எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, September 2, 2009

ஆந்திர முதல்வர் மரணம்

ஆந்திர மாநில மக்களால் "ஒய்.எஸ்.ஆர்." என்று மிகவும் அன்போடு அழைக்கப்பட்டவர் ராஜசேகர ரெட்டி. ஆந்திர மாநில அரசியலை புரட்டிப்போட்ட பெருமை இவருக்கு உண்டு.

தெலுங்கு தேசம் கட்சியை அசைக்க முடியாது என்று கருதப்பட்ட காலத்தில், அந்த மாயையை உடைத்து ஒட்டு மொத்த காங்கிரஸ் கட்சிக்கு ராஜசேகர ரெட்டி புத்துணர்ச்சி கொடுத்தார். அதனால் தான் சோனியா மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் இவரை "கடப்பா புலி" என்று அடிக்கடி வர்ணிப்பதுண்டு.

60 வயதாகும் ராஜசேகர ரெட்டி ஆந்திராவில் செய்து வந்த சாதனைகள் உண்மையிலேயே பிரமிக்க வைத்தன. இதனால் தான் ஆந்திரா முதல்-மந்திரிகளில் 5 ஆண்டுகால ஆட்சியில் முழுமையாக இருந்த முதல் நபர் என்ற சாதனையை இவரால் படைக்க முடிந்தது.

இந்தியாவில் உள்ள மாநில முதல்-மந்திரிகளில் மிக, மிக சிறப்பான ஆட்சியை கொடுப்பதில் நம்பர்-ஒன் இடத்தில் ராஜசேகர ரெட்டி இருப்பதாக 2006-ம் ஆண்டு நடத்தப்பட்ட 2 கருத்துக்கணிப்புகள் தெரிவித்தன. இதனால் காங்கிரசாரிடம் மட்டுமின்றி மற்ற கட்சி அரசியல் தலைவர்களிடமும் ராஜசேகர ரெட்டி மதிப்பும், மரியாதையும் பெற்று இருந்தார்.

நக்சலைட்டுக்களின் தொந்தரவுகளை மீறி, ஆந்திர மாநிலத்தின் அசராத வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த சிறப்பு இவருக்கு உண்டு. மிக குறுகிய காலத்தில் ஆந்திராவை நம்பர்-ஒன் மாநிலமாக மாற்றப் போவதாக அவர் மார்தட்டி சொல்லிக் கொண்டிருந்தார். இதற்காகவே ஆந்திர மக்கள் தொகையில் 75 சதவீதம் இருக்கும் விவசாயிகளை முன்னேற்ற அடுத்தடுத்து திட்டங்களை அறிவித்தப்படி இருந்தார்.

யார் கண்பட்டதோ தெரியவில்லை. ராஜசேகர ரெட்டியின் அரசியல் வாழ்க்கை இப்படி, சோகமாக முடியும் என்று யாருமே நினைக்கவில்லை. ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் புலிவேந்துலாவில் 1949-ம் ஆண்டு ஜூலை மாதம் 8-ந் தேதி ராஜசேகர ரெட்டி பிறந்தார். இவரது முழுப் பெயர் எடுகுரி சந்திந்தி ராஜசேகர ரெட்டி.

செல்வந்த குடும்பத்தில் பிறந்த இவர் கர்நாடகாவில் உள்ள குல்பர்கா எம்.ஆர்.மருத்துவக் கல்லூரியில் படித்து டாக்டர் பட்டம் பெற்றார். படிப்பு முடிந்ததும் சிறிது காலம் மருத்துவ அதிகாரியாக பணியாற்றினார்.

1973-ம் ஆண்டு இவர் தன் தந்தை ஒய்.எஸ்.ராஜா ரெட்டி நினைவாக புலி வேந்துலா நகரில் பெரிய மருத்துவமனை கட்டினார். அதோடு ஒரு பாலிடெக்னிக் மற்றும் கல்லூரி கட்டினார். பிறகு அந்த கல்வி நிறுவனங்களை லயோலா கல்லூரி நிறுவனத்துக்கு கொடுத்து விட்டார்.

ராஜசேகர ரெட்டியின் மூதாதையர்கள் அனைவரும் பொதுச்சேவையில் தீவிர ஈடுபாடு கொண்டிருந்தனர். அந்த சேவையாற்றும் குணம் ராஜசேகர ரெட்டியிடமும் காணப்பட்டது. படிக்கும் காலத்திலேயே ஏழை-எளியவர்களுக்கு உதவிகள் செய்து வந்த ராஜசேகர ரெட்டி 1978-ம் ஆண்டு தீவிர அரசியலில் ஈடுபடஆரம்பித்தார்.

கடப்பா பாராளுமன்றத் தொகுதியில் இருந்து 4 தடவை எம்.பி.ஆக தேர்வானார். பிறகு மாநில அரசியலுக்கு திரும்பிய அவர் தொடர்ச்சியாக 4 தடவை புலிவேந்துலா தொகுதியில் இருந்து சட்டசபைக்கு தேர்வானார்.

8 தேர்தலை எதிர்கொண்ட அவர் ஒரு தடவை கூட தோல்வி அடைந்தது இல்லை. இதனால் அவரது ஆதரவாளர்கள் "தோல்விக்கு தோல்வி கொடுத்தவர் எங்கள் ஒய்.எஸ்.ஆர்." என்று புகழ்வதுண்டு.

1980 முதல் 1983 வரை இவர் மாநில அரசில் பல்வேறு மந்திரி பதவிகளை வகித்தார். ஊரக மேம்பாடு, சுகாதாரம், கல்வி ஆகிய துறைகளில் ராஜேசேகர ரெட்டி கொண்டு வந்த சீர்திருத்தங்கள் ஏராளம். அரசியல் மூலம் மக்களுக்கு என்னவெல்லாம் செய்ய முடியுமோ அவை அனைத்தையும் செய்ய வேண்டும் என்ற அவரது லட்சியம் தான் அவரை மேலும், மேலும் உயர்த்தியது.

1983-ம் ஆண்டு அவர் ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவர் ஆனார். 1985 வரை தலைவராக இருந்த அவர் மீண்டும் 1998 முதல் 2000 வரை 2-வது தடவையாக தலைவர் பதவி வகித்தார். 1999-ம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியைத் தழுவியது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியில் ராஜசேகர ரெட்டி அமர்ந்தார்.

2004-ம் ஆண்டு வரை எதிர்க்கட்சி வரிசையில் இருந்த ராஜசேகர ரெட்டி, அந்த காலக்கட்டத்தில் செய்த நூதனமான போராட்டங்கள் தான் காங்கிரஸ் கட்சிக்கு உயிரூட்டுவதாக மாறியது.

2000-ம் ஆண்டில் ஆந்தி ராவில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டது. இதை கண்டித்து ராஜசேகர ரெட்டியும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களும் 14 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார்கள். ஆந்திர மாநில அரசியலில் இது பிரளயத்தை ஏற்படுத்தியது.

2003-ம் ஆண்டு ராஜசேகர ரெட்டி ஆந்திரா மாநிலம் முழுவதும் 1400 கிலோ மீட்டர் தூரத்துக்கு பாதயாத்திரை மேற்கொண்டார். கிராமம், கிராமமாக சென்றார். ஏழை, எளிய மக்களை சந்தித்துப்பேசினார். இது ஆந்திராவில் அடித்தள மட்டத்தில் இருந்த மக்களை, காங்கிரஸ் பக்கம் திருப்பியது. காங்கிரஸ் கட்சி புத்துணர்ச்சிப் பெற்றது.

இதன் காரணமாக 2004-ம் ஆண்டு ஆந்திரா சட்டசபைக்கு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றது. ராஜசேகர ரெட்டி 14-5-2004ல் முதல்- மந்திரியாக பதவி ஏற்றார்.

2003 பாத யாத்திரையின் போது ஏழை, எளிய விவ சாயிகள் படும் கஷ்டங்களை, எதிர் கொள்ளும் பிரச்சினை களை ராஜசேகர ரெட்டி நேரில் பார்த்திருந்தார். ஏழை விவசாயிகளுக்கு என் னென்ன தேவைப்படும் என்பது அந்த பாத யாத்தி ரையின் போது அவர் மன தில் ஆழமாக பதிந்து போய் இருந்தது.

முதல்-மந்திரியாக பொறுப்பு ஏற்றதும் ஏழை விவசாயிகளின் மன ஏக் கத்தை போக்குவது என்று உறுதி எடுத்துக் கொண் டார். தனது முதல் பட்ஜெட் டிலேயே எந்த துறைக்கும் இல்லாதபடி வேளாண் துறைக்கு அதிக பணம் ஒதுக் கீடு செய்தார்.

ஏழை விவசாயிகள் பயன் பெற, இலவச மின்சாரம் கொடுத்தார்.

விவசாயத்தில் நவீன உத்திகளை பயன்படுத்த வழி வகுத்தார். அதே சமயத்தில் ஆந்திர மாநில விவசாய உள் கட்டமைப்பையும் வலுப் டுத்தினார். கிராம விவசாயிகள் வாழ் வில் வளம் பெருக வேண்டு மானால் நீர்ப் பாசனம் மிக, மிக முக்கியமானது என்பதை யாத யாத்திரை காலத்தில் அறிந்திருந்த ராஜசேகர ரெட்டி ஆந்திர மாநில நீர்ப்பாசனத் திட்டங்களில் மாபெரும் புரட்சி செய்தார். முதல்-மந்திரியாக பதவி ஏற்ற முதல் 2 ஆண்டுகளில் மட்டும் நீர்ப்பாசனத் திட் டங்களுக்கு 1600 கோடி ரூபாயை செலவிட்டார்.

அதோடு Òஜலயக்ஞம்Ó என்ற திட்டத்தை அறிமுகம் செய்தார். இதன் மூலம் ஆந்திராவில் தரிசாக கிடந்த நிலங்கள் எல்லாம் மாற்றப்பட்டன. இந்த புரட் சியை ராஜசேகர ரெட்டி 2 வருடத்தில் ஓசையின்றி செய்து முடித்தார். ஒரே சமயத்தில் 70 நீர்ப் பாசன திட்டங்களை அமல் படுத்தி எல்லா கட்சிக்காரர் களையும் பிரமிக்க வைத் தார். பெரிய ஆறுகளில் ஓடும் தண்ணீரை, சிறு சிறு கால்வாய் வெட்டி பாசனத் துக்கு கொண்டு வந்தார்.
பல புதிய அணைக்கட்டுகளைக் கட்டினார். மிக குறுகிய காலத்தில் 32 பெரிய நீர்ப்பாசன திட்டங்களை நிறைவேற்றினார். இவற்றுக்கு ஆன மொத்த செலவு எவ்வளவு தெரியுமா? 65 ஆயிரம் கோடி ரூபாய்.

இவை அனைத்தையும் ராஜசேகர ரெட்டி, மிக, மிக திட்டமிட்டு நேர்த்தியாக செய்து முடித்தார்.

இந்த விவசாயப் புரட்சி காரணமாக ஆந்திரா வில் இரண்டாண்டுகளில் விளை நிலங்களின் அளவு இரட்டிப்பாக உயர்ந்தது. இதனால் ஆந்தி ராவின் ஒட்டு மொத்த விவ சாய உற்பத்தி நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்தது. ஏழை விவசாயி களின் வாழ்வில் வசந்தம் வீசியது.

நீர்ப்பாசனத் திட்டங் களை நிறைவேற்றிய போதே மக்களின் குடிநீர் திட்டங் களையும் சேர்த்து அமல் படுத்தினார். இதனால் 1 கோடி ஏழைகளுக்கு குடிநீர் வசதி கிடைத்தது.

இதற்கிடையே ஏழை விவசாயிகள் மின் கட்டணம் செலுத்த இயலாமல் இருப்பது அவரது கவனத்துக்கு வந் தது. உடனடியாக ஏழை விவசாயிகளின் 1192 கோடி மின் கட்டண நிலுவைத் தொகைகளை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

கிராமப்புற மக்களின் வாழ்க்கைத் தரம் உயர வேண்டும் என்பதற்காக Òஇந்திரம்மா திட்டம்Ó என் றொரு திட்டத்தை அறிமுகம் செய்தார். விவசாயிகள் கடன்களை அடிக்கடி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். முதியோருக்கு பென்சன் கொடுக்கும் திட்டம் கொண்டு வந்தார். விதவைகள் மற்றும் ஊன முற்றோர் மறுவாழ்வுக்கு முன் னுரிமை கொடுத்தார்.

ஏழை மக்களுக்கு இலவச வீடு கட்டி கொடுத்தார். ரேசனில் ஏழைகளுக்கு ஒரு கிலோ அரிசியை 2 ரூபாய்க்கு வழங்கினார். ராஜீவ் காந்தி பெயரில் மருத்துவ காப்பீடு திட்டம் கொண்டு வந்தார். அவரது 5 ஆண்டு ஆட்சி காலத்தில் ஏழைகள் பெற்ற பயன் ஏராளம்... ஏராளம்... ஏழை விவசாயிகள் வாழ்வில் அவர் மறுமலர்ச்சி ஏற்படுத்தி இருந்தார்.

ஏழைகள் மீது அவர் காட் டிய பரிவு உண்மையான தாக இருந்தது. அதனால் தான் கடந்த மே மாதம் பாராளு மன்றத்துக்கும், சட்ட சபைக்கும் ஒரே சம யத்தில் தேர்தல் நடந்த போது ஆந்திரா மாநில மக் கள் மீண்டும் ராஜசேகர ரெட்டியை முழு மனதுடன் ஆதரித்தனர்.

சந்திரபாபு நாயுடு ஒரு பக்கம் கலக்கினார். அவருக்கு இணையாக சிரஞ்சீவியின் பிரஜா ராஜ்ஜியம் கட்சியும் கலக்கியது.

அவர்கள் இருவரும் ஓட்டுக்களை அள்ளி விடுவார்கள் என்று சிலர் ஆரூடம் கூறினார்கள். ஆனால் தெலுங்கு தேசத்தையும், பிரஜா ராஜ்ஜியம் கட்சியையும் ஆந்திர மக்கள் ஓட ஓட விரட்டி விட்டனர். ராஜசேகர ரெட்டி செய்த மக்கள் சேவை முன்பு அந்த 2 கட்சிகளும் எடுபடாமலே போய் விட்டன.

அந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு மொத்தம் உள்ள 42 எம்.பி. தொகுதிகளில் 33 இடங்கள் கிடைத்தன. 294 சட்டசபை தொகுதி களில் 156 இடங்களைப் பிடித்து ராஜசேகர ரெட்டி சாதனை படைத்தார். மீண்டும் 2-வது தடவையாக கடந்த மே மாதம் 20-ந் தேதி ஆந்திர முதல்-மந்திரி பொறுப்பை ஏற்றார்.

ஆந்திர மாநில அரசியல் வரலாற்றில் என்.டி.ராமராவ் மட்டுமே தொடர்ச்சியாக 2 தடவை முதல்-மந்திரி பதவி ஏற்று சாதனை படைத்திருந்தார். காங்கிரஸ் தலைவர்களில் இருந்த சாதனையை நிகழ்த்தியது ராஜசேகர ரெட்டி மட்டுமே.

அடுத்து வரும் 5 ஆண்டு களுக்குள் ஆந்திராவில் மேலும் பல புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய அவர் நினைத்திருந்தார். இதற்காக அவர் பல தடவை தன் ஆசையை வெளியிட்டார்.

ஆந்திரா மக்களும் பூரிப் போடு அவற்றை எதிர் பார்த் திருந்தனர். ஆனால் அதற்குள் எமன் அவசரப் பட்டு விட்டான். ராஜசேகர ரெட்டிக்கு ஏற்பட்ட எதிர்பாராத முடி வால் அவர் மனைவி விஜய லட்சுமி, மகன் ஜெகன் மோகன் ரெட்டி, மகள் சர் மிளா நிலை குலைந்து போய் உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியே சோகத்தில் மூழ்கி உள்ளது

சோனியா கண்ணீர் விட் டார். ஆந்திரா மக்கள் அழுது புலம்பியபடி உள்ளனர். அவர்கள் மனதில் ராஜ சேகர ரெட்டி ஆழமாக இடம் பிடித்துள்ளார். அந்த இடத்தை இன்னொருவர் வந்து நிரப்புவது கேள்விக்குறி தான்.

No comments: