எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, December 16, 2008

ஞானியின் பார்வையில் : மும்பை பயங்கரவாதம்

இரண்டாவது மொட்டை மாடிக்கூட்டம் எங்கள் அலுவலகத்தில் நேற்று நடந்தது. அதில் பிரபல பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஞானியின் பார்வையில் மும்பை பயங்கரவாத்தத்தை பற்றிய தலைப்பில் பொதுவான விவாதம் நடந்தது.


மும்பை தாக்குதல் நவம்பர் 26 ம் தேதி பாகிஸ்தான் தீவிரவாதிகளால் நடத்தப்பட்ட போது அவர் மும்ம்பையில்தான் இருந்துள்ளார். அப்பொழுது மும்பை தாஜ் ஹோட்டல், நரிமன் பகுதி மற்றும் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையங்களில் தாக்குதல் நடந்த போது பொதுமக்கள் அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதியான சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தை எந்த ஒரு தொலைக்காட்சி நிறுவனமும் பதிவு செய்து ஒளிபரப்பவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

அவர் முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் :

1. தொலைக்காட்சி மீதான குற்றச்சாட்டு.
2 காவல் துறையினர்மீது சரியான திட்டமிடாமை.
3.அரசியல்வாதிகளின் மீதான குற்றச்சாட்டு.

தொலைக்காட்சிகளின் மீதான குற்றச்சாட்டு

தொலைக்காட்சி ஊடகங்கள் தங்களுடைய TRP Rate ஐ உயர்த்திக் கொள்ள வேண்டும் என்பதற்க்காக தாஜ்ஹோட்டலிலேயே முற்றுகையிட்டு சுட சுட செய்தியை தரவேண்டும் என்பதற்காக தீவிரவாதிகளின் அதிரடி தாக்குதல்களையும் கமாண்டேக்களின் எதிர் தாக்குதல்களயும் நேரடி ஒளிபரப்பு செய்து கொண்டிருந்தார்கள்.

ஆனால் சத்ரபதி சிவாஜி ரயில் நிலையத்தில் அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்பட்ட இடங்களில் சுட சுட செய்திகளில்லை அது சுட பட்ட செய்தி ஆன காரணத்தால் மக்களுக்கு ஆர்வம் இருக்காது என்பதனாலும் அங்கு செத்துப்போனது சாதாரணமான மனிதர்கள் என்பதாலும் எந்த ஒரு தொலைக்காட்சி ஊடகமும் அதை ஒளிபரப்பு செய்ய முன்வரவில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறார்.

இதே கருத்தை நானும் வலியுறுத்துகிறேன்.

ஆனால் நரிமன் பகுதியாகட்டும், தாஜ் ஹோட்டலாகட்டும் பணக்காரர்கள் வாழும் பகுதி வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் பெரும் தொழிலதிபர்கள் இருக்கும் இடம் இதை ஒளிபரப்பு செய்தால் உலகெங்கும் இருக்கும் மக்கள் எல்லோரும் ஆர்வமாக பார்ப்பார்கள் அதனால் இந்த தொலைகாட்சி சேனல்களெல்லாம் தங்களுடயை TRP Rate ஐ ஏற்றி பணம் சம்பாதிக்கும் நோக்கோடுதான் செயல்படுகிறது மற்றும் எந்த ஒரு உண்மையையும் வெளிகொண்டுவர அவைகள் ஈடுபடுவதில்லை அவைகள் சுயநல நோக்கோடு செயல்படுகின்றன என்கிறார்.

பத்திரிக்கை துறை மட்டுமே பொது நல நோக்கோடு சென்று செய்திகளை சேகரித்து தருகின்றன என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்.


காவல்துறையின் மீது குற்றச்சாட்டு.

காவல்துறையினர் எந்தவொரு திட்டமும் இல்லாமல் சென்று எதிர்தாக்குதலை நடத்தியுள்ளனர். ஆனால் தீவிரவாதிகளை மிகச் சரியான திட்டங்களை தீட்டி செயல்பட்டனர் என்பதையும் தெளிவாக சொல்கின்றார். தொலைக்காட்சி பேட்டியின்போது உயர் போலீஸ் அதிகாரி சொல்கிறார் எங்களுக்கு எந்தவொரு வழிகாட்டுதலும் இல்லாமல் சென்று தாக்குதலை தொடங்கினோம். ஆனால் தீவிரவாதிகள் ஓரிடத்தில் தாக்குதலை நடத்திவிட்டு ஓடி மறைந்து இன்னொரு இடத்திலிருந்து தாக்குதலை நடத்தினார்கள். அதனால் நாங்கள் சற்று நிலைகுலைந்து விட்டோம் என்று சொல்கிறபோது இவர்களின் மீதான குற்றச்சாற்றும் சரியென்றே தோன்றுகிறது.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளும் - இந்துத்துவா பயங்கரவாதிகளும்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் இந்தியாவின் மீதான தாக்குதல். என்பது இந்தியாவில் உள்ள பயங்கரவாத மதவெறியர்களான இந்துத்துவா அமைப்பினால் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகே தொடங்குவதாக சொல்கிறார்.

பாகிஸ்தான் பயங்கரவாதிகளை இந்திய அரசாங்கத்திடம் ஒப்படைக்கும் முன்பு நமது நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்புகளான VHP, RSS மற்றும் BJP அமைப்புகளை மூடி விட்டு அதன் தலைவர்களான பிரவீன் தோகாடியா, அத்வானி, நரேந்திர மோடி, ஆகியோர்களை கைது செய்யவேண்டும் என்கிறார்.

நிறைய மேற்கோள்களுடன் 1992 ற்கு முந்தய தாக்குதல்களைப் பற்றி கேட்டபோது அவையெல்லாம் காஷ்மீர் சம்பந்தப்பட்ட செயல்பாடாகவே கருதுகிறார்.

பாபர் மசூதியை இடிக்கும் முன்பு வரை எந்த ஒரு பெரிய அசம்பாவிதங்களோ இஸ்லாமிய தீவிரவாத செயல்களோ நடைபெறவில்லை என்பதை தெளிவாக விளக்குகிறார்.


பொதுவாகவே 10, 12 வருடங்களுக்கு முன்பெல்லாம் விநாயகர் சதுர்த்தி விழாவை இவ்வளவு சிறப்பாக கொண்டாடியதில்லை. விநாயக சதுர்த்தி விழாவை ஆர்,எஸ்.எஸ், வி.எச்.பி. மற்றும் பி.ஜே.பி போன்ற இயக்கங்கள்தான் 1992 பிறகு நாடெங்கும் பரப்பி மக்களிடையே மதவெறியை தூண்டி (முஸ்லீம்களுக் எதிராக கலகங்களை தூண்டி) இரண்டு சமுதாய மக்களுக்கும் இடையே பிரச்சனைகளை கிளப்பி அதில் குளிர் காயந்து கொண்டிருக்கிறார்கள்.

வி.எச்.பி, ஆர்.எஸ்.எஸ் தயவில் பி.ஜே.பி ஆரம்பிக்கப்பட்டபோது கட்சியை எப்படி வளர்க்கலாம் என்று நினைத்தபோதுதான் அவர்களுக்கு கிடைத்தது இந்துத்துவா கொள்கை. இந்த கொள்கையை எப்படி மக்களிடையே கொண்டு செல்வது என்றபோதுதான் ஒவ்வொன்றாக தோன்றியது. முதலில் நம்முடைய கற்பனையான இதிகாசங்களை (ராமாயணம், மகாபாரதம்) தூசி தட்டி எடுத்து அதை நாடகமாக்கி மக்களிடையே ஆன்மீக உணர்வையும் மத உணர்வையும் வளர்த்தது. அவர்களிடத்தில் மதவெறியையும் தூண்டிக் கொண்டே பிரச்சாரத்தை செய்து கட்சிக்கு ஆள்பிடித்து மூளை சலவை செய்து சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரையும் ஆன்மீக வெறியையும் ஆயுத பயிற்சிகளையும் கொடுத்து அவர்களை நாசவேலைக்கு தயார் செய்து கொண்டிருந்தது வி.எச்.பி.

அவ்வப்போது வி.எச்.பி பயிற்சி முகாம்களை நடத்தி அதிலென்னவோ ஆன்மீக சிந்ததனைகளை போதிப்பதுப்போல இந்துத்துவா பயங்கரவாத சித்தாந்தங்களை போதித்து அவர்களுக்குள் ஒரு விதமான மதவெறியை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்து ஒற்றுமையாக இருந்த இந்து, முஸ்லீம்களிடையே பிரிவினைகளை ஏற்படுத்தி அதை தமக்கு சாதகமாக்கி கொண்டு ஆட்சியைப் பிடிக்க பி.ஜே.பி திட்டம்போட்டு அதையும் நிறைவேற்றி கொண்டது.


வி.எச்.பி மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்கள் தோன்றிய பிறகு கூட பெரிதாக அந்த இயக்கங்கள் தென் மாநிலங்களில் வளர்ந்ததாக தெரியவில்லை. ஆனால் பி.ஜே.பி என்ற தீவிரவாத அரசியல் கட்சி வந்த பிறகுதான் எல்லா இடங்களிலும் பயங்கரவாதத்தின் கிளைகளை ஏற்படுத்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி கலகங்களை ஏற்படுத்தி பாபர் மசூதியை இடித்தன. மசூதி இடித்தப் பிறகுதான் இஸ்லாமியர்கள் தங்களுக்குள் பிராந்திய வேற்றுமைகளை மறந்து தங்கள் இனங்களை பாதுகாத்துக்கொள்ள பாகிஸ்தானை அடிப்படையாக கொண்ட சில அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு அவர்கள் தற்காப்புக்காக செயல்படுகிறார்கள்.

இருந்தாலும் இந்தியாவில் உள்ள எந்தவொரு முஸ்லீம் அமைப்புகளும் தீவிரவாத செயல்பாடுகளில் ஈடுபடுவதில்லை.

ஆனாலும் விதிவிலக்காக ஒருசில அமைப்புகள் மட்டும் பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுக்கு உதவுகிறார்கள் என்பதையும் மறுப்பதிற்கில்லை. ஏனென்றால் உள்ளுர் அமைப்புகளின் உதவிகள் இல்லாமல் எந்தவொரு தீவிரவாதியும் நம் நாட்டிற்குள் நுழைந்து விட முடியாது. இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

தீர்வு

பாகிஸ்தானின் மீது போர் தொடுப்பது தீர்வாக இருக்க முடியாது. மற்றும் பயங்கரவாதிகளை உலகத்தின் நீதியின் முன்பு கொண்டு சென்று நிறுத்த வேண்டும் என்று சொல்கிறார். இந்த கருத்தை நானும் ஆமோதிக்கிறேன். ஏனென்றால் நம் நாட்டிற்கு இந்த தருணத்தில் போர் என்பது தேவையில்லாத ஒன்று உலகப் பொருளாதாரம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு கொண்டிருக்கும் இந்த சமயத்தில் போர் என்பது தவிர்க்க படக் கூடிய ஒன்றுதான். அப்படியே போர் என்று வந்தால் நமது நாட்டின் பொருளாதாரமும் இன்னும் மோசமாக பாதிப்படையும். ஆதலால் போர் என்பது தீர்வாகாது.


நேற்று வரை நான் ஞானியை தவறான கண்ணோட்டத்துடன் தான் பார்த்து கொண்டிருந்தேன். ஒரு பழமொழி உண்டு கண்ணால் பார்ப்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய் என்று. அவருடைய பேச்சை கேட்ட பிறகுதான் அவர் மீதான தவறான என்னுடைய கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டேன்.

ஞானியின் நேர்மையான விளக்கமும், தெளிவான கண்ணோட்டமும், அவருடைய நாத்திக வாதமும், சீரிய சிந்தனைகளும் மற்றவர்கள் பார்க்கும் கோணத்திலிருந்து மாறுபட்டு சிந்தித்து நடு நிலைமையாக பேசுவதால் நிறைபேருக்கு வயிற்றெரிச்சல் ஏற்பட்டு கேள்விகணைகளை ஏவுகிறார்கள் ஆனால் அவரோ மிகவும் சரியான வாதத்தை எடுத்து வைக்கிறார் அதனால் மற்றவர்கள் நிலைகுலைந்து போய் என்ன கேட்கவேண்டும் என்பதை மறந்து தேவையில்லாமல் அவர் மீது குறை சொல்ல வேண்டும் என்ற நோக்கோடே கேள்விகளை கேட்கின்றனர்.

ஒருவர் கேள்வி கேட்டார் தமிழ்நாட்டில் பெரும்பாலும் தீவிரவாத தாக்குதல் நடைபெறுவதில்லையே அதற்கு என்ன காரணம் என்று கேட்டார்.

மற்றொருவர் சட்டென்று எழுந்து தந்தை பெரியார் இருந்த காரணத்தால் நடைபெறவில்லையா என்று கேட்டார்.

ஞானியோ சரியான விளக்கத்தை தராமால் தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் நடைபெறவில்லை என்றுசொன்னால் உங்களுக்கும் உங்களை சார்ந்தவர்களுக்கும் சந்தோஷமாக இருக்கலாம் என்று கூறி நிறுத்திவிட்டார்.

அந்த கேள்விக்கு நான் இங்கு பதில் கூற கடைமைப்பட்டுள்ளேன்.

தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வேண்டும்.

ஆதலால் தந்தை பெரியார்தான் இதற்கு முழுமுதற்காரணம் என்று சொன்னால் மிகவும் பொருத்தமாக இருக்கும்.

9 comments:

Rajaraman said...

முதலில் இந்த ஞானி என்ற ஞான சூனியத்தை 1940 ல் ஆரம்பித்து இந்திய வரலாறை ஒழுங்காக படித்துவிட்டு வந்து எந்தெந்த நிகழ்வுகள் எதனால் ஏற்பட்டது என்று ஆய்ந்துவிட்டு பிறகு அந்து பொது மேடைகளில் பேச சொல்லுங்கள், ஏடுகளில் எழுதட்டும்.

அதிவிட்டு இப்படி வித்தியாசமாக காட்டிக்கொள்கிறேன் பேர்வழி என்று பிச்சைக்காரன் வாந்தி எடுத்தது போல் உளறவேண்டாம்.

Anonymous said...

"தந்தை பெரியார் இருந்த காரணத்தால் தான் மதவாத சக்திகள் தமிழ்நாட்டில் காலூன்ற முடியாமல் போனதும் மற்றும் மத வெறியர்களின் இலக்கிற்கு ஆளாகமல் எந்த ஒரு இஸ்லாமிய சமூகத்தின் மீது தாக்குதல் என்ற பேச்சிற்க்கே இடம் கொடுக்காமல் மிகவும் கட்டுகோப்பாக இருக்கிறது அதனால் முஸ்லீம் தீவிர வாதிகள் இதுவரையில் எந்த ஒரு தாக்குதல்களையும் நடத்தவில்லை என்றே கூற வேண்டும்."


Don,t forget 1998 coimbatore bomb blasts.

Unknown said...

இப்படியே பேசிக்கொண்டும், எழுதிக்கொண்டும் இருங்கள், நாளையே ஒரு நாள் உங்கள் ரத்த உறவுகள் இந்த முஸ்லீம் தீவிரவாதத்தால் பாதிக்கும் போது தெரியும் சேதி. ஏன்யா இப்படி வெட்டியாய் இந்த முஸ்லீம் தேசவிரோத தீவிரவாத கும்பலுக்கு வக்காலத்து வாங்கிக்கொண்டு திரீகிறீர்கள். ஈழத்தமிழராவது தொப்புள் கோடி உறவு என்று டயலாக் விடலாம். உங்களுக்கெல்லாம் இது ஒரு Fashion என்று நினைக்கிறீர்களா அல்லது முற்போக்காளர்கள் என்று அலம்பல் பண்ணவா.

இதில் பெரியார் எங்கிருந்து வருகிறார் தெரியவில்லை. சந்தடிசாக்கில் அவருக்கு ஒரு படையல் போடுகிறீர்கள்.

Anonymous said...

சில விஷயங்களை ஆராய்ந்தும், தெளிவாகவும் பேசுவதால் மட்டும் ஞாநி சொல்வதை அப்படியே முழுமையாக ஏற்றுக் கொள்ள முடியாது. பத்திரிகையும் சரி தொலைக்காட்சியும் சரி இது போன்ற ஒரு தீவிரவாத தாக்குதல் நடைபெறும் போது தங்களுடைய வாசகர் வட்டத்தை அதிகரித்துக் கொள்வதற்காக சில செய்திகளை மிகைப்படுத்தி எழுதும், சொல்லும். ஆனால் தீவிரவாதிகள் சூழ்ந்துள்ள இடத்தில் தைரியமாக நின்று பேசிக் கொண்டிருக்கிறார்களே அவர்களுக்கு உயிர் பயம் இருக்காதா? பொது மக்களுக்கு செய்தியை கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாமலா இப்படி செய்வார்கள். ஆனால் மீயாக்கள் மும்பை சத்ரபதி ரயில் நிலையத்தில் நடந்த தாக்குதல் சம்பவத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காதது கண்டனத்துக்குரியது.

பிரதிபலிப்பான் said...

//Don,t forget 1998 coimbatore bomb blasts.//

மிக்க நன்றி இதை கேட்டமைக்கு.

ஞானியின் கண்ணோட்டத்தோடு கோயம்புத்தூரை நாம் பார்த்தோமேயானால் அங்குதான் இந்துத்வா ஆதிக்க சக்திகள் அதிகம்.
பாபர் மசூதி இடிப்புக்கு கோயம்புத்தூரிலிருந்துதான் நிறைய பேர் சென்றுள்ளனர்.அந்த சமயங்களில் முஸ்லிம்களை சிறு சிறு தகராருகளுக்கு இழுத்து்ம் அவர்களுக்கு மனபுழுக்கத்தை ஏற்படுத்தியிருந்த சமயத்தில்
(அவர்கள் பாபர் மசூதியை இடித்தப்பிறகு நீர் பூத்த நெருப்பாக இருந்து கொண்டிருந்த நேரத்தில்)போலிஸார் வாகனத்தில் வந்த இஸ்லாமியரிடம் தவறாக பேசி
கொலையுண்டார் ஆனால் இந்தகொலை வன்மையாக கண்டிக்கத்தக்கது தான்.

RSS, VHP மற்றும் BJP இயக்கங்களுக்கு ஆதரவாக நிறைய பேர் அங்குதான் இருக்கிறார்கள் என்பது தான் உண்மை.

நான் கேட்கிறேன் முஸ்லிம்கள் அங்குமட்டும் தான் அதிகம் இருக்கிறார்களா கலவரம் நடப்பதற்கு ஆம்பூர் மற்றும் வாணியம்பாடி பகுதிகளிலே கூடத்தான் அதிகமாக வசிக்கிறார்கள் ஏன் அங்கெல்லாம் மதகலவரங்கள் ஏற்படுவதில்லை ஏன் என்றால் அங்கெல்லாம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒற்றுமையாக அவர்களுண்டு அவர்கள் வேலை உண்டு என்று இருக்கிறார்கள்.

நான் அங்கு சென்று பார்த்ததுண்டு ரமலான் பண்டிகையாகட்டும் பக்ரீத்பண்டிகையாகட்டும் சில இந்துக்களும் அங்கு சேர்ந்தே கொண்டாடுகிறார்கள் அவர்கள் சகோதர நேசத்துடன் பழகுகிறார்கள் அதே போல் அவர்களும் தீபாவளி மற்றும் தை திரு நாளிலும் இந்துக்களுடன் சேர்ந்து கொள்கிறார்கள்.கோயம்புத்தூரில் உள்ளவர்களைப் போல் இல்லாமல்.
(இதை படித்துவிட்டு அங்கு சென்று கலகத்தை தூண்டாமல் இருந்தால் சரி)

BJP போன்ற அரசியல் கட்சிகள் இந்துத்வா கொள்கையை பயன்படுத்தி மக்களை பிளவுபடுத்தி அவர்களுக்கிடையில் அரசியல் காழ்புணர்ச்சியைத் தூண்டி லாபம் அடைய நினைக்கும் போது தான் பிரச்சினையே ஆரம்பிக்கிறது.

புரிந்ததா உண்மையான காரணம் எங்கிருந்து ஆரம்பிக்கிறது என்று.

Anonymous said...

இய உங்களிடம் ஒரு கேள்வி !ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் ?? sorry 4 the spelling mistake in tamil.b,cos i don,t have tamil font.

பிரதிபலிப்பான் said...

//இய உங்களிடம் ஒரு கேள்வி !ஒரு விடயத்தை செய்ய ஹிந்து, முஸ்லீம்,கிரிஸ்டியன் கூடி உள்ளர்தல் அதில் தனுடிய மதத்தின் பேரிரல் அவ்விடயத்தை செய்ய மறுப்பவர் என்னத்த மதத்தை சர்ந்த்தவர்த இருப்பார் என்ன்று நீங்கள் நினைகிரிர்தல் ?? sorry 4 the spelling mistake in tamil.b,cos i don,t have tamil font. //


நீங்கள் என்ன கேட்க நினைக்கிறீர்கள் என்று எனக்கு புரியவில்லை?

இந்த சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் பொதுவான எதிரியை என்று பார்த்தால்.

யார் அந்த பொதுவான எதிரி?

இங்கு நீங்கள் கேள்வி கேட்ட விதமே மிகவும் அழகாக இருக்கிறது மூன்று மதத்தினரும் சேர்ந்தாலே அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்களுக்கு எதிராக கூடியிருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்.ஆதாலால் அங்கு ஒரு இந்து அடிபட்டு கிடந்தால் முஸ்லிம் ஒருவன் காப்பாற்றுவான். இல்லை கிரிஸ்டியன் அடிபட்டு கிடந்தால் ஒரு முஸ்லிம் காப்பாற்றுவான் அது போலத்தான் எல்லாமும்.

பயங்கரவாதிகள் யார் என்றால் மதத்தின் பெயரால் மக்களை தூண்டிவிட்டு அமைதியை கெடுத்து பிரிவினை வாதத்தை தூண்ட நினைப்பவர்கள்தான் பயங்கரவாதிகள்.

தீவிரவாதிகள் என்பவர்கள் மதத்தின் பெயரால் வன்முறையை தூண்டி நாசம் விளைவிப்பவர்கள் தான் தீவிரவாதிகள்.

பயங்கரவாதிகளும், தீவிரவாதிகளும் எந்த மதத்தின் பெயரால் செயல் பட்டாலும் அவன் பொதுவான எதிரிதான் அதனால் அவன் எந்த மதத்தையும் சார்ந்தவனாக கருத முடியாது.

அவனுக்கு சுயநலமே முக்கிய நோக்கமாகிறது.அவன் சமூகத்திற்கு முன்பு தண்டிக்கப்பட வேண்டியவன்.

Anonymous said...

// இந்துத்துவா மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல்தான் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு தயார்படுத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுகின்றனர். //


அப்படியானால் பாக்கிஸ்தானில் இந்துக்களுக்கு இசுலாமிய மதவெறியர்களின் பயங்கரவாத செயல்பாடுகளை சகிக்க முடியாமல் இந்தியாவில் இருந்து யாராவது பாகிஸ்தானுக்கு குண்டு வைக்க செல்கிறார்களா?

அவர்களுக்கு இருப்பது பொறாமை. வேறொன்றும் இல்லை. இந்தியா முன்னேறுவதை சகிக்கமுடியவில்லை. அதற்கு மதச்சாயம் பூசி விளையாடுகிறார்கள். வேண்டுமானால் 'jamaduddawa' முதலிய பாகிஸ்தான் தளங்களை பாருங்கள். நம் தமிழக தளங்களில் கூட காணலாம்.

இந்து, முஸ்லீம் பிரச்சனை இந்தியாவில் பாபர் வந்து இந்தியர்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்திலேயே ஆரம்பித்துவிட்டது! 1992 க்கு பிறகு அல்ல!

பிரதிபலிப்பான் said...

//இந்து, முஸ்லீம் பிரச்சனை இந்தியாவில் பாபர் வந்து இந்தியர்களை மதமாற்றம் செய்ய ஆரம்பித்திலேயே ஆரம்பித்துவிட்டது! 1992 க்கு பிறகு அல்ல! //

நான் அதை இல்லையென்று சொல்லவில்லை ஆனால் அது 16 ஆம் நூற்றாண்டில் நடந்தது.அதன் பிறகு கூட இந்து முஸ்லிம்கள் ஒற்றுமையுணர்வுடன் தான் வாழ்ந்து வந்தார்கள், வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

பாபருக்கு பிறகு 17, 18, 19,20 ஆம் நூற்றாண்டில் கட்டாய மதமாற்றம் நடைபெற்றதாக தெரியவில்லை.

ஆக பாபர் 16 ம் நூற்றாண்டில் செய்தால் அதன்பிறகு அமைதியை சீர்குலைத்தது 92 ல் நடந்த அந்த துயரமான சம்பவம் தான்.