எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, March 30, 2009

காங்கிரஸ், பா.ஜ.க மற்றும் மூன்றாவது கூட்டணியின் தேர்தல் அறிக்கை

ஏன் இருக்கக் கூடாது இதுபோன்ற தேர்தல் அறிக்கைகள்? ஏன் தருவதில்லை எந்த ஒரு அரசியல் கட்சிகளும்?

1. அனைவருக்கும் கட்டாயக் கல்வி குறைந்தது 12ஆம் வகுப்பு வரை.
2. சமச்சீர் கல்வி மற்றும் தரமான ஆசிரியர்களை நியமித்தல்.
3. மும்மொழிக் கொள்கை.
4. சீரான இட ஒதுக்கீடு.
5. இந்த இட ஒதுக்கீட்டை படிப்படியாக குறைக்க இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
6. பள்ளி என்று எடுத்துக்கொண்டால் தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் கட்டமைப்பு வசதிகள் செய்துகொடுக்க உத்தரவாதம் அளித்தல்.
7. விஞ்ஞான ஆராய்ச்சி வளர்ச்சி திட்டங்களுக்கு இலக்கு நிர்ணயித்தல்.
8. விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் கடன்களுக்கு வட்டியைக் குறைத்து அதிக தொகைகள் கொடுக்க ஏற்பாடு செய்தல்.
9. பயிர்களுக்கான காப்பீட்டு முறையை அறிமுகம் செய்தல்.
10. விவசாயிகளுக்கு இலவச காப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப் படுத்துதல்.
11. பஞ்சாயத்து அமைப்புகளுக்கு அதிக அதிகாரம் கொடுத்தல்.
12. பஞ்சாயத்து அமைப்புகள் சரியாக இயங்குகிறதா என்பதை கண்காணிக்க ஒரு மக்கள் குழுவை அல்லது வெளிப்படையான நிர்வாகத்தை அமைத்தல்.
13. மாநகரங்களுக்கும், நகரங்களுக்கும் மற்றும் கிராமங்களுக்கு இடையே உள்ள இடைவெளியை குறைக்க நடவடிக்கைகள் எடுத்தல். (இதன் மூலமாக மக்கள் கிராமங்களிலிருந்து நகரங்களுக்கு இடம் பெயர்வது குறையும்).
14. கிராமங்களுக்குத் தேவையான நவீன வசதிகளை செய்து கொடுத்தல்.
15. கிராமங்களுக்கு இலவச சட்ட ஆலோசனைகளை வழங்க கிராமங்கள்தோறும் சட்ட ஆலோசனை மையங்களை அமைத்தல்.
16. குடும்பக் கட்டுபாட்டை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
17. சுகாதார மையங்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து, நவீன மையமாக்குதல்.
18. மக்களுக்கு நீதிக் கிடைப்பதில் ஏற்படும் கால தாமதத்தை குறைத்தல்.
19. பெண் சிசுக்கொலையை தடுத்தல்.
20. பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு அளித்தல்.
21. கலப்பு திருமணங்களை ஊக்குவித்தல்.
22. மதத்தின் பெயரால் தூண்டப்படும் தீவிரவாதத்தை இரும்பு கரம் கொண்டு அடக்குதல்.
23. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துதல்.
24. தேவையான போக்குவரத்து, தொலைத்தொடர்பு மற்றும் சுத்தமான குடிநீர் வசதிகளை செய்து கொடுத்தல்.
25. தடைபடாத மின்சாரம் வழங்க உத்திரவாதம் அளித்தல்.
26. அனைத்து அரசு இயந்திரங்களையும் நவீன மையமாக்க நடவடிக்கை எடுத்தல்.
27. நாட்டின் உளவு அமைப்பை பலப்படுத்துதல்.
28. நாட்டின் உள்கட்டமைப்புகளை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்தல்.
29. ஒவ்வொரு ஆண்டும் சரியான இலக்கு நிர்ணயித்து செயல்படுதல்.
30. தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைத்து அடுத்த 50 மற்றும் 100 ஆண்டுகளுக்குள் அடைய வேண்டிய இலக்கை நிர்ணயம் செய்து, வேண்டிய திட்டங்களை தீட்டிச் செயல்படுதல்.

No comments: