எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, September 16, 2011

அரசின் நலத்திட்டங்கள் வேண்டுமா ஏன்?

கறவை மாடுகள்:முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண்கள் பாராட்டு;
வாழ்நாளில் மறக்க முடியாது


நேற்று முன்னாள் முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் 103 வது பிறந்த நாள் விழா அனைவராலும் மிகவும் சிறப்பாக கொண்டாடபட்டது.

தமிழக அரசின் சார்பில் அண்ணா பிறந்தநாளில் அதிமுக தேர்தலின் போது சொல்லியிருந்த வாக்குறுதிகளை நேற்று தொடங்கி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். இந்த நல திட்டங்கள் நேரிடையாக பாமரமக்களுக்கு சென்றடைவதால் இந்த நலதிட்ட உதவிகள் வரவேற்க்கூடிய ஒன்று.

ஜெர்சி பசுகள் வழங்கி இருக்கிறார்கள் அதனால் வெண்மை புரட்சி ஏற்படும் என்கிறார்கள் கண்டிப்பாக கரவை மாடுகள் வழங்குவதால் அந்த மாடுகளை கூட வாங்க முடியாத ஏழ்மை நிலையில் உள்ள மக்கள் உறுதியாக பயனடைவர் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த மாடு ஒரு நாளைக்கு 10 முதல் 16 லிட்டர் வரை கறக்ககூடியது. ஒரு லிட்டர் அரசாங்க மற்றும் மற்ற பால் கொள்முதல் நிலையங்களில் லிட்டர் ஒன்றுக்கு 18 ரூபாய் என்கிற அளவில் வாங்குகிறார்கள். அதனால் நாளொன்றுக்கு குறைந்தது இவர்களுக்கு 200 ரூபாய் வருமானத்திற்கு உத்திரவாதம் இருக்கிறது இது போன்ற நலத்திட்டங்கள் நேரிடையாக ஏழைகள்களை சென்றடைந்து அவர்களின் சமூகமேம்பாட்டுக்கு வழி செய்கிறது.

இதே போல 4 ஆடுகள் கொடுத்தார்கள் இந்த நான்கு ஆடுகள் 4 லிருந்து 5 மாதத்திற்குள்ளாக நன்கு வளர்ந்துவிடும். ஒவ்வொரு ஆடும் குறைந்தது 5 ஆயிரம் முதல் 6 வரை விற்கும், அதனால் நான்கு ஆடுகள் என்றால் 20 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும் மாதம் இவர்களுக்கு 3ஆயிரம் ரூபாய் வருவாய் கிடைக்கிறது. இந்த முதலீட்டை சரியாக பயன்படுத்தி கொண்டால் அவர்களின் வாழ்க்கைத் தரம் சிறக்கும் என்பதில் சந்தேகமில்லை வரவேற்க்கூடிய ஒன்று.

இது போலவே மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி இது இல்லாத எவ்வளவோ ஏழைகள் இருக்கிறார்கள் இது போன்ற நலதிட்ட உதவிகள் ஏழைகளை நேரிடையாக சென்றடைவதால் இதையெல்லாம் வரவேற்ககூடியது தான். இந்த வசதிகள் கூட இல்லாமல் இருக்கும் இந்த சமுதாயத்தில் இதெல்லாம் தருவது நியாயம் தான்.

மாணவர்களுக்கான இலவச மடி கணினி என்பது மிகப்பெரிய திட்டம் இந்த திட்டத்தால் இந்த தலைமுறை மாணவர்கள் இன்னும் 10 வருடங்களில் மற்ற மாநிலங்களில் உள்ள ஏன் மற்ற நாட்டில் உள்ள மாணவர்களிலே மிகவும் தேர்ச்சி பெற்றவர்களாக கணினி தொழில்நுட்பத்திலும் அதைச் சார்ந்த தொழில்நுட்பத்தில் நல்ல அறிவாற்றலை பெறக்கூடிய வாய்ப்பை இந்த நலத்திட்டம் அளித்திடும். இதனால் இதனை நாம் நீண்டகால திட்டம் அல்லது தொலைநோக்கு திட்டம் என்றே சொல்லலாம்.

அதனால் தேவையான மக்களுக்கு மானியம் நேரிடையாக சென்றடைகின்ற இது போன்ற திட்டங்களை நாங்கள் வரவேற்கிறோம்.

Monday, September 12, 2011

அரசியல் பணியில் காங்கிரஸ் தொண்டன் காமராஜ் -அறிய புகைப்படம்


எளிமைக்கு உதாராணம் காமராஜர். காலில் செருப்பு கூட இல்லாம அரசியல் பணிசெய்கிறார் கர்மவீரர் காமராஜர் அவர்கள். சுய நலமே இல்லாமல் பொது நலத்தோடு ஒருவன் இருந்தான் என்றால் அவன் பெயர் காமராஜ் ஆக மட்டும் தான் இருக்கும்.

Friday, September 9, 2011

மங்காத்தா -விமர்சனம்
 தல அறிமுகம் ஆவதே உட்டாலக்கடி கிரி கிரி சைதாபேட்டை வடகிரி மாதிரி அசத்தலா அறிமுகம் ஆகிறார். என் கவுண்டர் குற்றவாளியை போலீஸ் தயார் செய்து வைத்திருந்த ரௌடிகளிடமும், போலீஸிடமும் இருந்து காப்பாற்றுகிறார்.

நல்ல நாட்டுக்கடை என்று சொல்லகூடிய லட்ஷ்மி ராய்யுடன் குத்தாட்டம் அடுத்து தலவீட்டிலும் இரவு தொடர்ந்து, காலையில் போன் அடிக்குது எடுத்து பேசுகிறார் மறு முனையில் அவருடைய காதலி - த்ரிஷா, என்ன நைட்டு குடிச்சியா என்று கேட்கிறார் தல இல்லை நைட்டு ஒரு சின்ன வேலை இருந்தது என்று சொல்கிறார் சரி நான் உன் வீட்டுக்கு வருகிறேன் என்று போனில் முத்தமிட்டுவிட்டு வைத்து விடுகிறார் த்ரிஷா.

உடனே தல இனிமே சத்தியமா குடிக்கவே கூடாது என்று சொல்லி திரும்பி படுக்கிறார் பக்கத்தில் ல்ட்ஷ்மி ராய் படுத்திருக்கிறார், தல - நீ யார் என்று கேட்க, நைட்டெல்லாம் என்னைய கொஞ்சோ கொஞ்சிட்டு இப்ப யாருன்னா கேட்கிற என்கிறார்.

ஐயோ நீ கிளம்பு எனக்கு வேலைஇருக்கு என்கிறார்.

லட்ஷிமி ராய் அங்கேயே டர்க்கி டவலை கழற்றி விட்டு மாற்று உடையை மாற்றி விட்டு நிற்கிறார், தல அவளை அப்படியே தள்ளிக்கொண்டு போய் கதவுக்கு வெளியில் விடும்போது என்னுடைய hand bag உள்ளே இருக்கு எடுத்துக்கிறேன் என்று சொல்லும் போதே த்ரிஷா வந்து விடுகிறார்.

தல நடிப்பு இங்கே தான் சூப்பர் அப்படியே ராய் யாருன்னே தெரியாதது போல அவரு மேல் மாடியில் இருக்காரு என்று சொல்லி த்ரிஷாவை கூட்டிக் கொண்டு உள்ளே போய் அவரை உட்காரவைத்து விட்டு அந்த hand bagஐ தேடும்போது தல நன்றாக இயல்பாகவே நடித்து ரசிகர்களின் கைத்தட்டலை வாங்கினார்.

அதே போல பிரேம்ஜிக்கும் நல்ல ஓப்பனிங் சீன் இருக்கு அவர் மும்பையில் ரயிலை விட்டு இறங்கும்போது ஒரு பாட்டு உடனே நடந்து வரும்போது லட்ஷிமி ராய் மீது மோதல் ராய் கையில் வைத்திருந்த பொருட்கள் கிழே விழுந்தவுடன் ராய் உட்கார்ந்து எடுக்கும் போது அப்படியே ராயை காம கண்ணில் பார்த்து ஜொல்லு வடிப்பது நன்றாகவே இருந்தது. லட்ஷ்மிராயின் உடையும் நன்றாகவே இருந்தது சீலை அணிந்து போதுமான அளவு கவர்ச்சி காட்டி இருக்கிறார்.

அப்படியே த்ரிஷா வீட்டுக்கு போகிறார் த்ரிஷா அப்பாவாக ஜெயபிரகாஷ் பேசிக் கொண்டிருக்கும் போது அவர் அப்பா கேட்கிறார் அஜித்த பார்த்து, உங்களுக்கு என்ன வயசாகிறது என்று கேட்கும் போது, நான் இருக்கும் போது இதெல்லாம் அவரிடம் கேட்க கூடாது என்று செல்லமாக கோபிக்கிறார். தல உடனே இந்த மே மாத்தில் இருந்து 40 ஆகிறது என்று அவருடைய உண்மையான் வயசை சொன்னவுடன் அவருடைய நேர்மை தெரிகிறது.

அப்படியே ஒரு பாட்டு ..

ஆக்‌ஷன் கிங் வருகிறார் கிரிகெட் சூதாட்டப் பணத்தை பிடிப்பதற்காக அவருடைய தலைமையில் போலிஸ் குழு ஒன்று அமைக்கப்பட்டு சூதாட்டாகாரர்களையும் சூதாட்ட பணத்தையும் பிடிக்க முறபடுகிறார் இப்படியே படம் நகர்கிறது.

அப்படியே பிரேம் ஜியை வைபவ் க்கும் அஞ்சலிக்கும் நடக்கும் கல்யாணத்தில் சந்திக்கிறார். வைபவ் ஜெயபிரகாஷின் உதவியாளராக இருக்கிறார் அஞ்சலி த்ரிஷாவின் நண்பராக இருக்கிறார்.

தல-யிம் த்ரிஷாவும் ஒரு பொது இடத்தில் பேசிக் கொண்டு பிரிகிறார்கள் அப்பொழுது தலயை பிரேம்ஜி சந்திச்சி சார் எப்படி இருக்கீங்கன்னு கேட்க தல நீங்க யாரு என்கிறார் சார் நாம கல்யாணத்தில் பார்த்தோமே என்கிறார் அப்படியே என்ன சார் குடிக்க வந்தீங்களா என்று பேசிக் கொண்டே இருவரும் ஒரு பாருக்குள்ளே குடிக்க சென்று நல்லா குடித்துவிட்டு போதையில் இருக்கும் போது நாங்க எல்லாம் சூதாட்டப் பணத்தை கொள்ளையடிக்க போகிறோம் என்பதை உளறிவிடுகிறார்.

வெளியில் வந்தும் மீண்டும் ஒரு பாட்டில் வேண்டி இரு கடையின் கதவை தட்டுகிறார் விஜய் வசந்த் கதவை திறக்க இதென்னடா வசந்த் அன் கோ ந்னு நினப்பா என்று கலாயிக்கிறார் அப்படியே அவயே ஒரு ஆஃப் பாட்டிலும் மிக்ஸிங்கிக்கு வாட்டர் பாட்டிலும் வாங்கி கொண்டு தல காரில் சென்று கொண்டிருக்கும் போது மீண்டும் தல அவர்கள கொள்ளையடிப்பதை பற்றி விசாரிக்கிறார் பிரேம்ஜி எல்லாத்தையும் போட்டு உளறி தள்ளிவிடுகிறார்.

இப்படியே கதை நகர்கிறது மீண்டும் பிரேம்ஜியும் அவருடைய நண்பர்களும்  சேர்ந்து எப்படி கொள்ளையடிப்பது என்று பேசிக் கொண்டிருக்கும் போது நாம் சரியாக பிளான் பண்ணி திருடி விட்டால் கோடிஸ்வரர்கள் மாட்டிக் கொண்டால் அவ்வளவுதான் வாழ்க்கை என்று சொல்லும் போது பிரேம்ஜியின் வயிறு கலக்குவதை நல்ல நகைச்சுவையாக எடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் எல்லாம் பேசி முடித்து வெளியில் வரும்போது தல அவர்களை சந்தித்து என்ன கொள்ளையடிக்க போறீங்களா என்று கேட்க எல்லாரும் திறு திறு என்று முழிக்க இல்ல நாங்க சும்மா வெளியில் போறோம் என்கிறார்கள் தல உடனே எல்லாத்தையும் சொல்லிட்டான் ப்ரேம்ஜி என்கிறார் இப்பொழுது தலயிம் அந்த கூட்டணியில் சேர்ந்து கொள்ளையடிச்ச பிறகு அந்த பணத்தை யாருக்கும் தராமல் மற்றவர்களை கொன்றுவிட்டு நாம் எடுத்துக் கொள்ளவேண்டும் என்று நினைத்து பார்க்கும் சீன் ரொம்ப நன்றாக இருக்கிறது.

தல money  money  என்று சொல்லும் போது அவருடைய கர்ஜனை நன்றாக இருக்கிறது.

இடைவேளை

அந்த சூதாட்டப் பணம் ஜெயபிரகாஷின் தியேட்டருக்கு வந்து அதை புக்கீஸ் எல்லாரும் பிரித்து கொள்வது தான் திட்டம் இந்த இடத்தில் வந்து தல தலைமையில் கொள்ளையடிப்பது என்பது இவர்களின் திட்டம்.

இந்த பணம் வருவது போலிஸுக்கு தெரிந்தும் அவர்களும் நோட்டமிடுகிறார்கள். ஆனால் அந்த பணம் அங்குவராமல் வேறெங்கோ கொண்டு செல்லப் போவதாக சொல்கிறார் தல அப்படியே ஒரு பிளான் போட்டு அந்த பணத்தை கொள்ளையடிக்கிறார்கள் கொள்ளையடித்து ஒரு பாழடைந்த குடோனுக்குள் வைத்து பூட்டிவிட்டு அதை யார் திறந்தாலும் மற்றர்வகளுக்கு அலர்ட் வரும்படி புரோகிராம் செய்கிறார் பிரேம்ஜி.

இப்படியே ஜெயபிரகாஷுக்கு  புக்கீஸ் எல்லாம் போன் செய்து பணத்தை ஒழுங்காக கொடுக்கும் படி மிரட்டுகிறார்கள். அவரும் பணத்தை கண்டுபிடிக்க ஆட்களை அனுப்பி தேடிக் கொண்டுருக்கும் போது தல அங்கே பார்ட்டி வைத்து கொள்ளையை கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள்.

ஜெயபிரகாஷின் ஆள் அரவிந்த் வைபவ் வை பார்த்து சந்தேகித்து துரத்தி பிடித்து அடிச்சி எங்கே வைத்திருக்கிறாய் பணத்தை என்று கேட்கிறார்கள் உடனே ஜெயபிரகாஷ் உள்ளே வருகிறார் அவரது பின் அஜித் துப்பாக்கியுடன் நிற்கிறார் சண்டை போட்டு வைபவ் காப்பற்றி பணம் இருக்கும் இடத்துக்கு செல்கிறார்கள்.

பிரேம்ஜி வரசொல் என்று தல கேட்கிறார் அவருக்கு போன் செய்தால் எடுக்க மாட்ங்கிறான் என்று சொல்கிறார் வைபவ் சரி நாமலே கதவை திறக்கலாம் என்று சுடுகிறார் தல, பிரேம்ஜி புரோகிராம் செய்தது போல அலர்ட் மெசேஜ் எதுவும் வரவில்லை அது போல  உள்ளேயும் பணமும் இல்லை ஐந்தில் இருவர் பிரேம்ஜியிம், அஸ்வினும் கொள்ளை பணத்தை கொண்டு சென்று கோவாவில் கும்மாலம் போடுகிறார்கள் அங்கே லட்ஷ்மி ராயும் இருக்கிறார் கொள்ளை பணத்தை மூவரும் பிரிப்பதற்கு பதிலாக நாம் இருவரும் எடுத்துகிட்டு ப்ரேமை போட்டுத் தள்ளுவோம் என்கிறான் அஸ்வின். ஆனால் எதிர்பாரா விதமாக ல்ட்ஷ்மிராய் அஸ்வினை போட்டு தள்ளிவிட்டு ப்ரேமுடன் செல்ல முற்படும்போது அஜித் டீமும், அர்ஜூன் போலீஸ் டீமும் அங்கே வந்துவிடுகிறது அஜித் எல்லாரையும் போட்டு தள்ளிவிட்டு அர்ஜூனும், தலயும் பணத்தை பிரித்துக் கொண்டு கட்டடத்திற்கு தீயிட்டு பணம் தீயில் எரிந்ததை போன்று அரசுக்கு சொல்லிவிட்டு ஆளுக்கு பாதி பணத்தை எடுத்துகொண்டு மலேயாவில் செட்டில் ஆகிவிடுகிறார் அஜித்.

நல்ல திரைகதை ஆனால் கதை என்று ஒன்றும் இல்லை.

வரிகளே புரியாத பாடல்கள். தியாகராஜ பாகவதர் படத்தில் வருவதைப் போல் 10 நிமிடங்களுக்கு ஒரு முறை பாடல் சண்டை காட்சிகள் என்றே கதை வேகமாக நகருகிறது.

நல்ல கண்கொள்ளா காட்சிகள் கோவாவில் காட்டுகிறார்கள்  இதற்காகவது மீண்டும் ஒரு முறை பார்க்கலாம்.

மங்காத்தா ஒரு மெகா ஆர்ட் மற்றும் மெகா ஆர்டிஸ்ட் படம்.

அஜித்திற்காகவே சின்ன வேடங்களில் முன்னனி நடிகை அஞ்சலி நடித்திருக்கிறார் இவரை போலவே லட்ஷ்மி ராயும் நடித்து இருக்கிறார் வர்வேற்க தக்கது.

அஜித் ரசிகர் மன்றத்தை களைத்துவிட்டாலும் அஜித்துக்கென்று ரசிகர்கள் பட்டாளம் பலதர பட்ட மக்களும் இருக்கிறார்கள் என்றே சொல்லலாம்.

அஜித் ஒரு மாஸ் ! தல ஒரு மாஸ் !