எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, July 10, 2010

தமிழக சட்டசபையின் ஆசிரியர் தந்தை பெரியார்

தமிழக சட்டசபை வளாகம் சரியான ஒரு இடத்தில் அமைந்திருக்கிறதா என்றால் தெரியாது ஏனென்றால் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் வழி. இரயில் நிலையத்திற்கு செல்லவேண்டுமானால் அந்த வழியாகத்தான் செல்ல வேண்டும். பாரி முனைக்குச் செல்லவேண்டுமானாலும் அந்த வழியாகத்தான். இப்படி நெரிசல் மிகுந்த பகுதியில் கட்டயிருப்பது மேலும் கூட்ட நெரிசலைத்தான் ஏற்படுத்தும்.

துணை நகரம் அமைப்பது குறித்து என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. மீண்டும் தி.மு.க பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தால் துணைநகரம் அமைவதில் எந்த சிக்கலும் இருக்காது.

எப்படி சட்டமன்ற வளாகம் அமைக்கப்பட்டதோ அப்படி துணை நகரமும் கலைஞர் இருக்கும் போதே அவருடைய ஆட்சியிலே ஏற்பட்டால் அவருடைய அரசியல் வாழ்க்கையில் மேலும் ஒரு மைல்கல்லாக அமையும்.

இப்பொழுது அமைந்துள்ள ஒருகிணைந்த தலைமைச் செயலகமும், சட்டசபை வளாகமும் பசுமை திட்டத்தின் கீழ் முழுமையான பாதுக்காப்புடன் அமைந்துள்ளது அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை அதில் வேற்று மனிதர்களோ அல்லது சந்தேகத்திற்குறிய நபர்களோ உள்ளே நுழைய முடியாது.

இந்த சட்டசபை வளாகம் கடந்த அ.தி.மு.க ஆட்சியில் மாநகருக்கு வெளியில் அமைக்கலாமா இல்லை மாநகருக்குள்ளே அமைக்கலாம் என்கிற ஒரு மாற்றுக் கருத்து இருந்தது. சட்டசபை வளாகம் அமைக்க YMCA விளையாட்டு மைதானமும் பரிசீலனையில் இருந்தது. அது பின்னர் கைவிடப்பட்டது அ.தி.மு.க ஆட்சியில் பின்னர் முழுவதுமாக கைவிடப்பட்டது சட்டசபை வளாகம் அமைக்கும் திட்டமே.

2006 ல் தி.மு.க ஆட்சி அமைத்த பிறகு அந்த திட்டத்தை கலைஞர் அவர்கள் கையிலெடுத்து ஓமந்தூரார் தோட்டத்தில் கட்ட தீர்மானித்து எதேச்சையாக கட்டி முடித்த அந்த இடம் மாபெரும் வரலாற்று சான்றை பெற்றுள்ளது.


திரவிட தந்தையாகிய பெரியார் அமர்ந்து பாடம் எடுப்பதைப் போலவும் மூத்த மாணவனாகிய அறிஞர் அண்ணா மற்ற சக மாணவர்களாகிய உறுப்பினர்களை திரவிட பாசரைக்கு அன்புடன் அழைப்பதை போலவும் இயற்கையாக அமைந்துள்ளது.

தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களை சட்டசபைக்கு அண்ணா அவர்கள் வரவேற்பதைப் போன்றும் சட்டமன்றத்திலே குழுமியுள்ள உறுப்பினர்களுக்கு தந்தை பெரியார் பாடம் நடத்துவதை போன்றும் உள்ளது.

நீங்கள் வண்டியில் பயணம் செய்யும் போது பார்த்தீர்களே ஆனால் அண்ணாசாலையில் இருந்து சென்னை சென்ட்ரலுக்கு செல்லும் போது முதலில் வாலாஜா சந்திப்பில் அறிஞர் அண்ணா அவர்கள் வரவேற்பார் அடுத்த சிக்னலிலே தந்தை பெரியார் அமர்ந்த்திருப்பதைப் பார்ப்பீர்கள்.

தந்தை பெரியார் சட்டமன்ற வளாகம் முன்பு அமர்ந்திருப்பதால் உறுப்பினர்கள் அனைவருக்கும் பாடம் எடுப்பதை போன்று இருக்கும்.

இந்த காட்சி இயற்கையிலே அமைந்த காட்சி அது. செயற்கையாக யாரும் சட்டமன்றம் கட்டியபிறகு சிலைகளை அமைக்கவில்லை.

இயற்கையே அப்படியொரு அழகை தந்துள்ளது தமிழர்களாகிய நம் அனைவருக்கும் பெருமை கொள்ளதக்க விஷயமாக உள்ளது என்றால் மிகையல்ல. நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும், திரவிட தந்தையாகவும் மற்றும் என்றுமே சட்டமன்ற உறுபினர்களுக்கு ஆசிரியராகவும் விளங்கிக் கொண்டிருக்கிறார் தந்தை பெரியார் அவர்கள். அதனால் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தங்கள் கடமையை சரிவர செய்யுங்கள் நம்மை என்றுமே தந்தை பெரியார் கவனித்துக் கொண்டிருக்கிறார் என்கிற நினைப்போடு.

No comments: