எண்ணங்களின் பிரதிபலிப்பு

Sunday, September 7, 2008

அணுசக்தி ஒப்பந்தத்தின் வியன்னா வெற்றி

அணுசக்தி ஏற்றுமதியாளர்கள் கூட்டம் வியன்னாவில் சிலதினங்களாக நடைப்பெற்றுவருகிறது அதில் நமக்கு குறிப்பிடதக்க வெற்றி கிடைத்திருக்கிறது என்று சொன்னால் மிகையாகது.

இதை 21ம் நூற்றாண்டின் முதல் வெற்றியென்றே சொல்லலாம்.

ஏன் நான் அவ்வாறு சொல்கிறேன் என்றால் உலக ஆராய்ச்சியாளர்கள் 21ம் நூற்றாண்டை சீனா மற்றும் இந்தியாவின் நூற்றாண்டாகத்தான் இருக்குமென்று சொல்கிறார்கள்.20ஆம் நுற்றாண்டு அமெரிக்காவுடையதோ அதைபோலத்தான் 21ம் நூற்றாண்டு இந்தியாவுடையது அதில் எந்த மாற்றமுமில்லை.

நேற்று நடந்த கூட்டத்தில் விவாதம் நடைபெற்று இறுதியில் வாக்கெடுப்பு நடைபெற்று வெற்றிபெற்றது.

இதில் குறிப்பிடதகுந்த அம்மசம் என்னவென்றால்

1.அணு ஆயுதபரவல் தடை ஒப்பந்தம்

மற்றும்

2.அணுகுண்டு சோதனை

போன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடாமலேயே Nuclear Supplier Group யின் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

அணுமூலப்பொருள்களை இறக்குமதி செய்யும் நாடுகள் இந்த இரண்டு ஒப்பந்தகளில் கண்டிப்பாக கையெழித்திடவேண்டும் அவ்வாறு செய்தால் மட்டுமே மற்ற நாடுகளிலிருந்து மூலப்பொருட்களயும் தொழில் நுட்பத்தையும் பெறமுடியும்.

ஆனால் நாம் மட்டும் இந்த விதியிலிருந்த்து விலக்கு அளிக்கப்பட்டிருகிறோம் என்றால் உலக நாடுகளின் கவனம் முழுதும் இந்தியாவின் பக்கம் திரும்பி உள்ளது.

ஏன் இந்தியாவிற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டிருக்கிறதென்றால் இந்தியா ஒரு போதும் சுயக்கட்டுப்பாட்டை மீறாத,மற்ற நாடுகளின் அரசியல் உள்விவகாரங்களில் தேவையில்லாமல் மூக்கை நுழைக்காத மற்றும் முக்கியமாக அகிம்சவாத நாடு என்று கருதி,கட்டுப்பாட்டை விதிக்க தேவையில்லை அவர்களாகவே கட்டுப்பட்டு செயல்படுவார்கள் என்று நினைத்து ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.இதே போல் ஒரு ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு தருமா என்றால் அது கனவில் கூட நடைபெறாத ஒன்று.

இந்த ஒப்பந்தத்தினால் நாட்டின் மிகமுக்கியமான மற்றும் வளரும் பொருளாதாரத்திற்கு அடிப்படையான மின்சார தேவையின் அளவு ஈடுசெய்யப்படும்.

எவ்வளவு விரைவில் தோரியத்திலிருந்தது மின்சாரம் எடுக்கும் தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரமாக செய்யவேண்டும், ஏனென்றால் நீண்டகாலத்திற்கு மற்றவர்களையே நம்பிருக்கமுடியாதில்லையா!

வெற்றிகள் தொடர நாம் அனைவரும் கடுமையாக உழைப்போமாக.

4 comments:

Unknown said...

பிரதிபலிப்பான்

அணுசக்தி ஒப்பந்தத்தால் இந்தியா விரைவில் முன்னேறும்

வீழ்வது நாமாக இருந்தாலும் வாழ்வது நாடாகட்டும்

நன்றி

maatrangal said...

எது நடந்தால் என்ன அமெரிக்காவை மட்டும் எதிர்ப்பது என்ற கொள்கையுடன் இடது சாரிகள் நடந்து கொள்கின்றன.

maatrangal said...

மக்களுக்கு நல்லது நடந்தால் சரி

சைதை முரளி said...

அடங்கிப் போகிறவர்கள் அறிவீலிகள் இல்லை. அத்துமீறுபவர்கள் புத்திசாலிகளும் இல்லை என்பதை அருமையாக நிரூபித்துள்ளது இந்தியா/