எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, April 23, 2008

2008-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட்


பிப். 26-

2008-ம் ஆண்டுக்கான ரெயில்வே பட் ஜெட்டை மத்திய மந்திரி லல்லு பிரசாத்யாதவ் இன்று மதியம் 12 மணிக்கு தாக்கல் செய்தார்.

தொடர்ந்து 5-வது முறையாக அவர் ரெயில்வே பட் ஜெட்டை தாக்கல் செய்துள்ளார்.

பொதுவாக பட்ஜெட் தாக் கல் செய்யப்படும் போது ஏதா வது ஒரு விஷயத்தில் விலை உயர்வு இருக்கும். ஆனால் கடந்த 3 ஆண்டுகளாக ரெயில் பயணிகள் கட்டணத்தை லல்லு பிரசாத் யாதவ் உயர்த்த வில்லை. அதற்கு மாறாக கட்டணங்களை அவர் குறைத்து புதிய சாதனை படைத்தார்.

ஏழை மற்றும் நடுத்தர மக்கள் நலனுக்காக இந்த ஆண்டும் ரெயில் கட்டணம் உயர்த்தப்பட மாட்டாது என்று அவர் ஏற்கனவே அறிவித்திருந்தார். இது தவிர மேலும் பல சலுகைகளை வாரி வழங்குவோம் என்று லல்லு பிரசாத் நேற்று நிருபர் களிடம் கூறி இருந்தார். அதை பிரதிபலிப்பது போல இன்று ரெயில்வே பட்ஜெட் அமைந் திருந்தது.

ரெயில்வே பட்ஜெட்டில் கூறப்பட்டிருப்பதாவது:-

பயணிகள் தான் எங்களுக்கு கடவுள். பயணிகள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். எனவே ரெயில் கட்டணத்தில் மாற்றம் இல்லை. ரெயில் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

நடுத்தர வர்க்க மக்களின் நலனுக்காக குளிர் சாதன பெட்டிகளின் பயண கட்ட ணங்கள் குறைக்கப்படுகிறது. ஏ.சி. முதல் வகுப்பு பெட்டி களுக்கான கட்டணம் 7 சத வீதம் குறைக்கப்படுகிறது.

ஏ.சி. இரண்டாம் வகுப்பு கட்டணம் 4 சதவீதம் குறைக்கப்படுகிறது.

ஏ.சி. மூன்றாம் வகுப்பு கட்டணம் 3 சதவீதம் குறைக்கப்படுகிறது.

2-ம் வகுப்பு கட்டணம் குறைப்பு

தூங்கும் வகுப்பு கட்ட ணம் 5 சதவீதம் குறைக்கப் படுகிறது. 2-ம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்ப வர்களுக்கு இந்த சலுகை வழங்கப்படுகிறது.

50 கி.மீ. மேல் இரண்டாம் வகுப்பு பயணக்கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்படுகிறது.

2007-08ம் நிதி ஆண்டில் ரெயில்வே துறைக்கு ரூ.25 ஆயிரம் கோடி லாபம் கிடைத் துள்ளது. இது எதிர் பார்க் கப்பட்ட ரூ.20 ஆயிரம் கோடியை விட அதிகமாகும். தொடர்ந்து லாபத்தை அதிக ரிக்க முயற்சிகள் மேற் கொள் ளப்படும்.

ரெயில்வே துறையின் உற்பத்தி மேம்பட்டுள்ளது. 3 ஆயிரம் கூடுதல் பெட்டிகள் மூலம் ரூ.2 ஆயிரம் கோடி அதிக லாபம் கிடைத்துள்ளது. இதன் மூலம் புதிய உச்சத்தை இந்திய ரெயில்வே எட்டி உள்ளது. கடந்த 4 ஆண்டு களில் ரூ.68,778 கோடி உபரி பணம் கிடைத்துள்ளது. என் னுடைய இந்த சேவையை ஒவ்வொருவரும் பாராட்டு கிறார்கள்.

இணையத் தளம் மூலம், இ-டிக்கெட் பெறும் வசதி அதிகரிக்கப்படும். டிக்கெட்டு முன் பதிவு விஷயத்தில் தகவல் தொழில் நுட்ப வசதி பெறப்படும். இந்த நடவடிக் கைகள் காரணமாக இன்னும் 2 ஆண்டுகளில் டிக்கெட் வாங்க கவுண்டர்கள் முன்பு வரிசையில் நிற்கும் நிலை மாறும்.

சரக்கு போக்குவரத்தில் 785 மில்லியன் டன் கையாள திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இந்த இலக்கை தாண்டி 790 மில்லியன்டன் சரக்கு கையாளப்பட்டுள்ளது. 2007 டிசம்பர் வரை சரக்கு போக்கு வரத்து மேம்பாடு 8.2 சதவீதமாக இருந்தது.

மும்பை பெருநகர ரெயில் களில் பயணிகள் நெரிசலை சமாளிக்க "கோ- மும்பை'' கார்டு அறிமுகம் செய்யப்படு கிறது. இந்த பல்நோக்கு அட்டை பயணிகளுக்கு மிகவும் பயன் உள்ளதாக இருக்கும்.

ராஜ்தானி, சதாப்தி எக்ஸ் பிரஸ் ரெயில்களை சுத்தமாக வைத்துக்கொள்ள புதிய நட வடிக்கைகள் எடுக்கப்படும். எக்ஸ்பிரஸ் ரெயில் பெட்டிகள் இனி சில்வரில் அறிமுகம் செய்யப்படும். ரெயில்களின் வருகை மற்றும் புறப்பாடு நேரத்தை தெரிவிக்க ஏ,பி, தர ரெயில் நிலையங்களில் நவீன அறிவிப்பு பலகைகள் பொருத்தப்படும்.

ரெயில் நிலையங்களில் பெண்கள் மற்றும் முதியவர் களுக்கு கூடுதல் வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதன் ஒரு கட்டமாக நாட் டில் உள்ள 50 சதவீத ரெயில் நிலையங்களில் நகரும் படிக் கட்டு வசதி செய்யப்படும். தானாக டிக்கெட் கொடுக்கும் எந்திரங்கள் எண்ணிக்கை 6 ஆயிரமாக உயர்த்தப்படும்.

ரூ.500 கோடியில் பிளாட் பாரங்கள் மேம்படுத்தப்படும். 30 முக்கிய ரெயில் நிலையங் களில் பல்நோக்கு வசதியுடன் கூடிய பார்க்கிங்குகள் உருவாக் கப்படும். இந்தியாவின் எந்த பகுதியில் இருந்தும் மற்ற பகுதி ரெயில் சேவை விசாரணை வசதி நவீனப்படுத்தப்படும்.

இரவு நேர எக்ஸ்பிரஸ் ரெயில்கள், எந்த இடத்தில் சென்று கொண்டிருப்பதை பயணிகள் அறிய, ரெயில் பெட்டிகளில் அறிவிப்பு பலகை வசதி செய்யப்படும். எல்லா ரெயில்களிலும் நவீன கழிவறை வசதி செய்யப்படும் இதற்காக ரூ.4 ஆயிரம் கோடி செலவிடப்படும். 36 ஆயிரம் பெட்டிகள் நவீன கழிவறை வசதியை பெறும்.

ரெயில்களை சுத்தப்படுத்தி, அவற்றை பராமரிக்கும் பொறுப்பு தனியாரிடம் ஒப்ப டைக்கப்படும். தானியங்கி சிக்னல் விரிவுபடுத்தப்படும். சரக்கு போக்குவரத்துக்கு 3 ஆயிரம் புதிய பெட்டிகள் சேர்க்கப்படும்.

கப்பல் மற்றும் சாலை போக்குவரத்து நிறுவனங்கள் தங்களுக்கு என தனி ரெயில் கள் இயக்கிக் கொள்ள அனு மதி வழங்கப்படும். 2009-ம் ஆண்டுக்குள் ரெயில்களில் அனைத்து தகவல் தொடர்பு வசதிகளும் செய்யப்படும். `டி' தர ரெயில் நிலைய பிளாட் பாரங்களில் கூரைகள் அமைக் கப்படும்.

ரெயில்வே தொழில் நுட் பத்தை மேம்படுத்த ரூ.2 லட் சத்து 50 ஆயிரம் கோடியில் திட்டமிடப்பட்டுள்ளது.

செல்போன் மூலம் டிக் கெட் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகம் செய்யப்படும். முக்கிய ரெயில் நிலையங்களில் கண்காணிப்பு காமிரா நிறு வப்படும். அதோடு தீவிர வாதிகள் தாக்குதல்களை முறியடிக்க வெடிகுண்டு கண்டுபிடிக்கும் கருவிகள் முக்கிய ரெயில் நிலையங்களில் வைக்கப்படும்.

2009ம் ஆண்டு 20 ஆயிரம் புதிய வேகன்கள் தயாரிக் கப்படும். 5 ஆயிரம் வேகன்கள் தரம் உயர்த்தப்படும்.

எக்ஸ்பிரஸ் ரெயில்களில் தொலைக்காட்சி மற்றும் இணையத் தள வசதிகள் விரைவில் செய்யப்படும். ரெயில் பயணிகள் பாதுகாப் புக்கு முன்னுரிமை கொடுக்கப் படும்.

ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாருக்கு கூடுதல் ஆயுதங்கள் வழங்கப்படும். ஆயிரம் இடங்களில் மாநில அரசுகள் உதவியுடன் ரெயில்வே மேம்பாலம் கட்டப்படுகிறது.

ரெயில் பணிகளில் காலி இடங்களை நிரப்ப இனி பெண்களுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும். இந் தியா முழுவதும் ரெயில் வேக்கு ஏராளமான இடங்கள் உள்ளன. அவற்றில் ரூ.40 ஆயி ரம் கோடி செலவில் வணிக வளாகங்கள் கட்டப்படும்.

எல்லா முக்கிய ரெயில் நிலையங்களிலும் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேன் கருவிகள் நிறுவப்படும்.

மின்சாரத்தை சேமிக்க, ரெயில் பெட்டிகளில் உள்ள 6 ஆயிரம் பல்புகள் மாற்றப் பட்டு புதிதாக நவீனமான 6 ஆயிரம் பல்புகள் பொருத்தப்படும்.

கேரளாவில் புதிதாக ரெயில் பெட்டி தயாரிப்பு தொழிற்சாலை தொடங்கப் படும். இதற்காக கேரள மாநில அரசு ஆயிரம் ஏக்கர் நிலத்தை ரெயில்வேக்கு வழங்கி உள்ளது.

டெல்லியில் புதிதாக பெரிய ரெயில்வே மருத்துவ மனை கட்டப்படும். இந்த மருத்துவ மனை முழுக்க முழுக்க குளு-குளு வசதி செய்யப் பட்டதாக இருக்கும்.

2009ல் ஊழியர் நலநிதி 10 மடங்கு உயர்த்தப்படும். தாழ்த்தப்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பில் கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கப்படும்.

முக்கிய நேரங்களில் பயணிகள் ரெயில் எண்ணிக்கை அதிகரிக்கப் படும். நாடு முழுவதும் புதிதாக போடப்பட்ட 155 வழித் தடங்களில் பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

முக்கிய நகரங்களுக்கு புதிய கட்டண விவரம்

2-ம் வகுப்பு ரெயில் கட்டணம் 5 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் இருந்து முக்கிய நகரங்களுக்கு செல்ல புதிய கட்டணம் வருமாறு:-

நகரம் பழையகட்டணம் புதியகட்டணம்

நாகர்கோவில் 304.00 289.00

நெல்லை 286.00 272.00

மதுரை 235.00 220.00

திருச்சி 186.00 172.00

சேலம் 186.00 172.00

கோவை 235.00 220.00

No comments: