எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, July 21, 2008

பா.ஜ.க.-காங்கிரசை மிரட்டும் 3-வது அணி

மத்திய அரசை காப்பாற்றி எப்படியாவது ஆட்சியைத்தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று காங்கிரஸ் போரா டிக்கொண்டிருக்கிறது.

எப்படியாவது, ஏதாவது செய்து காங்கிரஸ் அரசை கவிழ்த்து விட வேண்டும் என்று பா.ஜ.க. கங்கணம் கட்டிக் கொண்டு காரியத்தில் குதித்துள்ளது.

காங்கிரஸ், பா.ஜ.க. இருகட்சித்தலைவர்களின் விïகத்திற்கிடையே தேசிய அரசியலில் திடீர் திருப்பமாக 3-வது அணி எனப்படும் மாற்று அணி புதிய சக்தியாக வலுப்பெற்றுள்ளது. இப்படி ஒரு அபார திடீர் வளர்ச்சியை 3-வது அணி பெறும் என்று அரசியல் நிபுணர்களே எதிர் பார்க்கவில்லை.

ஐக்கிய தேசிய முற் போக்கு கூட்டணி எனப் பெயரிடப்பட்ட 3-வது அணி யில் அ.தி.மு.க., சமாஜ் வாடி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத் உள்பட 8 கட்சிகள் இருந்தன. முதலில் இந்த அணியில் இருந்து அ.தி.மு.க. விலகியது. சமீபத்தில் சமாஜ்வாடி கட்சி `பல்டி' அடித்து காங்கிரஸ் பக்கம் போய் விட்டது.

இந்த நிலையில் அணுசக்தி ஒப்பந்தம் பிரச்சினையில் தங்களை காங்கிரசார் அவ மானப்படுத்தி விட்டதாக கருதிய கம்ïனிஸ்டு தலை வர்கள் மாற்று அணியை உருவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டனர். சிதறிக்கிடந்த மாநில கட்சிகளை ஒருங் கிணைத்தது அவர்கள்தான். `தலித்' இன மக்களின் தனித் தலைவராக உருவெடுத்து வரும் மாயாவதியை சந்தித்துப் பேசினார்கள்.

அதன் பேரில் 3-வது அணி தலைவர்கள் சந்திர பாபு நாயுடு, சவுதாலா ஆகியோருடன் மாயா வதி பேசினார். மெகா கூட்டணிக்கு திட்டமிடப் பட்டது. இதைத் தொடர்ந்து தேவேகவுடா, சந்திரசேகர் ராவ், அஜீத்சிங் உள்பட பல தலைவர்களுடன் இடது சாரி கட்சித் தலைவர்களும், மாயாவதியும் பேச்சு வார்த்தை நடத்தினார்கள். அதற்கு பலன் கிடைத்தது.

காங்கிரஸ், பா.ஜ.க. பக் கம் போகாமல் நாமே சொந்த காலில் நிற்க லாம் என்று மாநில கட்சி களிடம் நம்பிக்கை விதை தூவப்பட்டது. மாயாவதி யுடன் கூட்டணி வைத்துக் கொள்வதன் மூலம் `தலித்' ஓட்டுக்கள் தங்களுக்கு கிடைக்கும் என்ற எதிர் பார்ப்பில் பல கட்சிகள் மெகா கூட்டணிக்கு சம் மதித்தன. தற்போது 3-வது அணியில் பகுஜன் சமாஜ் கட்சி, தெலுங்கு தேசம், அசாம் கனபரிஷத், இந்திய தேசிய லோக் தளம், ஜார்க்கண்ட் விகாஸ் கட்சி, ராஷ்டீரிய லோக் தளம், மதச் சார்பற்ற ஜனதா தளம், தெலுங்கான, ராஷ் டீரிய சமிதி உள்பட 10க் கும் மேற்பட்ட கட்சிகள் உள்ளன.

இந்த மெகா கூட்டணிக்கு இடதுசாரிக் கட்சிகளின் ஆதரவு உள்ளது. இதன் மூலம் அடுத்தத் தேர்தலில் 3-து அணியை ஒரு மாபெ ரும் சக்தியாக மாற்ற முயற்சி கள் நடந்து வருகிறது. இது தொடர்பாக நேற்று டெல்லியில் 3-வது அணி தலைவர்கள்-இடது சாரி கட்சி தலைவர்கள் சந்தித்துப் பேசினார்கள்.

ஓட்டெடுப்பு நாளை நடந்து முடிந்ததும், நாளை மறுநாள் (புதன்கிழமை) 3-வது அணி தலைவர்கள் மீண்டும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர்.

3-வது அணியில் தற் போது அதிகாரப்பூர்வமாக தலைவர் என்று யாரும் இல்லை. உத்தரபிரதேச முதல்-மந்திரி மாயா வதியை தலைவராக்கும் முயற்சிகள் நடந்து வருகிறது. இதன் மூலம் மாயாவதி தேசிய அரசியலில் விசுவரூபம் எடுக்கத் தொடங்கி உள் ளார்.

மாயாவதியை அடுத்த பிரதமர் ஆக்குவோம் என்ற கோஷத்தை இடது சாரிகள் முதலில் எழுப்பினார்கள். இதை 3-வது அணியில் உள்ள மூத்த தலைவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். இது பா.ஜ.க.-காங்கிரசுக்கு ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

மாயாவதியுடன் கூட்டணி சேர்ந்தால், தங்கள் வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும் என்று தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகரராவ் ஆகியோர் நினைக்கிறார்கள். உத்தரபிரதேச அரசியலில் எதிரும்-புதிருமாக இருந்த மாயாவதி - அஜீத்சிங் இருவரும் 3-வது அணி மூலம் சேர்ந்து இருப்பதும் முக்கியமானதாக கருதப்படு கிறது.

இவர்கள் கை கோர்த்து இருப்பதால் உத்தரபிரதேச முஸ்லிம்-தலித்-உயர்சாதி ஓட்டுக்கள் பெருவாரியாக 3-வது அணிக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அஜீத்சிங்கின் ராஷ்டீரிய லோக் தளம் கட்சிக்கு வளர்ச்சி கிடைக்கும் என் கிறார்கள்.

3-வது அணி எனும் கயிற்றைப் பிடித்துக் கொண்டு நாடெங்கும் மாயா வதி கால் பதிக்கத் தொடங்கி இருப்பது காங்கிரசை விட பா.ஜ.க. தலைவர்களுக்கு தான் கலக்கத்தை கொடுத் துள்ளது. காங்கிரஸ் கூட்டணி அரசு கவிழும் பட்சத்தில் அத்வானிதான் அடுத்த பிரதமர் என்ற எண்ணம் நாடெங்கும் பரவி இருந்தது. அத்வானிக்கு போட்டியாக களத்தில் யாரும் இல்லை என்ற நிலை இருந்தது.

தற்போது 3-வது அணி வலுவாகி மாயாவதி முன் நிறுத்தப்பட்டுள்ளதால் தங்கள் வெற்றி பாதிக்கப்பட லாம் என்று பா.ஜ.க. பயப் படுகிறது. "உண்மையில் பிரதமர் வேட்பாளர் என்ற எங்கள் கோஷத்துக்கு பாதிப்பு வரலாம்'' என்று மூத்த பா.ஜ.க. தலைவர் ஒருவர் கூறினார்.

மாயாவதியை முன் நிறுத்தி சந்திரபாபு நாயுடு, தேவேகவுடா, அஜீத்சிங், சந்திரசேகரராவ், சவுதாலா, பிருந்தாவன் கோஸ்வாமி போன்றவர்களை துணைக்கு வைத்துக் கொண்டால் இந்தியாவில் புதிய புரட்சியை உண்டாக்கி விட முடியும் என்று கம்ïனிஸ்டு தலைவர்கள் பிரகாஷ் கரத்தும், ஏ.பி.பரதனும் உறுதி யாக நம்புகிறார்கள். மாநில கட்சிகள் ஒத்துழைப்புடன் மாயாவதி சூறாவளி சுற்றுப்பயணத்தில் சுமார் 12 சதவீத தலித் ஓட்டுக்களை 3-வது அணி பக்கம் திருப்பி விட முடியும் என்றும் அவர் கள் கருதுகிறார்கள்.

மாயாவதிக்கு உத்தரபிர தேசம் தவிர மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், பீகார் மாநில `தலித்'களிடம் ஓரளவு செல் வாக்கு இருக்கிறது. இந்த செல்வாக்கு மூலம் வட இந்தியாவில் கணிசமான தொகுதிகளில் அவர் காங்கிரசுக்கு பாதிப்பை ஏற்படுத்துவார். காங்கிரஸ் தலைவர்களும் இந்த பயத் தில் தான் உள்ளனர்.

தென் இந்தியாவில் தேவேகவுடா, சந்திரபாபு நாயுடு, சந்திரசேகர ராவ் ஆகியோருடன் சேருவதன் மூலம் மாயாவதி அலை தெற்கிலும் வீச வாய்ப்பு உள்ளது. கேரளாவில் இடது சாரிகள்-மாயாவதி அணி புதிய எழுச்சியை கொடுக்கும் என்று எதிர் பார்க்கிறார்கள்.

இடது சாரிகள் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்க்கு வைத்துள்ள அர சியல் குறி மாயாவதிக்கு தனிப்பட்ட வெற்றியை தேடி கொடுக்கும்.

No comments: