எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, January 24, 2010

உன்னைப் போல் ஒருவன்



நான் முன்பே எழுதியிருந்தேன் தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் என்பதைப் பற்றி.

நான் ஏற்கனவே சொன்னேன் சிங்கள அரசு சொல்வதெல்லாம் பொய் கட்டுக் கதை தலைவர் உயிருடன் தான் இருக்கிறார் என்றும் யாரும் கவலைப் படவேண்டாம் என்றும் அது இப்பொழுது நிருபணம் ஆகியுள்ளது.

அவரென்ன கிள்ளுக் கீரையா கிள்ளி எறிவதற்கு.

சிங்கள அரசு நினைத்து கொண்டது விடுதலைப் புலிகளை கொன்று அவர்களை வீழ்த்திவிட்டதாக. அதுதான் அவர்களின் அறியாமை. என்ன செய்வது விடுதலைபுலிகள் தங்களது போராட்ட முறையை இரண்டு வருடங்களுக்கு முன்பே மாற்றிக் கொண்டார்கள் என்பது அவர்களுக்கு தெரியாது.


விடுதலைப் புலிகள் தோற்கவில்லை, போராட்ட முறையை மாற்றியுள்ளார்கள் அவ்வளவே. அவர்கள் புதிய விடுதலை போரை இன்னும் சில நாட்களில் அறிவிப்பார்கள்.

விஷயத்திற்கு வருவோம். பிரபாகரன் இறந்ததாக காட்டப்பட்ட உடல் சிங்கள ராணுவ வீரரின் உடல்.

சிங்கள குடியரசு தலைவர் ராஜபக்‌ஷே அவர்கள் வெளிநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் போது சிங்கள ராணுவத்திடம் இருந்து அவருக்கு அவசர அழைப்பு எதிர் முனையில் கோத்பையா ராஜபக்‌ஷே அண்ணே நம்முடைய வீரர்கள் அனைவரும் விடுதலை புலிகளை கொன்று விட்டார்கள். நாம் அறிவித்துவிடலாம் போரில் வெற்றி பெற்றதாக.

ராஜபக்‌ஷே : இல்லை தம்பி பிரபாகரனின் உடலை காட்டி அறிவித்தால் சர்வதேச நாடுகளிடையே கவுரவமாக இருக்கும்.

தம்பி : அப்படியா அண்ணே

ராஜபக்‌ஷே : ஆமா தாம்பி

தம்பி : அவன் தான் தப்பிச்சி போயிட்டானே.

ராஜபக்‌ஷே : அவன் கிடைச்சிருந்தா தான் ஆச்சரியமே அவன பிடிக்கமுடியாது நாம தான் அவன் கிட்ட இருந்து தப்பிக்கனும்.யாராவது அவன மாதிரியே இருக்காங்களா நம்மாளுங்க.

தம்பி : ஆமா அண்ணே நம்மாளுங்கள்ள ஒருத்தன் அவன மாதிரியே இருக்கான்.

ராஜபக்‌ஷே : அப்படியா !

தம்பி : ஆமா அண்ணே

ராஜப்க்‌ஷே : சரி நீ அவனை முடிச்சிடு. காரியத்தை முடிச்சிட்டு எனக்கு கூப்பிடு நான் உடனே திரும்பி வந்துடுறேன். நான் திரும்பி வரும்போது என்னை வரவேற்க தடபுடலா ஏற்பாடு செய்யனும் என்ன.

தம்பி : அப்படியே ஆகட்டும் அண்ணே !

தம்பி : ( மறுபடியும் போன் செய்யறாரு ) அண்ணே !

ராஜபக்‌ஷே : வெற்றியா !

தம்பி : வெற்றி அவனை போல இருக்கிற ஒருத்தனை போட்டுட்டு தயாரா இருக்கோம் நீங்க வந்தா அறிவிச்சிடலாம்.

ராஜபக்‌ஷே : ஓ இப்பொழுதே எல்லா நிகழ்ச்சிகளையும் நிறுத்திட்டு வந்துடுறேன்.

அதன் பிறகுதான் உங்களுக்கு எல்லாம் தெரியுமே அவரு ஏர்போர்ட் வந்திறங்கி மண்டிட்டு வணங்கி பேட்டிக் கொடுக்கிறாரு.

பாவம் இதில பலியானது அவருடைய சிங்கள சிப்பாய். அவனுடைய உயிருக்கு பரிசாக அவனுடைய குடும்பத்துக்கு பல லடசங்கள் பரிசு அவ்வளவே.

வளர்த்த ஆட்டை நாமெல்லாம் கோவிலுக்கு பலி கொடுப்பதை போல சிங்கள் ராணுவ வீரரை உயிரோடு இருப்பவரை நிற்கவைத்து எப்படி சுட்டால் முகம் சேதமடையாதோ அப்படி நிற்கவைத்து சுட்டு கொன்று அவடைய சீருடையை கழற்றி ஒரு புகைப்படம். விடுதலை புலிகளின் சீருடையை அணிவித்து ஒரு புகைப்படம் எடுத்துவிட்டு. இதோ நாங்கள் பிரபாகரனை கொன்றுவிட்டோம் என்று கொக்ககரித்தார்கள்.

அவர்களுடைய அகோர முகத்திரையை அவர்களே கிழித்துக் கொண்டார்கள். அந்த சிங்கள் ராணுவ வீரர் உயிருடன் இருக்கும் பொழுது எடுத்த வீடியோ பதிவு.

தலைவனைப் போல் ஒருவன் ஆனால் அவன் தலைவன் இல்லை.

No comments: