அமெரிக்காவுட னான அணுசக்தி ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து இடது சாரிகள் ஆத ரவை வாபஸ் பெற்றதால் மத்திய அரசு மெஜாரிட்டியை இழந்தது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலத்தை காங்கிரஸ் கூட்டணி அரசு நிரூ பிக்க வேண்டும் என்று பா.ஜ.க., இடது சாரி கள் வலியுறுத்தின. இதை ஏற்று நாளை (செவ்வாய்க்கிழமை) நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்த மத்திய அரசு முன் வந்துள்ளது.
காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவை திரட்ட மேற்கொள்ளப்பட்ட முயற்சி கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. ஆதரவாக வாக் களிக்க ரூ.25 கோடி வரை "குதிரை பேரம்'' நடந்ததாக தகவல்கள் வெளியானது. இது தவிர தேசிய அரசியலில் கட்சிகளின் நிலைப்பாட் டிலும் மாறுதல்கள் ஏற்பட்டது.
3-வது அணியில் இருந்து விலகிய முலாயம்சிங் யாத வின் சமாஜ்வாடி கட்சி, காங்கிரசுடன் "கை'' கோர்த் தது. இதையடுத்து 3-வது அணியில் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சி, சந்திர சேகர்ராவின் தெலுங்கானா ராஷ்டீரிய சமிதி, தேவேகவு டாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் ஆகிய கட்சிகள் சேர்ந்தன.
இடது சாரிகளும் ஆதரவு கரம் நீட்டி இருப்பதால் 3-வது அணி தேசிய அள வில் வலுவானதாக மாறி உள்ளது. இந்த மாற்றம் காரணமாக ஆளும் கூட்ட ணிக்கு ஆதரவாக 260 எம்.பி.க்களும், எதிராக 268 எம்.பி.க்களும் இருப்பது உறுதியாகி உள்ளது.
சிறிய கட்சிகள், சுயேட் சைகள் தெரிவித்து வரும் கருத்துக்களின் அடிப்படை யில் கணக்கிட்டால் மத்திய அரசுக்கு 268 எம்.பி.க்கள் ஆதரவு இருப்பது தெரிய வந்துள்ளது. ஆனால் அரசுக்கு எதிராக 270 எம்.பி.க்கள் உள்ளனர். எனவே மத்திய அரசு வெற்றி பெறுமா, தோல்வி அடையுமா என்பது கணிக்க முடியாத படி உள்ளது.
தொடர்ந்து சிக்கல் நீடிப் பதால் சில எம்.பி.க்களை ஓட்டெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கச் செய்யும் கடைசி ஆயுதத்தை காங்கிரஸ் தலைவர்கள் கையில் எடுத்துள்ளனர். 10 முதல் 15 எம்.பி.க்களை வரவிடாமல் செய்ய முயற்சி கள் நடக்கிறது. பா.ஜ.க., சிவசேனாவில் உள்ள எம்.பி.க்கள் பணத்துக்காக கடைசி நிமிடத்தில் விலை போய் விடுவார்கள் என்று கூறப்படுகிறது.
பரபரப்பான இத்தகைய சூழ்நிலையில் பாராளு மன்றத்தின் 2 நாள்சிறப் புக் கூட்டம் இன்று பகல் 11 மணிக்கு தொடங்கியது. எம்.பி.க்கள் அனைவரும் கூட்டத்தில் பங்கேற்றனர்.
இது முக்கியமான கூட்டம். இதில் எல்லா எம்.பி.க்களும் பங்கேற்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்று சபா நாயகர் சோம்நாத் சட்டர்ஜி கூறினார்.
கூட்டம் தொடங்கியதும் 7 புதிய எம்.பி.க்கள் பதவி ஏற்றனர்.
அதன் பிறகு கடந்த கூட்டத் தொடருக்கு பின்னர் மறைந்த 5 முன்னாள் எம்.பி.க்களுக்கு பாராளுமன்றத்தில் இரங்கல் தெரிவிக்கப்பட்டது. வழக்க மாக இத்தகைய தீர்மானத் துக்கு பிறகு கேள்வி நேரம் நடைபெறும். ஆனால் இன்று கேள்வி நேரம் எதுவும் இல்லை.
சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி கேட்டுக் கொண்ட படி நேரடியாக நம்பிக்கைத் தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. "அமைச்சரவையின் மீது இந்த சபை நம்பிக்கை வைத் துள்ளது'' என்ற ஒற்றை வரி நம்பிக்கைத்தீர்மானத்தை சரியாக 11.22 மணிக்கு பிரதமர் மன்மோகன்சிங் தாக் கல் செய்தார்.
இந்த தீர்மானத்தின் மீது மொத்தம் 16 மணி நேரம் விவாதம் நடத்தப்படும் என்று கூறிய சபாநாயகர் சோம்நாத்சட்டர்ஜி ஒவ் வொரு கட்சிக்கும் பேச அளிக்கப்படும் வாய்ப்புகள் குறித்து கூறினார்.
விவாதத்தை பிரதமர் மன்மோகன்சிங் தொடங்கி வைத்து முதலில் பேசினார். ஐக்கிய முற்போக்குக் கூட் டணி அரசு கடந்த 4 ஆண்டு களில் செய்துள்ள சாத னைகளை அவர்பட்டியலிட் டார். அமெரிக்காவுடனான அணுசக்தி ஒப்பந்தம் இந்தியா வுக்கு ஏன் தேவை என்பதை பற்றியும், அவர் விளக்கம் அளித்தார்.
மன்மோகன்சிங் பேச்சு விவரம் வருமாறு:-
நான் பதவி ஏற்ற நாளில் இருந்து நாட்டு நலன் கருதியே எல்லா பணிகளையும் செய்து வருகிறேன். எனது அரசு எடுத்த ஒவ்வொரு முடிவும் நாட்டு மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே எடுக்கப் பட்டது.
4 ஆண்டு கால ஆட்சிக்குப் பிறகு, பண வீக்கம், விலை வாசி உயர்வு போன்ற பிரச்சினைகளை சமா ளிக்க அரசு போராடிக் கொண்டிருக்கும் நிலையில் நம்பிக்கை ஓட்டெடுப்புக்காக இந்த சபை கூடி உள்ளது. கம்ïனிஸ்டு தலைவர்கள் ஜோதிபாசு, ஹர்கிஷன்சிங் சுர்ஜித் ஆகியோரால் இந்த கூட்டணி அரசு செதுக்கப்பட்டது.
அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக சர்வதேச அணு சக்தி கழகத்திடம் ஒப்புதல் பெற்றாலும், அமெரிக் காவை அணுகும் முன்பு பாராளுமன்றத்தில் உரிய விளக்கம் அளிக்கப்படும் என்று இடது சாரிகள் உள்பட எல்லா கட்சிகளிடமும் உறுதி அளிக்கப்பட்டது.
எனது உறுதி மொழியை யாரும் ஏற்கவில்லை. நான் ஜப்பான் மாநாட்டுக்கு சென் றிருந்த போது இடது சாரி கட்சிகள் ஆதரவை வாபஸ் பெற்றது எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது.
ஜப்பானில் இருந்து திரும்பி வந்த உடனே நான் ஜனாதிபதியை சந்தித்துப் பேசினேன். பாராளு மன்றத் தில் விரைவில் மெஜாரிட்டியை நிரூபிப்பதாக உறுதி கூறினேன்.
மத்திய அரசு எடுத்துள்ள ஒவ்வொரு நடவடிக்கை மீதும் மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். எனவே எந்த இடைïறு பற்றியும் கவலைப்படாமல் உறுதியுடன் முன்னெடுத்து செல்வேன்.
இந்த அரசு எத்தகைய நடவடிக்கைககளில் ஈடு பட்டாலும் அது சுதந்திர போராட்டத்தை போற் றும் வகையிலும், 21-ம் நூற் றாண்டு சவால்களை சமா ளிக்க ராஜீவ் கண்ட கனவு களை நிறைவேற்றும் வகை யில் இருக்கும் என்பதை உறுதிபட தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு பிரதமர் மன் மோகன்சிங்பேசினார்.
இதையடுத்து முக்கிய எதிர்க்கட்சித் தலைவரான அத்வானியை பேசும்படி சபாநாயகர் சோம்நாத் சட்டர்ஜி அழைப்பு விடுத்தார். அத்வானி பேச்சில் அனல் பறந்தது. சுமார் 1 மணி நேரம் மேல் அவர் ஆவேச மாகப்பேசினார். அவர் கூறி யதாவது:-
அணுசக்தி ஒப்பந்தத்தை பா.ஜ.க. எதிர்க்கவில்லை. ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இந்தியா சமபங்குதாரராக இல்லை. இதைத் தான் நாங்கள் எதிர்க்கிறோம். இந்த ஒப்பந்தம் தனிப்பட்ட 2 நாடுகளுக்கு இடையில் உள்ளது போல இல்லை. தனிப்பட்ட 2 பேருக்கு இடை யில் உள்ளது போல இருக்கிறது.
கடந்த 4 ஆண்டுகளாக இந்தியாவில் பல இடங்களில் தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. இதில் ஒருவர் கூட தண்டிக்கப்படவில்லை. ஓட்டுக்காக உள்நாட்டு பாது காப்பு விஷயத்தில் அரசு அலட்சியமாகவே இருந்தது.
இந்தியாவில் நடத்தப்படும் தாக்குதல்களுக்கு ஐ.எஸ்.ஐ. பின்புலமாக இருப்பதை நாங்கள் பல தடவை சுட்டிக் காட்டினோம். ஆனால் அரசு கொஞ்சமும் செயல் படவில்லை. தற்போது இந்த அரசு தீவிர சிகிச்சைப் பிரி வில் கிடக்கும் நோயாளி போல கிடக்கிறது.
இந்த அரசு தப்பி பிழைக் குமா, பிழைக்காதா என்பதே பெரிய கேள்விக் குறியாக உள்ளது. இந்த அரசை நடத்தும் பிரதமருக்கு ஓட்டு உரிமை இல்லை. இந்திய வரலாற்றில் இத்தகைய நிலை ஏற்பட்டு இருப்பது இது தான் முதல் தடவை.
கூட்டணி தர்மத்தை பிரதமரும், சோனியாவும் கடைப்பிடிக்கவில்லை. ஜன நாயக அமைப்புகள் அனைத் தும் தவறாக பயன்படுத்தப்பட்டன.
தற்போது இந்த அரசு மெஜாரிட்யை இழந்து விட்டது. இந்த அரசை தோற்கடிக்க விரும்புகிறோம். ஆனால் இதன் மூலம் நிலையற்ற தன்மை ஏற்படுவதை நாங்கள் விரும்பவில்லை.
இவ்வாறு அத்வானி பேசினார்.
அத்வானி பேசிய போது பல தடவை காங்கிரஸ் எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரி வித்து கூச்சலிட்டனர். சபாநாயகர் கண்டிப்பான உத்தரவைப் பிறப்பித்து அவர்களை உட்கார வைத் தார்.
அத்வானி தன் பேச்சின் போது 1998-ம் ஆண்டு பொக்ரானில் நடத்தப்பட்ட அணுகுண்டு சோதனையை மன்மோகன்சிங் எதிர்த்ததாக குறிப்பிட்டார். அதற்கு பிதமர் மன்மோகன்சிங் எழுந்து மறுப்பு தெரிவித்தார்.
அத்வானி பேசி முடித்த தும் மார்க்சிஸ்ட் கம்ïனிஸ்டு உறுப்பினர் முகம்மது சலீம் எழுந்து பேசினார். இன்றைய முதல் நாள் விவாதம் இரவு 10 மணி வரை நடக்கும் என்று தெரிகிறது.
நாளை (செவ்வாய்க் கிழமை)யும் அரசியல் கட் சித் தலைவர்கள் விவா தத்தில் பங்கேற்று பேசு வார்கள். முடிவில் பிரதமர் மன்மோகன்சிங் பதில் அளித்து பேசுவார். நாளை பிற்பகல் நம்பிக்கைத் தீர் மானத்தின் மீது ஓட்டெடுப்பு நடைபெறும்.
எம்.பி.க்கள் தங்கள் இருக்கை முன் உள்ள பொத்தானை அழுத்தி வாக்கை பதிவு செய்வார்கள். அதில் பிரச்சினை ஏற்படும் பட்சத்தில் சீட்டு மூலம் வாக்கெடுப்பு தொடரும். சில மணி நேரங்களுக்குள் ஓட்டெடுப்பு முடிவு தெரிந்து விடும்.
மத்திய அரசு தலைவிதி நாளை மாலை தெரிந்து விடும்.
எண்ணங்களின் பிரதிபலிப்பு
Monday, July 21, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment