எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, December 12, 2008

அமெரிக்க அதிபரின் வாழ்க்கை வரலாறு - ஒபாமா, பராக்மிகவும் விறுவிறுப்பான் நடையில் நண்பர் ஆர்.முத்துக்குமார் எழுதிய ஒபாமா புத்தகம் படித்தேன்.

இதற்குமுன் சில புத்தகங்களில் ஒபாமாவை பற்றி படித்தேன் மிகவும் கடினமான வார்த்தைகளும் படிப்பதற்கு மிகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருந்தாலும் கிழக்குப் பதிப்பகம் சார்பில் வெளியிட்ட ஒபாமா நூல் மிகச்சிறப்பாக உள்ளது. ஆசிரியரும் எனது நண்பருமான ஆர்.முத்துகுமார் அவர்கள் ஒபாமாவைப் பற்றிய வாழ்க்கை வரலாற்றை ஒபாமாவின் சொந்தவாழ்க்கையிலும், அரசியல் வாழ்க்கையிலும், அவர் போராடிய விதத்தையும், அவர் கையாண்ட யுத்திகளையும் மிகவும் நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் தனக்கென்ற பாணியில் எளிமையான நடையில், எந்த ஒரு கடினமான வார்த்தைகளையும் பயன்படுத்தாமல் அனைவரும் படிக்கும் வகையில் புத்தகத்தை கையில் எடுத்தால் கீழே வைக்கமுடியால் முடிக்கும் அளவுக்கு கடைசிவரையிலும் விறுவிறுப்பு குறையாமல் எழுதிருக்கிறார்.

வல்லரசு நாடுகளின் தலைவனான அமெரிக்காவின் அதிபரைப்பற்றி நாம் தெறிந்துகொள்வதென்பது முக்கியமாக கருதுகிறேன்.

எல்லோரும் அவசியம் படிக்கவேண்டிய புத்தகமாக நான் கருதுகிறேன் முடிந்தால் அதை வாங்கி படியுங்கள்.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

No comments: