எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, November 4, 2012

மத்திய அரசின் பொருளாதார சீர்திருத்தங்களால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்: மன்மோகன்சிங்


அன்னிய நேரடி முதலீட்டுக்கு அனுமதி உள்ளிட்ட மத்திய அரசின் அனைத்து பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளும் மக்களுக்கானது... ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கக் கூடியது என்று பிரதமர் மன்மோகன்சிங் கூறியுள்ளார்.
டெல்லியில் இன்று நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் பிரம்மாண்ட பேரணியின் முடிவில் ராம்லீலா மைதானத்தில் அவர் பேசுகையில், காங்கிரஸ் கட்சியும் மத்திய அரசும் ஒளிமயமான இந்தியாவை உருவாக்க வேண்டும் என்பதில் அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இலட்சியத்தை நாம் அடைய நீண்டதூரம் பயணித்தாக வேண்டும்.
சில மாற்றங்களை செய்தால் நாட்டுக்கு நன்மை கிடைக்குமெனில் அவற்றை நிச்சயமாக நாங்கள் செய்வோம். அன்னிய நேரடி முதலீட்டுக்கான அனுமதியில் விவசாயிகள் பாதிக்கப்படுவர் என்று சொல்லப்படுவது உண்மை அல்ல.
100 நாள் வேலை திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது எதிர்த்தார்கள். ஆனால் 8 கோடிப் பேர் பயனடைந்திருக்கின்றனர். மதிய உணவுத் திட்டத்தின் மூலம் 12 கோடி குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.
புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க பொருளாதார சீர்திருத்தங்கள் அவசியமானவை. அண்மையில் அரசாங்கம் மேற்கொண்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் பற்றி மக்களுக்கு தவறான தகவல்களை சொல்லி வருகின்றன எதிர்க்கட்சிகள். கடந்த 8 ஆண்டுகளில் மக்களுக்காக ஏராளமான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோம் என்றார்

No comments: