எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் VS அதிமுக அராஜக அரசாங்கம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கலைஞரால் திறக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடி அதை எழும்பூரில் அமைந்திருக்கும் அரசு தேர்வாணைய இயக்குனரகத்திற்கு மாற்ற போவதாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மாற்றபட இருக்கிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.



அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை :
* அமைவிடம்: கோட்டூர்புரம், சென்னை
* அடிக்கல் நாட்டப்பட்டது: 16.8.2008
* திறப்பு: 15.9.2010
* செலவு: ரூ.172 கோடி
* மொத்த பரப்பளவு: 8 ஏக்கர், 8 தளங்கள்
* நூலக கட்டடத்தின் மொத்த பரப்பரளவு: 3.75 லட்சம் சதுர அடி
* குழந்தைகள் முதல், மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி தளங்களில் நூலக வசதி
* 417 கார்கள், 1,026 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வசதி
* 30 பேர் மற்றும் 151 பேர் அமரும் வகையில், இரு தனி கூட்ட அரங்குகள்
* 1,100 பேர் அமரும் வகையில், பெரிய ஆடிட்டோரியம்
* தற்போதைய நிலவரப்படி நூல் இருப்பு: 5.25 லட்சம்
* சாதாரண நாட்களில் நூலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 1,000
* விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 2,500 முதல் 3,000 வரை.


எட்டு ஏக்கர் நிலத்தில்...:கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் குறித்த விவரங்கள்:
* எட்டு ஏக்கர் நிலத்தில், 172 கோடி ரூபாய் செலவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
* மொத்தம் ஒன்பது மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
* மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவு கொண்டது.
* 50 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கம் உள்ளது.
* 80 பேர் அமரக்கூடிய இரண்டு கூட்ட அரங்குகள்.
* 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகளுக்கான வசதிகள் கொண்ட பிரிவு.
* 420 கார்கள் உட்பட 1,500 வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி.

இது போன்ற வசதிகள் கொண்ட நூலகத்தை மாற்றி இந்த இடத்தில் உயர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்கள்.

புதிய சட்ட சபை வளாகத்தை மருத்துவமனையாகவும் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றி அதை பொதுமக்கள் வசதிக்காக விடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று அப்பொழுது பெரிதாக கேள்விகள் எதுவும் எழவில்லை ஏனென்றால் அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தது சரி கலைஞர் மேல் இருந்த கழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற முடிவெடுத்தாலும் அந்த கட்டிடத்தை நல்ல முறையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கும் ஆகையால் எல்லாரும் சமாதானம் ஆகி ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இந்த நூலகமானது பிரத்தேகரமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பு வாய்ந்த கட்டிடமாக கட்டப்பட்டு பொதுமக்கள் கடந்த ஒரு வருடங்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது இந்த நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன.

எல்லாம் கலைஞரின் மேலே உள்ள வெறுப்புணர்ச்சி அந்த வெறுப்புணர்ச்சியை பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகத்தை மாற்றுவதென்பது மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் எகத்தாலத்தில் இனி ஐந்து வருடங்கள் நம்மை யார் என்ன கேட்கமுடியும் என்கிற ஆனவத்தில் இது போன்று ஆடிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா அவர்கள் அவருடைய ஆட்டம் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது.

இது போன்ற சுயநலவாதிகளைத் தான் நாம் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக கொண்டுவந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் வெட்ககேடாக இருக்கிறது.

கலைஞருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கிற திட்டத்தையெல்லாம் அழிக்க வேண்டும் என்றே ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை.

திமுக ஆட்சியில் பெயர் சொல்லுகின்ற நலதிட்டங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் நீங்கள் அதற்கு மேல் பெயர் சொல்லுகின்ற திட்டங்களை கொண்டு வாருங்கள்.

கலைஞர் அவர்கள் நல்ல நூலக்த்தை கொண்டுவந்தார்கள் என்றால் நீங்களும் இது போன்ற நூலகத்தை மற்ற நகரத்தில் ஏற்படுத்தலாமே அதை விடுத்து அந்த நூலகத்தை அழிப்பதென்பது மிகவும் மோசமான செயலாகும் கண்டிக்கதக்கது.

அரசு நூலகத்தை மாற்றுவதை மறுபரிசீலனை செய்து அந்த நூலகத்துக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

2 comments:

rajlu gowda said...

Boss u said very good and valid points. Government should revoke their announcement immediately if not we can to gather join and fight against the government and jaya too.

Only the cause for that was built by the DMK government. there's no other cause.

jaya should know the truth for that the building was built by the public money not for DMK money.

Anonymous said...

அண்ணா திரவிட முன்னேற்றக் கழகம் என்று வைத்துக் கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தையே மூட எப்படி அம்மாவுக்கு மனம் வந்த்தது என்று தெரியல.

இவர்களெல்லாம் அண்ணா மீதும் நம் மக்கள் மீதும் எந்த பற்றும் இல்லாமல் இருக்கிறார்கள்.

இவர்களைத்தான் நாம் நீங்கள் சொல்வதைப் போல் ஆட்சியில் அமரவைத்துள்ளோம்.