எண்ணங்களின் பிரதிபலிப்பு

Friday, January 30, 2009

முத்துகுமாருக்கு அஞ்சலிஈழத்திற்க்காக இன்னுயிர் நீத்த எனது அன்பு சகோதரனுக்காக எனது மவுன அஞ்சலியை காணிக்கையாக்குகிறேன்.

ஏன் இந்த தியாகம் வேண்டாம் ஒரு போதும் இது போல் இழப்புகள்.

எத்தனையோ வழிமுறைகள் இருக்கு போராட.

தேவையில்லை இந்த உயிர் மாய்ப்பு.

குரல் கொடுப்போம்! போராடுவோம்! சாகும் வரை போராடுவோம்!

பிறப்பு இறப்பதிற்கில்லை,போரடுவதற்கே !

Thursday, January 29, 2009

முஷரஃப் என்ன ஹீரோவா ?

போராட்டமே வாழ்க்கை என்ற போது போராடமல் இருக்க முடியுமா. பொது நலம் என்கிற போது சுயநலத்தை பார்ப்பது அது பொது நலத்திற்கு செய்யும் துரோகம் அல்லவா!.

அது போலதான் நாடு என்று வரும் போது வீடு என்று நினைத்தால் அது நாம் நம் நாட்டிற்கு செய்யும் துரோகம் ஆகாதா!

அது போல என் நாட்டு மக்கள் என்கிற போது என்குடும்பம் என்றால் நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் ஆகாதா!

அப்படித்தான் இருந்தார்கள் அவர்கள் துரோகிகளாக எங்கள் நாட்டிற்கு பூட்டோவும் அவருடை மகள் பெனசிர் பூட்டோவும் மற்றும் நவாப்பும்.

நான் அவ்வாரு இருக்க கூடாது என்றுதான் என்னை நான் அர்பணித்தேன் என் நாட்டிற்காக.

நான் பிறந்தது இந்தியா என்றாலும் வளர்ந்தது பாகிஸ்தானில் தான். என்னுடை அப்பா, அம்மா மற்றும் என்னுடைய சொந்தங்கள் எல்லோரும் நன்றாக படித்த குடும்பம் என்பதால் என்னையும் நன்றாக படிக்கவைத்தனர் நானும் நன்றாக பட்டித்தேன். சின்ன வயதில் எல்லோருக்கும் இருக்கும் குறும்புத்தனத்தில் நான் குறைந்தவன் அல்ல. எல்லோரையும் தூக்கிச் சாப்பிடும் அளவுக்கு நான் நிறையவே குறும்பு செய்வேன் அதனால் என்னுடைய பள்ளியில் ஆகட்டும், என்குடும்பத்தில் ஆகட்டும் என்னிடையே கடுமையாக நடந்து கொள்வார்கள்.

எல்லோருக்கும் பருவக் காலத்தில் வரும் காதல் உணர்ச்சிகள் காதலி எல்லாம் இருந்தது. அதேபோல் எல்லோருக்கும் நடக்கும் சம்பவம் போல் எனக்கும் தோல்வியில் முடிந்தது.

அவரை அவரே ஹீரோவாக காட்டிக் கொள்ளாவிட்டால் வேரு யார்தான் அவரை ஹீரோ என்று சொல்வார்கள். அதனால் தன் என்னவோ அவர் தன்னை ஹீரோவாகவே சித்தரித்து பேசுகிறார்.

மிகவும் அழகானவர், உடல் தோற்றத்திலும் சரி முக வசீகரத்திலும் சரி, படிப்பிலும் சரி மற்றும் விளையாட்டிலும் சரி அவர் மற்றவர்களுக்கு சளைத்தவர் இல்லை ஆனாலும் அவர் உண்மையில் அவர் அவ்வாரு இருந்தாரா என்ற சந்தேகம் எல்லாருடை மனதிலும் எழும். ஆனாலும் நான் நினைக்கிறேன் அதுவெல்லாம் பள்ளிப் பருவதில் ஆகட்டும் கல்லூரிப் பருவத்தில் ஆகட்டும் எந்த ஒரு இளைஞனும் அவ்வாருதான் இருப்பார்கள்.


அவர் படிப்பிலும் சரி விளையாட்டிலும் சரி சக மாணவர்களைப் போன்றும் தான் இருந்துள்ளார். அவர் சக இளைஞர்கள் போல வாலிப வயதில் காதல் லீலைகள் செய்துள்ளார் அவ்வளவே அதில் எந்த ஒரு ஹீரோயிசமும் இல்லை.

எல்லோருக்கும் அந்த வயதில் பருவ மாற்றம் வரும். ஹார்மோன்களின் சூழ்ச்சிக்கு எல்லோரும் அகப்படும் பரும் தான் அதில் எந்த ஹீரோயிசமும் இருப்பது போல எனக்கு தெரிய வில்லை.

இதையே அவர் மிகைபடுத்தி பேசுகிறார் என்றால் அவருக்கு எந்தளவுக்கு தன்னம்பிக்கை உணர்வு இருந்திருக்கும்.

கல்லூரிப் படிப்பு முடிந்தவுடன் ராணுவத்தில் பணிபுரிய வேண்டும் என்ற உணர்வு இருந்தது. அப்பொழுதெல்லாம் நாட்டிற்காக ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணமும் இருந்தது.

கல்லுரிப் படிப்பும் முடிந்தது ராணுவத்தில் வேலையும் கிடைத்து விட்டது பின்னே என்ன கல்யாணம் தான். காதலி எல்லாம் இல்லை தோல்வி. பெற்றோரகள் பார்க்கும் பெண் தான் இனிமேல் காதலி.

வீட்டில் பெண்ணும் பார்த்துவிட்டார்கள் நான் மட்டும் பெண்ணை பார்க்கவில்லை. போட்டோ மட்டும் காட்டினார்கள் பிடித்து விட்டது அழகாக இருக்கிறாள் நேரில் பார்க்க வேண்டுமே.

ஆம் பார்த்தே ஆகவேண்டும் முடிவெடுத்தால் எடுத்தது தான் அதில் எந்த மாற்றாமும் இல்லை. பஸ்ஸை பிடித்து பெண் வீட்டிற்கு சென்று பார்த்தால் அவருக்கு மிக பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.

என்ன அந்த அதிர்ச்சி என்று கேட்கிறீர்களா?

ஆம் அது அதிர்ச்சி தான் இன்ப அதிர்ச்சி போட்டோவில் அழகாகத் தான் இருந்தாள், ஆனால் நேரில் பேரழகியாக இருந்தாள் என்கிறார். கல்யாணம் மற்றும் குடும்ப வாழ்க்கை மிக நன்றாக சென்றது.

ராணுவத்தில் சேர்ந்த பிறகு மிகவும் ஒழுக்கமாகவும் நாட்டிற்காக உயிரையே விடும் அளவுக்கு நேசித்தமை பற்றியும் நிறை பேசியிருக்கிறார்.

பாகிஸ்தான் என்பது ஒன்றே ஒன்று தான் அரசியலமைப்பு பொருத்த மட்டில். ஆனால் நாடோ இரண்டு அது கிழக்கு பாகிஸ்தான் மேற்கு பாகிஸ்தான். அரசியல்வாதிகள் எப்பொழுதும் போல் ஆளும் கட்சி எதிர்கட்சி மேற்கு பாகிஸ்தானில் மட்டும் ஆனால் கிழக்கு பாகிஸ்தானில் ஒரே கட்சி அதாவது மேற்கு பாகிஸ்தானை எதிர்க்கும் மக்கள் கட்சி.

நியாமாக கிடைக்க வேண்டிய எதையும், மேற்கு பாகிஸ்தானிற்கு கிடைக்கும் எதுவும் கிழக்கு பாகிஸ்தானுக்கு குதிரை கொம்பாகத்தான் இருந்திருக்கிறது. அதனால் தான் மக்கள் எல்லோரும் சேர்ந்து மேற்கு பாகிஸ்தானை எதிர்த்தார்கள்.

நாளும் போராட்டம். பூட்டோவோ தன்னுடைய பங்கிற்கு எரிகிற நெருப்பில் எண்ணை உற்றியதைப் போல் மக்களை போராட்டக் குழுவை இரும்புக் கரம் கொண்டு அடக்க நினைத்தார் ஆனால் அவர் நினைத்தது வேறு நடந்தது வேறு.

ராணுவத்தைக் கொண்டுவந்து அடக்க நினைத்தார் ஆனால் அது சிறிய போராட்டமாக இருந்தது விடுதலை போராட்டமாக மாறியது.

எதிரிக்கு எதிரி நண்பன் என்பதைப் போன்று கிழக்கு பாகிஸ்தான் இந்தியாவை நாடி நட்பு கரம் நீட்டியது. இந்தியாவோ அவர்களுக்கு உதவி எங்களுடைய பலத்தை உடைத்து பங்களாதேஷ் உருவாகுவதிற்கு வழிகோலியது. அதனால் நாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டோம் என்கிறார்.

கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தறாமல் மாற்றாந்தாய் மனப்பான்மையாக நடந்ததை அவர்கள் உணரவில்லை. ஏன் இங்கு நான் இதைச் சொல்கிறேன் என்றால் அவர்கள் அவர்களுடைய தவறை உணராதவரை திருந்த மாட்டார்கள், தப்புக்கு மேல் தப்புதான் செய்து கொண்டிருப்பார்கள் தீவிரவாதத்தை வளர்த்து விட்டது போல்.

பூட்டோவின் ஆட்சி காலத்தில் மிகவும் மலிவாக இருந்தது ஊழல் மட்டுமே. மற்ற எல்லா விலையும் விண்ணைத் தொடும் அளவுக்கு இருந்தது.

ஆட்சி மாற்றம் வந்தால் அவர் திருந்துவார் என்று நினைத்தேன். நான் நினைத்தது போலவே ஆட்சி மாற்றமும் வந்தது. மக்களுக்கு தூரோகம் செய்தவரை ஊழலுக்குப் பெயர் போனவரை தூக்கிலிட்டார்கள். நல்லவேளை அவரை தூக்கிலிட்டார்கள் இல்லையேல் நாடு அவ்வளவுதான் அதல பாதாளத்துக்குத் தான் சென்றிருக்கும்.

ஆட்சியாளர் நாவாப் ஷரீஃப் கொஞ்சம் நன்மையை செய்தார் என்று சொல்வதை விட பூட்டோ அளவிற்கு ஊழல் செய்யவில்லை.

மீண்டும் ஆட்சி மற்றும் காட்சி மாறியது பூட்டோவின் மகள் பெனசிர் பூட்டோ நன்றாக ஆட்சியை நடத்தினார். ஆனால் அவர் தன் அப்பாவை மிஞ்சும் அளவிற்கு தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாரடி பாயும் என்று சொன்ன மாதிரி அவர் நடந்து காட்டினார்.

மீண்டும் ஆட்சி மற்றும் காட்சி மாற்றம் நாவாப் ஷரீஃப் சிறந்த பிரதமராக விளங்குவார் என்றால் அவரும் பெனசிர் செய்த ஆட்சி காலத்தை போன்றே ஆட்சி செய்தார். ஊழல் பெருகியது மக்களின் அடிப்படை வசதிகளைக்கூட அவரால் சரிவர செய்து கொடுக்க முடியாமல் ஊழல் மலிந்து விட்டது. எங்கும் ஊழல் எதிலும் ஊழல். அதனால் எங்கு ராணும் மீண்டும் ஆட்சி அதிகாரத்தை கையில் எடுத்துக் கொள்ளுமோ என்று பயந்து கொண்டிருந்த வேளையில் கார்டினல் ஜெனரல் விருப்ப ஓய்வெடுத்து பதவி விளகினார்.

அந்த இடத்திற்கு என்னைப் நியமித்தால் நன்றாக செயல் படுவேன் என்று கருதி நவாப் என்னைத் தேர்ந்தெடுத்தார். ஆம் நானும் அவர் நினைத்தைப் போலவே என்னுடைய முழு திறமையும், மிகவும் நேர்மையாகவும் நடந்து கொண்டேன் என் நாட்டிற்காக.

கார்கில் போர் என்பது ராணுவ ஆட்சியை கொண்டு வரவேண்டும் என்று நினைத்து போட்ட மிகச் சரியான திட்டம். நாவாப்புக்கு தெரியாமல் இந்தியாவுடன் போரை தொடுத்தது என்பது எல்லாமே அவர் போட்ட பிளான் தான். அந்தப் போரில் வெற்றியோ தோல்வியோ அது அவரின் இமேஜை உலக அரங்கில் உயர்த்தும் என்று நினைத்து செய்த காரியம் என்று நான் நினைக்கிறேன்.

நவாப் தப்பு செய்யும் போது தட்டி கேட்டும், அவர் செய்யும் தப்புக்கு உடந்தையாகமலும் இருந்தேன் அதனால் அவருக்கு என் மீது வெறுப்பு வந்தது. அவர் என்னையும் பதவி நீக்கம் செய்யலாம் என்று சதி செய்த போது அவரால் அது முடியாமல் போனது ஏன் என்றால் ராணுவத்தில் எல்லோரும் அவர் அவருடைய தலைமைக்கு கட்டுப்பட்டு நடந்தார்கள் எனக்கு எதிராக நடக்கும் எல்லா சதி வேளைகளையும் அவர்கள் முறியடித்தார்கள் அதனால் அவரால் என்னை பதவி நீக்கம் செய்ய முடியவில்லை.

நான் எங்கு அவரை பதவி நீக்கம் செய்து ராணுவ ஆட்சியை கொண்டு வந்திடுவேனோ என்று பயந்து கொண்டிருந்தார். உண்மையில் எனக்கு அப்படி எந்த ஒரு எண்ணமும் இல்லை என்கிறார்.

ஆனால் நான் அதை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை. ஏனென்றால் பின்னர் நடந்த, அவர் விளக்கிய சம்பவங்கள் அனைத்தும் சரியாக திட்டமிட்டு இவர் நிறைவேற்றியதாகவே தெரிகிறது.

இவர் இலங்கை சென்று திரும்பும் போது பாகிஸ்தானில் வந்து இறங்காமல் அப்படியே நாடு கடத்த நவாப் உத்தரவு பிறப்பித்ததாக சொல்கிறார். அதனால் விமானம் கடத்தல் எல்லாம் நவாப் செய்தது என்கிறார். அப்படி இவர் ஆகாயத்தில் இருக்கும் போது எப்படி மற்றவர்களுக்கு தெரிந்து நவாப்பை வீட்டு காவலில் வைத்து ராணுவ ஆட்சியை அமுல் படுத்திருக்கிறார்கள் என்று சொன்னால் எப்படி அது சாத்தியம் அதுவும் ராணுவ தலைமை அதிகாரி கார்டினல் ஜெனரல் நாட்டில் இல்லாத போது.

அதனால் தான் நான் சொல்கிறேன் இந்த விமானக் கடத்தல் எல்லாம் இவரே போட்ட சரியான திட்டம். அப்பொழுதுதான் உலக மக்கள் நம்புவார்கள் ராணுவ ஆட்சியை மக்கள் ஏற்ப்பார்கள் என்று அவர் போட்ட திட்டத்தை மிக சரியாக அவருடைய குழு செய்து முடித்து ஆட்சியைக் கைப்பற்றியது.

உண்மையில் அவர் ஒரு மிக நேர்மையான ஜனநாயகவாதி நாம் அவருடைய வாழ்க்கையிலிருந்து நிறைய கற்றுக் கொள்ள வேண்டும்.

அவருடைய ஆட்சிக் காலத்தில் தான் பாகிஸ்தானில் பொருளாதாரம் முன்னேற்றம் கண்டது என்றால் சரியாக இருக்கும்.

இதை எல்லாம் நான் சொல்வதினால் நான் அவருக்காக வக்காளத்து வாங்குகிறேன் என்று நினைக்க வேண்டாம்.

பாகிஸ்தானியர்களின் பார்வையிலே அவர் ஒரு ஹீரோ தான்.


புத்தகம் வாங்க விரும்புவோர் இதை கிளிக்செய்து, இணையதளத்தைப் பார்க்கவும்.

Saturday, January 24, 2009

இரட்டை வேடம் போடும் தமிழக அரசியல் தலைவர்கள்

மத்திய அரசாங்கம் என்பது வெறும் ஒருக்கட்சி மட்டும் ஆளும் அரசாங்கம் இல்லை. பல கட்சிகள் இணைந்து நடத்தும் அரசு.

தேசிய அளவில் காங்கிரஸுக்கும், ப.ஜ.க விற்கும் போன நடந்து முடிந்த நாடளுமன்றத்தேர்தலில் அரிதி பெரும்பான்மை கிடைக்க வில்லை. ஆனால் காங்கிரஸ் தலைமையிலான தேசிய முற்போக்கு கூட்டணிக்கு ஆட்சி அமைக்கும் அளவுக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தனர். அதனால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது.

இப்பொழுது நாம் விஷயத்திறகு வருவோம்.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் தமிழக கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுப்பார்கள் என்று பார்த்தால். யாரும் அவ்வாறு செய்யாமல் தன்னுடைய கட்சி வளர்ச்சியை கருத்தில் கொண்டே நடவடிக்கையை எடுத்து வருகிறார்கள் அது மிகவும் கவலை அளிப்பதாக உள்ளது.

ஈழத்தமிழர்கள் விவகாரத்தில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டினார் கலைஞர் அக்டோபர் மாதத்தில். அப்பொழுது ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி மத்திய அரசுக்கு அனுப்பினார்கள். அந்த கூட்டத்தில் அனைவரும் பதவி விலகவேண்டும் என்று எந்தத் தீர்மானத்தையும் நிறைவேற்றவில்லை. ஆனால் கலைஞர் அவர்கள் தன்னிச்சையாக கூட்டம் முடிந்தவுடன் குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள்ளாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் எங்களுடைய பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பதவி விலகுவார்கள் என்று அறிவிப்பு செய்தார்.

ஏன் அந்த முடிவை அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் எடுக்கவில்லை?

அவர் எங்களுடைய கட்சி பாரளுமன்ற உறுப்பினர்கள் என்று சொன்னதுமே மற்றக்கட்சி காரர்களும் அவ்வாறே அறிவித்தார்கள்.

இந்த நிலைப்பாட்டை ஏன் அனைத்துக் கட்சி கூட்டத்தில் அவர் எடுக்கவில்லை?

தன்னுடைய கட்சியை மட்டும் தியாக கட்சியாக மக்கள் நினைக்க வேண்டும் என்று சுயநலத்தோடு அவ்வாறு செய்தார்.

அதேபோல் மற்ற காங்கிரஸ் மற்றும் ப.ம.க போன்ற கட்சி காரர்களும் மக்களிடையே தங்களுடைய செல்வாக்கு குறையுமே என்று கருதி கலைஞர் சொல்லிவிட்டார் நாமும் சொல்லவேண்டுமே என்று சொன்னார்களே தவிர எதையும் செய்யவில்லை.

இவர்கள் சுய நலத்தோடு மட்டுமே இந்த ஈழக்கருத்தை கையாண்டார்கள் என்றுச் சொன்னால் மிகையாகாது.

கலைஞர் ஒரு மூத்த அரசியல்வாதி இந்த ஈழ விவகாரத்தில் சரியான முடிவை எடுப்பார் என்று பார்த்தால். அவர் சுய நல நோக்கோடுதான் எந்த ஒரு முடிவையும் எடுக்கிறார்.

எனக்கு தெறிந்தவரை முதலில் இருந்தே நடுநிலையாக பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மட்டுமே ஒற்றுமையுடன் எல்லாரும் சேர்ந்து ஈழ விவகாரத்தை கையாள நினைக்கிறார்கள். இதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இதை சொல்வதற்க்காக என்னை ஒரு சார்பாக பேசுவதாக நினைத்துக் கொள்ள வேண்டாம்.

தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸ்காரர்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.

அவர்கள் (தமிழ்நாட்டு காங்கிரஸார்) அதற்க்கு மாறாக,

தொல்.திருமாவளவன் அவர்கள் ஈழ மக்களுக்கு ஆதரவாக காலவரையரையற்ற உண்ணாவிரதம் இருந்தார். தமிழ்நாட்டு காங்கிரஸார் அதையும் விமர்ச்சித்தார்கள். திருமாவளவன் உண்ணாவிரதம் இருந்தாரே என்று நாமும் உண்ணாவிரதம் இருக்க வேண்டுமே என்று கடனுக்கு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு தலைமையில் உண்ணாவிரதம் இருந்தார்கள் அதுவும் பூரண மதுவிலக்கு கோரி.இது போட்டிக்காக தங்களுடைய பதிவையும் செய்தார்களே தவிர உண்மையாக மக்களுக்காக அல்ல ஏன் என்றால் அவருடை கட்சி எம்.எல்.ஏக்கள் கூட யாரும் கலந்துகொள்ள வில்லை. சட்டமன்றம் மதியத்தோடு முடிந்தும் அவர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை அதனால் பெயரளவில் மற்றும் திருமாவளவனுக்கு எதிராக தங்களுடைய பதிவை செய்தார்களே தவிர மக்களுக்காக இல்லை.

காங்கிரஸார், தொல்.திருமாவளவனையும் அவரின் கட்சிக்காரர்களையும் விமர்ச்சித்து, வன்முறையைத் தூண்டியும் அரசியலில் லாபம் அடைய நினைக்கிறார்கள். இது வெட்கக் கேடானது, கேவலமானது மற்றும் சோம்பேரிகள் என்றுதான் இது காட்டுகிறது.

காங்கிரஸார் தங்களுக்கென்று எந்தக் கொள்கையும், எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் செயல்படுகிறார்கள்.

அதனால் காங்கிரஸ்காரர்கள் ஆக்கப் பூர்வமான நடவடிக்கைகள் எதுவும் இதுவரையிலும் எடுக்கவில்லை.

எந்த ஒரு கண்டன அறிக்கையும் சிங்கள அரசுக்கு எதிராகவும், இனபடுகொலையை கண்டித்தும் விடவில்லை.

இவர்கள் நினைத்தால் காங்கிரஸ் மேலிடத்தில் உண்மை நிலையை எடுத்துக் கூறி சரியான நடவடிக்கையை எடுக்கலாம்.

நீங்கள் கேட்கலாம் தமிழ் நாட்டில் உள்ள காங்கிரஸார் தலைமைக்கு கட்டுப்பட்டவர்கள் என்று. இவர்கள் தமிழ்நாட்டிலுள்ள மக்களின் பிரதிநிதிகளே தவிர காங்கிரஸ் மேலிடத்தின் பிரதிநிதிகள் அல்ல.

இவர்கள் உண்மை நிலையை எடுத்துக் கூறினால் என்ன கட்சித் தலைமை இவர்களின் தலைகளையா துண்டித்து விடும் !

டாக்டர் ராமதாஸும், தொல்.திருமாவளன் மட்டுமே திரும்பத் திரும்ப நாம் எல்லோரும் ஒற்றுமையுடன் குரல் கொடுக்க வேண்டும் என்று சொல்கிறார்கள் இதை நாம் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.

வைகோ-வைப் பற்றி சொல்ல வேண்டுமென்றால் அவர் எப்பொழுதும் ஈழத்தமிழர்களுக்காக ஆதரவாக இருக்கிறார் அதில் எந்தக் கருத்து வேறுபாடும் இல்லை. ஆனால் இப்பொழுது அவர், எல்லாரும் சேர்ந்து, எல்லோரும் ஒருகிணைந்து என்கிற நிலைப்பாட்டில் தான் வேறுபட்டு அரசியல் செய்கிறார்.

தி.மு.க-வும் இதே நிலைப்பாட்டில் தான் இருக்கிறது.

அ.தி.மு.க எந்த நிலைப்பாட்டில் உள்ளது என்று அவர்களுக்கே தெரியவில்லை. இப்பொழுது இடதுசாரிகளும் கூட.

ஆனால் கலைஞர் அவர்கள் எங்கே தன்னுடைய ஆட்சி போய்விடுமோ என்கிற பயத்தில் எந்த ஒரு சரியான நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறார்.

சட்டமன்றத்திலே நிறைவேற்றப்பட்ட கண்டனத் தீர்மானத்தில கூட காலக்கெடு நிர்ணயம் செய்யவில்லை. இது மிகவும் வருத்தமளிக்கிறது, ஏமாற்றம் அளிக்கிறது.

நாகரிகமான அரசியலை எப்பொழுதுதான் நம்மளுடைய அரசியல்வாதிகள் கற்றுக் கொள்ளப் போகிறார்களோ தெரியவில்லை.

தயவு செய்து எல்லாக் கட்சிக்காரர்களும் கட்சிக்கு அப்பாற்பட்டு இணைந்து நம்மளுடைய ஈழ சகோதரர்களுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று தாழ்மையுன் கேட்டுக் கொள்கிறேன்.

நம்மளுடைய அரசியல்வாதிகள் நினைத்தால் மற்றத்தலைவர்களிடையே பேசி தேசிய அளவில் ஒருமித்த கருத்தை உருவாக்கி சிங்கள அரசின் ராணுவ நடவடிக்கையை நிறுத்தலாம்.

அரசியல் ரீதியான நிரந்தர தீர்வுகளை ஏற்படுத்தவேண்டும்.

எல்லாம் நடக்க வேண்டும் கட்டாயாமாக.

எல்லாம் நடக்கும் கண்டிப்பாக.

அந்நாள் வெகுதொலைவில் இல்லை.

Friday, January 9, 2009

மின்வெட்டு வீராசாமிக்கு – 2009-ம் ஆண்டிற்க்கான ”சிறந்த அரசியல் காமெடியன் விருது”2009-யின் மிகப் பெரிய விருதான ” சிறந்த அரசியல் காமெடியன் விருதை” நம் படிக்காத மேதை மின் வேட்டு வீராசாமி வாங்க இருக்கிறார் என்பதை மிக்க மகிழ்ச்சியுடன் நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

சென்னையில் வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் மாநாடு நடைப்பெற்றது. அந்த மாநாட்டில் பேசிய நமது மின்துறை அமைச்சர் மின் வேட்டு வீராசாமி அவர்கள் மிகவும் Timing comedy பண்ணியுள்ளார். ஆதலால் இவ்விருத்துக்கு தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

அமெரிக்க பொருளாதார வீழ்ச்சியையடுத்து, தகவல் தொழில் நுட்பத்துறையில் வளர்ச்சிக்கான வாய்ப்புக்கள் இல்லாததால் அதில் முதலீடு செய்து பணத்தை வீணடிக்கவேண்டாம் என்று Timing Comedy பண்ணியிருக்கிறார். அதனால் அவர் இந்தாண்டின் மிக உயரிய விருதான ”சிறந்த அரசியல் காமெடியன் விருதை” அவர் தட்டிச் சென்றுள்ளார்.

சிமெண்ட் துறையில் உற்பத்திச் செலவு ரூ. 100 ரூபாய்க்கும் குறைவாக இருக்கும் நிலையில், குறைந்தபட்ச விற்பனை விலை ரூ. 220 அதிகமாக உள்ளது. அதனால் எல்லோரும் சிமெண்ட் தொழிலில் முதலீடு செய்யுங்கள் என்கிறார்.

கட்டுமானத் தொழில் நமது நாட்டில் அதிக வளர்ச்சி பெருவதற்க்கு தகவல் தொழில் நுட்பத்துறை தான் முக்கியகாரணம் என்பது கூட தெறியாமல் நீங்கள் தகவல் தொழில் நுட்பத்துறையில் முதலீடு செய்யாதீர்கள், சிமெண்ட் தொழிலில் முதலீடு செய்ய வாருங்கள் என்று கூவுகிறார். சிமெண்ட் தொழிலில் போட்டி ஏற்பட்டு அதிக உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு மக்களுக்கு தரலாம் என்று நல்லெண்ணத்தின் அடிப்படையில் அவ்வாரு சொல்கிறார்.

தமிழ் நாட்டில் மட்டும் 230 லிருந்து 250 பொறியியல் கல்லூரிகள் இருக்கிறது. அதில் ஒவ்வொரு வருடமும் மாணவர்கள் சராசரியாக 40 லிருந்து 50 ஆயிரம் பேர் வெளிவருகிறார்கள். இதனால் அந்த மாணவர்களுக்கெல்லாம் அவர் சொல்ல வரும் செய்தி என்னவென்றால் நீங்கள் எல்லாரும் கலவை கலக்க கற்றுக்கொள்ளுங்கள். கொத்தனார் வேலையை கற்றுக் கொள்ளுங்கள் உங்களுக்கு அதில் தான் மிக சிறந்த எதிர்காலம் இருக்கிறது என்கிறார் போலும்.

நாட்டில் தகவல் தொழில் நுட்பத்தை நிறுத்தி விட்டால் படித்த தொழில் நுட்ப மாணவர்களுக்கு வேலை எப்படி கிடைக்கும்?

எல்லோரும் சராசரியாக தொழில் நுட்ப பட்டப் படிப்பு வயது 23-லிருந்து 24-ல் முடிக்கிறார்கள் அதுவும் பணத்தை கொட்டி. அவர்கள் மேலும் ஒரு தொழிலை படிக்கவா முடியும் அதுவும் எல்லோராலும்?

அவர்களின் கதி என்ன?

அவர்களுக்கு எந்த வேலை தெறியும்?

அவர்கள் படித்த தொழில் நுட்ப படிப்பு என்னா ஆவது?

அவர்கள் எப்படி வாழ்க்கையை நடத்த முடியும்?

குடும்பத்தை நடத்த முடியும்?

எப்படி வீடு கட்ட முடியும்? அப்பொழுத்தானே அவர்கள் சிமெண்ட் வாங்க முடியும். கட்டடப் பணிகள் எதுவும் நடக்காத போது உற்பத்தி செய்த சிமெண்டை என்ன செய்வது?

அவர் நினைத்துக் கொண்டார். அந்த மாநாட்டிற்கு வந்தவர்கள் எல்லோரும் படிக்காத வெட்டியா வேலை எதுவும் கிடைக்காம ஏதோ கழக மாநாட்டிற்கு வந்த மடையர்கள் மாதிரி.

அங்கு வந்தவர்கள் எல்லோரும் பெரிய தொழில் அதிபர்கள் மற்றும் தொழில் அதிபர்களின் பிரதிநிதிகள். அந்த தொழில் அதிபர்கள் எல்லோரும் பல நாடுகளில் தொழில் தொடங்கி மிகச் சிறப்பாக தொழில் செய்து வருபவர்கள்.

மேலும் அவர்களிடம் பழைய பேப்பர் கடையும் பழைய இரும்புக் கடையையும் தொடங்கச் சொல்கிறார். ஏனென்றால் பழைய இரும்பின் விலை 18 ஆயிரம் ரூபாய்க்கு வாங்கப்பட்டு, 8 MM, 10MM இரும்பாக உருவாக்கப்பட்டு அவை 32 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை விற்க்கப்படுகிறது என்று தொழில் அதிபர்களுக்கு தொழில் கற்றுக் கொடுக்கிறார் அதாவது மீன் குஞ்சிக்கு நீந்த கற்றுக் கொடுக்கிறார்.

ஆதலால் இந்தாண்டின் மிக உயரிய விருதான ”சிறந்த அரசியல் காமெடியன் விருதை” நம்முடைய மின் வேட்டு வீராசாமி பெற இருக்கிறார்.

இதே போல் மிகச் சிறந்த அமைச்சர்கள் நம் நாட்டில் உருவாக வேண்டும். அப்பொழுது தான் தமிழ் நாட்டில் தற்போது சீர் கெட்டிருக்கும் மின் துறையைப் போன்று எல்லாத் துறையையும் சீரழிக்கமுடியும்.

இவரை முன் உதாரணாமாக வைத்துக் கொண்டு எப்படியெல்லாம் இருக்க கூடாதோ ஒரு அமைச்சர் என்பதை கற்றுக்கொண்டு, படித்த நல்ல இளைஞர்கள் அரசியலுக்கு வரவேண்டும் அப்பொழுது தான் இந்த மாதிரி தறுதலை அமைச்சர்கள் வரமாட்டார்கள்.