எண்ணங்களின் பிரதிபலிப்பு
Wednesday, November 12, 2008
காட்டுமிராண்டித்தனத்தின் உச்சக்கட்டம் ! சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்களின் அராஜகங்கள் அட்டூழியங்கள் !
ஒருவரையொருவர் தாக்கி கொள்கிறார்கள் நான்கு சுவற்றுக்குள் அல்ல ஆயிரக்கனக்கான மக்கள் நடமாடும் அதுவும் உயர்நீதிமன்றம் இருக்கும் வளாகத்தின் பக்கத்தில் உள்ள கல்லுரி வாயிலில் ஒரு மாணவன் சகமாணவர்களால் கொலைவெறி தாக்குதல் நடத்தப்பட்டு அந்த மாணவன் மயங்கி விழுந்த பின்பும் கூட சக மாணவர்கள் அவனை சூழ்ந்து கொண்டு அடிக்கிறார்கள், அருகில் காவல் துறையினர் இருக்கிறார்கள், பத்திரிக்கைத் துறை நிருபர்கள் இருக்கிறார்கள் மக்கள் எல்லாம் கதறி காப்பாற்றுங்கள் என்று கூறிய பின்பும் கூட அதை தடுக்காமல் காவல் துறையினர் வேடிக்கை பர்த்துகொண்டிருந்தது ஏன்?
சட்டம் ஒழுங்கை காப்பாற்றபடும் காவல் துறையினறாலே கூட அதை தடுக்க முடியாமல் நிற்க்கிறார்கள் என்றால், ஏன் அவர்களுக்கு,
வேறு வேளை இருந்த காரணத்தால் அதை அவர்கள் தடுக்க வில்லையா?
இல்லை அவர்களுக்கு யாரவது லஞ்சம் கொடுத்தனால் கண்டுகொள்ளவில்லையா?
இல்லை அதை தடுக்கப் போனால் நாமும் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும் என்பதால் வேடிக்கைப் பார்த்தார்களா?
ஏன் அவர்களுக்கு சிறிதளவு கூட மனிதாபிமானம் இல்லையா?
சட்டக்கல்லுரி மாணவர்களின் பிரச்சினைகளில் தலையிட்டால் சட்டம் காவல்துறையினர் மீதே பாயும், ஏனென்றால் அவர்களெல்லாம் சட்டக்கல்லுரி மாணவர்கள், சட்டம் பயின்று கொண்டிருக்கும் மாணவர்கள்.
சட்டக்கல்லுரி மாணவர்களுக்கு மட்டும் என்ன தலையில் கொம்பா முளைத்திருக்கிறது, சட்டம் பயின்றால் அவர்கள் இஷ்டத்திற்க்கு என்ன வேண்டுமானாலும் செய்யலாமா!
ஆம் நீங்கள் செய்யலாம்! உங்களை யாரும் ஒன்றும் செய்து விட முடியாது உங்கள் பின்னால் நாங்கள் இருக்கிறோம் என்று அக்கல்லூரிகளி படித்த முன்னால் மாணவர்களும் இன்னால் வக்கீல்களும், சாதி சங்கத் தலைவர்களும் வரிஞ்சிக் கட்டிக்கொண்டு நிற்க்கிறார்கள்.
அம்பேத்க்கார் கல்லுரியில் தான் எல்லாம் தலைவிரித்து தாண்டவம் ஆடுகிறது. சட்டத்தைக் காப்பாற்ற அணி நிற்ப்பார்கள் என்றால்,இவர்களெல்லாம் புரட்சி செய்கிறோம் மேல் ஜாதியினருக்கு எதிராக கலகம் செய்கிறோம், மேல் ஜாதிகாரர்களின் ஆத்திக்கத்தை ஒழிக்கப் போராடுகிறோம்,என்கிற போர்வையில் வன்முறையை தூண்டி, ஜாதி கலவரத்தை தூண்ட நினைக்கிறார்க்ள். நான் தான் சட்டக் கல்லுரியில் கலகம் செய்தேன், நான் தான் அந்தப்போராட்டத்திற்க்கு தலைமை தாங்கினேன்,என்று கூறி தாழ்த்தப் பட்டவர்களின் தலைவன் என்று ஏதாவது கட்சியில் பதவியை வங்கிக்கொண்டும் இல்லை ஒரு கட்சியை ஆரம்பித்துக் கொண்டும் அரசியல் தலைவர்கள் ஆகிவிடலாம் என்று நினைத்து அவர்கள் அவ்வாரு நடந்து கொள்கிறார்கள்.
நான் சொல்கிறேன் நீங்கள் கலகம் செய்யுங்கள் தாழ்த்ப்பட்டவர்களெல்ல்லாம் நன்றாக படியுங்கள் படித்தால் தான் எதிர்காலம் நமது கைகளில் வருமென்று !
போராடுங்கள் கல்விக்கு ஆகும் செலவை மானியமாகத், நல்ல தரமான மற்றும் சர்வதேச தரத்திற்க்கு கல்வியை தாருங்களென்று !
தலைமைத்தாங்குங்கள் எங்கெல்லாம் சமத்துவத்திறக்கு எதிராக நடக்கும் அநீதிகளை தட்டிக் கேட்கும் அறப்போராட்டித்திற்க்கு !
அப்படி வந்தவர்தான் டாக்டர் அம்பேத்க்கார் அவர்கள். அவருடைய பெயரை வைத்துள்ள கல்லுரியில் படித்துக் கொண்டு காட்டுமிராண்டிதனமாக,ரௌவுடித்தனமாக, அராஜகத்தில் ஈடுபடுவது மாபெரும் கண்டனத்திற்க்குரிய ம்ன்னிக்க முடியாத குற்றமாகும்.
சட்டத்தை மதிக்கப்படுபவர்களே அதை மிதிக்கும் போது, சட்டக் கல்லூரி மாணவர்களை அடக்கும் விதமாக, ஒழுக்கத்தை போதிக்கும் விதமாக, மற்றக் கல்லூரி மாணவர்களை போல் நடக்கும் விதமாகசில சட்டத் திருத்தங்களை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் BAR Council .
கல்லூரிகளில் படிக்கும் காலங்களில் எந்த ஒரு ஒழுக்கக் கேடான நடவடிக்கைகளில் ஈடு பட்டாலோ அல்லது கலவரத்தை தூண்டும் விதமாகப் பேசினாலோ அல்லது
ரௌடித்தனமாக நடந்தாலோ அல்லது எந்த ஒரு கட்சியுடன் தொடர்பிருந்தாலோ அல்லது எந்த போலிஸ் ஸ்டேசனில் அவர்களுக்கெதிராக கேஸ் இருந்தாலோ அல்லது
பதிவாகி இருந்தாலோ கூட BAR Council லில் உருப்பினராக முடியாது என்ற ஒரு சில நடவடிக்கைகளை எடுத்தால் ஒழிய சட்டக்கல்லூரி மாணவர்களைக் கட்டுப்படுத்த முடியாது.
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
அய்யா பிரதிபலிப்பு என்ன நடந்தது,எதற்காக நடந்தது என்று புரியாமல் தலித்தின் மீது பழிப்போடும் நீயெல்லாம் ஒரு மனிதன்.ஆதிக்க சாதியை கேள்விக்கேக்க துப்புஇல்லை.கலகம் செய்கிறார்கள்.நீ வரலாற்றையெல்லாம் படித்திருக்கமாட்டாய் என்று நினைக்கிறேன்.உன்னுடைய சாதிவெறிக்கு இப்படி ஒரு பதிவு.வாழ்த்துக்கள்.
தோழரே மேற்சொன்ன விமர்சனத்திற்காக வருந்துகிறேன்.யார் செய்தாலும் தவறுதான். ஒரு மயக்கமடைந்த மாணவனை திரும்பி திரும்பி தாக்குதல் கோழைத்தனம்,மனித செயலே அல்ல.
Post a Comment