எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, November 6, 2007

பாகிஸ்தானின் அவசரநிலைப்பிரகடணம்

நம்ம ஊர்ல ஒரு பழமொழி இருக்குது தன் வினை தன்னைச் சுடும் அப்படின்னு (இன்னுமொன்று சொன்னால் பொருத்தமாக கூட் இருக்கும் கெடுவான் கேடு நினைப்பான் )

பாகிஸ்தானை ஆரம்பத்தில் இருந்து பார்ப்போம்

அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி - என்ற பழமொழிக்கு ஏற்றார் போல் இந்தியா பாகிஸ்தான் பிரிவினையின் போது முகமது அலிஜின்னா அவர்கள் காஷ்மீரை கைப்பற்ற தீவிரவாதத்தை பயன்படுத்தினார் ஆனால் அதில் தோல்வி அடுத்து பாகிஸ்தானியர்களை மதபோதனைகள் என்றப்பெயரில் தீவிரவாதத்தை வளர்க்கவேண்டுமென்றும் அதுதான் நமது தலையா கடமையென்றும் அவன் தான் உண்மையான முஸ்லீம் என்று போதனை செய்கிறார்கள்।

பாகிஸ்தானின் தலைவர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியாக மிதவாதியாக வாழ்ந்து காட்டியிருந்தால் பின்னால் வரும் தலைவர்களும் மிதவாதத்தை கையில் எடுத்திருப்பார்கள் .

பாகிஸ்தானியர்கள் உணரவேண்டும் தீவிரவாதத்தை விடுத்து மிதவாதபோக்கை கடைபிடிக்கவேண்டும் ,தற்போதை தலைவர்கள் பின்னால் வரும் இளையதலை முறையினருக்கு முன்னுதாரணமாக மிதவாதிகளாக நடந்துகாட்டவேண்டும்।
அப்படி வாழ்ந்தாலொழிய மற்றப்படி பாகிஸ்தானியர்களின் அழிவை எவராலும் தடுக்கமுடியாது.