எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, September 16, 2011

அரசின் நலத்திட்டங்கள் வேண்டுமா ஏன்?

கறவை மாடுகள்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு;
வாழ்நாளில் மறக்க முடியாது


நேற்று முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்த நாள் விழா அனைவராலும் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.

தமிழக அரசின் சார்பில் அண்ணா பிறந்தநாளில் அதிமுக தேர்தலின் போது சொல்லியிருந்த வாக்குறுதிகளை நேற்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். இந்த நல திட்டங்கள் நேரிடையாக பாமரமக்களுக்கு சென்றடைவதால் இந்த நலதிட்ட உதவிகள் வரவேற்க்கூடிய ஒன்று.

ஜெர்சி பசுகள் வழங்கி இருக்கிறார்கள் அதனால் வெண்மை புரட்சி ஏற்படும் என்கிறார்கள் கண்டிப்பாக கரவை மாடுகள் வழங்குவதால் அந்த மாடுகளை கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் உறுதியாக பயனடைவர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாடு ஒரு நாளைக்கு 10 முதல் 16 லிட்டர் வரை கறக்ககூடியது. ஒரு லிட்டர் அரசாங்க மற்றும் மற்ற பால் கொள்முதல் நிலையங்களில் லிட்டர் ஒன்றுக்கு 18 ரூபாய் என்கிற அளவில் வாங்குகிறார்கள். அதனால் நாளொன்றுக்கு குறைந்தது இவர்களுக்கு 200 ரூபாய் வருமானத்திற்கு உத்திரவாதம் இருக்கிறது இது போன்ற நலத்திட்டங்கள் நேரிடையாக ஏழைகள்களை சென்றடைந்து அவர்களின் சமூகமேம்பாட்டுக்கு வழி செய்கிறது.

இதே போல 4 ஆடுகள் கொடுத்தார்கள் இந்த நான்கு ஆடுகள் 4 லிருந்து 5 மாதத்திற்குள்ளாக நன்கு வளர்ந்துவிடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தது 5 ஆயிரம் முதல் 6 வரை விற்கும், அதனால் நான்கு ஆடுகள் என்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் மாதம் இவர்களுக்கு 3ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த முதலீட்டை சரியாக பயன்படுத்தி கொண்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை வரவேற்க்கூடிய ஒன்று.

இது போலவே மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இது இல்லாத எவ்வளவோ ஏழைகள் இருக்கிறார்கள் இது போன்ற நலதிட்ட உதவிகள் ஏழைகளை நேரிடையாக சென்றடைவதால் இதையெல்லாம் வரவேற்ககூடியது தான். இந்த வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் இந்த சமுதாயத்தில் இதெல்லாம் தருவது நியாயம் தான்.

மாணவர்களுக்கான இலவச மடி கணினி என்பது மிகப்பெரிய திட்டம் இந்த திட்டத்தால் இந்த தலைமுறை மாணவர்கள் இன்னும் 10 வருடங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள ஏன் மற்ற நாட்டில் உள்ள மாணவர்களிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக கணினி தொழில்நுட்பத்திலும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தில் நல்ல அறிவாற்றலை பெறக்கூடிய வாய்ப்பை இந்த நலத்திட்டம் அளித்திடும். இதனால் இதனை நாம் நீண்டகால திட்டம் அல்லது தொலைநோக்கு திட்டம் என்றே சொல்லலாம்.

அதனால் தேவையான மக்களுக்கு மானியம் நேரிடையாக சென்றடைகின்ற இது போன்ற திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

No comments: