எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, February 29, 2008

மத்திய பட்ஜெட் தாக்கல்

2008-09-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி ப. சிதம்பரம் இன்று பகல் 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேளாண்துறை உற்பத்தி 2.6 சதவீதமாக உள்ளதால், அதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

விவசாயிகள் நலனில் இந்த அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. எனவே விவசாயிகளை ஊற்சாகப்படுத்த கடன்கள் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு கடன் கழகங்களில் கடந்த 2007 மார்ச் 31-ந்தேதி வரை விவசாìகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி ஆகும்.

மற்ற விவசாயிகள் தங்கள் கடனில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் கட்டி விட்டால், மீத முள்ள தொகை அப்படியே தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நாடெங்கும் உள்ள 3 கோடி சிறு- குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். மற்ற பிரிவு விவசாயிகளில் சுமார் 1 கோடி பேர் கடன் தள்ளுபடி பெறுவார்கள்.

அந்த வகையில் சிறு- குறு விவசாயிகளின் 50 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியாகும். மற்ற விவசாயிகளின் 10 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந் கடன் தள்ளுபடி வரும் ஜுன் மாதம் முதல் அமலுக்கு வரும்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். எனவே இனி ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.

ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பு மாற்றப்படுகிறது. இனி ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும்.

அது போல 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானத் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரி கட்ட வேண்டும்.

பெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 80ஆயிரம் வரை வரி இல்லை.

முதியோர்களுக்கான வருமான வரி உச்சவரம்புக்கு ரூ1 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரமாக உயரத்தப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்திற்கான பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெடினால் விவசாயிகளின் தற்கொலை முயற்சியை தடுக்க முடியாது என்பது உண்மை,ஏனென்றால் அவர்கள் எந்தப்பிரச்சனைக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஆராயாமல் தேர்தல் நோக்கத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி எனபது வெறும் கண்துடைப்பு நாடகமே.

Friday, February 22, 2008

சென்னைக்கு செல்வாரா லாலு


புனே: ‘தமிழக பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப்பட்டுள் ளது. லாலு பிரசாத்துக்கு தைரியமிருந்தால், இந்த பிரச்னையை எதிர்த்து, மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத் தட்டும்’ என, சிவசேனா தலைவர் பால் தாக்கரே ஆவேசமாகக் கூறியுள்ளார்.

மகாராஷ்டிர நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரே, வட மாநிலத்தவருக்கு எதிராக தெரிவித்த கருத்துக்கள் பெரும் பரபரப் பை ஏற்படுத்தி கலவரமும் ஏற்பட்டது. பீகார், உ.பி., மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பலர் சொந்த ஊருக்கு திரும்பி விட்டனர். இதுபற்றி, பீகார் முன்னாள் முதல்வரும், ரயில்வே அமைச்சருமான லாலு கூறுகையில், ‘ராஜ் தாக்கரே போன்ற வன்முறையாளர்களால் தேச ஒற்றுமைக்கு பாதிப்பு ஏற்படுகிறது. பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில், ‘சாட் பூஜா’ சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். ராஜ் தாக்கரேயின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அவரது வீட்டுக்கு முன்பாக, ‘சாட் பூஜா’ நடத்துவேன்’ என அறிவித்திருந்தார்.

இந்த விவகாரம் குறித்து சிவசேனா தலைவர் பால் தாக்கரே, தனது கட்சி பத்திரிகையான ‘சாம்னா’வில் தலையங்கம் எழுதியுள்ளார். அதில், அவர் எழுதியிருப்பதாவது: மத்தியில் ஐ.மு., கூட்டணி ஆட்சி நடக்கிறது. அந்த கூட்டணியில், லாலுவின் ராஷ்டிரிய ஜனதா தளம், தி.மு.க., போன்ற கட்சிகள் உள்ளன. தி.மு.க., ஆட்சி நடக்கும் தமிழகத்தில், பள்ளிகளில் தமிழ் கட்டாய பாடமாக்கப் பட்டுள்ளது. லாலுவுக்கு தைரியமிருந்தால், சென்னை மெரீனா கடற்கரைக்கு சென்று, ‘சாட் பூஜா’ நடத்தட்டும். தனது ஆட்சியின் மூலம் பீகாரை மிக மோசமான மாநிலமாக மாற்றியவர் லாலு.

மும்பை மாநகராட்சியில் இந்தியை ஆட்சி மொழியாக்க வேண்டுமென, சில வட மாநில காங்கிரஸ் தலைவர்கள் கூறி வருகின்றனர். இவர்கள் முதலில், சென்னை, பெங்களூரு, கவுகாத்தி, ஐதராபாத், கோல் கட்டா போன்ற இடங்களுக்கு சென்று, அங்கு இந்தியை மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்கட்டும். அதற்கு பின், மும்பைக்கு வரலாம். மும்பைக்கோ, மராட்டிய மொழிக்கோ அவமானம் ஏற்பட்டால், அதை மண்ணின் மைந்தர்கள் பொறுத்துக் கொண்டு இருக்கமாட்டர். இவ்வாறு தலையங்கத்தில் எழுதியுள்ளார்.

07.நவாஸ்ஷெரீப்- சர்தாரி இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி


இஸ்லாமாபாத்: நவாஸ்ஷெரீப்- சர்தாரி கட்சிகள் இணைந்து பாகிஸ்தானில் கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டுள்ளது.

பாகிஸ்தானில், கூட்டணி அரசு அமைவது உறுதியாகி விட்டது. பார்லிமென்ட் தேர்தலில், இதுவரை முடிவுகள் அறிவிக்கப்பட்ட 258 தொகுதிகளில், தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பெனசிரின் பாகிஸ்தான் மக்கள் கட்சிக்கு, 85 இடங்கள் கிடைத்துள்ளன. இக்கட்சியின் இணைத் தலைவர் சர்தாரி, பிரதமராக போவது இல்லை என நேற்று முன்தினம் தெரிவித்தார். எனவே, பிரதமர் யார் என்பதை முடிவு செய்வதில் அக்கட்சி ஈடுபட்டுள்ளது.

நவாஸ் ஷெரீப் தலைமையிலான பாகிஸ்தான் முஸ்லிம் லீக்( நவாஸ்) கட்சிக்கு 67 இடங்கள் கிடைத்துள்ளன. அதிபர் முஷாரப்பால் நீக்கப்பட்ட சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி சவுத்ரி உட்பட அனைத்து நீதிபதிகளையும் மீண்டும் பணியமர்த்த வேண்டும் என்பதில் நவாஸ் மிகவும் பிடிவாதமாக உள்ளார்.

பெனசிர் மற்றும் சர்தாரி மீது பல ஊழல் வழக்குகள் நிலுவையில் இருந்தன. அதிபர் முஷாரப், பொது மன்னிப்பு அளித்து அவசர சட்டத்தை அறிவித்த பின்னரே, இருவரும் நாடு திரும்பினர். நீக்கப்பட்ட நீதிபதிகளை மீண்டும் பணியமர்த்தினால், அவசர சட்டம் ரத்து செய்யப்படும்; தான் மீண்டும் கைது செய்யப்படுவோம் என்று சர்தாரி அச்சப்படுகிறார். எனவே தான், நவாஸ் ஷெரீப் கோரிக்கையை ஏற்க தயக்கம் காட்டி வருகிறார்.

பொது மன்னிப்பு சட்டத்துக்கு எதிராக, சுப்ரீம் கோர்ட்டில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. பொது மன்னிப்பு சட்டம் குறித்து, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு கூறும் வரை, இந்த வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்படுவதாகக் கூறப்பட்டது. இத்துடன், சுவிட்சர்லாந்து நாட்டில், சர்தாரி மீது பல கோடி ரூபாய் ஊழல் வழக்கு நிலுவையில் உள்ளது. இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என, பாகிஸ்தான் அரசு நேற்று கேட்டுக் கொண்டது. இவையெல்லாம், சர்தாரிக்கு அரசால் கொடுக்கப்படும் மறைமுக நெருக்கடிகள்.

இதுதவிர, தன்னுடன் இணைந்து செயல்பட வேண்டும்; இல்லாவிடில், அவசர சட்டம் ரத்து செய்யப்படும் என, சர்தாரியை அதிபர் முஷாரப் மறைமுகமாக எச்சரித்துள்ளார். முஷாரப்புடன் இணைந்து செயல்படும் அரசு தான் பாகிஸ்தானில் அமைய வேண்டும் என அமெரிக்கா விரும்புகிறது. பாகிஸ்தானுக்கான அமெரிக்க தூதரை, சர்தாரி நேற்று முன்தினம் சந்தித்துப் பேசினார். அப்போது, முஷாரப்புடன் இணைந்து செயல்படும்படி, அமெரிக்க தூதர் வலியுறுத்தியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த சூழ்நிலையில் தான், சர்தாரி-நவாஸ் ஷெரீப் சந்திப்பு நேற்று நடந்தது. வடமேற்கு எல்லை மாகாணத்தில் பலம் வாய்ந்த கட்சியாக தேசிய அவாமி லீக் கட்சி உருவெடுத்துள்ளது. பார்லிமென்ட் தேர்தலில் இக்கட்சிக்கு 15 இடங்கள் கிடைத்துள்ளன. இந்த கட்சியின் தலைவர் அஸ்பாந்தியார் வாலி கானையும், சர்தாரி சந்தித்துப் பேசினார்.

பாகிஸ்தான் மக்கள் கட்சியும், பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியினரும் இணைந்து ஆட்சி அமைப்பது தொடர்பாக பேச்சு நடத்தினர். இதில் இரு கட்சிகளும் இணைந்து கூட்டணி ஆட்சி அமைக்க முடிவு ஏற்பட்டது. மேலும் புட்டோ மரணம் குறித்து ஐ . நா., விசாரிக்க வேண்டும் என கோருவோம் என புட்டோ கணவர் சர்தாரி தெரிவித்துள்ளார். நீதிபதி விவகாரம் மற்றும் முஷாரப் பதவி விலக வற்புறுத்துவது குறித்து எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

PMK to fight polls as part of DPA


LL SMILES: PMK founder S. Ramadoss with Chief Minister M. Karunanidhi at the latter’s residence in Chennai on Thursday. PMK president G.K. Mani is in the picture.

CHENNAI: Pattali Makkal Katchi founder S. Ramadoss, who met Chief Minister M. Karunanidhi on Thursday at the Gopalapuram residence for over 30 minutes, reiterated that his party would remain in the Dravida Munnetra Kazhagam-led Democratic Progressive Alliance to fight the Parliamentary elections.

The last such meeting between the two leaders took place in May last. Since then the two parties had indulged in a war of words over a host of issues .

Explaining the purpose of his meeting, Dr. Ramadoss, who was accompanied by the party president G.K. Mani, said he greeted the Chief Minister for three reasons — declaring the first day of the Tamil month “Thai” as the Tamil New Year Day; coming out openly against the use of publicity extravaganza such as the display of massive hoardings and the Supreme Court’s recent verdict upholding the State Government’s Tamil Learning Act. He briefed the Chief Minister on his party’s anti-liquor campaign, which would be launched later this month.

Keeping in mind that the Budget session of the Assembly would begin soon, Dr. Ramadoss impressed upon Mr. Karunanidhi the need for the State Government to prepare an economic survey, action-taken reports and an outcome budget on the lines of the Union Government. “If we do, ours would be the first State, setting an example to others,” he said.

He wanted the State Government to come out with agriculture and gender budgets.

There should be a local bodies’ window in the State Government’s budget, the PMK leader said.

He brought to the attention of the Chief Minister the fact that other States had exclusive Ministers for primary education and water resources. Tamil Nadu too should follow suit, Dr. Ramadoss said.

Tuesday, February 19, 2008

தமிழ்நாட்டில் சீரமைக்கப்பட்ட எம்.பி, எம்.எல்.ஏ தொகுதிகள்:

தமிழ்நாட்டில் சீரமைக்கபட்ட எம்.பி., எம்.எல்.ஏ. தொகுதிகள் விவரம்: தேர்தல் கமிஷன் அதிகார பூர்வமாக
வெளியிட்டது
சென்னை, பி. 20-
இந்தியாவில் தொகுதி மறுசீரமைபு படி பிரிக்க பட்ட புதிய தொகுதி களுக்கு ஜனாதிபதி பிரதிபா பட்டீல் நேற்று
ஒபுதல் வழங்கி உள்ளார்.
தமிழ்நாட்டில் 39 பாராளு மன்றத் தொகுதிகளும் 234 சட்டசபை தொகுதிகளும் உள்ளன.
இதில் தொகுதிகளை மறு சீரமைபு செய்து பிரித்ததில் தொகுதிகளின் எணிக்கை மாறாமல் அபடியே உள்ளது.
ஆனால் சில தொகுதி களில் உள்ள ஊர்கள் வேறொரு தொகுதிக்கு மாற்றபட்டுள் ளன. சில தொகுதிகளின்
பெயர்கள் மாற்றபட்டு உள்ளன.
அடுத்த ஆடு நடக்க இருக்கும் பாராளுமன்ற தேர் தல் மாற்றியமைக்கபட்ட புதிய தொகுதிகளின் அடிபடை யில்
தான் நடைபெறும். தமிழ்நாட்டில் பிரிக்கபட்ட 39 எம்.பி. தொகுதிகளும் அதற் குட்பட்ட சட்டசபை தொகுதி களும்
வருமாறு:-
1. திருவள்ளூர் (தனி)
கும்மிடிபூடி, பொன் னேரி (தனி), திருவள்ளூர், பூந்தமல்லி (தனி), ஆவடி மாதவரம்.
2. சென்னை வடக்கு
திருவொற்றிïர், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர், பெரம் பூர், கொளத்தூர், திரு.வி.க.நகர் (தனி) ராயபுரம்.
3. சென்னை தெற்கு
விருகம்பாக்கம், சைதா பேட்டை, தியாகராய நகர், மைலாபூர், வேளச்சேரி, சோழிங்கநல்லூர்.
4.மத்திய சென்னை
வில்லிவாக்கம், எμம்பூர் (தனி), துறைமுகம், சேபாக்கம் - திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அணா நகர்.
5.ஸ்ரீபெரும்புதூர்
மதுரவாயல், அம்பத்தூர், ஆலந்தூர், ஸ்ரீபெரும்புதூர் (தனி), பல்லாவரம், தாம் பரம்.
6.காஞ்சீபுரம் (தனி)
செங்கல்பட்டு, திருபோ ரூர், செய்ïர் (தனி), மதுராந்தகம் (தனி), உத்திரமேரூர், காஞ்சீபுரம்.
7.அரக்கோணம்
திருத்தணி, அரக்கோணம், சோளிங்கர், காட்பாடி, ராணிபேட்டை, ஆற்காடு.
8.வேலூர்
வேலூர், அணைக்கட்டு, கீழ்வைத்தியணான் குபம் (தனி), குடியாத்தம் (தனி), வாணியம்பாடி, ஆம்பூர்.
9.கிருஷ்ணகிரி
ஊத்தங்கரை (தனி), பர்கூர், கிருஷ்ணகிரி, வேபனஹள்ளி, ஓசூர், தளி.
10.தர்மபுரி
பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாபிரெட்டிபட்டி, அரூர் (தனி) மேட்டூர்.
11.திருவணாமலை
ஜோலார்பேட்டை, திரு பத்தூர், செங்கம் (தனி) திருவணாமலை, கீழ் பெணாத்தூர், கலசபாக் கம்.
12.ஆரணி
போளூர், ஆரணி, செய்யார், வந்தவாசி (தனி), செஞ்சி மைலம்.
13.விμபுரம் (தனி)
திடிவனம் (தனி), வானூர் (தனி), விμபுரம், விக்கிர வாடி, திருக்கோவிலூர் உளுந்தூர்பேட்டை.
14.கள்ளக்குறிச்சி
ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக் குறிச்சி (தனி), கங்க வல்லி (தனி), ஆத்தூர் (தனி) ஏற்காடு (ப.கு.)
15.சேலம்
ஓமலூர், எடபாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு),வீரபாடி.
16.நாமக்கல்
சங்கிரி, ராசிபுரம் (தனி), சேந்தமங்கலம் (ப.கு.), நாமக் கல், பரமத்தி வேலூர், திருச் செங்கோடு
17. ஈரோடு
குமாபாளையம், ஈரோடு (கிழக்கு), ஈரோடு (மேற்கு), மொடக்குறிச்சி, தாராபுரம் (தனி), காங்கேயம்.
18. திருபூர்
பெருந்துறை, பவானி, அந்திïர், கோபிச்செட்டி பாளையம், திருபூர் (வடக்கு), திருபூர் (தெற்கு)
19.லகிரி (தனி)
பவானிசாகர் (தனி), உதக மடலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுபாளையம், அவினாசி (தனி).
20.கோயம்புத்தூர்
பல்லடம், சூலூர், கவுடம் பாளையம், கோயம்புத்தூர் (வடக்கு), கோயம் புத்தூர் (தெற்கு) சிங்காநல்லூர்
21. பொள்ளாச்சி
தொடாமுத்தூர், கிணத் துக்கடவு, பொள்ளாச்சி, வால் பாறை (தனி), உடுமலை பேட்டை, மடத்துக்குளம்
22. திடுக்கல்
பழனி, ஒட்டன்சத்திரம், ஆத்தூர், ஞஉலக்கோட்டை (தனி), நத்தம், திடுக்கல்

23. கரூர்
வேடசந்தூர், அரவக் குறிச்சி, கரூர், கிருஷ்ணராய புரம் (தனி), மணபாறை, விராலிமலை
24. திருச்சிராபள்ளி
ஸ்ரீரங்கம், திருச்சிராபள்ளி (மேற்கு), திருச்சிராபள்ளி (கிழக்கு), திருவெறும்பூர், கந்தர் வக்கோட்டை (தனி), புதுக்
கோட்டை.
25. பெரம்பலூர்
குளித்தலை, லால்குடி, மணச்சநல்லூர், முசிறி, துறை ïர் (தனி), பெரம்பலூர் (தனி).
26. கடலூர்
திட்டக்குடி (தனி), விருத்தா சலம், நெய்வேலி, பருட்டி, கடலூர், குறிஞ்சி பாடி.
27. சிதம்பரம் (தனி)
குன்னம், அரியலூர், ஜெயங் கொடம், புவனகிரி, சிதம் பரம், காட்டுமன்னார் கோயில் (தனி).
28. மயிலாடுதுÛ
சீர்காழி (தனி), மயிலாடு துறை, பூம்புகார், திருவிடை மருதூர் (தனி), கும்பகோணம், பாபநாசம்.
29. நாகபட்டினம் (தனி)
நாகபட்டினம், கீழ்வேலூர் (தனி), வேதாரயம், திருத் துறை பூடி (தனி), திரு வாரூர், நன்னிலம்.
30. தஞ்சாவூர்
மன்னார்குடி, திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, பட்டுக் கோட்டை, பேராவூரணி.
31. சிவகங்கை
திருமயம், ஆலங்குடி, காரைக்குடி, திருபத்தூர், சிவகங்கை, மானா மதுரை (தனி).
32. மதுரை
மேலூர், மதுரை கிழக்கு, மதுரை வடக்கு, மதுரை தெற்கு, மதுரை மையம், மதுரை மேற்கு.
33. தேனி
சோழவந்தான் (தனி), உசிலம்பட்டி, ஆடிபட்டி, பெரியகுளம் (தனி), போடி நாயக் கனூர், கம்பம்.
34. விருதுநகர்
திருபரங்குன்றம், திருமங் கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருபுக் கோட்டை.
35. ராமநாதபுரம்
அறந்தாங்கி, திருச்சுழி, பரமக்குடி (தனி), திரு வாடனை, ராமநாதபுரம், முது குளத்தூர்.
36. தூத்துக்குடி

விளாத்திகுளம், தூத்துக் குடி, திருச்செந்தூர், ஸ்ரீவை குடம், ஓட்ட பிடாரம் (தனி),கோவில்பட்டி.
37. தென்காசி (தனி)
ராஜபாளையம், ஸ்ரீவில்லி புத்தூர் (தனி), சங்கரன்கோவில் (தனி), வாசுதேவநல்லூர் (தனி), கடையநல்லூர்,
தென்காசி.
38. திருநெல்வேலி
ஆலங்குளம், திருநெல்வேலி, அம்பாசமுத்திரம், பாளையங் கோட்டை, நாங்குநேரி, ராதா புரம்.
39. கன்னியாகுமரி
கன்னியாகுமரி, நாகர் கோவில், குளச்சல், பத்மநாப புரம், விளவன்கோடு, கிள்ளி