எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, November 3, 2010

தரமான கல்வியை புகட்ட நாம் என்ன என்ன செய்ய வேண்டும்.


1. சரியான கல்விக் கூடங்கள் அனைத்து அடிப்படை வசதிகள் கொண்ட பள்ளிகள். ( ஆய்வுக்கூடங்கள், கணினி மையங்கள், பாடப்புத்தகங்கள், தரமான ஆசிரியர்கள் )

2. நன்கு பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்கள்.

3. கல்விகூடங்களில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு வேறெந்த வேலைகளையும் பள்ளி நிர்வாகம் வழங்க கூடாது.

4. மாணவர்கள் மற்றும் ஆசிரியகள் புரிதல் என்பது இங்கே மிக முக்கியம்.

5. மாணவர்களுக்கு புரியும் படியாக பாடங்களை கற்றுக் கொடுக்க வேண்டும்.

6. மாணவர்கள் பாடத்தை புரிந்து கொண்டார்களா என்பதை எப்படி சோதிப்பது என்று கேட்டால் ஒவ்வொரு மாணவர்களிடமிருந்தும் நிறைய கேள்விகள் வரவேண்டும். ஆசிரியர்கள் அந்த எல்லாக் கேள்விகளுக்கும் பொருப்பான முறையில் பதிலளித்து அவர்களுடைய சந்தேகங்களை போக்கவேண்டும். யாராவது கேள்விகள் கேட்கவில்லை என்றால் அந்த மாணவனுக்கு பாடம் முழுமையாக புரிந்து கொண்டான் என்று கருதக் கூடாது. அவனுக்கு முழுமையாக புரியாமல் கூட இருக்கலாம் அப்படி இருக்கையில் கண்டிப்பாக மீண்டும் ஒரு முறை அவனைப் போன்ற பிள்ளைகளை தேர்ந்தெடுத்து ஒரு குழுவாக அமர்த்தி மீண்டும் அவர்களுக்கு ஆசிரியர்கள் பாடம் எடுக்க வேண்டும். அவனுக்கு புரியும் வரை எடுக்கவேண்டும். அவனால் மீண்டும் புரிந்து கொள்ள முடியவில்லை என்றால், ஏன் அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை என்று ஆசிரியர்கள் தான் புரிந்து கொள்ள வேண்டும். அவனுக்கு எப்படி சொல்லிக் கொடுத்தால் அவன் புரிந்து கொள்வான் என்பதை ஆசிரிகள் கற்றுக் கொள்ளவேண்டும்.

இதிலிருந்து அவனுக்கு அடிப்படையில் இருந்தே அவனுக்கு புரியவில்லை என்று அர்த்தம். அதனால் நீங்கள் மீண்டும் அடிப்படையில் இருந்து மீண்டும் சொல்லிக் கொடுக்க வேண்டும்.

7. ஒரு வகுப்புக்கு அதிகபட்சம் 25 மாணவர்கள் மட்டுமே இருக்க வேண்டும் அப்பொழுது தான் ஆசிரியர் மற்றும் மாணவர்கள் புரிதல் இருக்கும். இல்லாவிட்டால் தரமற்ற சமூதாயத்தை தான் நாம் படைக்கிறோம் என்று பொருள்.

இங்கே மிகவும் மோசமான நிலையில் நமது அரசாங்க பள்ளிகள் தான் முதலிடத்தில் இருக்கிறது.

அரசு பள்ளிகளில் தரமான ஆசிரியர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு 10% சதவிகதம் மட்டும் தான் இருக்கும் மீதி இருக்கும் ஆசிரியர்கள் எல்லாம் பணி மூப்பு அடிப்படையில் பாடம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது போன்ற பணிமூப்பு ஆசிரியர்களுக்கே எதுவும் தெரியாத நிலையில் மாணவர்களுக்கு எப்படி சொல்லிக் கொடுக்க முடியும் மாணவர்கள் கேட்கும் கேள்விகளுககு எப்படி பதில் சொல்ல முடியும்.

தரமான ஆசிரியர்களை அமர்த்துவது அரசாங்காத்தின் கடமை அந்த கடமையை அரசாங்கம் செய்கிறதா என்றால் எந்த மாநில அரசும் செய்வதில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஊதியத்திற்கு மட்டும் போராடும் ஆசிரியர்களின் இயக்கங்கள் மற்றும் சங்கங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொள்வதில்லை.

ஓட்டிற்க்காக மட்டும் ஆசிரியர்களின் ஊதியத்தை உயர்த்தி கொடுக்கும் அரசாங்கங்கள் தரமான ஆசிரியர்களை நிர்ணயம் செய்வதில் இருந்து தவறிவிட்டது.

ஓட்டிற்காக செய்யாமல் நாட்டிற்காக, நாட்டு மக்களுக்காக, நாட்டு மக்களின் எதிர்காலத்திற்காக என்று நீண்டகால சிந்தனை எல்லாம் எந்த அரசாங்கத்திற்கு இல்லை.

ஏன் இந்த அவல நிலை எப்போது இந்த நிலைமாறும்.

இன்றைய அவல நிலையை சற்று பார்ப்போம் :விமான போக்குவரத் துறையின் வளர்ச்சிக்கு தடை திறமையில்லாதா ஊழியர்களால் :அடுத்த சில வருடங்களில் விமான போக்குவரத்து துறை, அணு தொழிநுட்பம் மற்றும் பாதுகாப்பு துறையில் குறிப்பிட தகுந்த வளர்ச்சியை பெரும்.இருந்தாலும் திறமையான ஊழியர்கள் இல்லாததால் அந்த துறைகளின் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று பெங்களூரில் நடைபெற்ற தொழில் நுட்பவல்லுனர்கள் கூட்ட்த்தில் விவாதிக்கப்பட்டது.

இந்திய விமான படையில் பயிற்சி பெற்ற 700 விமானி பணியிடங்கள் காலியாக உள்ளது. மேலும் 126 போரிடும் விமானங்களும் மற்றும் 100 ஹெலிக்காப்டர்களும் வாங்கவிருக்கிறார்கள் இந்நிலையில் அதனை இயக்குவதற்கு விமானிகள் இல்லை இதே நிலைமை தான் அணு அறிவியல்
துறையிலும் என்கிறார் சங்கைய இயக்குனர் நடுபலி அவர்கள்.

விமான போக்குவரத்து துறையானது விரிவுபடுத்தப்பட்டு அதனுடைய விமானி தேவை 2000 க்கும் அதிகம் மற்றும் 10,000 அதிகமான பழுதுபார்க்கும் பணியாளர்ச்கள். இந்த பணியிட்ங்களை நிரப்புவதுதென்பது கஷ்டமான காரியம் ஏனென்றால் ஏற்கனவே வேலையாட்கள் பற்றாக்குறையுள்ளது.

இதிலே சரியான தொழில்நுட்பம் பயின்ற வேலையாட்கள் பற்றாகுறை அதிகம். நாம் பக்கத்து நாடான சீனா 1700 தொழில்நுட்ப கல்லூரிகளில் 19 லட்சம் தொழில்நுட்ப வல்லுனர்களை உருவாக்குகிறார்கள். ஆனால் நம்நாட்டில் 300 தொழில்நுட்ப கல்லூரிகளில் 2 லட்சம் மாணவர்களைத் தான் உருவாக்க முடிகிறது அவர்களும் சரியான முறையில் பயிற்சி பெறாதவர்களே. உதாரணத்திற்கு க்டந்த 40 வருடத்தில் 15 இண்டீஜீனியஸ் எஞ்சின்களை உருவாக்கியிருக்கிறார்கள் ஆனால் நாமோ ஓரே ஒரு எஞ்ஜினைத் தான் உருவாக்கியிருக்கிறோம்.

பல கோடிரூபாய்க்கான ஒப்பந்தங்கள் வரவிருக்கிற நிலையில் இது போன்ற பற்றாகுறையை சரிசெய்யவில்லை என்றால் குறிபிட்ட காலத்துக்குள் ஒப்பந்த வேலையை முடித்து கொடுக்க முடியாது.

நல்ல திறமையான பயிற்சி பெற்ற வேலையாட்களை உருவாக்க முக்கியதுவம் அளிக்க வேண்டும் ரூ . 45,000 கோடி ரூபாக்கு முதலீடு வரவிருக்கிறது அது 1.25 மில்லியன் வேலை வாய்ப்புகளை ஏற்படப்போகிறது.
.

கணினி மையமாயாக்கலுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியிருக்கிறது விமான துறையிலும் மற்றும் பாக்காப்பு துறையிலும்.

என்று புலம்பும் நிலையில் நாம் இருக்கிறோம். மனித வளம் இவ்வளவு இருந்தும் இப்படி வருந்தும் நிலையில் தான் நாம் இருக்கிறோம்.