எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 9, 2011

அன்னா ஹசாரேவுடன் ஆர்.எஸ்.எஸ் ரகசிய ஒப்பந்தம் அம்பலம்

   முன்னால் பிரதமர் வாஜ்பாய்க்கு பிறகு ஒரு சரியான மற்றும் வலிமையான தலைமை இல்லாமல் பாஜக தவித்துக் கொண்டிருப்பது அதனை பின்புலத்தில் இருந்து இயக்கும் RSS க்கு பெரிய சவலாக இருக்கிறது.


மக்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் சுஷ்மா சுவராஜ் ஆளும் காங்கிரஸ் அரசுக்கு பல நெருக்கடிகள் கொடுத்தும் பாரளுமன்றத்தை முடக்கியும் எதிர்கட்சி தலைவராக நல்ல விதமாக பாரளுமன்றத்திலே நடந்து கொண்டாலும் தன் பங்குக்கு பாஜகவுக்கு பெயர் வாங்கி கொடுத்தாலும் அவரை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க RSS  தயங்குகிறது ஏன் என்றால் அவர் ஒரு பெண் என்பதால். 


மாநிலங்களவை எதிர்கட்சி தலைவராக இருக்கும் அருண்ஜெட்லியும் தன் வேலைகளை சிறப்பாக செய்து அரசியல் செய்தாலும் அவர் வாஜ்பாயிடம் அரசியல் கற்றுக் கொண்ட சீடர் என்பதால் அவரிடம் கொஞ்சம் இரக்க குணமும், இந்துத்துவாக்கு எதிரான மனநிலையும் இருப்பதனால் RSS அவரை ஒரு பிரதம வேட்பாளாரக அறிவிக்க தயங்குகிறது.


இது நாள் வரை கடந்த 7 ஆண்டுகாலமாக சரியான தலைமை இல்லாததால் அந்த கட்சி பெரும்பாடுபட்டுக் கொண்டிருக்கிறது. எப்படியாவது ஆட்சியை பிடித்துவிடவேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறது RSS. அதன் விளைவாக எந்த ஒரு பாஜக தலைவரும் ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக செயல்படாமல் செயலிழந்து கிடப்பதானால் ஆட்சியை பிடிக்க முடியாது என்று கருதிய RSS குள்ளநரிகள், பசு வேசம் போட ஆரம்பித்து இருக்கிறார்கள் 


பாபா ராம்தேவ் வெளிநாட்டில் பதுக்கு வைத்திருக்கும் கருப்பு பணத்திற்கு எதிராக டில்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரத்ததை ஆரம்பித்தார் அப்பொழுதும் அவருடைய உண்ணாவிரத கூட்டத்திலே காவி நிறங்களாகத்தான் இருந்தது இதற்கு எல்லாம் RSS தான் காரணம் இவர்களை எல்லாம் தூண்டிவிட்டு உள்நாட்டு குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக போட்ட திட்டம் என்பதை அறிந்து கொண்டு அதை முறியடித்து காங்கிரஸ் அரசாங்கம்.


அதன் பிறகு ஊழலுக்கு எதிராக அன்னா ஹஜாரேவை தூண்டி போராட்ட களத்திற்கு அனுப்பியுள்ளது RSS.


இதை காங்கிரஸ் இயக்கம் வன்மையாக கண்டித்தும் வந்துள்ளது. அன்னாவின் பின்புலத்தில் RSS இயக்கம் இருந்து செயல்படுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் பலமுறை கூறியும் குற்றம் சாட்ட்சியும் வந்துள்ளார்கள். இது நாள் வரைக்கும் வாய்திறக்காமல் இருந்த RSS இப்பொழுதுதான் வாய்திறந்துள்ளது.


RSS ன் தலைவர் மோகன்ராவ் பகவத் இந் நிலையில் கொல்கத்தாவில் நிருபர்களிடம் பேசியது,


ஊழலுக்கு எதிரான தனது இயக்கத்தில் ஆர்எஸ்எஸ்சும் சேர வேண்டும் என்று அன்னா ஹசாரே கோரிக்கை வைத்தால் அதை ஏற்போம். ஆனால், இதுவரை அப்படிப்பட்ட கோரிக்கை ஏதும் அவரிடமிருந்து வரவில்லை. அதே நேரத்தில் அன்னாவின் இயக்கத்தில் சேர ஆர்எஸ்எஸ் தொண்டர்களை நாங்கள் தடுக்கவில்லை.


எங்களுக்கும் ஹசாரேவுக்குமான தொடர்பு நீண்ட காலம் பின்னோக்கியது. கிராமப் புறங்களில் ஹசாரே மேற்கொண்ட வளர்ச்சிப் பணிகளை வெளியுலகுக்குத் தெரிய வைத்தது ஆர்எஸ்எஸ் தான். எங்களது கிராமப்புற வளர்ச்சித் திட்டங்களில் கூட ஹசாரே எங்களுக்கு உதவினார்.


கிராம வளர்ச்சிக்காக இணைந்து செயல்பட்டபோது தான் ஊழலுக்கு எதிராக இயக்கத்தைத் துவக்குமாறு ஹசாரேவுக்கு ஆர்எஸ்எஸ் யோசனை சொன்னது. நான் கடந்த ஜூன் மாதத்தில் ஹசாரேவை சந்திப்பதாகக் கூட இருந்தது. ஆனால், இருவரும் வேறு சில பணிகளில் தீவிரமாக இருந்ததால் சந்திப்பு நடக்கவில்லை.


ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்குவது தொடர்பாக பாபா ராம்தேவிடம் கூட ஆர்எஸ்எஸ் ஆலோசனை நடத்தியது. ஆனால், ஹசாரேவுடன் இணைந்து செயல்படுமாறு ராம்தேவை நாங்கள் வலியுறுத்த முடியாது. அதே நேரத்தில் ஹசாரேவின் இயக்கத்தில் ஒரு பங்கு வகிக்குமாறு ராம்தேவிடம் கோரியுள்ளோம்.


இதனால் பாஜக செயலிழந்து கிடப்பதையும் மறைமுகமாக ஆளுங்கட்சிக்கு நெருக்கடி கொடுப்பதற்காகவும் அன்னா ஹஜாரேவையும், பாபா ராம்தேவையும் களம் இறக்கிவிட்டு இருக்கிறார்கள் என்பது தெள்ள தெளிவாகிறது.


கொஞ்சம் கொஞ்சமாக அன்னாவின் முகம் வெளுக்க ஆரம்பித்துள்ளது. மக்களுக்கு அன்னா டீம் மீது இருந்த நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்த நிலையில் மீதி அன்னா மீது இருந்த கொஞ்சநஞ்ச நம்பிக்கையும் தகர்ந்து விட்டது.


அன்னா போன்ற ஆட்களை மூளை சலவை செய்து RSS இயக்கம் தனது சுயநலத்திற்கு பயன்படுத்திக் கொள்கிறது. இனிமேலும் அன்னா அவர்கள் ஊழலுக்கு எதிராக என்கிற வாதத்ததை விட்டு தன்னுடைய கிராமத்திற்கே சென்று விட்ட பணிகளை தொடரவேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.Wednesday, November 2, 2011

அண்ணா நூற்றாண்டு நூலகம் VS அதிமுக அராஜக அரசாங்கம்

கடந்தாண்டு செப்டம்பர் மாதத்தில் கலைஞரால் திறக்கப்பட்ட அண்ணா நூற்றாண்டு நூலகத்தை மூடி அதை எழும்பூரில் அமைந்திருக்கும் அரசு தேர்வாணைய இயக்குனரகத்திற்கு மாற்ற போவதாக அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டு மாற்றபட இருக்கிறது என்கிற அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறார்கள்.அண்ணா நூற்றாண்டு நூலகம் ஒரு பார்வை :
* அமைவிடம்: கோட்டூர்புரம், சென்னை
* அடிக்கல் நாட்டப்பட்டது: 16.8.2008
* திறப்பு: 15.9.2010
* செலவு: ரூ.172 கோடி
* மொத்த பரப்பளவு: 8 ஏக்கர், 8 தளங்கள்
* நூலக கட்டடத்தின் மொத்த பரப்பரளவு: 3.75 லட்சம் சதுர அடி
* குழந்தைகள் முதல், மாணவர்கள் வரை அனைவருக்கும் தனித்தனி தளங்களில் நூலக வசதி
* 417 கார்கள், 1,026 மோட்டார் சைக்கிள்களை நிறுத்தும் வசதி
* 30 பேர் மற்றும் 151 பேர் அமரும் வகையில், இரு தனி கூட்ட அரங்குகள்
* 1,100 பேர் அமரும் வகையில், பெரிய ஆடிட்டோரியம்
* தற்போதைய நிலவரப்படி நூல் இருப்பு: 5.25 லட்சம்
* சாதாரண நாட்களில் நூலகத்திற்கு வரும் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 1,000
* விடுமுறை நாட்களில் பார்வையாளர்கள் எண்ணிக்கை: 2,500 முதல் 3,000 வரை.


எட்டு ஏக்கர் நிலத்தில்...:கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம் குறித்த விவரங்கள்:
* எட்டு ஏக்கர் நிலத்தில், 172 கோடி ரூபாய் செலவில் இந்த வளாகம் கட்டப்பட்டுள்ளது.
* மொத்தம் ஒன்பது மாடிகள் கொண்டதாக கட்டப்பட்டுள்ளது.
* மூன்று லட்சத்து 33 ஆயிரத்து 140 சதுர அடி பரப்பளவு கொண்டது.
* 50 ஆயிரம் சதுர அடியில் பிரமாண்ட அரங்கம் உள்ளது.
* 80 பேர் அமரக்கூடிய இரண்டு கூட்ட அரங்குகள்.
* 15 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகளுக்கான வசதிகள் கொண்ட பிரிவு.
* 420 கார்கள் உட்பட 1,500 வாகனங்கள் நிறுத்துவதற்கான இட வசதி.

இது போன்ற வசதிகள் கொண்ட நூலகத்தை மாற்றி இந்த இடத்தில் உயர் குழந்தைகள் சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவோம் என்கிறார்கள்.

புதிய சட்ட சபை வளாகத்தை மருத்துவமனையாகவும் மருத்துவ கல்லூரியாகவும் மாற்றி அதை பொதுமக்கள் வசதிக்காக விடப்படும் என்று அறிவித்திருந்தார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று அப்பொழுது பெரிதாக கேள்விகள் எதுவும் எழவில்லை ஏனென்றால் அந்த கட்டிடம் முழுமையாக கட்டி முடிக்கப்படாமல் இருந்தது சரி கலைஞர் மேல் இருந்த கழ்ப்புணர்ச்சி காரணமாக இது போன்ற முடிவெடுத்தாலும் அந்த கட்டிடத்தை நல்ல முறையாக பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இருக்கும் ஆகையால் எல்லாரும் சமாதானம் ஆகி ஏற்றுக் கொண்டார்கள்.

ஆனால் இந்த நூலகமானது பிரத்தேகரமாக வடிவமைக்கப்பட்டு சிறப்பு வாய்ந்த கட்டிடமாக கட்டப்பட்டு பொதுமக்கள் கடந்த ஒரு வருடங்களாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அப்படி இருக்கும் போது இந்த நூலகத்தை மாற்ற வேண்டிய அவசியம் என்ன.

எல்லாம் கலைஞரின் மேலே உள்ள வெறுப்புணர்ச்சி அந்த வெறுப்புணர்ச்சியை பொதுமக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட மிகவும் சிறப்பு வாய்ந்த நூலகத்தை மாற்றுவதென்பது மக்களை மடையர்கள் என்று நினைத்துக் கொண்டு ஆட்சி அதிகாரம் இருக்கிறது என்கிற திமிரில் எகத்தாலத்தில் இனி ஐந்து வருடங்கள் நம்மை யார் என்ன கேட்கமுடியும் என்கிற ஆனவத்தில் இது போன்று ஆடிக் கொண்டிருக்கிறார் ஜெயலலிதா அவர்கள் அவருடைய ஆட்டம் இப்பொழுது தான் ஆரம்பித்திருக்கிறது.

இது போன்ற சுயநலவாதிகளைத் தான் நாம் மீண்டும் மீண்டும் முதலமைச்சராக கொண்டுவந்துக் கொண்டிருக்கிறோம் என்றால் வெட்ககேடாக இருக்கிறது.

கலைஞருக்கு பெயர் வாங்கிக் கொடுக்கிற திட்டத்தையெல்லாம் அழிக்க வேண்டும் என்றே ஜெயலலிதா அவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இவர்கள் மக்களுக்காக ஆட்சி செய்யவில்லை.

திமுக ஆட்சியில் பெயர் சொல்லுகின்ற நலதிட்டங்கள் கொண்டுவந்தார்கள் என்றால் நீங்கள் அதற்கு மேல் பெயர் சொல்லுகின்ற திட்டங்களை கொண்டு வாருங்கள்.

கலைஞர் அவர்கள் நல்ல நூலக்த்தை கொண்டுவந்தார்கள் என்றால் நீங்களும் இது போன்ற நூலகத்தை மற்ற நகரத்தில் ஏற்படுத்தலாமே அதை விடுத்து அந்த நூலகத்தை அழிப்பதென்பது மிகவும் மோசமான செயலாகும் கண்டிக்கதக்கது.

அரசு நூலகத்தை மாற்றுவதை மறுபரிசீலனை செய்து அந்த நூலகத்துக்கு வேண்டிய வசதிகளை செய்துகொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.