எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, May 31, 2010

அரசியலில் நிரந்தர எதிரியும் இல்லை நிரந்தர நண்பர்களும் இல்லை

நான் ஒரு முறை சபதம் எடுத்துவிட்டால் எடுத்ததுதான் என் முடிவில் இருந்து நான் என்றுமே பின்வாங்குவதில்லை. பின்வாங்கியதாக சரித்தரமும் இல்லை. கண்ணகி, பாஞ்சாலியின் போன்றவர்களின் சபதம் போன்றது தான் எங்களுடைய சபதமும் என்று எந்த அரசியல்வாதிகளாவது அல்லது அரசியல் கட்சிகளாவது நடந்து கொண்டதுண்டா என்றால் என்னைப் பொருத்தவரையில் இதுவரையில் இல்லை என்றே சொல்வேன்.

அப்படி ஏதாவொரு அரசியல் கட்சி இருந்து, தெரியப்படுத்தினால் தெரிந்து கொள்வேன்.

” வைக்கம் வீரர்”, ” பகுத்தறிவு பகலவன்”, ”சுயமரியாதை காவலன்”, ”தோழர் ராமசாமி “ இப்படி பல்வேறு பெயர்களை காலத்துக்கு ஏற்றார் போல் அழைத்துவந்து கடைசியில் எல்லாராலும் அன்போடும், பண்போடும், பாசத்தோடும், மரியாதையோடும் ” தந்தை பெரியார் ” என்று அழைக்கப்படும் திராவிடகழகத்தின் தலைவர் அவருடன் கட்சிபணியாற்றிய சி.என். அண்ணாதுரை அவர்கள் தனிஅரசியல் கட்சி தி.மு.க ஆரம்பித்து 1967 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றதேர்தலில் காங்கிரஸை எதிர்த்து போட்டியிட்ட போது திராவிட கழக்த்தலைவர் தந்தை பெரியார் அவர்கள் எந்த கட்சியில் இருந்து வெளியில் வந்து தி.க வை ஆரம்பித்தாரோ அதே காங்கிரஸோடு சேர்ந்து பிரசாரம் செய்தார்.

இவ்வளவும் தனக்கு எதிரியாக நினைத்துக் கொண்டிருந்த காங்கிரஸுடன் சேர்ந்து தன்னுடன் இருந்த மற்றும் தன்னுடைய சிஷ்யனாக இருந்த சி. என். அண்ணாதுரையை எதிர்த்து பிரசாரத்தில் ஈடுபட்டார்.

அதே அண்ணாதுரை தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் முன்பு முதலமைச்சராக பதவி ஏற்க்கும் முன் தன்னுடைய தலைவராக நினைத்துக் கொண்டும், தன்னுடைய வழிகாட்டியாக நினைத்துக் கொண்டும் இருந்த தந்தைப் பெரியார் அவர்கள் தனக்கெதிராக பிரசாரம் செய்தாலும் அவரையே தன் மானசீக குருவாக எற்றுக் கொண்டு திருச்சியில் சென்று வணங்கி வாழ்த்து பெற்றப் பிறகே முதலமைச்சராக ஆட்சி பொருப்பில் அமர்ந்தார்.

இங்கு சொல்ல வந்த செய்தி என்ன என்பது எல்லாராலும் எல்லா மக்களாலும் எல்லா சமுகத்தாலும் எல்லா நேரத்திலும் ஏற்றுக் கொண்ட தலைவர்கள் தந்தை பெரியாரும், அறிஞர் அண்ணாவும் இவர்களே கூட்டணி என்பது அதுவும் அரசியல் கூட்டணி என்பது அவரவர் கொள்கைக்கு ஏற்ப , அவர்கள் சார்ந்துள்ள அரசியல் கட்சிகளின் வளர்ச்சியைக் கருத்தில் கொண்டும் , அவர்களின் அரசியல் எதிர்காலத்தை கருத்தில் கொண்டும் எந்த அரசியல் கூட்டணியில் சேர்ந்தால் அதிகளவில் நன்மைகிடைக்கும் என்று பார்த்தும் சேர்ந்தார்கள்.

அதன் பிறகு கர்மவீரர் காமராஜர் அவர்கள் தி.மு.க மற்றும் அ.தி.மு.க ஆகிய அரசியல் கட்சிகளுடன் என்றுமே கூட்டணி என்பதே இருக்க கூடாது என்று வழியுறுத்தினார் காங்கிரஸ் கட்சிக்கு. ஏன் அவர் அவ்வாறு சொல்லவேண்டும் அவர்களுடன் கூட்டணி வைத்துக் கொண்டால் நாம் தனித்து நின்று வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியாது என்பதனால் அவர் அவ்வாறு சொன்னார். அதற்காக அவர்கள் அப்படியேவா இருந்துவிட்டார்கள்.

மே 21, 1991 ம் ஆண்டு முன்னாள் பிரதமர், அந்நாள் காங்கிரஸ் தலைவர் அமரர் ராஜீவ் காந்தி விடுதலைப் புலிகளால் படுகொலை செய்யப்பட்டார். அந்த சமயத்தில் விடுதலைபுலிகளுடன் மிகநெருக்கமாக கருத்தபட்ட அரசியல் கட்சி தி.மு.க.

தி.மு.க. தான் பின்புலத்தில் இருந்து செயல்பட்டதாக கருதி அவர்களுடன் இனி எதிர் காலத்தில் கூட்டணி அமைத்துக் கொள்வதில்லை என்று காங்கிரஸ் கூறியது அப்படி இருக்கையில் இன்று அவர்கள் தி.மு.க யுடன் கூட்டணி அமைத்துக் கொள்ளவில்லையா ?.

நான் முன்பு கூறியது போல் அரசியலில் நிரந்தர நண்பர்களும் நிரந்திர எதிரிகளும் கிடையாது.

அவ்வளவு பெரிய தேசிய கட்சியே மீண்டும் கூட்டணி அமைத்துக் கொண்டதும். தன் சிஷ்யனையே எதிரியாக பாவித்து பிறகு அவர்கள் சேர்ந்ததும் வரலாறு அப்படி இருக்கையில் சென்ற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க வுடன் கூட்டணி வைத்துக் கொண்டு தேர்தலில் தோற்று கூட்டணியில் இருந்து வெளியில் வந்ததாக பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அவர்கள் அறிவித்த போது மக்களிடையே பரவலாக பா.ம.க வின் எதிர்காலத்தை பற்றி கேள்விகள் கேட்கப்பட்டது.

அந்த சமயத்தில் மு.க.ஸ்டாலின் அவர்கள் பா.ம.க வைப பற்றி விமர்சனம் செய்திருந்தார். நிருபர்கள் அவர்களிடத்தில் நீங்கள் உங்களது கூட்டணியில் பா.ம.க வை சேர்த்துக் கொள்ளும் வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டார்கள். அதற்கு அவர் சொன்னார் எந்த காலத்திலும் பா.ம.க வுடன் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமில்லை மற்றும் பா.ம.க விற்கு எதிர்காலம் என்பது இருண்ட காலமாகத்தான் இருக்கும் என்று சொன்னார்.

அவரைப் போன்றே எல்லாரும் அவரவர் கருத்துகளை வெளியிட்டு அதே கருத்தை ஒட்டியவாரு கருத்து சொல்லிருந்தார்கள்.

இந்த சமயத்தில் எங்களது அலுவலத்திலும் இது போன்ற ஒரு கருத்து கணிப்பு நடத்தப் பட்டது. அதனை கேட்க இதை சொடுக்கவும் அதில் பேசிய மற்றும் கருத்து தெரிவித்த அத்துனை நண்பர்களும் தெரிவித்த கருத்து பா.ம.க விற்கு எதிர்காலம் இனிமேல் கேள்விகுறியே அவர்கள் மீண்டும் அரசியல் செய்யவே முடியாது என்றே சொன்னார்கள்.

இந்த சமயத்தில் எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் எல்லாரும் அப்படி சொல்கிறார்கள் என்று.

பொதுவான, தீர்க்கமான கருத்தை தெரிவிக்கும் போது நாம் எப்படி சொல்லவேண்டும் உணர்ச்சிவசப் படாமலும், எந்த கட்சிக்கும் சாதகமில்லாமலும், அரசியல் நாகரிகமாக காலங்காலமாக கடைபிடித்துவரும் கூட்டணியைப பற்றியும், கூட்டணி மாறுவதைப் பற்றியும், களத்தில் எத்தனை அரசியல் கட்சிகள் இருக்கின்றன மற்றும் அந்த அரசியல் கட்சிகளெல்லாம் எந்தெந்த நிலைப்பாட்டில் இருக்கின்றன என்பதைபற்றியும் தெரிந்து கொண்டு கருத்தை சொன்னால் சரியாக இருக்கும்.

இது போல எல்லாரும் சிந்தித்து சொன்னார்களா என்று கேட்டால் இருக்காது என்று தான் எனக்கு தோன்றுகிறது. ஏனென்றால் யாரவது ஒருவராவது மாற்றுக் கருத்தை கூறியிருந்தால் நான் மேலே சொன்ன விதிகளை நினைவில் வைத்து கூறியிருப்பார்கள் என்று சொல்லலாம் ஆனால் யாரும் அப்படி சொன்னதாக தெரியவில்லை.

கடைசியில் என்னிடம் பா.ம.க வைப் பற்றியும் அதன் எதிர்காலத்தைப் பற்றியும் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு நான் சொன்னேன் மீண்டும் பா.ம.க வை தி.மு.க அனைத்துக் கொள்ளும் இல்லாவிட்டால் அ.தி.மு.க சேர்த்துக்கொள்ளும் என்றேன் எல்லாரும் சிரித்தார்கள் என்ன அரசியலே தெரியாமல் பேசிறீங்களே என்றும் சொன்னார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை ஏன் இதற்குமுன்பு இது போன்று நடந்ததில்லையா, கூட்டணியை விட்டு வெளியேறி மீண்டும் கூட்டணியமைத்து கொள்ளவில்லையா ஏன் இவர்கள் பா.ம.க வெளியேறியதும் இப்படி சொல்கிறார்கள் என்று.

அப்பொழுதும் கேட்டார்கள் இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் சேர்த்துக் கொள்ளவில்லை என்றால் என்ன செய்யும் என்றார்கள் மூன்றாவதாக தே.மு.தி.க வுடன் கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றேன், எப்பொழுது அப்படியொரு கூட்டணி ஏற்படும் இரண்டு திராவிட கழகங்களும் சேர்க்காத பட்சத்தில் என்றேன். மேற்கூறிய இரண்டு கட்சிகளும் விட்டுவிடாது எப்படியும் சேர்த்துக் கொள்ளும் என்று எனக்கு தெரியும். ஏன்னென்றால் வடமாவட்டங்களில் அதிக செல்வாக்குள்ள கட்சி மற்றும் ஜாதி அடிப்படையிலானதொரு அரசியல் கட்சி.

எல்லாரும் சொல்வதைப் போல் பா.ம.க தனித்து நின்றால் ஒரு இடம் கூட கிடைக்காது என்பது ஒரு புறமிருக்க அதனால் அந்த இரண்டு அரசியல கட்சிகளுக்கும் பெரிய இழப்பு தான் ஏற்படும். எப்படி என்றால் வடமாவட்டங்களில் உள்ள தொகுதிகளில் கூட்டணி அமைத்து போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி என்கிற நம்பிக்கை ஏற்படும்

அப்படியில்லாமல் இரு திராவிட கட்சிகளும் தனித்துவிடபட்டால் பா.ம.க வின் கணிசமான ஓட்டு வங்கி எந்த வாக்காளர்களுக்கு சாதகமாக அமையும் என்று தெரியாமல் கடைசி வரை மதில் மேல் பூனையாக இருக்கும்.

பா.ம.கவின் கணிசமான ஓட்டு வங்கியைப் பயன்படுத்திக் கொண்டால் நிச்சயம் வெற்றி என்ற நிலை உருவாகும்.

எந்த ஒரு அரசியல் கட்சியும் தாங்கள் ஆட்சி அதிகாரத்தில் அமரவேண்டும் என்று நினைக்கும் பட்சத்தில் முடிந்தவரை எல்லா சிறு அரசியல் இயக்கங்களையும் தங்களுடன் அரவணைத்து கொண்டு செல்லவே விரும்பும். அப்படியில்லாமல். இரண்டு பெரும் திராவிடக் கழகங்களும் பொது எதிரியாக பா.ம.க -வை நினைக்க வாய்ப்பேயில்லை.

இதனை அடிப்படையாக கொண்டுதான் நான் பா.ம.க வை இரண்டு அரசியல் கட்சிகளில் ஏதாவது ஒன்று சேர்த்துக் கொள்ளும் என்று சொன்னேன்.


நான் இந்த கருத்தை சொன்னவுடன் நீங்கள் பா.ம.க கட்சியை சார்ந்தவராக தான் இருக்கவேண்டும் என்றார்கள். ஒரு பொதுவான கருத்தை சொல்வதற்கு எந்த அரசியல் இயக்கங்களையும் சார்ந்து இருக்கத் தேவையில்லை என்பது என்னுடைய கருத்து. இருந்தாலும் நான் ஜாதி அரசியல் மற்றும் மதத்தை அடிப்படையாக அரசியல் நடத்தும் எந்த அரசியல் கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பவன் அல்ல அதற்கு எதிரானவன் என்கிற விஷயத்தை தெளிவு படுத்த விரும்புகிறேன்.

நான் சொன்னது நடந்தாகிவிட்டது. நேற்று தி.மு.க –வின் செயற்குழுவில் மீண்டும் பா.ம.க வை சேர்த்துக் கொள்வதென்றும். 2011 ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு வரும் மாநிலங்களவை தேர்தலில் பா.ம.க விற்கு ஒரு இடம் தரபோவதாகவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது

நாளை ஒரு அரசியல் கட்சி எப்படி இருக்கும் என்பதை நாம் தொலைநோக்குப் பார்வையுடன் பார்த்து சிந்தித்தால் தான் தீர்க்கமான மற்றும் சரியான கருத்தை சொல்ல முடியும் என்று நம்புகிறேன்.


அரசியலில் நிரந்தர நண்பர்களும் கிடையாது நிரந்தர எதிரிகளும் கிடையாது.

No comments: