தோழமை தோள் கொடுக்கும் என்றெண்ணி கை கோர்த்தால் தேள் போல் கொட்டுகிறார் !
கல்லுடைத்து கள் குடித்தால் அவர் கவுரவம் குறையுமே என்றெண்ணி, மேற்கத்திய மதுவை மலிவாகத் தர மதுக் கடைகளைத் நான் திறந்தால்.
தேள் கொட்டியது, மருத்துவரை நான் அழைத்தேன் சிகிச்சைக்கு. மதுக்கடைகளை மூடினால் மருந்தளிக்க நான் மறுப்பேனா? – என்கிறார்.
நாடென்ன ஆனாலென்ன? என் மக்கள்
நலம்தன்னை கருத்தில் கொண்டு
ஆட்சியைப் பகிர்ந்தளித்தேன் சொந்தங்களுக்கு !
சொந்தங்களோ,
அரியணையை பிடிக்க சதிசெய்தது தெரியவர,
அவருடன் பகைமை பாராட்டி, போதுமடா உன்பாசம் !
நேசித்தேன் நான் உன்னை! மோசம் செய்தாய் நீ என்னை !
கலைந்ததடா உன் வேஷம் !
கழகத்தின் தோழர்களை நான் அழைத்து அவனது கரை சேவை போதுமென்று கட்சியிலிருந்தும், ஆட்சி கட்டிலிலிருந்தும் துரத்தினால்.....
அவனோ பகைமையை பழிதீர்க்க நாள் குறித்து, நாளொரு வண்ணம் பொழுதொரு மேனியாக அவனென்னை தோலுரிக்க,
”போதுமடா நம் பகைமை ! மக்கள் விழிக்கும் முன் சேர்ந்தெழுவோம்” நேசகரம் நான் நீட்ட, அவனும் கைக்கோர்த்தான்!
நாடென்ன ஆனாலென்ன ! நம் நலந்தானே முக்கியம் !
தெளிந்துவிடும் போதை மக்களுக்கு மதுக்கடைகளை மூடினால்,
மருத்துவருக்கோ கொண்டாட்டம், நம் பாடு திண்டாட்டம் !
யார் என்ன ஆனால் என்ன? எவர் குடும்பம் அழிந்தாலென்ன !
நம் குடும்ப நலந்தானே மிக முக்கியம் !
மூடுவேனா மதுக்கடைகளை, நான் மூடுவேனா !
இன்றைய சூழலில் கலைஞர் கவிதை எழுதினால் இப்படித்தான் எழுதுவார் மனசுக்குள்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Wednesday, December 24, 2008
Subscribe to:
Post Comments (Atom)
4 comments:
கரெக்டா சொன்னீங்க.
ஆனா நீங்க இப்படி எழுதுவதை வலைப்பதிவு எழுதும் சிலரே தரங்கெட்டு விமர்சனம் செய்யக்கூடும். ஜாக்கிரதையாக இருங்கள்.
கலைஞர் எழுதுற கவிதையைவிட நல்லாவே இருக்குது.
சூப்பர் தோலுரிப்பு கவிதை.
This seems to be you paid by his (MK) own coin..
ஒரு மணி நேரம் கடை மூடியதற்கு தங்கள் பதிலென்ன?
இனி புதிய கடை திறப்பதில்லை கூறியதற்கு தங்கள் விடையென்ன?
Post a Comment