ஒரு பெரும்பான்மையான சமூகத்தால் ஒரு சிறுபான்மை சமூகத்தின் உடமைகள் கைப்பற்றபட்டு இருக்கிறது.
பாபர் 500 வருடங்களுக்கு முன்னால் அந்த இடத்தில் மசூதி ஒன்றை கட்டியெழுப்பி தொழுகை நடந்து கொண்டிருந்த ஒரு இடத்தை மற்றொரு பெரும்பான்மையான சமூகம் ஒன்று திட்டம் போட்டு கொள்ளை அடித்து கொண்டிருக்கிறது அதற்கு ஒரு நாட்டின் உயர் நீதி மன்றம் பெரும்பான்மையான சமூகத்திற்கு சார்பாக தீர்ப்பளித்திருக்கிறது.
எங்கே சிறுபான்மை சமூகத்திற்கு சாதமாக தீர்ப்பு வழங்கினால் பெரும்பானையான சமூகத்தால் சிறுபான்மை மக்களாகிய முஸ்லீம்கள் தாக்கப் படுவார்களோ என்று அஞ்சி இப்படி ஒரு மாபெரும் அபத்தமான தீர்ப்பை வழங்கி இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன்.
இதில் மூன்று நீதிபதிகளில் இருவர் ஓரளவுக்கு நடுநிலைமையோடு தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள் மற்றொருவர் இந்து மத வெறியர் அதனால் அவர் இந்துகளுக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியுள்ளார்.
அடிப்படையிலே நீதிபதியும் ஒரு சாதாரண மனுஷன் தானே.
ஒரு நீதிபதி சட்டத்திட்டத்திற்கு ஏறப தீர்ப்பை வழங்க வேண்டுமே ஒழிய அனுமானத்தின் அடிப்படையில் தீர்ப்பை வழங்க கூடாது.
பாபரால் கட்டப்பட்டதுதான் அந்த மசூதி என்று எல்லோருக்கும் தெரியும் கடந்த 500 ஆண்டுகாலமாக அந்த இடத்தில் முஸ்லீம்கள் தொழுகை நடத்திக் கொண்டிருக்கிறார்கள் இதற்கான எல்லா ஆதரமும் முஸ்லீம்கள் தரப்பிலான சன்னி வாஃப் அமைப்பு முன்வைத்தும் இது போதிய ஆதரம் இல்லை அதனால் இந்த மசூதி பாபரால் கட்டப்பட்டது என்பதை நிருபிக்க தவறிவிட்டது அதனால் இந்த இடத்தை மூன்றாக பங்கிட்டுக் கொள்ளலாம் என்று தீர்ப்பு வந்திருக்கிறது.
இந்த தீர்ப்பு எப்படி இருக்கிறது என்றால் 1998 ல் மும்பையில் தீவிரவாதிகள் தாக்கியது. அந்த தாக்குதலில் ஒரே ஒரு தீவரவாதி மட்டும் பிடிபட்டான் அவனது வாக்கு மூலத்தில் நாங்கள் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் நாங்கள் அங்குதான் பயிற்சி பெற்றோம், கடல் வழியாக மும்பையில் ஊடுருவினோம், எனது பெற்றோர்கள் பாகிஸ்தான் நாட்டில் தான் வசிக்கிறார்கள் என்றதும் எல்லா தொலைக்காட்சிகளும் அவனது பெற்றோர்கள் இருக்கும் இடத்தை முற்றுகையிட்டு ஒலிபரப்ப தொடங்கியது இது பாகிஸ்தான் அரசுக்கும் மற்றும் பாகிஸ்தான் நீதிதுறைக்கும் தெரியும். இருந்தும் இந்திய அரசாங்கம் எல்லா விதமான ஆதாரத்தை வழங்கியும் இன்னும் சமந்தப்பட்ட தீவிரவாத குழுக்களை பிடிக்கவில்லை ஏன் என்று கேட்டால் போதிய ஆதாரம் தரவில்லை என்று சப்பைக்கட்டு கட்டுகிறது அது போலத்தான் சன்னி வாஃப் அமைப்பு வழங்கிய ஆதாரத்தை அலகாபாத் உயர்நீதிமன்றம் நிராகரித்து இந்த தீர்ப்பு வழங்கப்படிருக்கிறது.
ஒரு நீதிமன்றம் சாதி, மத, இன உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு தீர்ப்பை வழங்க வேண்டும் அப்படிபட்ட தீர்ப்புதான் சரியான தீர்ப்பாக இருக்கும் அப்படிபட்ட நாடுதான் சரியான மற்றும் உயர்ந்த சிறந்த ஜனநாயக நாடாக விளங்க முடியும்.
இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வரும் பொழுது அப்படி ஒரு தீர்ப்பை இந்தியன் என்கிற முறையில் நான் எதிர்பார்க்கிறேன்.
மீண்டும் இது போன்ற ஒரு தீர்ப்பு வந்தால் இதை வேறுவகையில் சமூகம் எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும்.
ஆரியர்களுக்கு எதிராக மிண்டும் களமிரங்க பூர்வீக மக்களாகிய இந்தியர்கள் திராவிடர்களும் மற்ற சமூகத்தினரும் ஒன்று சேரவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளபடும்.
இப்பொழுது ஹிந்துக்கள் என்று பா.ஜ.க, R.S.S மற்றும் VHP போன்ற அமைப்புகள் ஆரியர்களை மட்டுமே சொல்லி வருகிறது இதுவே இன்னும் 500 வருடங்கள் ஆன பிறகு ஹிந்துக்கள் என்றால் ஆரியர்கள் மட்டும்தான் என்கிற நிலை வந்து ஆரியர்கள் தான் பூர்வீக இந்தியர்கள் மற்றவர்கள் எல்லாரும் அவர்களின் அடிமைகள் என்று வரலாறு எல்லா மட்டத்திலும் எல்லா இடங்களிலும் திருத்தி எழுதபட்டிருக்கும்.
அப்பொழுது மற்றவர்களின் கதி ?
நாங்கள் எல்லா மதத்தினரையும் சமமாக பார்க்கிறோம். யாராவது சிறுபான்மை சமூகத்திற்க்கு எதிராக நடந்து கொண்டாலோ அல்லது அவர்களை அழிக்க நினைத்தாலோ மீண்டும் ஆயிரம் பெரியார்கள் இந்தியா முழவதும் தோன்றுவார்கள் அவர்களில் சுபாஷ் சந்திரபோஷ் போன்றவர்கள் கூட வரலாம் அப்பொழுது ஆரியர்களின் நிலைமை?
அதனால் மக்களை கடவுளின் பெயரைச் சொல்லி ஏமாற்றுவதையோ அல்லது பிரிவினைவாததை தூண்டுவதையோ நாங்கள் ஒரு போது அனுமதிக்கமாட்டோம்.
கதையில் வரும் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்ட நினைக்கிறது ஆரியர்களின் கூட்டம்.
இராமயணம் ஒரு கதை. அந்த கதை மக்களை நல்வழிப்படுத்தும் என்கிற நல்ல நோக்கத்தில் எழுதபட்டது. இதை ஆரியர்களின் சமூகம் உண்மை என்று சொல்லி மக்களை திசை திருப்பி மக்களை கடவுளின் பெயரால் சுரண்ட நினைக்கிறது மற்றவர்களை அழிக்க நினைக்கிறது. இதை யாராலும் ஏற்றுக் கொள்ள முடியாது.
இன்னும் நிறைய பேருக்கு இந்த உண்மை தெரியாது.குறிப்பாக இப்பொழுது உள்ள இளைஞர்களுக்கு. ஏதோ ஏட்டுக் கல்வி படித்தோம் பெற்றோர்கள் என்ன சொன்னார்களோ அதையே எந்த கேள்வியையும் கேட்காமல் நம்பினோம் என்று இருக்கிறார்கள்.
சிந்திக்க வேண்டும் எல்லா விஷயத்தை பற்றியும் படிக்க வேண்டும் உண்மையான வரலாற்றை தெரிந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பதில்லை.
R.S.S, V.H.P மற்றும் B.J.P போன்ற அமைப்புகள் ஒழுங்காக நடந்து கொள்ள வேண்டும் மீண்டும் நீங்கள் எங்களுக்கு வேலை கொடுக்காதீர்கள்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Friday, October 1, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment