எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, June 2, 2010

" சிவப்பு கோட்டைக்கு சேதாரம் " - திரிணாமுல் காங்கிரஸால்

எப்போதும் ஒரே கட்சி ஆட்சியை அமைத்துக் கொண்டிருந்தால் அந்த மாநிலத்தில் வளர்ச்சி ஒரு குறிப்பிட்ட விகிதத்துக்கு மேல் இருக்காதென்பது மேற்கு வங்கத்தை பார்த்தால் தெரியவரும்.

எந்த ஒரு வளர்ந்த மாநிலத்தை எடுத்துக் கொண்டாலும் நல்ல எதிர்கட்சி எங்கிருக்கிறதோ அங்கேதான் ஆரோக்கியமான போட்டிகள் உருவாகும் அரசு செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டி திட்டத்தை மாற்றவோ அல்லது சரியான முறையில் செயல்படுத்தவோ முடியும்.
ஆனால் மேற்கு வங்கத்தை பொருத்தவரையில் கடந்த 30 ஆண்டுகாலமாக CPI(M) ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் சிறந்த எதிர்கட்சியாக இந்திய தேசிய காங்கிரஸ் செயல்படவில்லை என்று தான் சொல்லவேண்டும். ஏனெனில் ஒரு மாநிலம் பொருளாதர ரீதியில் மேம்பாடு அடைய வெறும் விவசாயத்தை மட்டுமே நம்பிக் கொண்டிருந்தால் அதனுடைய வளர்ச்சி விகிதம் அதற்கேற்றார் போல் தான் இருக்கும்.

இந்தியா போன்ற பெரிய ஜனநாயக நாட்டில் பொருளாதாரததை உலகமயமாக்கி கிட்டதிட்ட 25 ஆண்டுகள் ஆகிறது. அப்படி இருக்கும் போது மற்ற எல்லா மாநிலங்களிலும் உள்ள அரசுகள் அதனைப் பயன்படுத்திக் கொண்டு குறிப்பிட தகுந்த வளர்ச்சியை தொழில் துறையில் அடைந்து கொண்டிருக்கும் நிலையில் மேற்கு வங்கம் மட்டுமே பின் தங்கியுள்ளது என்றே சொல்லலாம்.

அதேபோல் CPI(M) ஆட்சி செய்யும் கேரள மாநிலத்தை பார்த்தால் அங்கு ஒரு சிறந்த எதிர்கட்சியாக காங்கிரஸும், காங்கிரஸ் ஆட்சி புரியும் போது CPI(M) மும் நல்ல எதிர்கட்சியாக செயல் படுகிறது. அங்கு தொழில் துறையாக இருககட்டும் கல்விதுறையாக இருக்கட்டும் உளகட்டமைப்பு வசதியாக இருக்கட்டும் எல்லா விஷயத்திலும் ஒரு படி முன்னேறியுள்ளது.

இங்கு மட்டும் ஆட்சி செய்யும் CPI(M) மால் மட்டும் எப்படி சாத்தியம என்று பார்க்கும் போது அருகாமையில் உள்ள (தமிழ்நாடு, கர்நாடகம்) மாநிலத்தில் வளர்ச்சி அவர்கள் எப்படியெல்லாம் முன்னேறிக் கொண்டிருக்கிறார்கள் என்று பார்த்து, ஒரு சிறந்த முற்போக்கான பொருளாதார கொள்கையை கையாண்டும் ஒரு குறிபிடதகுந்த வளர்ச்சியை அடைந்திருக்கிறார்கள் என்றால் மிகையல்ல.

ஆனால் மேற்குவங்க CPI(M) அரசு இன்னுமும் தொழில் துறையை தாரளமயமாக்கல் கொள்கையை கடைபிடிக்கவில்லை என்றால் அம்மாநில வளர்ச்சி அப்படியேதான் இருக்கும். அதாவது வெரும் விவசாயத்தை மட்டுமே நம்பிக்கொண்டிந்தால் எவ்வளவு வளர்ச்சி கிட்டுமோ அவ்வளவு தான் கிடைக்கும். இருந்தாலும் மற்ற மாநிங்களின் வளர்ச்சியை ஒப்பிட்டு பார்க்கும் போது தான் பிரச்னையே வருக்கிறது.

அப்படி இருக்கையில் அம்மாநிலத்தில் செயல்படும் காங்கிரஸ் தன்னுடைய எதிர் கட்சி என்கிற மிக சிறந்த ஆயுததை பயன்படுத்த தவறிவிட்டது. ஆனால் இப்பொழுது அந்த சிறந்த எதிர்கட்சியாக திரிணாமுல் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.

எப்படி சென்னை தி.மு.க வின் கோட்டையாக ஒரு காலத்தில் ஏன் இன்னுமும் கருதி கொண்டு இருக்கிறோமோ அதே போல் CPI(M)-மின் கோட்டையாக இருந்த மேற்குவங்கத்தில் உள்ளாட்சி தேர்தல் வந்தது, அதை இந்தியாவே எதிர் கொண்டு பார்த்துக் கொண்டிருக்கையில் மேற்கு வங்கத்தில் மாற்றம் வரும் என்று நினைத்துக் கொண்டு இருக்கையில் கொல்கத்தா மாநகராட்சியில் உள்ள 141 வார்டுகளில் 94 வார்டுகளில் திரிணமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 43 நகராட்சிகளில் 20 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சி 12 நகராட்சிகளையும், காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு நகராட்சியை மட்டுமே கைப்பற்றியுள்ளது.

கோல்கட்டா மாநகராட்சியைப் பொறுத்தவரை, இடதுசாரி கட்சிகளுக்கு 29 வார்டுகளே கிடைத்தன. காங்கிரசுக்கு ஒன்பது வார்டுகளும், பா.ஜ -வுக்கு ஒரு வார்டும் கிடைத்துள்ளது. இதன் மூலம், இடதுசாரிகளின் சிவப்புக் கோட்டை தகர்க்கப்பட்டுள்ளது.கடந்த 2005ல் நடந்த கோல்கட்டா மாநகராட்சி தேர்தலில், இடதுசாரி கட்சிகளுக்கு 75 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு 42 வார்டுகளும், காங்கிரஸ் கட்சிக்கு 21 வார்டுகளும், பா.ஜ -வுக்கு மூன்று வார்டுகளும் கிடைத்தன.

திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்துள்ள இந்த வெற்றி, அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டசபை தேர்தலிலும் கண்டிப்பாக எதிரொலிக்கும்.

கோல்கட்டா மாநகராட்சியிலிருந்து மட்டும் மா.கம்யூனிஸ்ட் கட்சியை திரிணமுல் அகற்றவில்லை; மாறாக, அவர்களது கோட்டையாக கருதப்பட்ட சால்ட் லேக் நகராட்சியையும் கைப்பற்றியுள்ளது. இந்த நகராட்சியில், மொத்தமுள்ள 25 வார்டுகளில் 16 வார்டுகளை திரிணமுல் கைப்பற்றியுள்ளது. இடதுசாரி கட்சிகளுக்கு ஒன்பது வார்டுகளே கிடைத்தன. அதுவே, கடந்த 2005ல் நடந்த தேர்தலில், அப்போதிருந்த 23 வார்டுகளில் இடதுசாரி கட்சிகளுக்கு 18 வார்டுகளும், திரிணமுல் காங்கிரஸ் கட்சிக்கு ஐந்து வார்டுகளும் கிடைத்தன.ஹூக்ளி மாவட்டத்தில், மொத்தமுள்ள 12 நகராட்சிகளில் 11 நகராட்சிகளை திரிணமுல் காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. அதுபோலவே, வட மாவட்டங்களில் அறிவிக்கப்பட்ட 16 நகராட்சி தேர்தல் முடிவுகளில் 12 நகராட்சிகளை திரிணமுல் கைப்பற்றியது. இடதுசாரி கட்சிகளுக்கு மூன்று வார்டுகளும், காங்கிரசுக்கு ஒரே ஒரு வார்டும் கிடைத்தது.

எப்படியோ மேற்குவங்கத்தில் மாற்று அரசியல் கட்சி ஆட்சியமைக்கும் பட்சத்தில் வளர்ச்சி பாதை பிரகாசிக்கும் என்றே தோன்றுகிறது. அதன் பிறகாவது காங்கிரஸ் சிறந்த எதிர்கட்சியாக செயல்படவேண்டும்.

முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டு பிறபோக்குதனமான அரசை மேற்கொண்டு வரும் CPI(M) ஐ அகற்றினால் மாநிலம் வளர்ச்சி அடையும் என்றே நினைக்கிறேன்.