எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, May 3, 2009

அணுசக்தி ஒப்பந்தம்

அணு எரிபொருள் சப்ளை நாடுகள் அளித்த ஒப்புதல் மூன்று நாட்கள் நடந்த போராட்டத்திற்குப் பின் கிடைத்த வெற்றியாகும். இதன் அடுத்த கட்டமாக, அமெரிக்க காங்கிரசில், நிறைவேற்றி ஒப்புதல் பெற, அதிபர் புஷ் மற்றும் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கண்டலீசா ரைஸ் அதிக முயற்சிகள் எடுத்து வருகின்றனர்.இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்த, என்.எஸ்.ஜி., என்று அழைக்கப்படும், 45 உறுப்பு நாடுகளைக் கொண்ட, அணுசக்தி சப்ளை நாடுகளின் ஒப்புதல் பெறுவது கட்டாயமாக இருந்தது.


சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை: இதில், அமெரிக்கா மேற்கொண்ட ராஜதந்திர முயற்சிகள் சீனாவையும் பணிய வைத்திருக்கிறது. கடந்த 34 ஆண்டுகளாக இந்தியா ஒதுக்கப்பட்ட நிலையில் இருந்து முற்றிலும் மாறிய சூழ்நிலையை நேற்று முன்தினம் கிடைத்த ஒப்புதல் தந்திருக்கிறது.அணு ஆயுதப் பரவல் தடை விஷயத்தில், சில நாடுகள் ஆட்சேபித்தன. சீனா அதிக பட்சமாக முட்டுக்கட்டை போட்டது. ஆனால், அமெரிக்காவின் தலையீட்டால், கடைசி முடிவு எடுக்கும் போது சீனப் பிரதிநிதி ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. ஆனால், இந்த எதிர்ப்புகளை வெற்றிகரமாக அமெரிக்கா தவிடுபொடியாக்கியது.


கடைசி நேரத்தில், அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டலீசா ரைசுக்கு ஏகப்பட்ட வேலைகள் இருந்தன. பல்வேறு நாடுகளையும் அவர் சமாதானப்படுத்தினார். அவர் இம்முயற்சியில் பெற்ற வெற்றி குறித்து கூறும் போது, "சர்வதேச அணுசக்தி முகமையிடமும், பின்பு அணு எரிபொருள் சப்ளை நாடுகள் குழுமத்திடமும் நிறைவேற்றப்பட முக்கிய முடிவுகள் எடுக்க வேண்டியதாயிற்று. இந்த ஒப்பந்தம் நிறைவேற வேண்டும் என்பதில் உறுதியாக நின்று வெற்றி பெற்றிருக்கிறோம். அமெரிக்க பார்லிமென்டில் இதை நிறைவேற்ற கால அவகாசம் குறைவாக இருக்கிறது. ஆனால், இதை முடிவு செய்து நிறைவேற்றும் கமிட்டிகளிடம் பேசியுள்ளோம்' என்றார்.


பிரதமருக்கு பாராட்டு: சலுகைகளுடன் கூடிய அணு சக்தி வர்த்தகத்துக்கு என்.எஸ்.ஜி.,நாடுகள் இந்தியாவிற்கு ஒப்புதல் அளித்திருப்பதற்கு காரணமாகச் செயல்பட்ட , பிரதமர் மன்மோகன் சிங்கை , காங்கிரஸ் தலைவர் சோனியா பாராட்டினார்.இந்த ஒப்புதலை பெறுவதற்காக, பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வெற்றி பெற்றதற்காக, பிரதமர் மன்மோகன் சிங்கை, சோனியா தலைமையில் காங்கிரஸ் செயற்குழு உறுப்பினர்கள் ஜனார்த்தன் துவேதி, ஆஸ்கர் பெர்னாண்டஸ், அம்பிகா சோனி, திக்விஜய் சிங், பிரித்வி ராஜ் சவுகான் உள்ளிட்டோர் நேரில் சென்று பாராட்டு தெரிவித்தனர்.


பிரதமர் இல்லத்தில் நடந்த 20 நிமிட சந்திப்பில், இந்த முயற்சிக்கு சோனியாவும், காங்கிரஸ் செயற்குழுவும் அளித்த ஒத்துழைப்புக்கு நன்றி தெரிவித்தார். இதில் வெற்றி பெறுவதற்கு தகுந்த முயற்சிகளை மேற்கொண்டதற்காக வெளியுறவுத்துறை அமைச்சர் பிரணாப் முகர்ஜியை வெகுவாக புகழ்ந்தார் மன்மோகன் சிங்.

No comments: