எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, July 22, 2010

காமராஜருக்கு அடுத்து கலைஞர்


எப்பொழுதோ எழுதவேண்டிய விஷயத்தை இப்பொழுதாவது பதிகிறேனே என்று நினைக்கும் போது வறுத்ததிற்கு பதில் மகிழ்ச்சி தான் பெருகுகிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பு கலைஞர் அவர்கள் சொல்லியிருந்தார் நாங்கள் காமாராஜரைப் போன்றுதான் சிறந்த கல்விக்காக பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம் என்றார்.

எப்பொழுதுமே மற்ற மாநிலங்களை விட கல்வியில் நாம் முன்னோக்கிதான் சென்று கொண்டு இருக்கிறோம் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை. தொழில் நுட்பக் கல்லுரிகள் தமிழ்நாட்டில் மட்டும் 500 உள்ளது. கலைக் கல்லூரிகளின் எண்ணிக்கை 12000 ஆயிரத்திற்கு மேல் இருக்கின்றன.

எல்லா கிராம ஊராட்சிகளிலும் அரசு ஆரம்பகல்வி நிலையங்கள் மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் உள்ளது உயர்நிலைப் பள்ளிகள் இரண்டு கிராம ஊராட்சிகள் என்கிற அடிப்படையில் உள்ளது என்றால், தனியார் பள்ளிகள் கிராம ஊராட்சிகளில் குறைந்தது இரண்டு உள்ளது, பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் கேட்கவே வேண்டாம் அவ்வளவு தனியார் பள்ளிகள் உள்ளது.

இதெல்லாம் கல்வி புரட்சியே என்று சொல்லலாம். தனியார் பள்ளிகளின் பங்களிப்பு இல்லாமல் கல்வியில் புரட்சி என்பது நடக்காது.

சமச்சீர் கல்வி என்று எல்லாருக்கும் சமமான கல்வியை கொண்டுவந்து ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன் என்று பகுபாடு இல்லாமல் எல்லாருக்கும் சமமான கல்வியை கொடுத்ததில் கலைஞருக்கு பெரும் பங்கு உண்டு என்பதில் சந்தேகமில்லை.

அதே போன்று குடும்பத்தில் முதல் பட்டதாரிகளுக்கு இலவச கல்வி வழங்கி மாபெரும் கல்வி புரட்சிக்கு வித்திட்டுள்ளார் கலைஞர் அவர்கள்.

மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம்  அவர்கள் சொல்கிறார் கல்விக்கடன் இந்தியாவில் வாங்கும் 10 பேரில் 4 மாணவர்கள் தமிழ்நாட்டைச் சேர்ந்தர்வர்கள் என்கிறார். அப்படியென்றால் கல்வியில் ஆர்வமில்லாமலா இவ்வளவு மாணவர்கள் கல்விக் க்டன் பெறுகிறார்கள்.

இதெல்லாமே கல்வி புரட்சிதான். காமாராஜருக்கு அடுத்தப்படியாக நான் இருக்கிறேன் என்று கலைஞர் சொல்வதில் நியாயம் இருக்கிறது.

இது போன்று அவர் நிறைய திட்டங்களை மக்களுக்காக வழங்க வேண்டும் என்று கேட்கிறேன் கலைஞரைப் போன்று மற்றவர்களால் இவ்வளவு திட்டங்களை செயல்படுத்தமுடியுமா என்றால் முடியாது என்று சொல்லலாம்.

கல்வி புரட்சியில் காமராஜருக்கு அடுத்தது கலைஞர் தான் என்பதில் சந்தேகமில்லை.

No comments: