எண்ணங்களின் பிரதிபலிப்பு

Saturday, January 24, 2009

இரட்டை வேடம் போடும் தமிழக அரசியல் தலைவர்கள்

மத்திய அரசாங்கம் என்பது வெறும் ஒருக்கட்சி மட்டும் ஆளும் அரசாங்கம் இல்லை. பல கட்சிகள் இணைந்து நடத்தும் அரசு.

தேசிய அளவில் காங்கிரஸுக்கும், ப.ஜ.க விற்கும் போன நடந்து முடிந்த நாடளுமன்றத்தேர்தலில் அரிதி பெரும்பான்மை கிடைக்க வில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இப்பொழுது நாம் விஷயத்திறகு வருவோம்.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால். யாரும் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டே நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள் அது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் கலைஞர் அக்டோபர் மாதத்தில். அப்பொழுது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். அந்த கூட்டத்தில் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கலைஞர் அவர்கள் தன்னிச்சையாக கூட்டம் முடிந்தவுடன் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்ளாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அறிவிப்பு செய்தார்.

ஏன் அந்த முடிவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் எடுக்கவில்லை?

அவர் எங்களுடைய கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் என்று சொன்னதுமே மற்றக்கட்சி காரர்களும் அவ்வாறே அறிவித்தார்கள்.

இந்த நிலைப்பாட்டை ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் எடுக்கவில்லை?

தன்னுடைய கட்சியை மட்டும் தியாக கட்சியாக மக்கள் நினைக்க வேண்டும் என்று சுயநலத்தோடு அவ்வாறு செய்தார்.

அதேபோல் மற்ற காங்கிரஸ் மற்றும் ப.ம.க போன்ற கட்சி காரர்களும் மக்களிடையே தங்களுடைய செல்வாக்கு குறையுமே என்று கருதி கலைஞர் சொல்லிவிட்டார் நாமும் சொல்லவேண்டுமே என்று சொன்னார்களே தவிர எதையும் செய்யவில்லை.

இவர்கள் சுய நலத்தோடு மட்டுமே இந்த ஈழக்கருத்தை கையாண்டார்கள் என்றுச் சொன்னால் மிகையாகாது.

கலைஞர் ஒரு மூத்த அரசியல்வாதி இந்த ஈழ விவகாரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று பார்த்தால். அவர் சுய நல நோக்கோடுதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கிறார்.

எனக்கு தெறிந்தவரை முதலில் இருந்தே நடுநிலையாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே ஒற்றுமையுடன் எல்லாரும் சேர்ந்து ஈழ விவகாரத்தை கையாள நினைக்கிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை சொல்வதற்க்காக என்னை ஒரு சார்பாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்கள் (தமிழ்நாட்டு காங்கிரஸார்) அதற்க்கு மாறாக,

தொல்.திருமாவளவன் அவர்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாக காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். தமிழ்நாட்டு காங்கிரஸார் அதையும் விமர்ச்சித்தார்கள். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தாரே என்று நாமும் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே என்று கடனுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் உண்ணாவிரதம் இருந்தார்கள் அதுவும் பூரண மதுவிலக்கு கோரி.இது போட்டிக்காக தங்களுடைய பதிவையும் செய்தார்களே தவிர உண்மையாக மக்களுக்காக அல்ல ஏன் என்றால் அவருடை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட யாரும் கலந்துகொள்ள வில்லை. சட்டமன்றம் மதியத்தோடு முடிந்தும் அவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதனால் பெயரளவில் மற்றும் திருமாவளவனுக்கு எதிராக தங்களுடைய பதிவை செய்தார்களே தவிர மக்களுக்காக இல்லை.

காங்கிரஸார், தொல்.திருமாவளவனையும் அவரின் கட்சிக்காரர்களையும் விமர்ச்சித்து, வன்முறையைத் தூண்டியும் அரசியலில் லாபம் அடைய நினைக்கிறார்கள். இது வெட்கக் கேடானது, கேவலமானது மற்றும் சோம்பேரிகள் என்றுதான் இது காட்டுகிறது.

காங்கிரஸார் தங்களுக்கென்று எந்தக் கொள்கையும், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் செயல்படுகிறார்கள்.

அதனால் காங்கிரஸ்காரர்கள் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையிலும் எடுக்கவில்லை.

எந்த ஒரு கண்டன அறிக்கையும் சிங்கள அரசுக்கு எதிராகவும், இனபடுகொலையை கண்டித்தும் விடவில்லை.

இவர்கள் நினைத்தால் காங்கிரஸ் மேலிடத்தில் உண்மை நிலையை எடுத்துக் கூறி சரியான நடவடிக்கையை எடுக்கலாம்.

நீங்கள் கேட்கலாம் தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸார் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் என்று. இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பிரதிநிதிகளே தவிர காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதிகள் அல்ல.

இவர்கள் உண்மை நிலையை எடுத்துக் கூறினால் என்ன கட்சித் தலைமை இவர்களின் தலைகளையா துண்டித்து விடும் !

டாக்டர் ராமதாஸும், தொல்.திருமாவளன் மட்டுமே திரும்பத் திரும்ப நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வைகோ-வைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் எப்பொழுதும் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவாக இருக்கிறார் அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இப்பொழுது அவர், எல்லாரும் சேர்ந்து, எல்லோரும் ஒருகிணைந்து என்கிற நிலைப்பாட்டில் தான் வேறுபட்டு அரசியல் செய்கிறார்.

தி.மு.க-வும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.

அ.தி.மு.க எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்று அவர்களுக்கே தெரியவில்லை. இப்பொழுது இடதுசாரிகளும் கூட.

ஆனால் கலைஞர் அவர்கள் எங்கே தன்னுடைய ஆட்சி போய்விடுமோ என்கிற பயத்தில் எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தில கூட காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது, ஏமாற்றம் அளிக்கிறது.

நாகரிகமான அரசியலை எப்பொழுதுதான் நம்மளுடைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

தயவு செய்து எல்லாக் கட்சிக்காரர்களும் கட்சிக்கு அப்பாற்பட்டு இணைந்து நம்மளுடைய ஈழ சகோதரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுன் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மளுடைய அரசியல்வாதிகள் நினைத்தால் மற்றத்தலைவர்களிடையே பேசி தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கி சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கையை நிறுத்தலாம்.

அரசியல் ரீதியான நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.

எல்லாம் நடக்க வேண்டும் கட்டாயாமாக.

எல்லாம் நடக்கும் கண்டிப்பாக.

அந்நாள் வெகுதொலைவில் இல்லை.

5 comments:

Anonymous said...

ராமதாஸ், தொல் இவர்கள் இருவரும் சென்ற ஆட்சியில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசாதது ஏன்? ‘பொடா’. வைகோவை விடுங்கள். 1983ல் ஈழப் போராட்டத்திற்காக எம்.ஜி.ஆரால் கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்றவர் கலைஞர், ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்திற்கு ஓர் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இன்றளவும் இருக்கிறார். ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வர் எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பது என் கருத்து.

பிரதிபலிப்பான் said...

//ராமதாஸ், தொல் இவர்கள் இருவரும் சென்ற ஆட்சியில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசாதது ஏன்? ‘பொடா’. வைகோவை விடுங்கள். 1983ல் ஈழப் போராட்டத்திற்காக எம்.ஜி.ஆரால் கைது செய்யப்பட்டு, சிறைக்குச் சென்றவர் கலைஞர், ஆரம்பத்திலிருந்தே இந்தப் போராட்டத்திற்கு ஓர் தீர்வு காண வேண்டும் என்பதில் உறுதியாக இன்றளவும் இருக்கிறார். ஆட்சியில் இருக்கும் ஒரு முதல்வர் எவ்வாறு பேச வேண்டுமோ அவ்வாறு செயல்பட்டிருக்கிறார் என்பது என் கருத்து.//

நண்பரே கலைஞர் அவர்கள் மூத்த அரசியல்வாதி கிட்டத் திட்ட 70 ஆண்டுகாலமாக அரசியல் தொண்டு செய்து கொண்டிருக்கிறார். ஆதலால் அவர் குரல் கொடுக்காமல் இருக்க முடியாது.

ஆனால் ஈழத்தில் இப்பொழுது இருக்கும் நிலைமை அளவுக்கு எப்பொழுதும் இருந்தது இல்லை.

இவ்வளவு கொடூரம், இழப்புகள் ஏற்பட்டதில்லை.

அதனால் தான் இப்பொழுது உறுதியான நடவடிக்கைத் தேவை என்று குரல் கொடுக்கிறோம்.

ஏன் சென்ற ஆட்சியில் விடுதலை புலிகளை பற்றி பேசவில்லை ராமதாஸும், தொல்.திருமா என்று கேட்கிறீர்கள்.

சென்ற ஆட்சியில் இலங்கையில் இவ்வளவு கொடூரம் நடக்கவில்லை.
அதுவுமில்லாமல் இருவருக்குமே அவ்வளவாக விடுதலை புலிகளைப் பற்றியோ, ஈழத்தமிழர்களைப் பற்றியோ சரியான புரிதல் இல்லை என்று சொல்லலாம்.

அதுவும் இல்லாமல் ஈழத்தமிழர் படுகொலை நம் தமிழ் நாட்டில் நடைபெறவில்லை நீங்கள் கேட்பது போல் ஏன் அவர்கள் சென்ற ஆட்சியில் குரல் கொடுக்கவில்லை என்று கேட்பதற்கு.

எல்லோரும் சேர்ந்து குரல் கொடுக்க வேண்டிய நேரம் இது..

நமக்குள் இருக்கும் சண்டையை நிறுத்திவிட்டு ஈழ சண்டையை நிறுத்த ஒன்றாக போராடுவோம்.

நன்றி வருகைக்கு....

Anonymous said...

மத்தியிலும் மாநிலத்திலும் எங்களையே ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழகத்தில் பாலும் தேனும் ஓட வைக்கிறோம் அது இது என்று பசப்பி ஒட்டு வாங்கி ஆட்சி சுகத்தை தனது குடும்பத்தினருக்கு பங்கிட்டுக்கொண்ட கருணாநிதி போன்றவர்களை இன்னும் உங்களைப்போன்றவர்கள் எப்படித்தான் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களோ.

இதற்க்கு ஜெயலலிதா எவ்வளவோ தேவலை.

பிரதிபலிப்பான் said...

//மத்தியிலும் மாநிலத்திலும் எங்களையே ஆட்சியில் அமர்த்துங்கள். தமிழகத்தில் பாலும் தேனும் ஓட வைக்கிறோம் அது இது என்று பசப்பி ஒட்டு வாங்கி ஆட்சி சுகத்தை தனது குடும்பத்தினருக்கு பங்கிட்டுக்கொண்ட கருணாநிதி போன்றவர்களை இன்னும் உங்களைப்போன்றவர்கள் எப்படித்தான் இன்னும் நம்பிக்கொண்டு இருக்கிறீர்களோ.

இதற்க்கு ஜெயலலிதா எவ்வளவோ தேவலை.//

இதனால் தான் நேர்மையான படித்த இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும்.

நாம் ஏன் மற்றவர்களுக்காக காத்துகொண்டிருக்க வேண்டும்.

தி.மு.க இல்லை என்றால் அ.தி.மு.க என்றே எவ்வளவு நாளைக்கு நாம் இருக்க முடியும்.

நல்ல அரசியல் தலைவர்கள் வரவேண்டும் மற்றவர்களை வழிநடத்த.படித்த இளைஞர்கள் நேர்மையானவர்கள் வரவேண்டும்.

Unknown said...

அய்யா ! உங்கள் வீட்டில் குழந்தைகள் உள்ளதா ?

அது கீழே உள்ள குழ்ந்தையை போல
அழும் நிலையை கண்டால் என்ன செய்வீர்கள் ?

அதுவும் உங்களை வீட்டுக்கு வெளியே விடாமல் சுற்றிலும்
குண்டுகளும் , ஷெல்களும் விழும் நிலையில் ?





கடவுளே நீ உள்ளயா ? அப்படியானால் ஏன் என் மக்களும்
குழந்தைகளும் இப்படி அவதிப்படுகிறார்கள் .