எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, January 9, 2009

மின்வெட்டு வீராசாமிக்கு – 2009-ம் ஆண்டிற்க்கான ”சிறந்த அரசியல் காமெடியன் விருது”



2009-யின் மிகப் பெரிய விருதான ” சிறந்த அரசியல் காமெடியன் விருதை” நம் படிக்காத மேதை மின் வேட்டு வீராசாமி வாங்க இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் பேசிய நமது மின்துறை அமைச்சர் மின் வேட்டு வீராசாமி அவர்கள் மிகவும் Timing comedy பண்ணியுள்ளார். ஆதலால் இவ்விருத்துக்கு தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியையடுத்து, தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் இல்லாததால் அதில் முதலீடு செய்து பணத்தை வீணடிக்கவேண்டாம் என்று Timing Comedy பண்ணியிருக்கிறார். அதனால் அவர் இந்தாண்டின் மிக உயரிய விருதான ”சிறந்த அரசியல் காமெடியன் விருதை” அவர் தட்டிச் சென்றுள்ளார்.

சிமெண்ட் துறையில் உற்பத்திச் செலவு ரூ. 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் நிலையில், குறைந்தபட்ச விற்பனை விலை ரூ. 220 அதிகமாக உள்ளது. அதனால் எல்லோரும் சிமெண்ட் தொழிலில் முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

கட்டுமானத் தொழில் நமது நாட்டில் அதிக வளர்ச்சி பெருவதற்க்கு தகவல் தொழில் நுட்பத்துறை தான் முக்கியகாரணம் என்பது கூட தெறியாமல் நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலீடு செய்யாதீர்கள், சிமெண்ட் தொழிலில் முதலீடு செய்ய வாருங்கள் என்று கூவுகிறார். சிமெண்ட் தொழிலில் போட்டி ஏற்பட்டு அதிக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு மக்களுக்கு தரலாம் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவ்வாரு சொல்கிறார்.

தமிழ் நாட்டில் மட்டும் 230 லிருந்து 250 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சராசரியாக 40 லிருந்து 50 ஆயிரம் பேர் வெளிவருகிறார்கள். இதனால் அந்த மாணவர்களுக்கெல்லாம் அவர் சொல்ல வரும் செய்தி என்னவென்றால் நீங்கள் எல்லாரும் கலவை கலக்க கற்றுக்கொள்ளுங்கள். கொத்தனார் வேலையை கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு அதில் தான் மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்கிறார் போலும்.

நாட்டில் தகவல் தொழில் நுட்பத்தை நிறுத்தி விட்டால் படித்த தொழில் நுட்ப மாணவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்?

எல்லோரும் சராசரியாக தொழில் நுட்ப பட்டப் படிப்பு வயது 23-லிருந்து 24-ல் முடிக்கிறார்கள் அதுவும் பணத்தை கொட்டி. அவர்கள் மேலும் ஒரு தொழிலை படிக்கவா முடியும் அதுவும் எல்லோராலும்?

அவர்களின் கதி என்ன?

அவர்களுக்கு எந்த வேலை தெறியும்?

அவர்கள் படித்த தொழில் நுட்ப படிப்பு என்னா ஆவது?

அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்?

குடும்பத்தை நடத்த முடியும்?

எப்படி வீடு கட்ட முடியும்? அப்பொழுத்தானே அவர்கள் சிமெண்ட் வாங்க முடியும். கட்டடப் பணிகள் எதுவும் நடக்காத போது உற்பத்தி செய்த சிமெண்டை என்ன செய்வது?

அவர் நினைத்துக் கொண்டார். அந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் படிக்காத வெட்டியா வேலை எதுவும் கிடைக்காம ஏதோ கழக மாநாட்டிற்கு வந்த மடையர்கள் மாதிரி.

அங்கு வந்தவர்கள் எல்லோரும் பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் பிரதிநிதிகள். அந்த தொழில் அதிபர்கள் எல்லோரும் பல நாடுகளில் தொழில் தொடங்கி மிகச் சிறப்பாக தொழில் செய்து வருபவர்கள்.

மேலும் அவர்களிடம் பழைய பேப்பர் கடையும் பழைய இரும்புக் கடையையும் தொடங்கச் சொல்கிறார். ஏனென்றால் பழைய இரும்பின் விலை 18 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 8 MM, 10MM இரும்பாக உருவாக்கப்பட்டு அவை 32 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது என்று தொழில் அதிபர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கிறார் அதாவது மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுக் கொடுக்கிறார்.

ஆதலால் இந்தாண்டின் மிக உயரிய விருதான ”சிறந்த அரசியல் காமெடியன் விருதை” நம்முடைய மின் வேட்டு வீராசாமி பெற இருக்கிறார்.

இதே போல் மிகச் சிறந்த அமைச்சர்கள் நம் நாட்டில் உருவாக வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டில் தற்போது சீர் கெட்டிருக்கும் மின் துறையைப் போன்று எல்லாத் துறையையும் சீரழிக்கமுடியும்.

இவரை முன் உதாரணாமாக வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் இருக்க கூடாதோ ஒரு அமைச்சர் என்பதை கற்றுக்கொண்டு, படித்த நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்பொழுது தான் இந்த மாதிரி தறுதலை அமைச்சர்கள் வரமாட்டார்கள்.

4 comments:

We The People said...

அட நீங்க வேற செங்கல் சூளை வைத்து செங்கல் தொழில் செய்ய சொன்னததை விட்டுப்புட்டீங்களே பிரதிபலிப்பான்.

ராஜீவ் காந்தி சாலையில்(ஐ.டி ஹைவே) உள்ள 50% ஐ.டி கம்பெனிகள் மூடிவிட்டதாக செய்த காமெடியை விட்டுவிட்டீர்களே!

அநேகமா இவனுக எல்லாம் இங்க வந்து கம்பெனி துடங்கினா யாரு மின்சாரம் தருவது! ஏற்கனவே மின்சார பற்றா குறையால் ரெம்ப பிரச்சனையில் இருக்காரு அதனால் உஷாரா இப்படி ஒரு மேட்டரை போட்டாரோ என்னவோ!!!

பிரதிபலிப்பான் said...

ஆமா நான் அதை மறந்துட்டேன்.இவனுங்க மாதிரி ஆளுங்களை நினைச்சி எழுதினதால கோபத்தோட இருந்தேன் அதனால மறந்துட்டேன் நன்றி உங்கள் பின்னூட்டத்திற்கு...

Anonymous said...

அட கடவுளே...!! இந்த மாதிரி தற்குறிய பக்கத்துல வச்சு இருக்கிற தருதலைய சொல்லுங்க...!!! ஒருவேள அப்பதான் தனக்கும் தனது குடும்பத்து அரசியலுக்கும் பிரச்சினை வரமுடியாது என்கிற தைரியமோ....?? என்னமோ போங்க...!! ஒரு நாட்டையே, இனத்தையே அழிரான்கள் பாவிகள்....!! அவன் தலைமுறையே நாசமா போக...!!!

Elayaraja Sambasivam said...

அவர் நினைத்துக் கொண்டார். அந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் படிக்காத வெட்டியா வேலை எதுவும் கிடைக்காம ஏதோ கழக மாநாட்டிற்கு வந்த மடையர்கள் மாதிரி.

ithu than supper..