108 வது பிறந்த நாள் இன்று.
விருதுநகரில் ஜூலை 15, 1903 ஆம் ஆண்டு பிறந்தார்.
ஏப்ரல் 13 1954 ஆம் ஆண்டு காமராஜர் முதலமைச்சர் பதவியில் அமர்ந்தார்.
அவருடைய சாதனைகளை இன்று நினைவு கொள்வதில் நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.
1. குலக்கல்வித்திட்டத்தை ஒழித்தார்.
2. கடந்த ஆட்சியில் நிதி பிரச்னையால் மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தது மட்டுமல்லாமல் மேலும் 12000 ஆயிரம் பள்ளிகளை திறந்தார்.
3. ஏழை எளிய மாணவர்கள் 3 மைல்களுக்கு மேல் தாண்டி செல்லாமல் இருக்க பள்ளிகளை நிறுவினார்.
4. எல்லா பள்ளிகளுக்கும் முடிந்த வரை தேவையான எல்லா அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தார்.
5. எல்லா கிராமங்களிலும் ஆரம்பகல்வி நிலையங்களை அமைத்தார் எல்லா பஞ்சாயத்துகளிலும் 10 வது வரைக்கும் மேல் நிலைய பள்ளிகளை அமைத்தார்.
6. கல்லாமை என்கிற நிலைமையை இல்லாமை என்றாக்கினார். எல்லாருக்கும் 11 ஆம் வகுப்புவரை கல்வியை இலவசமாக்கினார்.
7. லட்சக்கணக்கான பள்ளிக் குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை உலகிலேயே முதல் முறையாக அறிமுகப் படுத்தினார்.
8. அனைத்துப் பள்ளிக் குழந்தைகளுக்கும் இலவச சீருடை வழங்கினார். இதனால் பள்ளிகளில் ஏழை பணக்காரன் என்கிற பாகுபாட்டை களைந்தார்.
9. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்த கல்வி அறிவு சதவிகிதம் 7 % இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 37 % ஆக உயர்ந்தது.
10. ராஜாஜி முதல்வராக இருந்த காலத்தில் 12000 பள்ளிகள் இருந்தது அதுவே காமராஜர் காலத்தில் 27000 ஆயிரமாக உயர்ந்தது.
11. பள்ளிகள் மட்டும் இருந்தால் போதுமா என்று கல்விதரத்தையும் உயர்த்தினார்.
12. வேலை நாட்களை 180 லிருந்து 200 ஆக உயர்த்தினார்.
13. இவரது காலத்தில் தான் IIT என்னும் இந்தியன் இன்ஸிடியூட் ஆப் மெட்ராஸ் தொடங்கப்பட்டது
14. இவரது காலத்தில் தான் ஆரணி, அமராவதி, கீழ் பவானி, மணிமுத்தாறு, காவிரி பாசன பகுதியில்,வைகை, சாத்தூர்,கிருஷ்ணகிரி, புலம்படி,பரம்பிக்குலம், நொய்யாறு போன்ற ஆற்றின் குறுக்கே அணைகள் கட்டப்பட்டன.
15. பல தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன அதில் குறிப்பாக நெய்வேலி நிலக்கரி சுரங்கம், ஊட்டியில் புகைப்பட சுருள் தயாரிக்கும் தொழிற்சாலை,சிகிச்சை கருவிகள் தயாரிக்கும் தொழிற்சாலை, சர்க்கரை ஆலைகள், மணலியில் சுத்திகரிப்பு ஆலை போன்ற பெரிய தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டன.
16. குந்தா நீர்மின் திட்டம், ஊட்டி மற்றும் நெய்வேலியில் அனல்மின் திட்டம் போன்ற பெரியத்திட்டங்கள் இவரது ஆட்சிக் காலத்தில் தான் தொடங்கப்பட்டது.
எல்லா துறைகளும் இவரது ஆட்சிகாலத்தில் சிறப்பாக முன்னேறியது.
எந்த அரசியல் தலைவர்களும் செய்யாத மற்றும் செய்ய முடியாத ஒரு காரியத்தை இவர் செய்தார் என்றால் அது கே-பிளான்.
இந்த K –Plan படி மூத்த காங்கிரஸ் உறுப்பினர்கள் அல்லது இரண்டு பதவிகளில் இருப்பவர்கள் அதாவது கட்சி பதவியிலும் மற்றும் அமைச்சர் பதவியிலும் இருப்பவர்கள் அமைச்சர் பதவியை துறந்து கட்சிப் பணியை செய்ய வேண்டும் என்றார் இந்த திட்டம் காமராஜ் திட்டம் என்றானது.
இவரது தொலை நோக்குத்திட்டத்தை பார்த்த அன்றைய பாரத பிரதமர் ஜவஹலால் நேரு அவர்கள் காமராஜரை டெல்லிக்கு அழைத்து உங்களது சேவை தமிழ்நாட்டிற்கு மட்டும் போதாது இந்திய தேசம் முழுமைக்கும் தேவை என்றார்.
காமராஜர் இந்திய தேசிய காங்கிரஸ் தலைவராக 1963ஆம் ஆண்டு அக்டோபர் 9 தேதி அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிகள்:
1952 ல் பாரளுமன்ற உறுப்பினராக திருவல்லிபுத்தூர் தொகுதி.
1954 ல சட்டமன்ற உறுபினராக குடியாத்தம் தொகுதி.
1957 ல் சட்டமன்ற உறுப்பினராக சாத்தூர் தொகுதி.
1962 ல் சட்டமன்ற உறுப்பினராக மீண்டும் சாத்தூர் தொகுதி.
1969 ல் பாராளுமன்ற உறுப்பினராக நாகர்கோவில் தொகுதி.
1971 ல் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் நாகர்கோவில் தொகுதியில்.
இவருடைய அரசில் பங்கு கொண்டுள்ள அமைச்சர்களுக்கு கூறிய அறிவுரை தான் இன்றும் பேசபடுகிறது.
அந்த அறிவுரை “ எந்த பிரச்னையும் எதிர்கொள்ளுங்கள் அதில் இருந்து ஒதுங்க நினைக்காதீர்கள் தீர்வை காணுங்கள் என்றார் ”.
இரண்டு பாரத பிரதமர்களை உருவாக்கிய பெருமை இவரையே சாரும்.
பெருமை மிகு விருதான ” பாரத் ரத்னா ” விருது இவருக்கு வழங்கப்படது.
அக்டோபர் 2, 1975 ஆம் ஆண்டு அவர் தனது கடமையை முடித்து கொண்டார்.
காமராஜர் பிறந்த மண்ணில் நாம் பிறந்ததற்கு நாம் அனைவரும் பெருமைபட்டுக் கொண்டு அவருடைய பிறந்த நாளான இன்று அவரது வழியில் நாமும் நடந்து காட்டவேண்டும் என்கிற உறுதிமொழியை எடுப்போம்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Thursday, July 15, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment