எண்ணங்களின் பிரதிபலிப்பு

Thursday, April 10, 2008

உயர்கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும்: சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு

மருத்துவம், பொறியியல் படிப்புகளுக்கான மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் (ஐ.ஐ.எம், ஐ.ஐ.டி.) பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் உத்தரவு கடந்த ஆண்டு ஜனவரி மாதம் பிறப்பிக்கப்பட்டது.

இதற்கான சட்டத்தை மத்திய அரசு பாராளுமன்றத்தின் இரு சபைகளிலும் கொண்டு வந்து நிறைவேற்றியது. 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு வட மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஐ.ஐ.எம்., ஐ.ஐ. டி.யில் படித்து வரும் உயர் வகுப்பு மாணவர்கள் போராட்டம் நடத்தினார்கள். இட ஒதுக்கீடு சட்டத்தை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த வழக்கை சுப்ரீம் கோர்ட்டு அவசர வழக்காக கருதி விசாரித்தது. எந்த அடிப்படையில் இட ஒதுக்கீட்டுக்கு மாணவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள் என்று சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியது. அதற்கு பதில் அளித்த மத்திய அரசு, 1991-ம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதாக தெரிவித்தது.

மத்திய அரசின் பதிலில் அதிருப்தி அடைந்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் 27 சதவீத இட ஒதுக்கீட்டுக்கு இடைக்கால தடை விதித்தனர். இதன் காரணமாக கடந்த கல்வி ஆண்டில் 27 சதவீத இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இயலவில்லை. இதையடுத்து இடைக்கால தடையை நீக்கக்கோரி மத்திய அரசு மனு செய்தது.

இந்த மனுவை சுப்ரீம் கோர்ட்டு தள்ளுபடி செய்தது. அதன் பிறகு இந்த வழக்கு விசாரணை 25 நாட்கள் நடந்தது. 27 சதவீத இட ஒதுக் கீட்டுக்கு ஆதரவாக வக்கீல்கள் வாதம் செய்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் நீதிபதிகள் அரிஜித்பசாயத், சி.கே.தாக்கர், ஆர்.வி.ரவீந்திரன், தல்வீர் பண்டாரி ஆகிய 5 நீதிபதிகளைக் கொண்ட அரசியல் சாசன பெஞ்சில் 27 சதவீத இட ஒதுக்கீடு குறித்து அனைத்து அம்சங்களும் ஆய்வு செய்யப்பட்டது. அப்போது சில அம்சங்களில் 5 நீதிபதிகளுக்கும் இடையே ஒருமித்த கருத்து ஏற்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் இந்த வழக்கு விசாரணை முடிவுக்கு வந்தது. இதையடுத்து தீர்ப்பை நீதிபதிகள் தள்ளி வைத்தனர். அடுத்த கல்வி ஆண்டு தொடங்க உள்ளதால் 27 சதவீத இட ஒதுக்கீடு பற்றி மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் இன்று இறுதி தீர்ப்பை வெளியிட்டனர். பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் செல்லும். அதற்கு எந்தவித தடையும் அளிக்க முடியாது என்று நீதிபதிகள் திட்டவட்டமாக அறிவித்தனர்.

நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் மேலும் கூறி இருப்பதாவது:-

பிற்படுத்தப்பட்ட மாணவ- மாணவிகளில் பொருளாதாரத்தில் மிகவும் முன்னேற்றம் அடைந்தவர்களுக்கு (கிரீமிலேயர்) 27 சதவீத இட ஒதுக்கீடு கிடையாது. எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு இது பொருந்தாது.

27 சதவீத இட ஒதுக்கீட்டை 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை ஆய்வு செய்ய வேண்டும். மத அடிப்படையில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுவது நல்லது அல்ல. எம்.பி.க்கள் மற்றும் எம்.எல்.ஏ.க்களின் வாரிசு களுக்கு இட ஒதுக்கீட்டில் இடம் அளிக்கக் கூடாது.

27 சதவீத இட ஒதுக்கீடு எத்தனை ஆண்டுகளுக்கு நடைமுறையில் இருக்கும் என்பதை மத்திய அரசு சரியாக முறையில் தெளிவுபடுத்தவில்லை. அது போல தனியார் உயர் கல்வி நிறுவனங்களில் 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்து இன்னும் ஒரு தெளிவான முடிவு எடுக்கப்படவில்லை.

27 சதவீத இடஒதுக்கீடு சட்டம், அரசியல் சாசன அமைப்பின் அடிப்படை அமைப்பை மீறுவதாக இல்லை. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களில் பொருளாதாரத்தில் உயர்ந்தவர்களை அடையாளம் காண 1993-ம் ஆண்டு செப்டம்பர் 8-ந் தேதிய அலுவலக அறிவிக்கையை பின்பற்றலாம்.

பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது எந்த விதத்திலும் சட்ட விரோதம் ஆகாது. ஆனால் காலத்துக்கு ஏற்ப இதில் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

இவ்வாறு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் கூறி உள்ளனர்.

27 சதவீத இட ஒதுக்கீடு விஷயத்தில் இரண்டு அம்சங்களில்தான் 5 நீதிபதிகளிடமும் அதிக கருத்து வேறுபாடு இருந்தது. பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை சாதி அடிப்படையில் தேர்வு செய்வதாப அல்லது பொருளாதார அடிப்படையில் தேர்வு செய்வதா என்று தீர்மானிப்பதில் நீண்ட இழுபறி நிலவியது. அது போல பிற்படுத்தப்பட்ட மாணவர்களில் வசதி படைத்தவர்களை சேர்ப்பதா, வேண்டாமா என்பதிலும் இழுபறி நிலவியது.

நீண்ட ஆய்வுக்குப் பிறகு வசதி படைத்தவர்களை இட ஒதுக்கீட்டில் சேர்க்க கூடாது, இட ஒதுக்கீட்டை படிப்படியாக ரத்து செய்யலாம் என்ற 2 அம்சங்களில் நீதிபதிகளிடம் ஒருமித்த கருத்து ஏற்பட்டது. என்றாலும் இறுதி தீர்ப்பு வழங்கும் போது மொத்தம் உள்ள 5 நீதிபதிகளில் தல்வீர் பண்டாரி என்ற நீதிபதி மட்டும் 27 சதவீத இட ஒதுக்கீடு சட்டத்துக்கு எதிராக கருத்து கொண்டிருந்தார். எனவே 4-1 என்ற கணக்கில் இட ஒதுக்கீடு செல்லும் என்று தீர்ப்பாகி உள்ளது.

27 சதவீத இட ஒதுக்கீடு சட்டம் 2008-09ம் கல்வி ஆண்டிலேயே அமல்படுத்தலாம் என்று நீதிபதி கள் கூறி உள்ளனர். எனவே இடஒதுக்கீடு உடனடியாக வர உள்ளது. இன்றைய தீர்ப்பு சமூக நீதிப் போராளிகளுக்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறி உள்ளார்.

27 சதவீத இட ஒதுக்கீட்டை பெற பா.ம.க. தனி வக்கீலை வைத்து சுப்ரீம் கோட்டில் வாதாடியது குறிப்பிடத்தக்கது. 27 சதவீத இடஒதுக்கீடு செல் லும் என்ற தீர்ப்பால் பா.ம.க. வினர் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பிற்படுத் தப் தப்பட்ட வகுப்பினரை தெளிவான முடிவு செய்ய சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பா.ம.க. கூறி வருவது நினைவு கூறத்தக்கது.

சுப்ரீம் கோர்ட்டின் இன் றைய தீர்ப்பு வரலாற்று முக்கியத்தும் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. இந்த தீர்ப்பு காரணமாக நடப்பு கல்வி ஆண்டு முதல் ஐ.ஐ.எம்., எய்ம்ஸ், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் மொத்தம் ஒதுக்கீடு அளவு 49.5 சதவீதமாக இருக்கும்.

அதாவது பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் 27 சதவீத இட ஒதுக்கீடும் தாழ்த்தப்பட்ட மாணவர்கள் 15 சதவீத இட ஒதுக்கீடும், பழங்குடி மற் றும் மலைவாழ் இன மாண வர்கள் 7.5 சதவீத இட ஒதுக்கீ டும், ஆக மொத்தம் 49.5 சத வீத இட ஒதுக்கீடுகளைப் பெறுவார்கள். மீதமுள்ள 50.5 சதவீத இடங்களில் தான் மற்ற இன மாணவர்களும், பொதுவான போட்டி மாண வர் களும் இடங்களை பெற முடியும்.

27 இட ஒதுக்கீடு பிரச்சி னையில் "கிரீமிலேயர்'' என்ற பொருளாதார அடிப் படையை சுப்ரீம் கோர்ட்டு நியாயப்படுத்தி உள்ளது. கிரீமிலேயர் முறைக்கு இதுவரை எந்த அடிப் படை ஆதாரமும் திரட்டிக் கொடுக்கப்பட வில்லை. எனவே சில புள்ளி விவரங் களின் அடிப்படையில் பிற் படுத்தப்பட்ட மாணவர்களில் வசதி படைத்தவர்கள் 27 சதவீத இட ஒதுக்கீடு சலு கையை பெற இயலாத நìலைக்கு தள் ளப்பட்டுள்ளனர்.

ஆகையால் 27 சதவீத இட ஒதுக்கீட்டை பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் முழுமையாக அனுபவிக்க வேண்டுமானால் "கிரீமிலேயர்'' நிபந்தனையை நீக்க வேண்டும் என்று சமூக நீதி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.

27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்ததற்கு மத்திய மனித வள மேம்பாட்டு மந்திரி அர்ஜுன்சிங் மகிழ்ச்சி யும், வரவேற்பும் தெரிவித்துள் ளார். அவர் அளித்த பேட்டியில், "இது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு. இதில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயன்பெறுவார் கள்'' என் றார்.

காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் அபிஷேக் சிங்வி கூறுகையில், "27 சதவீத இட ஒதுக்கீடு பிரச்சினையில் சிலர் திட்டமிட்டு மத்திய அரசு மீது குற்றச்சாட்டுக்களை பரப்பினார்கள். அவர்களை இன்றைய தீர்ப்பு வாய் அடைக்க செய்து விட்டது'' என்றார்.

இடது சாரி கட்சிகளும் 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை வரவேற்று உள்ளன. இது குறித்து மார்க்சிஸ்டு கம்ï னிஸ்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் உடனடியாக இந்த தீர்ப்பை மத்திய அரசு அமல்படுத்த வேண்டும் என்று கூறி உள்ளன.

வரலாற்றில் பதிக்ககூடிய முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு.

புதியதொரு வரலாரு படைக்கக் கூடிய தீர்ப்பு.

No comments: