எண்ணங்களின் பிரதிபலிப்பு

Tuesday, February 26, 2013

ரயில்வே பட்ஜெட் 2013-2014


* ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே துறையில் 22 ஆயிரத்து 500 கோடி இழப்பு 

* பட்ஜெட் : ரயில்வே பாதுகாப்பை பலப்படுத்த திட்டம்

* ரயில்வே துறை நஷ்டத்தில் இயங்குகிறது; பன்சால்

* 17 ஆண்டுக்கு பின் காங்., தாக்கல் செய்யும் பட்ஜெட்

* யானைகள் பலியை தடுக்க முழுக்கவனம் 

* புதியபாதைகள் - மின்வசதி பெருக்கப்படும்

*10 ஆயிரத்து 700 ஆள் இல்ல லெவல் கிராசிங்குகளை நீக்க முடிவு 

* கட்டணத்தை உயர்த்துவதன் மூலம் இழப்பை ஈடுகட்ட முடியும்

* சமீப காலங்களில் ரயில்வே விபத்துக்கள் குறைந்துள்ன

* ரிசர்வேஷன் அலர்ட் எஸ்.எம்.எஸ் திட்டம் விரிவுப்படுத்தப்படும்

*மாறறுத்திறனாளிகளுக்கு கூடுதல் பணியிடம் 

*தரமான உணவு வழங்கிட விலை உயர்த்த திட்டம்

* இ டிக்கெட் பணிகள் டிசம்பருக்குள் முடிவைடயும்


* ரயில் நீர் உற்பத்தி நிலையம் 6 இடங்களில் அமைப்பு

*ஆசாதி ரயில் சேவை இயக்க திட்டம்

* ரயில்வே உணவு தரத்தை பரிசோதிக்க கூடுதல் கவனம்

* உ பி,யில் ரயில் வார்ப்பட தொழிற்சாலை

* துறைமுகம்- ரயில்வேஇணைக்க 3ஆயிரத்து 800 கோடியில் திட்டம்

* மாற்றுத்திறனாளிகளுக்கு எஸ்கலேட்டர்

* இணையதள முன்பதிவு இரவு 11. 30 வரை நீடிப்பு


ஆன்மிக சுற்றுலா தலங்களுக்கு புதிய ரயில்கள்

தஞ்சாவூர்- புதுக்கோட்டைக்கு புதிய ரயில்பாதை

67 புதிய எக்ஸ்பிரஸ் ரயில் 26 புதிய பாசஞ்சர் ரயில்

ரயில்வே முக்கிய ஸ்டேஷன்களில் ஒய்பைவ் லைன்

* ரயில்வே பட்ஜெட் திட்ட மதிப்பீடு 63 ஆயிரத்து 363 கோடி

* ரயில்வே கட்டணம் மூலம் 42 ஆயிரத்து 210 கோடி திரட்ட முடிவு

* டீசல் மூலம் வரும் ஆண்டில் 5 ஆயிரத்து 100 கோடி இழப்பு வரும்

*சரக்கு ரயில் கட்டணம் மூலம் 93 ஆயிரத்து 554 கோடி திரட்ட முடிவு

* விளையாட்டு வீரர்களுக்கு கட்டணத்தில் சலுகை

*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* 1. 5 2 லட்சம் பணியிடங்கள் நிரப்ப இலக்கு

* ரயில்வே ஊழியர்கள் குடியிருப்பு அமைக்க ரூ . 300 கோடி

*ரயில் கட்டமைப்பில் புதிதாக அருணால் சேர்ப்பு

* துறைமுகம்- ரயில்வே ஸ்டேஷன் இணைக்க ரூ 3, 800 கோடி

* ரயில்வே ஸ்டேஷன் மேம்படுத்த ஆயிரம் கோடி

* செகந்திராபாத்தில் ரயில்வே நிதி நிர்வாகவியல் கல்லூரி

* சூரிய மின்சக்தி மூலம் ஆயிரம் ரயில்வே கேட் செயல்படுத்த திட்டம்


*பயணிகள் கட்டணம் உயர்வில்லை: பன்சால்

* கோவை - மன்னார் குடிக்கு புதிய ரயில்

*சென்னை- ஜோலார்பேட்டைக்கு புதிய ரயில்

*தஞ்சாவூர்- பட்டுக்கோட்டை இடையே புதிய ரயில்பாதை

* தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள்

தமிழகத்திற்கு புதிதாக 14 ரயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அவைகள்... சென்னை பீகானுருக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னை காரைக்குடி இடையே வாராந்திர எக்ஸ்பிரஸ் மற்றும் வாராந்திர ரயில் , சென்னையிலிருந்து சேலம் வழியாக பழநிக்கு தினசரி ரயில், கோவையிலிருந்து திருச்சி, தஞ்சை வழியாக மன்னார்குடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், கோவையிலிருந்து ராமேஸ்வரத்துக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில், சென்னையிலிருந்து வேளாங்கன்னிக்கு புதிய ரயில், சென்னை- தஞ்சை இடையே தினசரி ரயில், சென்னையிலிருந்து ஷீரடிக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் , நாகையிலிருந்து-பெங்களூருக்கு மதுரை திருச்சி வழியாக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படும். புதுச்சேரியிலிருந்து கன்னியாகுமரிக்கு புதிய ரயில் இயக்கப்படும் என கூறியுள்ளார்.

Wednesday, February 20, 2013

அரசிதழில் வெளியானது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு


பல ஆண்டுகள் தொடர்ந்து நடந்த முயற்சிகளின் பலனாக, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, அரசிதழில் அதிகாரப்பூர்வமாக மத்திய அரசு வெளியிட்டுள்ளது. காவிரி விவகாரத்தில், தமிழகத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.

சுப்ரீம் கோர்ட் விதித்த கெடுவைத் தொடர்ந்து, எதிர்பார்க்கப்பட்டதை போலவே, காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பு, மத்திய அரசின் அரசிதழில் வெளியிடப்பட்டது. நீர்வளத் துறை செயலர், சாமல் கே சர்க்கார் கையெழுத்திட்ட அந்த உத்தரவு, அரசிதழில் வெளியிடப்பட்டதற்கான தகவல், நேற்று காலை, 11:00 மணியளவில் அறிவிக்கப்பட்டது.இறுதித் தீர்ப்பின்படி, காவிரியில் தமிழகத்துக்கு, 419 டி.எம்.சி., அளவு தண்ணீர் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின், அமராவதி மற்றும் பவானி நீர்தேக்கங்களின் தண்ணீரையும் உள்ளடக்கிய அளவு தான், இந்த 419 டி.எம்.சி., தமிழகத்துக்கு என, கர்நாடகாவில் இருந்து கிடைக்க இருப்பது, உண்மையில் 182 டி.எம்.சி., அளவு தண்ணீர் தான்.

எந்தவொரு அசாதாரண பருவநிலையும் ஏற்படாத பட்சத்தில், காவிரி நதி நீரின் மொத்த அளவு, ஆண்டுக்கு 740 டி.எம்.சி., என இறுதித் தீர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த மொத்த அளவில் இருந்து தான், தமிழகம், கர்நாடகம், கேரளா, புதுச்சேரி என, நான்கு மாநிலங்களுக்கும் தண்ணீர் பகிர்ந்து அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு என அளிக்கப்படும், 419 டி.எம்.சி., தண்ணீரை, மாத வாரியாக பிரித்து, ஒவ்வொரு மாதமும், இவ்வளவு தண்ணீர் வழங்க வேண்டுமென, தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

அதன்படி, தமிழகத்துக்கு, ஜூன் மாதம், 10 டி.எம்.சி.,யும், ஜூலை மாதம், 34 டி.எம்.சி.,யும், ஆகஸ்ட் மாதம், 50 டி.எம்.சி.,யும், செப்டம்பர் மாதம், 40 டி.எம்.சி.,யும், அக்டோபர் மாதம், 22 டி.எம்.சி.,யும், நவம்பர் மாதம், 15 டி.எம்.சி.,யும், டிசம்பர் மாதம், 8 டி.எம்.சி.,யும் அளிக்க வேண்டும்.பிப்ரவரி முதல், மே மாதம் வரை, தலா, 2.5 டி.எம்.சி., அளவு தண்ணீர் தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். தமிழகத்துக்கு உண்டான பங்கீட்டு தண்ணீரின் அளவை, பிலிகுண்டுலு என்ற இடத்தில் வைத்து தான் அளவீடு செய்ய வேண்டும்.இந்த விவரங்கள் எல்லாமே, நடுவர் மன்றத்தின் தீர்ப்பில் உள்ளன.

இவை எல்லாவற்றையும் அப்படியே ஏற்றுக் கொண்டு, அரசிதழிலும் வெளியிடப்பட்டுள்ளது.
காவிரி நதி நீர் நிர்வாக ஆணையம் மற்றும் காவிரி நதி நீர் ஒழுங்குமுறை குழு என, இரண்டு அமைப்புகள் உருவாக்கப்பட வேண்டும்; அவ்வாறு உருவாக்கப்படும் இந்த அமைப்புகள் தான், நதி நீர் பங்கீட்டை செயல்படுத்தும் அமைப்புகளாக திகழும் என, இறுதித் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.இந்த இரண்டு அமைப்புகள் அமைக்கப்படுவது குறித்து, அரசிதழில் எவ்வொரு தகவலும் இல்லை. மாறாக, இது விஷயமாக, நீர் வள அமைச்சகமானது, சட்ட அமைச்சகத்துக்கு, ஒரு கடிதத்தை எழுதியுள்ளதாக தெரிகிறது.அந்த கடிதத்தில், "காவிரி நதி நீர் விவகாரம் தொடர்பாக, ஏராளமான வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் உள்ளன. அவ்வளவு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், இப்பிரச்னைக்கு சட்டப்படியான முடிவு இன்னும் வரவில்லை. இவ்வாறு சட்டப்படியான தீர்வு கிடைக்காத நிலையில், நிர்வாக ஆணையத்தையும்,
ஒழுங்குமுறை ஆணையத்தையும் அமைத்தால், அதில் சட்டப் பிரச்னை ஏதும் வர வாய்ப்புள்ளதா' என்று விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.

இதற்கான விளக்கம் கிடைத்த பின், இந்த குழுக்கள் அமைக்கப்படும். அரசிதழில் வெளியான, 90 நாட்களுக்குப் பின், இந்த உத்தரவு அமலுக்கு வரும் என, கூறப்பட்டுள்ளது. எனவே, வரும் ஜூன் மாதம் 12ம் தேதி, மேட்டூர் அணை, வழக்கமாக திறக்கப்படும் போது, அரசு பிறப்பித்த உத்தரவு முழுமையாக அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கலாம்.

நடந்தாய் வாழி காவிரி... :

1890: ஆங்கிலேயர் ஆட்சியில் மைசூர் சமஸ்தானமாகவும், மெட்ராஸ் ராஜதானியாகவும் இருந்த காலத்தில், காவிரிப் பிரச்னை தலைதூக்கியது.
1892: நதிநீர் பங்கீடு குறித்து முதல் ஒப்பந்தம் கையெழுத்தானது. சில ஆண்டுகள் கழித்து இந்த
ஒப்பந்தத்தை மைசூர் சமஸ்தானம் நிராகரித்தது.
1910: கர்நாடகாவில் கண்ணம்பாடி அணை கட்ட முடிவானது. இதை தமிழகம் எதிர்த்தது. மேட்டூரில் அணை கட்ட தமிழகம் முடிவு செய்தது.
1924 பிப்.18: காவிரி நீரைப் பகிர்ந்து கொள்வதில் அப்போதிருந்த சென்னை மாகாணம் மற்றும் மைசூர் அரசு இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது.
1956: மொழிவாரி மாநிலங்களாக இந்தியா பிரிக்கப்பட்டது. சென்னை மாகாணத்துக்கு உட்பட்டிருந்த காவிரி உற்பத்தியாகும் இடமான குடகு, கர்நாடகாவுடன் இணைந்தது.
1974 பிப்.18: சென்னை மாகாணம் -மைசூர் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் ரத்தானது.
1990 ஜூன் 2: காவிரி நதி நீர்ப்பங்கீடு குறித்து விசாரிக்க பிரதமர் வி.பி.சிங், சித்ததோஷ் முகர்ஜி தலைமையில் மூவர் நடுவர் நீதி மன்றத்துக்கு உத்தரவிட்டார்.
1991 ஜூன் 25: ஆண்டுக்கு 205 டி.எம்.சி., (1 டி.எம்.சி., = 100 கோடி கன அடி) தண்ணீர் தமிழகத்துக்குத் தரவேண்டும் என்றும், காவிரியால் பயன் பெறும் 11.2 லட்சம் ஏக்கரின்அளவை உயர்த்தக் கூடாது என்றும் கர்நாடகாவுக்கு உத்தரவு.
1991 டிச.11: நடுவர் நீதி மன்றத்தின் உத்தரவை ஏற்குமாறு, கர்நாடக அரசுக்கு சுப்ரீம் கோர்ட் ஆணை. இந்த உத்தரவைத் தொடர்ந்து, கர்நாடக தமிழர்கள் தாக்கப்பட்டதில் 20 பேர் பலி.
1993 ஜூலை: இடைக்கால உத்தரவை அமல்படுத்தக் கோரி ஜெயலலிதா உண்ணாவிரதம்.
1996 ஆக.,- 1997 ஜன.5: சுப்ரீம் கோர்ட்டின் பரிந்துரைப்படி தமிழக முதல்வர் கருணாநிதிக்கும்,
கர்நாடக முதல்வர் படேலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தை, தீர்வு எட்டப்படாமல் முடிந்தது.
1998 ஜூலை 20: நடுவர் மன்ற தீர்ப்பை அமல்படுத்தினால் கர்நாடகா - தமிழகம் இடையே சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்படும் என கர்நாடக அனைத்துக் கட்சி எம்.பி.,க்கள், பிரதமர் வாஜ்பாயிடம் மனு.
1998 ஜூலை 21: ஆக. 21க்குள் தமிழகத்துக்குச் சேர வேண்டிய 205 டி.எம்.சி., நீரை கர்நாடகா வழங்கிட, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
1998 ஆக.8: காவிரி பிரச்னையில் சுமூகத் தீர்வு
காணாவிட்டால், வாஜ்பாய் அரசுக்கான ஆதரவு வாபஸ் என ஜெயலலிதா எச்சரிக்கை.
1999 மே 7: 1991-92ல் கர்நாடகாவில் தாக்கப்பட்ட தமிழர்களுக்கு உரிய நிவாரணத்தை மே 15க்குள் வழங்க சுப்ரீம் கோர்ட் கர்நாடக அரசுக்கு உத்தரவு.
2002 அக்.,: கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை அவமதித்ததிற்காக கோர்ட்டில் மன்னிப்புக் கோரி, காவிரி நீரை திறந்து விட உத்தரவிட்டார்.
2002 அக்.12: காவிரியில் தண்ணீர்த் திறந்துவிடக் கோரி நடிகர் ரஜினிகாந்த் சென்னையில் உண்ணாவிரதம்.
2003 ஜன.13: தமிழகத்துக்கு குறிப்பிட்ட அளவில் தண்ணீர் தர கர்நாடகா ஒப்புதல்.
2006 ஆக.3: காவிரி ஆணையத்தின் ஆயுள் மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.
2007 பிப்.5: காவிரி நடுவர் நீதிமன்றம், இறுதி

Advertisement
தீர்ப்பை அறிவித்தது. தமிழகத்துக்கு ஆண்டுதோறும் 19.2 கோடி கனஅடி தண்ணீர் திறந்துவிட வேண்டும். கேரளா, புதுச்சேரிக்கு உரிய நீரையும் வழங்க வேண்டும் என கோர்ட் உத்தரவிட்டது. தமிழகம் ஏற்றுக்கொண்டது. கர்நாடக அரசு எதிர்த்து மனுத்தாக்கல். 2012, செப்.13: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு தொடர்ந்து தண்ணீர் தர முடியாது என முதல்வர் ஷெட்டர் திடீர் அறிவிப்பு.
செப்.19: காவிரியில் தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிட பிரதமர் மன்மோகன்சிங் உத்தரவு.
செப்.24: தண்ணீர் திறந்துவிடக் கோரி சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு.
செப்.28: தண்ணீர் திறந்து விடாத கர்நாடக அரசுக்கு, சுப்ரீம் கோர்ட் கடுமையான கண்டிப்பு.
அக்.8: தினமும் 9 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது. இதற்கு பிரதமர் தான் பொறுப்பு என அறிவித்தது.
அக்.8: பிரதமர் அக்.20 வரை தண்ணீர் திறந்துவிட உத்தரவிட்டார். சுப்ரீம் கோர்ட் உத்தரவையும், பிரதமர் உத்தரவையும், சில மணி நேரங்களில் கர்நாடகா அவமதித்தது.
அக்.9: கர்நாடகா அரசு மீது, தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
அக்.9:கர்நாடகாவைக் கண்டித்து காவிரி டெல்டா மாவட்டங்களில் ரயில் மறியல் நடந்தது. ஆயிரக்கணக்கானோர் கைது.
அக்.10: பிரச்னை தொடர்பாக பிரதமரை சந்தித்து பேச, கர்நாடக முதல்வர் ஷெட்டர் டில்லி சென்றார். இரண்டு நாட்கள் காத்திருந்து பிரதமரை சந்திக்க முடியாமல் ஏமாற்றத்துடன் திரும்பினார்.
அக்.17: நீர்ப்பங்கீடு குறித்து புதிய மனு ஒன்றை தமிழக அரசு, சுப்ரீம் கோர்ட்டில் அளித்தது.
நவ.15: காவிரி நதிநீர் ஆணையம், நவ.16-30க்குள் 4.81 டி.எம்.சி., தண்ணீரை தமிழகத்துக்கு திறந்துவிட உத்தரவிட்டது.
நவ.29: காவிரிப் பிரச்னை குறித்து, கர்நாடக முதல்வர் ஜெகதீஷ் ஷெட்டருடன், தமிழக முதல்வர் ஜெயலலிதா பெங்களூருவில் பேச்சுவார்த்தை.
டிச.6: தமிழகத்துக்கு உடனடியாக, 10 ஆயிரம் கனஅடி நீரை திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
டிச.7: நீர் திறந்து விட முடியாது என எம்.பி.,க்களுடன் பிரதமரை சந்தித்து ஷெட்டர் கூறினார்.
டிச.7: தமிழகத்துக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு.
டிச.10: தமிழகத்துக்கு 12 டி.எம்.சி., நீர் திறந்து விட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
டிச.21: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமருக்கு ஜெ., இரண்டாவது முறையாக கடிதம்.
டிச.25: அரசிதழில் நடுவர் மன்ற தீர்ப்பை வெளியிடக் கூடாது என பிரதமருக்கு ஷெட்டர் கடிதம்.
2013, ஜன.4: காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை, அரசிதழில் வெளியிட தாமதிக்கும் மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் கண்டனம்.
ஜன.11: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிட பிரதமர் முடிவு.
பிப்.4: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை, மத்திய அரசு பிப்.20க்குள் கெஜட்டில் வெளியிட சுப்ரீம் கோர்ட் உத்தரவு.
பிப்.9: தமிழகத்துக்கு 2.44 டி.எம்.சி., தண்ணீர் திறப்பு.
பிப்.13: குறைந்த அளவு தண்ணீர் திறந்து விட்ட கர்நாடக அரசு மீது, தமிழகம் அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.
பிப்.20: காவிரி நடுவர் மன்ற இறுதித் தீர்ப்பை மத்திய அரசு கெஜட்டில் வெளியிட்டது.

Monday, February 4, 2013

பெண்களுக்கு எதிரான பாலியல் சட்டத்திருத்தம்


பெண்ணை பின்தொடர்ந்து சென்று தொந்தரவு செய்தால், குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும். கற்பழித்தால், ஆயுள் தண்டனை, கற்பழிப்பின் போது பெண் இறந்தால் மரண தண்டனை விதிக்கப்படும்' என, பெண்கள் பாதுகாப்பிற்கான அவசர சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண்கள் பாதுகாப்பிற்காக, கிரிமினல் சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, நேற்று முன்தினம், ஜனாதிபதி, பிரணாப் முகர்ஜி பிறப்பித்த அவசர சட்டத்தின் முக்கிய அம்சங்கள்:

பெண்ணை வலுக்கட்டாயமாக கற்பழித்தததால், அந்த பெண் இறக்க நேரிட்டாலோ அல்லது அந்த பெண் செயல்படாத நிலையை அடைந்தாலோ, குற்றவாளிக்கு மரண தண்டனை விதிக்கப்படும்.டூ பிரிந்து வாழும் மனைவியை கணவன் வலுக்கட்டாயமாக கற்பழித்தால், அதிகபட்சம், ஏழு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படும்.

கற்பழித்தால் ஆயுள் முழுக்க சிறை : கற்பழிப்பு சட்டத்தின் பிரிவு 1, 2ன் கீழ், பெண்ணுக்கு காயம் ஏற்பட்டு, அந்த காயத்தால், அந்த பெண் இறக்க நேரிட்டால், குறைந்தபட்சம், 20 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும். அந்த நபரின் எஞ்சிய ஆயுள்காலம் முழுவதும் சிறையிலேயே அடைக்கப்படுவார்.கும்பலாக சேர்ந்து பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், கும்பலில் இருந்த ஒவ்வொருவருக்கும், குறைந்தபட்சம், 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, நிவாரணமும் வழங்க வேண்டும்.ஆசிட் போன்ற ரசாயனம், பொடிகளை வீசி, பெண்ணுக்கு நிரந்தரமாகவோ அல்லது கொஞ்சமாகவோ பாதிப்பு ஏற்பட்டால், குறைந்தபட்சம், 10 ஆண்டு சிறை தண்டனை முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும். பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்ச ரூபாய் வரை இழப்பீடும் வழங்க வேண்டும்.

பெண்ணை பின் தொடர்ந்து சென்று, தொந்தரவு செய்வதற்கு, குறைந்தபட்சம், ஓராண்டு சிறை தண்டனை முதல், அதிகபட்சம் மூன்றாண்டு சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.ஆண் குறியை காண்பித்தல், பிறரின் உடலுறவு காட்சிகளை காட்டுதல் போன்ற, முதல் முறையாக செய்யும் குற்றங்களுக்கு, குறைந்தபட்சம், ஓராண்டு முதல், அதிகபட்சம், மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.மீண்டும் அதே குற்றங்களை செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.



அவிழ்த்து மானபங்கம் :

பெண்ணின் ஆடையை தவறான நோக்கத்தில் அவிழ்த்து மானபங்கம் செய்தால், குறைந்தபட்சம், மூன்றாண்டுகள் முதல், அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் கிடைக்கும். பாலியல் நோக்கத்தில் எழுதப்பட்ட, வரையப்பட்ட ஏதாவது ஒன்றை காண்பித்தல், நிர்வாண படங்களை காண்பித்தல் போன்ற குற்றங்களுக்கு, ஓராண்டு சிறை தண்டனை, சிறை தண்டனையுடன் அபராதம் விதிக்கப்படும்.பாலியல் நோக்கத்தில் பெண்ணை தொடுவது, அவர் மீது படர்வது, கெஞ்சுவது போன்ற குற்றங்களுக்கு, அதிகபட்சம், ஐந்தாண்டுகள் சிறை தண்டனையும், அபராதமும், இரண்டும் சேர்ந்தும் விதிக்கப்படும். போலீஸ் துறையை சேர்ந்தவர், அரசு ஊழியர், ராணுவ படை வீரர் போன்றவர்கள், பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தால், குறைந்தபட்சம், 10 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனை, அதிகபட்சம் ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும்.

குற்றச்சட்டம், 376 (கற்பழிப்பு) படி, கற்பழிப்பு குற்றத்திற்கு, குறைந்தபட்சம், ஏழு ஆண்டு முதல், ஆயுட்காலம் வரையிலும் சிறையில் இருப்பதற்கான, ஆயுள் தண்டனை, அபராதம் விதிக்கப்படும். கற்பழிப்பு குற்றத்தை கும்பலாக சேர்ந்து செய்பவர்களுக்கு, ஆயுள் முழுவதும் கடுங்காவல் சிறை தண்டனை அல்லது மரண தண்டனை விதிக்கப்படும்.அதிகாரத்தில் உள்ளவரின் கீழ் வேலை பார்க்கும் பெண், உடலுறவுக்கு உட்படுத்தப்பட்டால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல், அதிகபட்சம், 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், அபராதமும் விதிக்கப்படும்.

மைனர் பெண்களை கடத்தினால்: மைனர் பெண்ணை கடத்திய நபர், ஒரு முறைக்கு மேல், அதே குற்றத்தை செய்தால், அவர் ஆயுள் முழுவதும் சிறையில் அடைக்கப்படுவார். அவ்வாறு கடத்தி வரப்பட்ட மைனர் பெண்ணை வேலைக்கு அமர்த்தினால் அல்லது கடத்தலுக்கு உதவினால், குறைந்தபட்சம், ஐந்தாண்டுகள் முதல் அதிகபட்சம், ஏழு ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட பெண்ணை கடத்தினால், குறைந்தபட்சம், 10 ஆண்டு முதல் ஆயுள் தண்டனை வரையும், அபராதத்துடன் விதிக்கப்படும்.ஒன்றுக்கு மேற்பட்ட மைனர் பெண்களை கடத்தினால், குறைந்தபட்சம், 14 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் ஆயுள் முழுக்க சிறை தண்டனை நிச்சயம்.இவ்வாறு, பல திருத்தங்கள், அவசர சட்டத்தில் இடம்பெற்றுள்ளன..