எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, January 7, 2010

தி.மு.க அரசின் சாதனைப் பட்டியலில் மேலும் ஒரு மைல்கல்


ஒரு குடும்பத்தில் ஏற்கனவே பட்டதாரிகள் யாரும் இல்லாத நிலையில், அக்குடும்பத்தில் இருந்து முதல் முறையாக மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் சேர மாணவர்களுக்கு இடம் கிடைத்தால், அவர்களின் கல்விச்செலவு முழுவதையும் அரசே ஏற்கும்' என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இந்த புதிய திட்டம், வரும் கல்வியாண்டு முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப் பட்டுள்ளது.மக்களிடம் மகத்தான வரவேற்பைப் பெற்றுள்ள மருத்துவ காப்பீட்டுத் திட்டத்தின் கீழ், இதுவரை ஒரு கோடியே 40 லட்சத்து 70 ஆயிரத்து 367 குடும்பங்கள் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளன. 24 ஆயிரத்து 495 பயனாளிகளுக்கு 83 கோடி ரூபாய் செலவில், மாநிலம் முழுவதும் உள்ள 539 மருத்துவமனைகளில், இலவச உயர் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது.
தேசிய இடைநிலைக் கல்வி மேம்பாட்டு திட்டத்தின் கீழ், உயர்நிலைப் பள்ளி களை மேம்படுத்தி, அனைவருக்கும் இடைநிலைக் கல்வி கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்கும்.

இது கலைஞரின் தொலை நோக்குச் சிந்தனையின் இளமை தெரிகிறது.

இது போன்ற அரிய திட்டங்களை இந்தியா முழுவதிலும் அமுல்படுத்த வேண்டும்.

1. ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி
2. கலைஞர் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்
3. குடும்பத்தில் முதல் பட்டதாரிகளின் கல்வி செலவை ஏற்கும் திட்டம்

இந்த மூன்று திட்டங்களும் கலைஞரின் பெயரைச் சொல்லும் திட்டங்கள்.

காமரஜருக்கு எப்படி மதிய உணவுத்திட்டமோ அது போல கலைஞருக்கு கலைஞரின் மருத்துவ காப்பீட்டுத் திட்டம்.

கலைஞர் என்றும் நீ ஒரு இளைஞர்.

4 comments:

Anonymous said...

கலைஞரை திட்டிய அந்த வாய் எங்கே-
அன்பரசு

Anonymous said...

காமராஜருக்கு மதிய உணவுத் திட்டம், கலைஞருக்கு காப்பீட்டுத் திட்டம் சொன்னது அருமை. சிந்தனை சூப்பர்.

உதயசூரியன்

Anonymous said...

அறிவாளிகளே ...
படிப்பே இலவசமா கிடைக்கணும் நு காமராசர் நினைத்தார். லூசுத்தனமான திட்டம் எல்லாம் வேணாம், கொள்ள அடிக்கிற கல்லூரிகளை திருத்தினாலே போதும்.

Vijay said...

எந்த பொறியியல் கல்லூரியில் இடம் கிடைத்தாலும் அதற்கான செலவை ஏற்றுக் கொள்வார்களா?

தனியார் கல்லூரி்யில் இடம் கிடைத்தால் காபிடேஷன் ஃபீயும் உங்க இளைஞர் சாரி கலைஞர் கொடுப்பாரா? இல்லை இம்மாதிரி மக்களுக்காக சேவை (!!!) செய்வதற்காக தன் பேரப்பிள்ளைகள் மூலம் கல்லூரிகள் நடத்தச் சொல்லி அந்தக் கல்லூரியில் படித்தால் தான் உதவின்னு சொல்வாங்களா?