எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, March 26, 2009

சாணக்கியர் கலைஞரின் பிரித்தாளும் சூழ்ச்சி

ம.தி.மு.க

ம.தி.மு.க வின் தூண்கள் என்று சொல்லப்பட்டு வந்த L. கணேஷனும், செஞ்சி ராமச்சந்திரனும் கடந்த சட்டமன்றத்தேர்தலின் போது ம.திமு.க, அ.தி.மு.க வுடன் கூட்டணி வைப்பதை எதிர்த்து போர்க் கொடித் தூக்கி தோற்றுப் போனார்கள்.இதை தனக்கு சாதகமாக பயன்படுத்தினார் கொண்டார் அரசியல் சாணக்கியர் கருணாநிதி. நீர் பூத்த நெருப்பாக ம.தி.மு.க பொதுசெயளாலர் வைகோ விற்கும் செஞ்சி மற்றும் கணேஷனுக்கும் இடையே இருந்த பிரச்சனையை பயன்படுத்தி ஆசை வார்த்தை கூறி தன்பக்கம் இழுத்துக் கொண்டார்.

இழுத்து கொண்டாலும் பரவாயில்லை ம.தி.மு.க வை ஒன்றுமில்லாமல் ஒழிக்க அவர்பட்ட பாடு இருக்கிறதே அது பெரிய கதை.

ம.தி.மு.க விலிருந்து வெளியே வந்தவர்களை அப்படியே தி.மு.க இணைப்பதற்கு பதிலாக அவர்களை வைத்து செய்த கூத்து உலகில் வேறெங்கும் நடக்காது.

செஞ்சியும், கணேசனும் உண்மையான ம.தி.மு.க நாங்கள் தான் என்றும் கட்சியின் அனைத்து மாவட்டத் தலைவர்களும்,பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் பக்கம் தான் இருக்கிறார்கள் என்றும் அதனால் கொடி மற்றும் கட்சியின் சின்னம் எங்களுக்குத்தான் சொந்தம் என்று தேர்தல் ஆணையித்திடம் புகார் கொடுத்தார்கள்.

செஞ்சியும், கணேசனும் சேலத்தில் பொதுக்குழுவை கூட்டி அதில் நிரூபிப்போம் என்றனர். ஆனாலும் அவர்கள் பொதுக்குழு கூடும் நாளை அறிவித்தார்கள். பொதுக்குழு நடைபெறும் நாளான்று அவர்கள் பட்ட கஷ்டங்கள் இருக்கிறதே வேறெப்போதும் அவர்களது வாழ்க்கையில் பட்டது கிடையாது. அவர்களாவது பரவாயில்லை வீரபாண்டி ஆறுமுகம் பட்டப் பாடு இருக்கிறதே அவ்வளவு பாடு. தி.மு.க காரர்களையெல்லாம் ம.தி.மு.க கரை வேஷ்டி கட்டி பொதுக்குழு நடைபெறும் மண்டபத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனாலும் "செஞ்சியும், கணேஷனும் காலை 11 மணி வரை பொதுக்குழு கூடும் மண்டபத்திற்கே வரவில்லை என்றால் பாருங்கள்.ஏன் வழி நெடுக தொண்டர்களின் கூட்டமா" என்றால் அது தான் இல்லை. "அன்று காக்கை, குருவி எல்லாம் பறக்கவில்லையாம்". ஏன் என்று கேட்டால் அந்தப் பக்கம் பறந்தால் ம.தி.மு.க வின் பொதுக்குழு உறுப்பினர்கள் என்று சொல்லிவிடுவார்களோ என்று பயந்து தன் கூடுகளிலே அடைந்து கிடப்பதாக சொன்னதாம்.

இப்படி சாணக்கியத் தனம் செய்து ம.தி.மு.க வை உடைக்கப் பார்த்தார் கலைஞர் அவர்கள். ஆனாலும் அன்று நடந்த அவமானத்திற்கு பிறகு அவர்கள் போட்டி ம.தி.மு.க என்று அறிவித்து செயல்பட்டு வந்து கொண்டிருந்தார்கள். கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக தான் தி.மு.க வில் இணைந்தார்கள். இருந்தாலும் அவர்களுக்கு இந்த முறை தி.மு.க வில் நாடளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்குமா என்று பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இவர்களைத் தொடர்ந்து,

ம.தி.மு.க வின் முன்னால் அவைத்தலைவரும் இன்னால் தி.மு.க வின் உறுப்பினருமான கண்ணப்பன்.

கண்ணப்பனைத் தொடர்ந்து கம்பன் ராமகிருஷ்ணனும் ம.தி.மு.க விலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

பா.ம.க:

நாடாளுமன்றத் தேர்தலில் பா.ம.க. தி.மு.க கூட்டணியில் சேருமா சேராதா என்ற நிலையில், ஒரு வேளை சேராத பட்சத்தில் வன்னியர்களின் ஓட்டுக்களை பெற அல்லது வன்னியர்களின் ஓட்டுக்களை சிதறடிக்க வன்னியர் அறக்கட்டளைகளை ஒருங்கிணைத்து நிர்வகிக்க ஏற்பாடு செய்தார்.

இத்தனை நாட்களாக செய்யாமல் இப்பொழுது அதை தூசுத் தட்டி பா.ம.க விற்கு கிலியை ஏற்படுத்தினார்.

வன்னியர்கள் எல்லாரும் டாக்டர் ராம்தாசின் பின்னால் போகமல் தடுக்க அவர் மெனக்கெட்டதை போல் வேறுயாரும் மெனக் கெட்டதுகிடையாது.

தேர்தல் நேரத்தில் எப்பொழுதும் அவருக்கு நினைவுக்கு வருபவர்கள், திருக்குறளுக்கு பொருளுரை எழுதிய மற்றும் இதிகாசங்களுக்கு மறுவடிவம் கொடுத்திட்ட தமிழ் ஐயா ஜெகத்ரட்சகன் மற்றும் தேசிய அரசியலில் பொதுவாழ்வில் தன்னையே தானம் செய்த வாழப்பாடி சுகந்தன் நினைவுக்கு வருவார்கள்.

வாழப்பாடி ராமமூர்த்தி இருந்த வரைக்கும் கலைஞர் அவர்கள் ராமதாஸுக்கும், வாழப்பாடி ராமமூர்த்திக்கும் இடையே சீனப்பெருஞ் சுவர்போல் இருந்து நட்பினை வளரவிடாமல் பார்த்துகொண்டார்.

அதே போல் இப்பொழுது எனது தம்பி என்று செல்லமாக ராமதாசால் அழைக்கப்படும் தொல் திருமாவளவனை அவருக்கு எதிராக களமிறக்க சூழ்ச்சி செய்து மீண்டும் புகையை போட ஏற்பாடு செய்திருக்கிறார்.

இந்த நேரத்தில் திருமாவும், ராமதாசும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

கலைஞரின் அரசியல் சூழ்ச்சிக்கும் நயவஞ்சகத்திற்க்கும் ஆளாகமல் இருக்க வேண்டும்.

தி.மு.க தலைவர் கருணாநிதியின் சாணக்கியத்தனம் நாளுக்கு நாள் மெருகு ஏறிக் கொண்டே வருகிறது.

2 comments:

Anonymous said...

athu sanakkiya thanam illai. Molla mari thanam.

SANGOLI said...

Very good article and well said.