எண்ணங்களின் பிரதிபலிப்பு

Wednesday, August 26, 2009

கண்கள், கைகளை கட்டி தமிழர்களை, இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சி

விடுதலைப்புலிகளுடன் நடந்த போரின் போது தமிழர்களின் கண்கள் மற்றும் கைகளை கட்டி இலங்கை ராணுவம் சுட்டுக்கொன்ற கொடூர காட்சிகள்

விடுதலைப்புலிகளின் வசம் இருந்த வன்னி பகுதியை பிடிக்க இலங்கை ராணுவம் கடும்தாக்குதல் நடத்தியது. அப்போது அங்குவாழும் தமிழர்களை பிடித்து கடும் சித்ரவதை செய்து கொன்றனர்.இதற்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்தன. ஆனால், இலங்கை அரசு மறுப்பு தெரிவித்து வந்ததங்கள் அரசையும், ராணுவத்தையும் களங்கப்படுத்தும் விதமாக பொய்செய்திகளை ஊடகங்கள் வெளியிடுவதாக தெரிவித்தது.

ஆனால் ஊடகங்கள் வெளியிட்ட தகவல் உண்மை என்பது தற்போது தெரியவந்துள்ளது இங்கிலாந்தை சேர்ந்த சேனல்- 4 என்ற டி.வி. சமீபத்தில் ஒரு வீடியோ காட்சியை ஒளிப்பரப்பியது.

வன்னிபோரின் போது தமிழர்களின் கைகளையும், கண்களையும் கட்டிவைத்து இலங்கை ராணுவம் சுட்டுக்கொல்லும் பட்டவர்த்தமான கொடூரகாட்சிகள் அதில் இடம் பெற்று இருந்தன.

இக்காட்சிகள் கடந்த ஜனவரி மாதம் பதிவு செய்யப்பட்டது. அப்போது வெளிநாட்டு செய்தியாளர்கள் போர் நடைபெறும் பகுதிகளுக்கு செல்ல இலங்கை அரசு தடைவிதித்து இருந்தது.

இந்த தாக்குதலை சேனல்- 4 டி.வி. நிறுவ அதிகாரி ஜொனதன் மில்லர் தெரிவித்துள்ளார். இந்த காட்சிகள் இலங்கை அரசின் போர்க்குற்றங்களுக்கான ஆதாரங்களா? இல்லையா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த வீடியோ காட்சிகளை தன்னுடன் சேர்ந்து பார்த்த நடுநிலை வகிக்கும் சிங்கள ஊடகத்தினர் இது உண்மையானதுதான் என தன்னிடம் கூறியதாகவும் மில்லர் கூறினார்.

இதுகுறித்து, இங்கிலாந்தில் உள்ள இலங்கை தூதரகம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழ்மக்களுக்கு எதிரான கோரச்செயல்கள் இலங்கை ராணுவத்தினர் ஈடுபடவில்லை.

மேலும் விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மட்டுமே ராணுவம் ஈடுபட்டது என்றும் தெரிவித்துள்ளது.