எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, July 12, 2010

காட்டுமிராண்டி தனமான ஆணாதிக்க சட்டம்


ஈரானை சேர்ந்தவர் அசார்பக்ரே. இவரை 14 வயதில் விருப்பம் இன்றி ஒரு முதியவருக்கு திருமணம் செய்து வைத்தனர். இந்த நிலையில் வேறு ஆண்களுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததாக கூறி இவர் மீது குற்றம் சாட்டப்பட்டது.

எனவே கைது செய்யப்பட்ட அவர் மீது கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை கல்லால் அடித்து கொல்ல கோர்ட்டு தீர்ப்பளித்தது. ஆனால் 18 வயது நிரம்பியதும் அவருக்கு தாப்ரிஷ் சிறையில் இந்த தண்டனை நிறைவேற்ற வேண்டும் என்றும் உத்தரவிட்டது.


இதைத்தொடர்ந்து அவர் 4 வருடமாக ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது அவருக்கு 18 வயது நடைபெறுகிறது. இன்னும் சிறிது நாளில் தண்டனை நிறைவேற்றப்பட உள்ள அவரை காப்பாற்றும் முயற்சியில் ஈரானின் மனித உரிமை கமிஷனின் மினா அகாடி ஈடுபட்டுள்ளார்.

இதற்கிடையே தண்டனையை 99 சவுக்கடியாக குறைக்க அவரது வக்கீல்கள் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.


இந்த சட்டம் காட்டு மிராண்டித்தனமான பிற்போக்குத்தனமானது உலக மனித உரிமை ஆணையம் இது போன்ற சட்டத்தை எதிர்த்து தீர்மான நிறைவேற்றி உலகில் எந்த மூலையிலும் பாலியல் ரீதியான பிரச்னைக்கு கல்லாலோ அல்லது எந்தவித துன்புறுத்தலாலோ ஒருவருக்கு மரண தண்டனை வழங்க கூடாதென்று வழியுறுத்த வேண்டும்.

ஒரு பெண் யாரை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் அல்லது ஒரு ஆண் எந்த பெண்ணை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் என்கிற நிலை இருக்க வேண்டும் 21 வது நூற்றாண்டில் இது போன்று ஒரு காண்டிமிராண்டித் தனமான சட்டத்தை எதிர்த்து உலகமக்கள் ஒன்று திரள வேண்டும்.

ஒரு ஆணுக்கோ அல்லது பெண்ணுக்கோ பிடித்த எந்த ஆணுடனோ அல்லது பெண்ணுடனோ வாழ உலக சட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

ஒருவருடைய அந்தரங்க வாழ்க்கையை எந்த ஒரு பொதுவான சட்டமும் கட்டுப்படுத்த கூடாது அப்பொழுது தான் தனிமனித உரிமை காக்கப்படும்.

ஆண்கள் எத்தனை பெண்களை வேண்டுமானாலும் திருமணம் செய்து கொள்ளலாம் ஆனால் ஒரு பெண் தனக்கு பிடித்த ஆணுடன் வாழ முடியாது என்றால் எவ்வளவு ஆணாதிக்க தனமான சர்வதிகாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இது போன்ற ஒரு ஆணாதிக்க சட்டங்களை உடனே கொளுத்தி போட உலகமக்கள் முன்வரவேண்டும்.

சட்டம் எல்லாருக்கும் பொதுவானதாக இருக்கவேண்டும் எந்த தனிமனிதனையும், அவனது தனிபட்ட சுதந்தரத்தை பாதிக்காதவகையிலும், மற்றும் ஒவ்வொருத்தருடைய தனிபட்ட சுதந்தரத்தை பேணிக்காக்கும் வகையிலும் பொதுவான உலகசட்டம் நடை முறைக்கு வரவேண்டும்.

1 comment:

ஆர்வா said...

வழிமொழிகிறேன்