எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, May 6, 2009

எந்தக் கூட்டணிக்கு வாக்களிப்பது?

பா.ஜ.க தலைமையிலான கூட்டணிக்கா?


காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கா?


மூன்றாவது அணிக்கா?


இல்லை சுயேட்ச்சைக்கா?



நான் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கே வாக்களிக்க விரும்புகிறேன் நீங்களும் சிந்திக்கலாம் அந்த அணிக்கு வாக்களிக்க.

பா.ஜ.க ஒரு மதவாதக் கூட்டணி அது நாடறிந்த விஷயம் சரியான கொள்கை அவர்களுக்கு இல்லை, சரியான திட்டம் இல்லை, முக்கியமாக சரியான தலைமை அவர்களிடத்தில் இல்லை.

மூன்றாவது அணி என்று எடுத்துக்கொண்டால் இடது மற்றும் வலது சாரிகளின் பிற்போக்கான சிந்தனை மற்றும் செயல்பாடுகள்.உதாரணத்துக் எடுத்துக்கொண்டோமேயானால் அவர்கள் அமெரிக்காவிடம் அணு சக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை வாங்ககூடாது என்றும் நம் நாட்டில் உள்ள தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேற வேண்டும் என்கிறார்கள்.

அணுசக்திக்குத் தேவையான மூலப்பொருள் யுரேனியம் நம் நாட்டில் கிடைப்பதில்லை அப்படியே கிடைத்தாலும் அது நமது தேவைக்கு போதுமானதாக இல்லை அதாவது யானை பசிக்கு சோளப்பொறி போன்றது.

சரி நம்மிடம் தோரியம் அதிகமாக உள்ளது அதை பயன்படுத்தி அணுசக்தி துறையில் முன்னேறலாம் என்றால் அது இன்னமும் ஆராய்ச்சி நிலையில் தான் உள்ளது அது செயல்பாட்டிற்கு வரவேண்டுமானால் 10 லிருந்து 20 வருடங்கள் ஆகலாம். அதுவரை நாம் என்ன செய்வது மின்சாரத்தை எந்தவகையில் தயாரிப்பது, ஒரு நாடு பொருளாதாரத்தில் முன்னேற வேண்டுமானால் அடிப்படைத் தேவை மின்சாரம். அது இல்லாமல் எந்த ஒரு நாடும் முன்னேற முடியாது. இதெல்லாம் தெரிந்தும் இடது மற்றும் வலது சாரிகள் நான் புடிச்ச முயலுக்கு மூன்று கால் என்று சொல்கிறார்கள், அமெரிக்காவிடம் அணுசக்தி ஒப்பந்தம் கூடாது என்றால் கூடாது தான்.

அதனால் இவர்க்ளுடை கொள்கை உதவாக்கரை கொள்கை இவர்களை ஆதரிக்க முடியாது.

நான்காவதாக சுயேட்ச்சைகள் என்று எடுத்து கொண்டால் அவர்களால் நாட்டின் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டையே தவிர எந்த விதப்பயன்பாடும் இருக்காது. அவர்களுடையத் தொகுதிக்கு அவர்களால் எதையும் பெரிதாக வாங்கித்தரமுடியாது அதனால் அவர்களும் ஒதுக்கப் படகூடியவர்களே.

ஆதலால் எல்லாவிததிலும் சாராசரியாக காங்கிரஸ் தான் நிலையான வலுவான அரசை நல்லாட்சியைத் தரமுடியும் என்று நான் ஆழமாக ந்ம்புகிறேன்.



அதனால் என்னுடைய வாக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு.



நீங்களும் அதை ஆதரிக்க வேண்டும் எனக்கேட்டுக் கொள்கிறேன்.

7 comments:

Rajaraman said...

\\அதனால் என்னுடைய வாக்கு காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு.//

அப்பு சத்தம் போட்டு வெளியில் சொல்லிடாதிங்கப்பு. அவனவன் கருவிகினு இருக்கிறான். சூதானமா இருந்துக்கோங்க.

Anonymous said...

காங்கிரசுக்கு நீங்கள் போடும் ஓட்டு, ஈழத்தமிழனுக்கு நீங்கள் போடும் வாய்க்கரிசி....................

பிரதிபலிப்பான் said...

//காங்கிரசுக்கு நீங்கள் போடும் ஓட்டு, ஈழத்தமிழனுக்கு நீங்கள் போடும் வாய்க்கரிசி....................//

வேறு யார் வந்தாலும் ஈழத்தமிழர்கள் விஷயத்தில் இதை விட மோசமாகத்தான் நடந்து கொள்வார்கள்.

வேறு யார் தான் இந்த விஷயத்தில் உறுதியான நடவடிக்கை எடுப்போம் என்றார்கள்.

யாருமில்லை.

Anonymous said...

அப்பு இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக எழுதின மாதிரி தெரிஞ்சுது. ஆனா இப்ப....? மாறியிட்டீங்களா?

ramanathan said...

ஈழப் பிரச்னையில் யாராலும் ஒண்ணும் செய்யுமுடியாது சொல்லிட்டீங்களே. கலைஞரை திட்டி எழுதிய கையா இப்படி எழுதுகிறது?

muthuganesh said...

மற்ற கட்சிகளில் ஒற்றுமை யிருந்தாலும், நாட்டை ஆளக்கூடிய தகுதியான ஆளில்லை. அம்புட்டுதான்.

பிரதிபலிப்பான் said...

//அப்பு இதுவரை அதிமுகவுக்கு ஆதரவாக எழுதின மாதிரி தெரிஞ்சுது. ஆனா இப்ப....? மாறியிட்டீங்களா?//

இல்லை நான் மத்திய அரசில் ஒரு நல்ல நிலையான ஆட்சியை தரக்கூடிய கட்சிக்கு ஆதர கோருகிறேன்.

இங்கே என் நிலைப்பாடு அவ்வளவே.