எண்ணங்களின் பிரதிபலிப்பு

Monday, September 22, 2008

முதல் மொட்டை மாடி கூட்டம் - சிந்திக்க சில விஷயங்கள்






எங்களுடைய New Horizon Media மாதம் ஒருமுறை பொது விவாதக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்திருக்கிறது, இரண்டாவது சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு. இதில் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம்.


முதல் வாரம் என்பதனால் கூட்டம் குறைவாக இருந்தது என்றாலும் நிறைவாகத்தான் இருந்தது (டீ, காபி, சமோசா என்று).நான் எல்லாம் கலந்துகொள்ளலாமா என்று நினைத்துக் கொண்டிருந்த போது எங்களுடைய முதன்மை ஆசிரியர் பா.ராகவன் எல்லோரையும் அழைத்தார்.எல்லோரும் மொட்டை மாடி கூட்டத்திற்கு வாருங்கள் என்று அப்பொழுதுதான் தெரிந்தது இது எழுத்தாளார்களுக்கு மட்டுமல்ல எல்லாருக்கும் தான் என்று. சரி என்னத்தான் பேசுகிறார்கள், எதைப்பற்றி பேசுகிறார்கள், எப்படி பேசுகிறார்கள், ஏன் பேசுகிறார்கள் அதில் நான் என்ன செய்யவேண்டும் என்று நினைத்தபோது தான் எனக்கான பொதுவான கருத்துக்களை கொண்ட பேச்சுகள் வந்தது, அப்பொழுதுதான் நினைத்தேன் நாமும் கேள்வி கேட்கலாமென்று அதுகாறும் தயங்கலாகவே இருந்தது. சரி கேட்டுவிடலாம் என்று நினைத்தபோது சாரு அவர்கள் வேரொரு கருத்தை பற்றி பேச ஆரம்பித்துவிட்டார் இலக்கியத்தைப் பற்றி எனக்கு ஒன்றும் புரியவில்லை என்றாலும் ரசனையுடன் அவரது பேச்சை கேட்டேன். பிறகு அவர் நிறுத்தி யாராவது கேள்விகள் கேட்கிறீங்களா என்றார் அப்பொழுதுதான் நான் கையை உயர்த்தி கேட்டேன்.

இன்றைய இளைஞர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது என்றும் அதை வைத்துக்கொண்டுதான் அவர்கள் பேசுகிறார்கள் பெண்களிடம் கடலை
போடுகிறார்கள் என்றும் சொன்னார். நான் கேட்டேன் ஏன் அவர்களுக்கு 200 வார்த்தைகள் தான் தெரிகிறது அதற்கு மேல் அவர்கள் தெரிந்து கொள்ளவில்லையா, இல்லை தெரிந்துகொள்ள விருப்பமில்லையா என்று, ஆனால் அவர் ஏதோ சொன்னார் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

நான் அதைப்பற்றி விளக்கமாக கேட்குமுன் அவர் கைகடிகாரத்தை பார்த்துகொண்டே மற்றவர்களை பார்த்தார் உடனே முத்துகுமார் அவர்கள் ஒருகேள்வியை கேட்டார்.

திராவிட கழகங்கள் ஆட்சிக்கு வந்ததால் தான் மாணவர்களுக்கெல்லாம் தமிழ் தெரியவில்லை என்று நீங்கள் சொல்கிறீர்கள் திராவிட கழகங்கள் வந்து தானே ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை எல்லாம் நடத்தி நம் தமிழை மட்டுமே படிக்க வழி செய்த போது எப்படி நீங்கள் அவ்வாறு சொல்கிறீர்களென்று அதற்கு அவர் சொன்னார் நிறைய ஆங்கில பள்ளிகளை திறந்து வைத்துவிட்டு அதனால் பிள்ளைகலெல்லாம் அங்குதான் சேர்ந்து படிக்கிறார்கள் தமிழ் வழி பள்ளிகளில் படிப்பதில்லையென்று அதானால் தான் தமிழ் வளரவில்லையென்றும், மாணவருகளுக்கு தமிழ் தெரியவில்லையென்று சொல்கிறார்.

நான் கேட்கிறேன் எத்தனை பள்ளிகளில் தமிழாசிரியர்கள் ஆர்வமுடன் மாணவர்களுக்கு பாடம் நடதுகிறார்கள் அவர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கு சரியான மற்றும் பகுத்தறிவுடன் பதிலை சொல்கிறார்கள், மாணவர்கள் கேட்கும் கேள்விகளை சரியான முறையில் புரிந்துகொண்டு அவர்களுக்கு புரியும் விதமாக எத்தனை ஆசிரியர்கள் விளக்கங்களை தருகிறார்கள்.

இதெல்லாம் ஒழுங்காக நடந்தால் தானே அவர்களுக்கு ஆர்வம் வரும்.மொழிகளின் மீது பற்று வரும், படிக்கலாம் என்ற எண்ணம் வரும்,இதையெல்லாம் விட்டு விட்டு நாம் மாணவர்களின் மீது குறை சொல்வது என்ன நியாயம் என்று எனக்கு புரியவில்லை.

தமிழ் ஆர்வளர்கள் தான் இந்த மாதிரி எங்கு நாம் தப்பு செய்கிறோம், எங்கு தப்பு நடக்கிறது என்று கண்டுபிடித்து திருத்த முயற்சி செய்யவேண்டும்.

மொழிகளின் மீது ஆர்வத்தை தூண்டவேண்டும் முடிந்தவரை குழந்தை பருவத்திலே நிறையமொழிகளை கற்று கொடுக்க முயற்சி எடுக்க வேண்டும்.அப்பொழுதுதான் நம்முடைய தமிழும் வளரும், நாட்டின் பொருளாதாரமும் வளரும்,நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சியுமே மொழிகளில் தான் அடங்கியுள்ளது என்பதை நாம் மறக்ககூடாது.

3 comments:

புத்தகக்காதலன் said...

அற்புதமாக உங்கள் எண்ணங்களை பிரதிபலித்திருக்கிறீர்கள்

லக்கிலுக் said...

அண்ணா!

முடியலைன்னா :-(

Anonymous said...

Charu does not even know 200 words.
His knowledge on many issues is next to nothing.Youth of these times are smart and know what they need to know.Most of them have no time for silly things in life or drinking at somebody's expense.