எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 4, 2011

பழிக்கு பழி இரத்ததிற்கு இரத்தம் - ஒபாமா VS ஒசாமா



  வருத்தம் ஒரு மனித உயிர் பழியானது அல்காயிதா இயக்க தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க படையால் சுட்டுக்கொன்றது.
எப்படியோ எந்த ஒரு நாடும் சரி அமெரிக்காவிற்கு பின்னால் வால் பிடிக்ககூடாது. வால் பிடித்தால் இது போன்ற கதியை சந்திக்க நேரிடும்.

சரியா தவறா நீ செய்தது சரி என்றால் நான் செய்ததும் சரிதான். பழிக்கு பழி. முன்வினை பின்வினை அவ்வளவே.

 ஒரு நாடு மற்ற நாடுகளின் மீது ஆதிக்கத்தை செலுத்துவது. பெரும்பான்மையான நாடுகள் ஒரு நாடு எதைச் செய்தாலும் ஆதரிக்கும் போக்கு, தான் நினைத்தை மற்ற நாடுகளின் மீது திணித்து தான் செய்ய நினைக்கும் காரியத்தை சாதித்துக் கொள்வது. இதையெல்லாம் அமெரிக்கா என்கிற வல்லரசு செய்து கொண்டிருக்கிறது.

வல்லரசு என்றால் அவ்வாறெல்லாம் செய்யலாமா அது சர்வதேச சட்டப்படி குற்றமில்லையா என்றால். அது பெருபான்மையான நாடுகளின் ஆதரவு ஒரு நாட்டுக்கு இருந்தால் அந்நாடு ஜனநாயக போர்வையில் எதைவேண்டுமானாலும் செய்யலாம் என்கிற கருத்து அமெரிக்கா போன்ற வல்லரசு நாடுகள் ஏற்படுத்திக் கொண்டு இருக்கிறது.

ஏன் இதை மற்ற நாடுகள் தடுக்க முன்வரவில்லை தடுப்பதற்கான அதிகாரமில்லையா இல்லை வல்லரசு நாடான அமெரிக்காவின் மீது பயமா.

அமெரிக்கா எதை செய்தாலும் மற்ற நாடுகள் வேடிக்கை மட்டும் பார்த்து கொண்டிருக்கிறது. சரியான கண்டனம் தெரிவிப்பதில்லை ஏன்.

ஒரு நாடு மற்றொரு நாட்டின் மீது சரியான காரணமில்லாமல் போர் தொடுத்தால் அதனை தடுக்க முடியும் அல்லது அல்லது அந்நாட்டில் ஆளும் அரசால் ஒரு பெரும்பான்மையான பொதுமக்கள் பாதிக்கப் படுகிறார்கள் என்றால் சர்வதேச சமுகத்தால் கண்டனம் தெரிவித்து அதையும் மீறி செயல்பட்டால் அந்த அரசின் மீது பொருளாதர தடை வித்தித்து அந்நாட்டை வழிக்கு கொண்டுவரலாம்.

எந்த ஒரு தனிமனிதருக்கு எதிராகவும் பொது மக்களுக்கு எதிராகவும் அச்சுறுத்தலோ அல்லது தாக்குதலோ நடத்தவோ அரசாங்கம் அல்லாது மற்ற அமைப்புகளுக்கு தண்டிப்பதற்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அது போல ஒரு அரசாங்கத்திற்கு எதிராக உங்களுடைய கருத்தை சொல்ல வன்முறையை தவிர்த்து நிறைய வழிகள் இருக்கின்றன. ஒரு சிறந்த எதிர்கட்சியாக இருந்து அரசின் கொள்கைளை விமர்சிக்கலாம் மற்ற நாடுகளின் வெளியுறவுக் கொள்கைளை விமர்சிக்கலாம் அல்லது மற்ற நாடுளை எதிர்த்து அவர்கள் செய்யும் அத்துமீறல்களை கண்டித்து சர்வதேச சமூகத்தினரிடையே கொண்டு சென்று விவாதம் நடத்தலாம் அதை விடுத்து தனிப்பட்ட முறையில் சட்டத்தை கையில் எடுத்துக்கொள்வது என்பது விபரீதமான முடிவைத் தான் தரும்.


2 comments:

ananda said...

Good

Bala said...

Boss you need to take it case by case. It is not about america or any other countries. It is OSAMA BIN LADEN. You should appreciate that atlast he was brought down by somebody. I am sad that you are concerned about one life!! Please have some pity on thousands and thousands of innocent lives lost because of this terrorist. Thanks
Bala