எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, December 23, 2008

சே குவேரா உயிருடன் தான் இருக்கிறார் !அவர் ஒரு மாபெரும் போராளி என்பதை விட உயர்ந்த பண்புகளுக்கும், தைரியத்துக்கும் மற்றும் மனித நேயத்திற்க்கும் சிறந்த உதாரணமாக விளங்கினார். சிறந்த சிந்தனையாளரும் மற்றும் நிர்வாகத்திறன் மிக்கவரும் ஆவார். எளிமையான வாழ்க்கை வாழ்ந்து மற்றவர்களுக்கு சிறந்த எடுத்துக்காட்டாக சே குவாரா வாழ்ந்தார் என்று சொல்லுவதை விட மக்கள் மனங்களில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் நிறைவாக இருக்கும்.

பிறப்பால் அவரொரு அர்ஜெண்டைனர் ஆனாலும் ஃபிடல் காஸ்ட்ரோவின் புரட்சிக் குழுவில் இணைந்து க்யூபாவின் விடுதலைக்காகப் போராடி, க்யூபா விடுதலை அடைந்த உடன் பல உயர் பதவிகள் அவரைதேடி வந்தன. அவர் என்னவோ ஆட்சி அதிகாரத்தில் உட்கார வேண்டும் என்பதற்க்காகவா புரட்சி படையில் சேர்ந்து சண்டையிட்டார் இல்லை இல்லை சிறு வயதில் இருந்தே அவருக்கு ஓர் இடத்தில் அமர்ந்து இடத்தை தேய்ப்பது என்றால் பிடிக்காது துறு துறுவென்று எதையாவது செய்து கொண்டிருப்பார். உதாரணத்திற்கு வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று பல்வேறு கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள வேண்டும் தனியாத ஆசை கொண்டவர். ஆசை என்று சொல்வதைக் காட்டிலும் அதன் மீது காதல் என்றால் தான் சரியாக இருக்கும்.

க்யூபா விடுதலைப் பெற்ற உடன் துப்பாக்கி ஏந்தி பொலிவியாக்குச் சென்று, அங்கே அடர்ந்த காட்டில் அடுத்த புரட்சிக்கான ஆயத்தங்கள். அங்கும் வேண்டும் விடுதலை ! என்ற முழக்கம் எழுப்பினார்.

தந்தையும் தாயும் :

எர்னஸ்டோ குவேரா லிஞ்ச்சுக்கு அர்ஜெண்டைனா தான் பூர்வீகம் அவருக்கு மட்டுமல்ல அவருடைய முந்தைய பன்னிரண்டு தலைமுறைகளுக்கு ஸான் இசித்ரோவில் தான். அர்ஜெண்டைனாவின் தலைநகரமான ஃபியூனஸ் அயர்ஸீக்கு அருகிலுள்ள பகுதி. வீட்டுக் கதவைத் திறந்தால் ப்ளெட் கடற்கரை.

ஸான் இசித்ரோக்கு வந்த பிறாகுதான், குவேராவின் வாழ்க்கை ரம்மியமாக மாறியது. அதற்கு முன்னால் அவர் ஒரு தொடர் தோல்வியாளர். தொழில் ரீதியாக அவர் எதைத் தொட்டாலும் அது விளங்காது. புதிது புதிதாகத் திட்டமிடுவார். நிறையச் செலவு செய்து, புதுய தொழில் தொடங்குவார். அதில் பெருத்த நஷ்டம் தான் ஏற்படும்.

ஸெலியாவை 1927ஆம் ஆண்டு குவேரா லிஞ்ச் திருமணம் செய்து கொண்டார். விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று சொல்வார்களே அது போல ஒரு மாதம் முன்னதாகவே (சே பிறந்தார்) ஜூன் மாதம் 14, 1928-ம் ஆண்டு அவர்களுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா என்று அந்தக் குழந்தைக்குப் பெயரிட்டனர். இந்த எர்னஸ்டோ குவேரா டி லா ஸெர்னா தான் பின்னர் சே குவேராவாக மாறினார்.

நோய் தாக்கம்:

ஸெலியா தன்மகனை கூட்டிக் கொண்டு கடற்கரை மணலில் நடந்து சென்று கொண்டிருந்தாள். அன்று வழக்கத்திற்க்கு மாறாக கடுமையான குளிர்க் காற்று வீசிக்கொண்டிருந்தது. அதில் சே குவேரா அதிகமாக நடுங்கிகொண்டிருந்தான். குளிர் அவனுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. அவன் பயத்தால் தான் நடுங்கிக் கொண்டிருக்கிறான் என்று நினைத்து தைரியமாக இருக்க வேண்டும் என்று அறியுறுத்தினார்.

ஸெலியாவிக்கிற்கு கதைகள் பிடிக்கும். கடல் பிடிக்கும். அவருக்குப் பிடிக்காத ஒரே விஷயம் பயம்.

ஸெலியா பெற்றோர் இளம் வயதிலேயே இறந்து விட்டதனால் சகோதரி கார்மன் அரவணைப்பில் வளர்ந்தார் அதனால் முற்போக்கு மற்றும் இடதுசாரி சிந்தனைகள் கொண்டவராக வாழ்ந்தார்.

கடலுக்கு குளிக்க அழைத்துச் சென்றாதால் சேகுவேராவுக்கோ உடல் மிகவும் நடுங்கிக்கொண்டிருந்தது.லிஞ்ச் ஓடி வந்து ஸெலியாவை பார்த்து கண்ட படி திட்டி தீர்த்துவிட்டு மருத்துவரிடம் அழைத்து சென்று பார்த்த பொழுது சேவுக்கு ஆஸ்துமா நோய் தாக்கி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அப்பொழுது ஸெலியாவுக்கும் சிறுவயதில் நுறையீரல் தாக்கிருப்பதை மருத்துவரிடம் கூறினார். மருத்துவரும் அதனால் தான் சேவையும் தாக்கியுள்ளதாக கூறினார். ஸெலியோ மிகவும் மனம் உடைந்து போனார் தன்னால் தான் குழந்தைக்கு நோய் தாக்கியதாக கருதி. ஸெலியா மிகுந்த பாசத்துடன் சேவை வளர்த்து வந்தாள். லிஞ்ச் எப்பொழுதுமே மிகவும் உற்சாகத்துடனும் ஜாலியாகவும் பொழுது போக்க கூடியவர். ஆனாலும் தன் மகனுக்காக எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு வந்தார். மகன் மிகவும் சோர்ந்து கிடப்பதை பார்த்த லிஞ்ச்சோ எப்படியாது சேவுக்கு தன்னம்பிக்கையை வளர்த்து பெரிய ஆளாக்கவேண்டும் என்று நினைத்தார்.

தன்னம்பிக்கை வளர்ந்த விதம்:

மகனை அழைத்து கொண்டு சிறு குன்றுகளிலும் சிறு சிறு மலைகளிம் ஏற பயிற்சிக் கொடுத்துக் கொண்டிருந்தார் லிஞ்ச்.
அப்படி பயிற்சி கொடுக்கும் போது சேவின் மகிழ்ச்சியை பார்த்து பூரிப்படைந்தார் லிஞ்ச்.

ஒட்டுமொத்த அர்ஜெண்டைனாவையும் உலுக்கிய ஸ்பானிய உள்நாட்டுப் போர், 1936-ல் தொடங்கியது. இளைஞர்கள், பெரியவர்கள் என்ற வித்தியாசமின்றி அனைவரும் போர் செய்திகளை முனைப்புடன் வாசித்து வந்தனர்.

பத்து வயதான எர்னஸ்டோ, ஸ்பானிய போரைக் கவனிக்கத் தொடங்கியது ஆச்சிரியம். இந்தப் போருக்குப் பின்னாலிருந்து அரசியலை அவன் புரிந்து கொள்ளவில்லை. அது அவனுக்கு காட்டியது, போர் கதைகளில் யார் எப்படிப் போரிட்டார்கள், எப்படி ஜெயித்தார்கள் , எந்தெந்தப் பகுதிகளைக் கைப்பற்றினார்கள் என்பது போன்ற அம்சங்களைத்தான் அதிக ஆவலோடு. தெரிந்துகொள்ள விரும்பினார். நிறைய சாகஸ கதைகளை வாசித்ததன் விளைவு தான் பின்னாளில் ஒரு புரட்சிகாரனாக மாறுவதற்க்கு வித்திட்டது.


காதல் :

குவேராவின் வாழ்க்கையில் சிச்சினா என்ற அழகி குறிக்கிட்டால் நாண்பர்களாக பழகி அதுவே காதலாக மலர்ந்தது. சேவிடம் ஒரு குறை இருந்தது அவர் என்றும் தன்னுடைய ஆடைப் பற்றியும் சவரம் செய்வதைப் பற்றியும் அவர் கவலைபட்டதே கிடையாது.
சிச்சினா அதைப் பற்றி கேட்டாலும் பெரியதா அலட்டிகொள்ளாமல் இருந்தார். சிச்சினாவுக்கு ஏனோ சேவின் மீது அளவு கடந்த பாசமும் நேசமும் உண்டானது. இருந்தாலும் அவர்களுடைய காதல் வெற்றியடைவில்லை.

மோட்டார் சைக்கிள் பயணம் :

சே தன்னுடைய சிறு வயது முதல் தன்னம்பிக்கை மிக்கவராக வளர்ந்தனால் நண்பர்களுடன் வேறுசில நாடுகளையும் மக்களின் கலாச்சாரங்களையும் கற்றுக் கொள்ள தன்னுடைய பதினாறாவது வதில் மோட்டார் சைக்கிள் பயணம் மேற்கொண்டு அதில் குறிப்பிடதக்க வெற்றியும் பெற்றார்.

நண்பர் ஆல்பர்ட்டோயுடன் வட அமெரிக்காவுக்கு போக திட்டமிட்டார்.

ஜனவரி 1952-ல் உற்சாகத்துடன் தொடங்கிய அந்தப் பயணம் எட்டு மாதங்களில் ஐந்து நாடுகளைச் சுற்றி வருவதாக திட்டம் தீட்டி உருண்டு புரண்டு பயணத்தை முடித்து வீடு திரும்பினார்.

அப்பொழுதான் அவருக்கு கிடைத்தது கம்யுனிஸ்டுகளின் பரிச்சயம்.சேவின் ஏகாதிபத்திய எதிர்ப்பு உணர்வு அதிகரித்துக் கொண்டே போனது.இதற்கு முன்பு அம்மாவிடம் தெறிந்த கொண்டார் கம்யூனிசத்தையும் மற்றும் முற்போக்கு சிந்தனைகளைப் பற்றியும்.

ஆயுதம் அவசியம் :

சே ஒவ்வாமையில் நிபுணத்துவம் பெற்று ஓர் ஆய்வகத்தில் நிபுணராக பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அவரால் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்யமுடியாது. அவருக்கு இருந்த பயணத்தின் மீது இருந்த காதலும் கம்யுனிஸ்டுகளின் மீதிருந்த காதலும் அவரை ஓரிடத்தில் உட்காரவிடவில்லை.

அதனால் மீண்டும் தனது பயணத்தை ஆரம்பித்தார். எந்த மூலைக்குச் சென்றாலும் அங்கு அமெரிக்கா காலூன்றி இருப்பதைக் கண்டார்.

அங்கு இரண்டு க்யூபர்களை சந்தித்தார் அவர்கள் காலிக்ஸ்டோ கார்ஷியா மற்றும் ஸெவரினோ ராஸ்ஸல்.

மீண்டும் ஒரு தருணத்தில் நிகோலோபஸை சந்தித்தார். நான் ஃபிடல் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன். அவரைப் பற்றி சொல்ல முடியுமா என்று கேட்டார். நிகோலோபஸும் காஸ்ட்ரோவைப் பற்றி நிறைய கூறியவுடன் சே அவரை மிகவும் நேசிக்கலானார்.
நிகோலோபஸ், சேவுக்கு ரால் காஸ்ட்ரோவை அறிமுகப் படுத்தினார்.

பின்னர் ஃபிடல் காஸ்ட்ரோவை சந்தித்து அவருடைய புரட்சிப் படையிலும் சேர்ந்தார். ஒவ்வொரு நாளும் காஸ்ட்ரோ சேவின் திட்டங்களைப் பற்றி கேட்கும் போது மிகவும் வியந்தார். அதனால் சே மிகவும் அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒருவர் ஆனார்.

காஸ்ட்ரோவின் முதல் குறி க்யூபாவின் ராணுவக் கிடங்கு, மான்காடா. யார் யார் என்னென்ன செய்ய வேண்டும் என்று முன்கூட்டியே தெளிவாகச் சொல்லித் திட்டமிட்டு கைப் பற்றினார்கள்.

அந்த சமயத்தில் சே வுக்கு அதிகமாக கம்யூனியசத்தின் மீது நாட்டம் வந்து கம்யூனிஸ ஆதரவாளனாகவும் சோவியத் ஆதரவாளனாகவும் மாறினார்.

க்யூபாவுக்குச் சென்று மக்களைச் சந்தித்து புரட்சி படைக்கு ஆள் சேர்த்தார். அங்கு இது புரட்சி படை அல்ல, விவசாயிகள் படை என்று பெருமைபட சொன்னார்.

ஜனவரி 7, 1959-ல் ராணுவத்தை சிறைப்பிடித்து க்யூபாவை கைப்பற்றினார்கள். கொஞ்ச காலம் க்யூபாவில் இருந்தார்.
அவருக்குத்தான் ஓர் இடத்தில் இருந்து வேலை செய்வதென்பது பிடிக்காத காரியமானதே. அவர் மறுபடியும் விடுதலைக்காக போராடிக் கொண்டிருந்த பொலிவியாவுக்கு சென்று போராடி அங்கே இறந்தும் போனார்.

இருந்த போதிலும் சே இந்த உலகின் மிகப் பெரிய சின்னமாக இருக்கிறார். புரட்சிகரத்தன்மைக்கும் தைரியத்துக்கும் உயர்ந்த பண்புகளுக்கும் அவர் உதாரணமாகிவிட்டார்.

சே இறந்துவிட்டார் என்பதை நம்மால் நம்பவே முடியவில்லை.
நம்மோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

3 comments:

RAMASUBRAMANIA SHARMA said...

Excellent Article...Highly Informative about "CHE KU VARA"...

RAMASUBRAMANIA SHARMA said...

Sure...

முகமது பாருக் said...

தோழா, நல்ல பதிவு..

சின்ன விருப்பம் சே கியூபாவில் இருந்து பொலிவியா போய் இறந்தார் என இருமுறை கூறி உள்ளீர்கள். சே காங்கோ சென்றார் பின் சிலபல அரசியல் காரணங்களினால் காஸ்ட்ரோவால் உந்தப்பட்டு பொலிவியா சென்றார்..

நீங்கள் கொடுத்துள்ளது ஒரு குறிப்புதான், இருந்தாலும் ஒருமுறை என்றால் பரவாயில்லை இருமுறை குறிப்பிட்டு உள்ளீர்கள், அதனால்தான் இதற்கு பின்னூட்டம் இடவேண்டும் எனத் தோன்றியது..

தோழமையுடன்

முகமது பாருக்