முன்னால் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறகு ஒரு சரியான மற்றும் வலிமையான தலைமை இல்லாமல் பாஜக தவித்துக் கொண்டிருப்பது அதனை பின்புலத்தில் இருந்து இயக்கும் RSS க்கு பெரிய சவலாக இருக்கிறது.
மக்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தும் பாரளுமன்றத்தை முடக்கியும் எதிர்கட்சி தலைவராக நல்ல விதமாக பாரளுமன்றத்திலே நடந்து கொண்டாலும் தன் பங்குக்கு பாஜகவுக்கு பெயர் வாங்கி கொடுத்தாலும் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க RSS தயங்குகிறது ஏன் என்றால் அவர் ஒரு பெண் என்பதால்.
மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் அருண்ஜெட்லியும் தன் வேலைகளை சிறப்பாக செய்து அரசியல் செய்தாலும் அவர் வாஜ்பாயிடம் அரசியல் கற்றுக் கொண்ட சீடர் என்பதால் அவரிடம் கொஞ்சம் இரக்க குணமும், இந்துத்துவாக்கு எதிரான மனநிலையும் இருப்பதனால் RSS அவரை ஒரு பிரதம வேட்பாளாரக அறிவிக்க தயங்குகிறது.
இது நாள் வரை கடந்த 7 ஆண்டுகாலமாக சரியான தலைமை இல்லாததால் அந்த கட்சி பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது RSS. அதன் விளைவாக எந்த ஒரு பாஜக தலைவரும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்படாமல் செயலிழந்து கிடப்பதானால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கருதிய RSS குள்ளநரிகள், பசு வேசம் போட ஆரம்பித்து இருக்கிறார்கள்
பாபா ராம்தேவ் வெளிநாட்டில் பதுக்கு வைத்திருக்கும் கருப்பு பணத்திற்கு எதிராக டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத்ததை ஆரம்பித்தார் அப்பொழுதும் அவருடைய உண்ணாவிரத கூட்டத்திலே காவி நிறங்களாகத்தான் இருந்தது இதற்கு எல்லாம் RSS தான் காரணம் இவர்களை எல்லாம் தூண்டிவிட்டு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக போட்ட திட்டம் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடித்து காங்கிரஸ் அரசாங்கம்.
அதன் பிறகு ஊழலுக்கு எதிராக அன்னா ஹஜாரேவை தூண்டி போராட்ட களத்திற்கு அனுப்பியுள்ளது RSS.
இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டித்தும் வந்துள்ளது. அன்னாவின் பின்புலத்தில் RSS இயக்கம் இருந்து செயல்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை கூறியும் குற்றம் சாட்ட்சியும் வந்துள்ளார்கள். இது நாள் வரைக்கும் வாய்திறக்காமல் இருந்த RSS இப்பொழுதுதான் வாய்திறந்துள்ளது.
RSS ன் தலைவர் மோகன்ராவ் பகவத் இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசியது,
ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. அதே நேரத்தில் அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை.
எங்களுக்கும் ஹசாரேவுக்குமான தொடர்பு நீண்ட காலம் பின்னோக்கியது. கிராமப் புறங்களில் ஹசாரே மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தது ஆர்எஸ்எஸ் தான். எங்களது கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் கூட ஹசாரே எங்களுக்கு உதவினார்.
கிராம வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டபோது தான் ஊழலுக்கு எதிராக இயக்கத்தைத் துவக்குமாறு ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை சொன்னது. நான் கடந்த ஜூன் மாதத்தில் ஹசாரேவை சந்திப்பதாகக் கூட இருந்தது. ஆனால், இருவரும் வேறு சில பணிகளில் தீவிரமாக இருந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.
ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்குவது தொடர்பாக பாபா ராம்தேவிடம் கூட ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால், ஹசாரேவுடன் இணைந்து செயல்படுமாறு ராம்தேவை நாங்கள் வலியுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஹசாரேவின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்குமாறு ராம்தேவிடம் கோரியுள்ளோம்.
இதனால் பாஜக செயலிழந்து கிடப்பதையும் மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும் அன்னா ஹஜாரேவையும், பாபா ராம்தேவையும் களம் இறக்கிவிட்டு இருக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவாகிறது.
கொஞ்சம் கொஞ்சமாக அன்னாவின் முகம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. மக்களுக்கு அன்னா டீம் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நிலையில் மீதி அன்னா மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.
அன்னா போன்ற ஆட்களை மூளை சலவை செய்து RSS இயக்கம் தனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. இனிமேலும் அன்னா அவர்கள் ஊழலுக்கு எதிராக என்கிற வாதத்ததை விட்டு தன்னுடைய கிராமத்திற்கே சென்று விட்ட பணிகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.