக்க முடியாது.

யாரிடமாவது காதலிப்பவர்களை கேளுங்களேன் காதல் என்றால் என்ன?

கீழே உள்ள Link ஐ கிளிக் செய்யவும் இவருடைய காதல் அனுபவத்தை கேட்போம்.

காதல் என்பது


இப்படி பல்வேறு விதமாக சொல்வார்கள்.

அதனால் தான் அதை ஒரு சிக்கலானது என்றேன்.

காதல் தேவை.

காதலிக்க வேண்டும் எல்லோரும். காதல் இல்லையென்றால் நாம் வெறும் ஜடம் தான் என்னை பொருத்த வரையில்.

காதலர்களுக்கு என்னுடைய காதலர் தின நல்வாழ்த்துக்கள்.

Sunday, February 1, 2009

மீண்டும் நிரூபணம் - சிங்களர்களின் கொடுங்கோல் ஆட்சியிக்கு

நார்வேயில் தமிழர்களுடன் உறவை வளர்த்த இலங்கை தூதுவர் திருப்பி அழைக்கப்பட்டார்.

நார்வேக்கான இலங்கைத் தூதுவர் எசல வீரக்கோன் வெளிவிவகார அமைச்சரினால் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்பட்டுள்ளார்.

நார்வேயில் கடந்த இருவருடங்களாக தூதுவராக கடமையாற்றிய ஏசல நார்வேயில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு சார்பாகவும், நார்வேயில் உள்ள தமிழர்களுடன் உறவுகளை ஏற்படுத்திவருவதாகவும் இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக இலங்கை வெளிவிவகார அமைச்சகம் புகார் செய்யப்பட்டதையடுத்து இவர் வரவழைக்கப்பட்டுள்ளார்.

நார்வேயில் தமிழ் மக்களுக்கு எதிரான புகைப்படக் கண்காட்சியை நடத்த வேண்டும் என இலங்கை அரசாங்கம் பணித்திருந்தது எனினும் இவர் அதற்கு மறுப்பு தெரிவித்ததையடுத்து திருப்பியழைக்கப்பட்டுள்ளார்.

சிங்கள் அரசின் பிரதிநிதியான தூதுவரே சிங்களர்களின் அடக்குமுறையை, இனப்படுகொலையை கண்டு அவரது அரசிற்கு எதிராக போராடத் துணிந்துள்ளார் என்றால் எந்த அளவிற்கு இலங்கைத் தமிழர்களுக்கு பாதிப்பு இருக்கும்.