எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, July 3, 2008

பா.ம.க. நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க கூட்டணியில் உள்ளது


சென்னை: “பா.ம.க., நூற்றுக்கு 200 சதவீதம் தி.மு.க., கூட்டணியில் உள்ளது,” என்று பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் கூறினார்.

பா.ம.க., நிறுவனர் ராமதாஸ் நேற்று காலை கோபாலபுரம் இல்லத்தில் முதல்வர் கருணாநிதியை சந்தித்தார். பல்வேறு விஷயங்கள் குறித்து இருவரும் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தை முடிந்து, வெளியில் வந்த ராமதாஸ் நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் விளம்பர பேனர்கள், கட்-அவுட்கள் வைக்கப்பட்டுள்ளன. இது மக்களுக்கு அருவெறுப்பை ஏற்படுத்துகிறது. இதை தடுக்க வேண்டும் என்று கூறி வந்தேன். முதல்வர் கருணாநிதி விளம்பர பேனர்களை வைப்பதை எதிர்த்து ஒரு அறிக்கை வெளியிட்டார். அதற்காக, நேரில் வந்து பாராட்டி முதல்வருக்கு நன்றி தெரிவித்தேன்.

வரும் 26ம் தேதி முதல் மார்ச் 1ம் தேதி வரை மதுபான ஒழிப்பு பிரசார பயணத்தை மேற்கொள்ள உள்ளேன். துõத்துக்குடியில் இருந்து சென்னை வரை இந்த பயணம் மேற்கொள்வேன். இந்த விவரத்தை முதல்வரிடம் தெரிவித்தேன். மதுக்கடைகளின் எண்ணிக்கையை படிப்படியாக குறைக்க வேண்டும் என்று ஆலோசனை கூறினேன். மது ஒழிப்பு தொடர்பாக, மகாராஷ்டிர அரசு ஒரு உத்தரவு வெளியிட்டுள்ளது. அந்த நகலை முதல்வரிடம் வழங்கி, அதை நாமும் பின்பற்றலாம் என்று யோசனை தெரிவித்தேன்.

ஒன்று முதல் 10ம் வகுப்பு வரை தமிழ் கட்டாய பாடமாக படிக்க வேண்டும் என்ற சட்டத்தை சுப்ரீம் கோர்ட் ஏற்றுக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தில் வெற்றி பெற்ற தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்தேன். ஆங்கிலமும், தமிழும் மொழிப் பாடங்களாக இருப்பதைப் போல மற்ற பாடங்களையும் தமிழில் கொண்டு வர வேண்டும் என்று வலியுறுத்தினேன். தேசிய மொழிகளாக, 18 மொழிகள் அங்கீகரிக்கப்படும் என்று குறைந்தபட்ச செயல் திட்டத்தில் கூறப்பட்டது. இதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் . விரைவில் வரப் போகும் தமிழக பட்ஜெட் குறித்தும், சில யோசனைகளை தெரிவித்தேன்.

மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்பு தற்போதைய நிலையை மக்களுக்கு உணர்த்தும் அறிக்கை, செயல் அறிக்கை, தாக்கம் பற்றிய அறிக்கை ஆகிய மூன்றையும் தாக்கல் செய்கிறது. அதேபோல் தமிழகத்திலும் சட்டசபையை கூட்டி, இந்த அறிக்கைகளை தாக்கல் செய்ய வேண்டும் . எந்த மாநிலமும் இதை பின்பற்றவில்லை. இதை நாம் பின்பற்றினால், முன்மாதிரியாக அமையும் . எனது யோசனையை கவனிப்பதாக முதல்வர் கூறினார். பெண்களுக்கும் விவசாயிகளுக்கும் தனி பட்ஜெட் போட வேண்டும். தேசிய மின் கழகம் சார்பில் இதுவரை தமிழகத்தில், ஒரு மின் நிலையம் கூட அமைக்கப்படவில்லை. தேசிய மின் கழக தலைவராக இப்போது சங்கரலிங்கம் என்ற தமிழர் உள்ளார். இந்த சூழ்நிலையை பயன்படுத்தி மின் உற்பத்தி நிலையம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தாலும் பஸ் கட்டணத்தை உயர்த்த வேண்டாம் என்று கோரிக் கை வைத்தேன். வேறு அரசியல் பற்றி பேசவில்லை. இவ்வாறு ராமதாஸ் தெரிவித்தார்.

பார்லிமென்ட் தேர்தல் கூட்டணி பற்றி கேட்டதற்கு, “நுõற்றுக்கு 200 சதவீதம் இந்த கூட்டணியில் தான் இருக்கிறோம். இதை பல முறை நான் உங்களிடம் தெரிவித்து விட்டேன்,” என்று கூறிவிட்டு கிளம்பினார். முதல்வருடன் நடந்த சந்திப்பின்போது ஜி.கே.மணி உடனிருந்தார்.

No comments: