எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, June 22, 2010

ஹூ ஜிண்டாவ்


யார் இவர்?.

இவர் தான் தற்போதைய சீனாவின் தந்தை. இவர்தானே சீனா என்கிற மாபெரும் குடும்பத்தை வழிநடத்துகிறார் அதனால் தான் நான் அவரை தந்தை என்று சொல்கிறேன்.

அவ்வாறே நூலாசிரியரும் குறிப்பிடுகிறார். மூன்று தலைமுறைகளை தெரிந்தவர், மூன்று தலைமுறை தலைவர்களுக்கு கீழும் வேலை செய்திருக்கிறார் என்றால் அதிபர் என்பதை விட இப்பொழுது அவரை தந்தை என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும்.

மாவோ,டெங்சியோங், ஜியாங் தற்போது ஹூ ஜிண்டாவ்.


புத்தகத்தை வாங்க மேலே உள்ள தொடர்பை சொடுக்கவும்.

ஹூ ஜிண்டாவ் படித்தேன் மீண்டும் ஒரு முறை படிக்க வேண்டும். நடை நன்றாக இருந்தது. இன்னும் சொல்லபோனால் கொஞ்சம் கொஞ்சமாக தொகுத்து கொடுத்தது படிப்பதற்கு எளிமையாக இருந்தது. தலைவர்களுடைய பெயர்கள் மாவோ, டெங்சி, ஜியாங்,ஹூ வைத் தவிர மற்றவர்கள் பெயர் மனதில் நிற்பதற்கு கொஞ்சம் கஷ்டம்.

ஹூ வை பற்றி படிப்பதை விட சீனாவை பற்றி அதிக அறிமுகம் செய்கிறது என்றே தோன்றுகிறது. எனக்கு அவ்வளவாக சீனாவைப் பற்றி தெரியாது இருந்தாலும் கொஞ்சம் தெரிந்து கொள்ள உதவியது. புள்ளி விவரங்கள் புத்தகத்திற்கு வலுசேர்ப்பதாக இருந்தது.

கம்யூனிசத்தை கொஞ்சம் கொஞ்சமாக கை கழுவி கொண்டிருக்கிறார்கள். மக்களுக்கு நிறைய உண்மையான புள்ளி விவரங்களை அரசாங்கம் நீண்டகாலத்திற்கு மறைக்கும் போது அதன் மீது தாக்கம் ஏற்பட்டு மாற்று சிந்தனை ஏற்பட்டு உடைவதற்கோ அல்லது உள்நாட்டு பிரச்னைகள் வருவதற்கு நிறைவே வாய்ப்பு இருப்பது போல் தோன்றுகிறது.

பத்திரிக்கை சுந்தந்திரம் பறிக்கப்பட்டும், எழுத்துரிமை, பேச்சுரிமை நசுக்கப்பட்டும். உண்மையான ஜனநாயகத்தை இன்னும் முடமாக்கிவைத்துள்ளது சீன ஒற்றை கட்சி ஆட்சி. கம்யூனிஸமா இல்லை முதலாளித்துவமா என்று வெளிப்படையாக அறிவிக்காவிட்டாலும் அங்கே ஏழைகளிடத்திலே கம்யூனிஸ ஆட்சியும், முதலாளிகளிடத்திலே முதலாளித்துவ ஆட்சியையும் செய்துவருகிறது ஒற்றைக் கட்சி என்று சொல்லும் ஹூ ஜிண்டாவ் அரசாங்கம்.

மனித உரிமை மீறல்கள் நிறையவே அங்கு அரங்கேறுவதைப் போன்று தான் தோன்றுகிறது அதுதான் உண்மையும் கூட.

சீனாவிலும் சமூக ஏற்றத்தாழ்வுகள் நிரம்பிக்கிடக்கிறது இந்தியாவைப் போன்றே.

இருந்தாலும் இந்தியாவில் எல்லாரும் குறிப்பாக கொஞ்சம் வசதி படைத்தவர்கள் நிம்மதியாக வாழலாம் ஆனால் சீனாவில் அப்படியில்லை என்றே தோன்றுகிறது. கம்யூனிஸ அரசு எதை எப்பொழுது பிடுங்கிக் கொள்ளுமோ யார் எந்த சமயத்தில் இருப்பிடத்தை காலி செய்ய வற்புறுத்துவார்களோ என்று நிம்மதியாக இருக்க முடியாது.

இந்தியாவைப் போன்றே அங்கும் லஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்து தாண்டவமாடுகிறது என்பதை சீனா விலகும் திரையில் சொல்லப்பட்டது. இந்த புத்தகத்தில் மிஸ்ஸாகி இருக்கிறது.

சீனாவைப் பற்றி, சீன அதிபர்களைப் பற்றி, பொருளாதரத்தைப் பற்றி, அபரிமிதமான வளர்ச்சியை பற்றி, கழுதை தேய்ந்து கட்டெறும்பானதைப் போல் கம்யூனிஸம் தேய்ந்து முதலாளித்துவம் மாற்றத்தைப் பற்றி இந்த புத்தகம் நன்றாக அலசி ஆராய்கிறது.

No comments: