எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, February 29, 2008

மத்திய பட்ஜெட் தாக்கல்

2008-09-ம் ஆண்டுக்கான மத்திய பொது பட்ஜெட்டை நிதி மந்திரி ப. சிதம்பரம் இன்று பகல் 11 மணிக்கு தாக்கல் செய்தார்.

பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

வேளாண்துறை உற்பத்தி 2.6 சதவீதமாக உள்ளதால், அதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். வேளாண் வளர்ச்சித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரப்படும்.

விவசாயிகள் நலனில் இந்த அரசு அதிக அக்கறை கொண்டுள்ளது. எனவே விவசாயிகளை ஊற்சாகப்படுத்த கடன்கள் மொத்தமாக தள்ளுபடி செய்யப்படுகிறது.

வணிக வங்கிகள், மண்டல ஊரக வங்கிகள், கூட்டுறவு கடன் கழகங்களில் கடந்த 2007 மார்ச் 31-ந்தேதி வரை விவசாìகளுக்கு வழங்கப்பட்ட கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படுகிறது. 2 ஏக்கருக்குள் நிலம் வைத்திருக்கும் சிறு- குறு விவசாயிகளின் கடன் முழுமையாக தள்ளுபடி ஆகும்.

மற்ற விவசாயிகள் தங்கள் கடனில் 75 சதவீதத்தை ஒரே தவணையில் கட்டி விட்டால், மீத முள்ள தொகை அப்படியே தள்ளுபடி செய்யப்பட்டு விடும்.

இந்த கடன் தள்ளுபடி திட்டத்தின் கீழ் நாடெங்கும் உள்ள 3 கோடி சிறு- குறு விவசாயிகள் பயன் பெறுவார்கள். மற்ற பிரிவு விவசாயிகளில் சுமார் 1 கோடி பேர் கடன் தள்ளுபடி பெறுவார்கள்.

அந்த வகையில் சிறு- குறு விவசாயிகளின் 50 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடியாகும். மற்ற விவசாயிகளின் 10 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்படும். மொத்தம் 60 ஆயிரம் கோடி ரூபாய் விவசாய கடன் தள்ளுபடி செய்யப்படும்.

இந் கடன் தள்ளுபடி வரும் ஜுன் மாதம் முதல் அமலுக்கு வரும்.

வருமான வரி உச்சவரம்பில் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. வருமான வரி உச்ச வரம்பு ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சத்து 50 ஆயிரமாக உயர்த்தப்படும். எனவே இனி ஆண்டு வருமானம் 1 லட்சத்து 50 ஆயிரம் வரை உள்ளவர்கள் வருமான வரி செலுத்த தேவை இல்லை.

ரூ.1 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேல் வருமானம் உள்ளவர்களுக்கு 10 சதவீதம் வரி வசூலிக்கப்பட்டு வருகிறது. இந்த வரம்பு மாற்றப்படுகிறது. இனி ரூ.3 லட்சம் வரை வருமானம் உள்ளவர்கள் 10 சதவீதம் வரி கட்ட வேண்டும்.

அது போல 3 லட்சத்தில் இருந்து 5 லட்சம் ரூபாய் வரை வருமானத் உள்ளவர்களுக்கு 20 சதவீதம் வருமான வரி விதிக்கப்படுகிறது.

5 லட்சத்துக்கு மேல் ஆண்டு வருமானம் உள்ளவர்கள் 30 சதவீத வரி கட்ட வேண்டும்.

பெண்களுக்கான வருமான வரி உச்ச வரம்பிலும் மாற்றம் கொண்டு வரப்படுகிறது. ஆண்டு வருமானம் ரூ.1 லட்சத்து 80ஆயிரம் வரை வரி இல்லை.

முதியோர்களுக்கான வருமான வரி உச்சவரம்புக்கு ரூ1 லட்சத்து 90 ஆயிரத்தில் இருந்து 2 லட்சத்து 25 ஆயிரமாக உயரத்தப்படுகிறது.

நடுத்தர வர்க்கத்திற்கான பட்ஜெட் ஆகும்.

இந்த பட்ஜெடினால் விவசாயிகளின் தற்கொலை முயற்சியை தடுக்க முடியாது என்பது உண்மை,ஏனென்றால் அவர்கள் எந்தப்பிரச்சனைக்காக தற்கொலை செய்துகொள்கிறார்கள் என்பதை ஆராயாமல் தேர்தல் நோக்கத்தில் விவசாயக் கடன் தள்ளுபடி எனபது வெறும் கண்துடைப்பு நாடகமே.

No comments: